Friday, August 13, 2010

Independence Day

சுதந்திர தின விழா நடத்துகிறார்கள்.இந்திய சுதந்திரம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட்டு அறுபத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த மாளிகையைக் கட்ட நடந்த வேள்வியில் சீக்கியனின்சதை யும்,இந்துவின் ரத்தமும்,முஸ்லீமின் உயிருமல்லவா ஆகுதியாகச் சொரியப்பட்டது.தங்கள் சமயத்தை சாதியை மறந்து சுதந்திர வேள்வியில் குதித்த அந்த பாரதபுத்திரர்களின் கனவு என்னவாயிற்று?
இன்று மத அடிப்படை வாதிகள் பற்றவைக்கும் பெரு நெருப்பில் அந்த மாளிகை உருகிவிடுமோ என்று அஞ்சும் நிலையல்லவா ஏற்பட்டுள்ளது?மதம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளையும், மூட பழக்கங்களையும் கட்டி வளர்க்கிறார்களே, இதனைத்தடுக்க வழியே இல்லையா? பதினெட்டு வயதுப் பெண்ணை அவளுடைய இறந்த கணவனின் உடலோடு சேர்த்து எரித்துவிட்டு "சதி மாதா கி ஜெய்" என்கிறார்களே?
வறட்சியைப் போக்க விஞ்ஞானம் வேண்டாம்! வருண பகவானுக்கு யாகம் செய்து கொள்ளலாம்!வரதட்சிணைக் கொடுமையை ஒழிக்க விஞ்ஞானம் வேண்டும்.எப்படி தெரியுமா? கருவில் வளரும் சிசு "ஆணா பெண்ணா" என்று விஞ்ஞானத்தின் உதவி கொண்டு கண்டிபிடித்து, "பெண்" என்றால் கருவிலேயேகொலை செய்துவிடலாம்,பெண் பிறந்தால் தானே வரதட்சிணை?
முப்பத்தியெட்டு ஆண்டுகள் வாழ்ந்து,சுகத்திலும் துக்கத்திலும் பங்கெடுதுக்கொண்ட சகபானுவிற்கு மூன்று மாத ஜீவனாம்சம் கொடுத்து "தலாக்,தலாக்,தலாக்" செய்துகொள்ளமுடியும். தான் பெற்ற குழந்தைக்கு இரண்டுமாத பராமரிப்புச் செலவினைக் கொடுத்துவிட்டால் போதும். இதனை முஸ்லீம் அடிபடைவாதிகள், முஸ்லீம் பெண்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் தங்களுடைய அடிப்படை மத உரிமையாக்கிக் கொண்டுவிட்டார்கள்.
இந்து அடிப்படைவாதிகளோ"இந்தியா இந்துக்களுக்கே" என்கிறார்கள்.மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழவேண்டுமென்றால்,இந்துக்களுக்குக் கீழ்படிந்து வாழ வேண்டுமாம்.
சிந்து நதி தீரத்திலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசம் வரை உள்ள உன்னதமான நாகரீகத்தின் திரை மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் விலகியது வரலாற்று ஆசிரியர்கள் இதனை "ஹரப்பா" நாகரீகம் என்கிறார்கள்.சிலர் "சிந்துவெளி" நாகரீகம் என்கிறார்கள்.
இந்த அற்புதமான வாழ்வு முறையை உருவாக்கியவர்கள் இந்துக்களா? இல்லையே! அவர்கள் சர்ந்த்திருந்த மதம் எது என்று எவரால் கூறமுடியும்?அதன் பிறகு ஈரானிலிருந்தும், தென் ரஷ்யாவிலிருந்தும் ஒரு குழு வந்தது.அவர்களை "ஆரியர்"என்றனர் வலாற்றாளர்கள்.இநத வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால் இந்துக்கள் இந்தநாட்டில் மூவாயிரத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர்கள்தானே!ஆரம்பகால கிருஸ்தவர்கள் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள், முஸ்லீம்கள் ஆயிரம் ஆண்டுகள் முன்பு உருவானவர்கள் தானே?சமண்மும் பௌத்தமும் தானே இங்கே பிறந் தது.
இவற்றிர்க்கெல்லாம் முன்பே இங்கே மனிதன் பிறந்திருக்கிறான்.வாழ்ந்திருக்கிறான். நகக் கண்ணில் ரத்தம் பீரிட மண்ணைக்கிளறி நெல்லை விளைவித்தவர்கள்--விரல் நோக கதிர் அறுத்தவர்கள்--ஆடை நெய்தவர்கள்--வீடு கட்டியவர்கள்--பழய வாழ்வினைமாற்றி புதிய நாகரீகத்தைத் தோற்றுவித்தவர்கள்--தம் அனுபவத்தால்--அதனால் கிடைத்த பட்டறிவால்--கலை இலக்கியத்தைத் தோற்றுவித்தவர்கள்--அவர்களுக்கு இந்த நாடு உரிமையுடையது இல்லையா?
உண்டு,உண்டு என்று உரக்கக் கூறுவோம்.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

நீங்கள் குறைகளை/ என்ன கிடைக்க வில்லை என்ற பார்வையில் மட்டும் பார்த்து உள்ளீர்கள்.

