காலம் என்றால் என்ன?
மறைந்த இந்திராகாந்தி அம்மையாரின் நினைவு அறக்கட்டளை ஆண்டு தோறூம் கருத்தரங்கு நடத்துகிறது.சில ஆண்டுகளுக்கு முன்னால் Time (காலம்) என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.அதன் விவரம் முழுமையாக வெளிவரவில்லை.
காலம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடை தேரிந்த மாதிரியும் இருக்கிறது.சொல்லிப்பார்த்தால் சரியில்லை என்றும் தோன்றுகிறது.இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.ஒரு பிரமுகர் மரைந்துவிட்டார் என்றால் நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.கூட்டத்தலைவர் ஒரு நிமிடம் அஞ்சலி என்று அறிவிக்கிறார்.நாம் கண்மூடி நிற்கிறோம்.வெகுகாலம் ஆகியதுபோல் தோன்றுகிறது .ஓரக்கண்ணால் கைக்கடியாரத்தைப் பார்க்கிறோம். முப்பது விநாடிதான் ஆகியுள்ளது.நாம் காலத்தையும் நேரத்தையும் குழப்பிக் கொண்டுவிட்டோமா?
What is time? என்ற கேள்விக்கு மாமேதை லேனின் It is an interval between two phenomena(இரண்டு சம்பவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி) என்கிறார்.சின்னமுள் பனிரெண்டிலும் பெரியமுள் ஒன்றிலும் இருக்கிறது. அது மாறுகிறது.இப்போது பெரியமுள் இரண்டிற்கு வந்துவிட்டால் இந்த இரண்டு சம்பவங்க்களுக்கு இடையே ஐந்து மணித்துளிகள் கடந்து விட்டது என்று நாம் உணருகிறோம்.நான் இதனை எழுதிக் கொண்டிருக் கிறேன்.இது ஒரு சம்பவம். நான் பிறந்தது ஒரு சம்பவம். இரண்டிற்குமான இடை வெளி எழுபத்தியைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது காலம் என் பிறப்பிலிருந்து தான் ஆரம்பமாகிறதா? ஆரம்பம் எது? எனக்கு முன் என் தநதை-பாட்டனார்-அதற்கு முன்-அதற்கும் முன் என்று ஆரம்பதைத் தேடி பின்னோக்கிப் போய்க்கொண்டே இருந்தால் தொடுவானம் போல் போய்க்கோண்டே இருப்போம்.அப்படியானால் ஆரம்பம் என்று கிடையாதா?
ஆங்கில மொழியில் year என்று கூறுவார்கள்.பின் month,week,day,hour, minitue என்பார்கள். காலத்தின் கடைசி அலகை ஆங்கிலத்தில் second என் பார்கள்.It is not the first, because no body knows which, or what is first.அதனால்தான் மிகக்குறைந்த கால அளவைக்கு "செகண்டு" என்று இரண்டாவதுஎன்று குறிப்பிட்டார்கள்.
ஆதியும் அந்தமும்தெரியாதது காலம்.நமது தத்துவ ஞானிகள் இறைவன் என்ற கருத்தை ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி என்று குறிப்பிடுவதும் இதனால்தானோ!
1 comments:
தோழர்.வணக்கம் இப்போதுதான் படித்தேன்.காலத்திற்கு ஏற்பச் சுருக்கமான விளக்கம்.நல்லா இருக்கிறது.k
Post a Comment