Saturday, August 07, 2010

theatre...9

"மா பூமி"


(எமது நிலம்)

தேலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை "மா பூமி" என்ற திரைக்காவியமாக 1979ம் ஆண்டு வங்க இயக்குனர் கௌதம் கோஷ் இயக்கி வெளியிட்டார்.

கிருஷ்ண சந்தர் எழுதிய "வயல்கள் எப்போது விழித்துக்கொண்டன" என்ற சிறுகதையின் திரை வடிவம் தான் அது.கிருஷ்ண சந்தர்,கோஷ்.நரசிம்மராவ் ஆகியமூவரும் திரைக்கு ஏற்ற படி கதையை சீர்செய்தார்கள். சாய் சந்த், ராமிரெட்டி,பிரபல புரட்சிப் பாடகர் "கத்தார்" ஆகியோர் நடித்தனர்.(நெல்லூரில் புனே திரைப்படக்கல்லூரி நடத்திய பயிற்சி வகுப்பில் சாய் சந்த் என்னோடு பயிற்சி பெற்றார்.)

ராமய்யா என்ற சிறுவன் விவசாயிகள் படும் வேதனையைச் சகிக்காமல் எதிர்க்கிறான்.வாலிபனான போது லம்பாடிப்பெண்ணை காதலிக்கிறான்.நிஜாமின் அதிகாரிகளுக்குத்தான் பெண்கள் முதல் சொந்தம்.இது பிடிக்காமல் ஹைதிராபாத் வருகிறான்.செங்கல சூளை ஒன்றில் தொழிலாளியாக பணி செய்கிறான்.சக தொழிலாளிகளோடு பழகி அவர்களோடு ஒரு நாள் தொழிற்சங்க

அலுவலகம் வருகிறான்.அங்குள்ள படங்கள், புத்தகங்கள் பற்றி எழுதப்படிக்க தெரியாத அவன் விசாரிக்கிறான்.எழுதப் படிக்க கற்று கொள்கிறான்.போதம் பெற்று கம்யூனிஸ்டாகிறான்.கட்சி நடத்தும்

விவசாயிகளின் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுக்க கிராமம் செல்கிறான்.

கட்சி போராட்டதை நடத்துகிறது.இந்தியா சுதந்திரமடைந்ததை போராளிகள் கொண்டாடுகிறார்கள்.நேரு அரசு தங்களுக்கு ஆதரவு தரப்போகிறது என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதிக்கிறார்கள்.விரட்டியடிக்கப்பட்ட ஜமீன்களும்,ஜாகீர்களும் கதர்குல்லாவோடு கர்னல் சௌத்திரியின் பீரங்கிகள் பதுகாக்க கிராமத்திற்குள் நுழைவது கண்டு ஆவேசமடைகிறர்கள். போராட்டம் தொடர்கிறது.

கௌதம் கோஷ் புகழ் பெற்ற இயக்குனர்.இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி படம் எடுக்க விரும்பினார்.தேசிய நூலகம் சென்று ஆராய்ந்தார்.தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் முக்கியமானதாகப்பட்டது.அது பற்றி தகவல் செகரிகச் சென்றபோது போராட்டம் நடந்த பகுதி மக்களுக்கே முழுமையான விபரம் தெரியவில்லை. போலீஸ் நடவடிக்கை,ராணுவ நடவடிக்கை

என்று குழம்பிபோயிருந்தனர், அதனால் இந்தியில் எடுக்காமல் அந்த அப்பாவி மக்களுக்கு நடந்ததை சொல்ல தெலுங்கு மொழியிலேயே எடுத்தேன்.என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

கடுமையாக காங்கிரஸ் கட்சியையும் ஆளும் வர்க்கத்தையும் விமரிசிக்கும் இந்தப் படத்தை சென்சாரில் அனுமதிப்பார்கள் என்று நினைத்தீர்களா? என்று கேட்டபோது,"சென்சார்

உறுபினர்களின் ஞானம் பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருந்தது.அது சரியென்று நிரூபணமாகியது.அது மட்டுமல்ல. ஆரம்பத்திலேயே நான் ஏன் குனிய வேண்டும்"என்றார் கௌதம் கோஷ்

0 comments: