Friday, August 20, 2010

monkey charmer

குரங்காட் டி
அவன் ஒரு சிறந்த குரங்காட்டி.குரங்குகளைப் பிடித்து வந்து பழக்குவான்.அவை ராமனுக்கு பூஜை செய்யும்.முருகனுக்கு காவடி தூக்கும்.குட்டிக் கரணம் போடும்.பழக்கிய குரங்குகளை விற்பதும் அவனுடைய பழக்கம்.
புதிதாக அவன் ஒரு குரங்கை வைத்திருந்தான். அவனுடைய வீட்டில் சிறு தோட்டம் இருந்தது. செடிகளுக்கு தண்ணீர் விடுவான்.குரங்கை தன்னீர்விட பழக்கினால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.சிறு பிளாஸ்டிக் வாளி மூலம் தண்ணீர் விட குரங்கைப் பழக்கினான்.பிறகு ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்க குரங்கைப் பழக்கினான். தொட்டியில் தண்ணீர் இல்லை என்றால் கை பம்பு மூலம் தண்ணீர் அடித்து தொட்டியை நிரப்ப குரங்கிற்கு சொல்லிக் கொடுத்தான்.இப்போது தோட்டவேலை பாதியை குரங்கே பர்த்துக்கொண்டது.
அவனுடைய நண்பர்கள் அவனை பாராட்டினர்.அடுத்த தெருவில் உள்ள நண்பர் அந்த குரங்கை விலைக்குக் கேட்டார்.அவனும் கொடுத்துவிட்டான்.
நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் வீட்டுத் தோட்ட வேலை எளிமையாகிவிடும் என்று பெருமைப் பட்டார்.குரங்குக்கு வாழைப் பழம் வாங்கிக்கொடுத்தார்.முதல் நாள் ஆனதால் சிறு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் மொண்டு குரங்கினிடம் கொடுத்தார்.குரங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள பழயகுரங்காட்டியின் வீட்டிற்கு தண்ணீர் விட ஓடியது.
பின் குறிப்பு.உங்களுக்கு அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ராஜ் நாத் சிங் நினைவு வரக்கூடாது.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை.

எனக்கு தா பாண்டியனு, நல்லகண்ணு போன்றோர் சசிகலா , அம்மாவை சந்திக்க காத்து இருந்தது தான் ஞாபகம் வந்தது.

kashyapan said...

"பாதலுக்கு ஒரு நீதி, இந்தப் பாவிக்கு ஒரு நீதியா?" என்று இந்த்திரா காந்தி அம்மையாரிடம் தலைவர் புலம்பியது நினைவு தட்டவில்லையா? "நேருவின் மகளே வா! நிலயான ஆட்சி தா?" என்று தலைவர் கூவியது மறந்துவிட்டதா?"குல்லுக பட்டர் ராஜ கோபாலாச்சாரி மூதறிஞர் ராஜாஜியானது" ஞாபகம் வரவில்லையா? ராம்ஜி! உங்களுக்கு நினைவு படுத்த என்னிடம் நிறைய இருக்கிறது,......இருந்தாலும் உங்கள்பின்னூட்ட்ங்களை நான் விரும்பவே செய்கிறேன்....காஸ்யபன்.

பாரதசாரி said...

Good one sir!
This is applicable for all political chameleons.
"Poor MonKey buyers"
p.s: there is no special reason/pun intended for few letters in the word within quotes:-)

மாதவராஜ் said...

ரசித்தேன்...
இப்படியும் எழுதுங்கள்.
தலைப்பைத் தமிழிலேயே வையுங்கள். ஆங்கிலம் வேண்டாம்.

kashyapan said...

நன்றி பாரதசாரி! நன்றி மாதவராஜ்! தலைப்பை தமிழிலேயே தருகிறேன்....காஸ்யபன்

venu's pathivukal said...

எனக்கு எதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
கதையை அந்தக் கதையின் எழிலுக்காகவே வாசிக்கிறேன். ரசிக்கிறேன்.

உருவகக் கதைகள் உண்மையில் காலம் கடந்து ஒவ்வொரு வாசகருக்கும்
வெவ்வேறு அனுபவத்தைக் கொடுப்பவை.

'ஐவருக்கு நெஞ்சும், எங்கள் அரண்மனைக்கு வயிறும்...'
என்று விதுரனைப் பார்த்து துரியன் பொருமியதை பாஞ்சாலி சபதத்தில்
பார்க்கவில்லையா...

எத்தனையோ குரங்குகளை, வெயிலில் வரிசையில் நின்று அப்பாவி வாக்காளர்கள்
தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு, அவை அம்பானி வகையறாக்களின் வீடுகளுக்குத் தண்ணீரையும்,
உழைப்பாளி மக்களின் செந்நீரையும் மொண்டு மொண்டு போய் ஊற்றிவிட்டு வருவதையோ,
தேசம் கடந்து வேட்டையாடிப் போகவரும் மூலதனத்தின் பாதாரவிந்தங்களில் மோட்சம் தேடி முட்டி முட்டிக் காத்திருப்பதையோ
நான் ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்?

கதையை கதைக்காகவே ரசிக்கிறேன்....

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...

என்ன அற்புதமான வரிகள்!" ஐவருக்கு நெஞ்சும்" நீங்கள் செவாஸ்டேஜின் "பாஞ்சாலி சபதம்" பர்த்திருக்கிறீர்களா? மறைந்த நடிகர் முத்துராமன் துரியோதனனாக நடிப்பார்.ஸஹஸ்ரனாமம், முத்துராமன், போன்ற கலைஞர்களுக்காகவே பாரதி எழுதினானோ என்று மனதில் படும்.நன்றி எஸ்.வி.வி----காஸ்யபன்.