நான் நிறைகளை காணும் பார்வையில் இருந்து சொல்கிறேன்.

சுதந்திரம் கிடைத்ததால் நாம் பலவற்றை சாதித்து இருக்கிறோம். ஒரு இந்தியனால் வெள்ளை காரர்களுடன் போட்டி போட்டு ஆஸ்கார் இசை விருது வாங்க முடிந்தது, பிரித்தானிய பிரதமரை ஒரு இந்திய கம்பனிக்கு வந்து பேச வைத்தது, இந்திய விவசாயியால் இன்று ஒரு மொபைல் போனில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிக எளிதாக பேச முடிகிறது, கன்னியாகுமரியில் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு கல்கத்தா போனாலும் நிமிடத்தில் பணம் எடுக்க முடிகிறது,

உலகில் உள்ள எல்லா கிரிகெட் வீரர்களின் சாதனைகளையும் ஒரு மராட்டிய தேசத்து வீரனால் முறியடிக்க முடிந்தது.

பிளைமூத், போர்ட், வோல்க்ஸ்வாகன் கார்கள் எல்லாம் பிரிட்டநியர்கள் மட்டுமே ஓட்ட முடியும் /வைத்து இருக்க முடியும் என்ற காலம் போய் அந்த கார் கம்பனிகள் இன்று நம் ஊர் தேடி வியாபாரம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது.

kashyapan said...

ராம்ஜி! சர் சி வி.ராமன் இந்தியாவில் தான் தன் ஆராய்ச்சிகளை செய்தார்.வெளிநாடு போகவில்லை.தன் ஆராய்ச்சிகளுக்கான கருவிகளை அவரே இங்கு செய்துகொண்டார்.அப்போது இந்தியா சுதந்திர மடையவில்லை .தங்கம் ஒரு பவுன் பதிமூன்று ரூபாய்.நாலு முழம் வேட்டி ஒரு அணா.கிராமங்களில் பொருள் வாங்க விற்க பண்டமாற்று முறைதான் பெரும்பாலும் இருந்தது.இருந்தும் பிரிட்டிஷ் ஆட்சி வேண்டாம் என்றோம்.ஏன்?வெறும் ரொட்டித்துண்டு அல்ல
சுதந்திரம் ராம்ஜிசார்......காஸ்யபன்.

raja said...

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்....

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

-கவிஞர் தாமரை
..........
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

ராம்ஜி_யாஹூ said...

சரி பொருளாதார சுதந்திரம் மட்டும் போதாது என்ற உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

இன்று எழுத்து பேச்சு கருத்து சுதந்திரம் உள்ளதே.

சுதந்திரம் கிடைத்து இருக்கமால், இன்றும் பிரித்தானிய ஆட்சி நடை பெற்று கொண்டு இருந்தால், ஆளும் அரசாங்கத்தை கண்டித்து நாம் வலைப்பதிவுகளில், ட்விட்டர் கலீல் எழுதி கொண்டு இருக்க முடியாது.

இன்று நாம் சுதந்திரமாக மன்மோகன் சிங்கையும், சுரேஷ் கல்மாடி, கொடியேறி பாலகிருஷ்ணன் குறித்தும் எழுத உரிமை வாங்கி தந்த காந்திக்கும், திலகருக்கும், குமரனுக்கும் , நேருவிற்கும் நன்றிகள்.

kashyapan said...

" " பெண் மயிலாளின் சாபம் பலிக்காது.பலிக்க வேண்டாம் ராஜா அவர்களே...காஸ்யபன்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் பதிவும் வரவேற்கத் தகுந்ததுதான் . இருந்தாலும் நமது நாட்டை மாற்றுவது இந்தியர்களாகிய நம் கைகளில்தானே இருக்கிறது . சுதந்திரத்திற்கு முன்பு இருந்த இந்தியாவிற்கும் இன்றைய இந்தியா பொருளாதார ரீதியில் மட்டுமே சுதந்திரம் பெற்றுள்ளது என்று சொல்வதுதான் சரியான ஒன்று . இன்னும் அடிப்படை உரிமைகளுக்குக் கூட கை ஏந்தும் மக்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் .சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி .

vimalavidya said...

we passed many miles..yes.all are true."They" are achievements.No doubt..our missiles are going to moon .our trains are going fast..many remarkable things we have done.yes...But daily night 29 crore people going to bed without food..That is our concern RAMJI.we have to worry rather than celebrate..Disparity has climbing fastly..divisions on economical reasons are developing more..they have to be addressed first than the CRICKET CENTURY Ramji