நகையா,பாலய்யா .ராகவன்---
(நகைச்சுவைக்காக மட்டுமே )
பதிவர் ஆர்.வி.எஸ் நாகையா பற்றி ஒருபதிவினைஇட்டிருந்தார் .தந்தையாக நடிப்பதற்காக பிறந்தவர் என்றாலும், டி .எஸ் பாலையாவையும், விஎஸ்.ராகவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் !
1957ம் ஆண்டிலிருந்து வி எஸ் ராகவன் அவர்களின் நாடகங்கள பார்த்துமகிழ்ந்தவன் நான்! திருவல்லிக்கேணி skt மண்டபத்தில் அவருடைய நாடகங்கள் நடக்கும் ! .வசனங்களை அவர் உச்சரிக்கும் பாணிக்காக அமெச்சூர் கோஷ்டிகளான என்போன்றவர்கள் அவருடைய நாடகங்களுக்குச்செல்வோம் . பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் !
இன்று" மிமிக்ரி " செய்பவர்கள் கூட அவரை மிமிக்ரி செய்து பெயர் வாங்குகிறார்கள் !
நியு ஜெர்சியில் இருக்கும் பதிவர் நண்பர் " பாரதசாரி " இது பற்றி எழுதியிருந்தார் "
" தந்தையாக நடிப்பதென்றால ராகவனை மிஞ்ச முடியாது! ராகவனின் தந்தையே அவரை அப்பா என்றுதான்கூப்பிடு வாராம் ! அந்த அளவுக்கு இயல்பாக நடிப்பாராம்! அவருக்கு மிமிக்ரிசெய்பவர்களை கண்டால் கோபம்வருமம்! " மிமிக்ரிசெய்யுங்கப்பா! யார் வேண்டாங்கறா ! என் குரல்ல
ஏன் செய்யணும் நு தான் நான் கேக்கறேன் "என்பாராம் !
" ஒரு முறை தி.நகர்ல அண்ணா (ராகவன் சார்) ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தாராம் ! நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ! முகூர்த்த நேரம் வந்திருச்சு ! "ப்ரோகிதர் நேரமாயிடுச்சு ! பொண்ணோட அப்பாவை கூப்பிடுங்கோ ! என்று சத்தமா சொல்லியிருக்கார் ! பாவம் நம்பாளு (ராகவன் சார்) "இதொ வந்துட்டேன் " நு துண்டை இடுப்பில கட்டிண்டு மேடைக்கு ஒடிட்டாராம் "
இது எப்படி இருக்கு !!!
7 comments:
இது போன்ற பதிவுகள் இப்போது அருகி வருகின்றன. சந்தோசமா இருக்கு தோழர் படிக்க
பொண்ணோட அப்பாவைக் கூப்பிடுங்கோவுக்கு வி.எஸ்.ராகவன் ஓடினது நினைக்க நினைக்க சிரிப்பா வருது சார்! அட்டகாசம்.. :-)
Credit must go to Paathasaari! ---kashyapan
வணக்கம்
இன்று உங்களின் வலைத்தளம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்பதற்கு இங்கே
http://blogintamil.blogspot.com/2013/02/blog-post_5.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்ப நன்றி காஷ்யபன் ஐயா :)
typical your touch :) "துண்டை இடுப்பில கட்டிண்டு மேடைக்கு ஒடிட்டாராம்"
http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=vp0xvRaTm4A
VSR in Ananda Vikatan
Post a Comment