Tuesday, July 30, 2013

டாக்டர் .முத்து லட் சுமி ரெட்டியும் ,

  ஜெமினி கணேசன் அவர்களும் ......!!!


  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்   புதுக்கோட்டை  சமஸ்தானமாக இருந்தது !   மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அங்கு ஒரு கல்லூரியை மன்னர் நிறுவினார் ! அந்த மகாராஜா கல்லூரியில் முதல்வராக இருந்தவர்   நாராயண சுவாமி அய்யர் என்பவர் ! இவர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார் !

நாராயண சுவாமி அய்யர் , மறுமணம் செய்து கொள்ளும் போது அன்றய நிலையையில் புதுமையாக செய்தார் ! இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் !     

இந்த தமபதியருக்கு முத்துலட்சுமி என்ற மகளும், ராமசாமி என்ற மகனும் பிறந்தனர் !  அய்யர் தன     மகளை படிக்க வைத்தார் ! சென்னைக்கு அனுப்பி மருத்துவ படப்பில் சேர்த்தார் ! இந்தியாவிலேயே  மருத்துவம் படித்த முதல்  பெண்  என்று பெயர் பெற்றார் முத்து லட்சுமி !

டாக்டர் முத்துலட்சுமியின் சகோதரர் ராமசாமி கங்கம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் ! ராமசாமி அய்யர் -கங்கம்மா தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான் ! மகனுக்கு கண்பதி சர்மா என்று நாமகரணம் செய்வித்து வளர்த்து வந்தார் ! குடும்பத்தில் குழந்தையை எல்லோரும் கணேசா என்று கூப்பிடுவார்கள் ! முத்துலட்சுமிக்கும் மருமகன் கணேசன் மீது கொள்ளைப் பிரியம் !" கணேசா கணேசா "என்று   கொஞசுவார்!  

சிறிது நாளில்   தாத்தா நாராயண சுவாமி இறந்தார் ! சிலமாதத்திலேயெ  ராமசுவாமி அய்யரும் இறந்தார் ! கணேசன் அத்தை முத்துலட்சுமி வீட்டில் சென்னை சென்று தங்கி படித்தான் ! ராமகிருஷ்ணா மடம் நடத்தம் பள்ளியில் அத்தை அவனச் சேர்த்தார் 1 யோகா,சமஸ்கிருதம்,கீதை என்று  படிப்பதை பார்த்து அத்தை முத்து லெட்சுமி !மகிழ்ச்சியடைந்தார்  ! கணேசனுக்கு    
தாயாரை பிரிந்து இருப்பது சங்கடமாக இருந்தது ! புதுக்கோட்டையில் படிக்க ஆரம்பித்தான் !

பின்னர் மீண்டு அத்தையின் யோசனையின் பேரில் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில்  படித்து பட்டம் பெற்றான்!  பின்னர் அங்கேயே ஆசிரியராக பணியாற்றினான் !

வேலை பிடிக்காமல் ஜெமினி ஸ்டுடியோவில் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் சேர்ந்தான் ! நடிக்க ஆரம்பித்தான் !  ஜெமினி கணேசன் ஆனான் ! 

ஜெமினி இறந்த முதலாம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது ! அதன வெளியிடும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கலந்து கொண்டார் ! ' டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அவர்கள் எனக்கும் உறவினர் ! ஜெமினி அவர்களுக்கும்  அத்தை ! அதன்படி ஜெமினி எனக்கும் உறவுதான் " என்றார் ! 

      








3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அறியாத தகவல்! பகிர்வுக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

அறியாத தகவல்... அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள்....

அப்பாதுரை said...

interesting.