Monday, August 02, 2010

theatre.....8

கிஷன் சந்தர் மிகச்சிறந்த எழுத்தாளர்.இந்தியிலும்.ஆங்கிலத்திலும்,புலமை பெற்றிருந்தாலும் அவர் உருது மொழியில் தான் ஆரம்பத்தில் எழுதினார்.1914ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார்.அவருடைய தந்தை மருத்துவராக காஷ்மீரின், பூஞ் பகுதியில் பணியாற்றியதால்,அவருடைய இளமைப் பருவம் அங்கேயே கழிந்தது.


பிரிவினையைத் தடுக்கமுடியவில்லையே என்று வேதனைப் பட்டார்."தோல்வி" என்ற நாவலை எழுதினார்.ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.1946ம் ஆண்டு அவர் எழுதிய சிறுகதை "தர்த்தி-கி-லால்" என்ற திரைப்படமாக வேளிவந்தது.தேவ் ஆனந்தின் சகோதரர், சேதன் ஆனந்த் இயக்கிய இந்தப் படம் சக்கை போடு போட்டது.ஆனந்த் சகோதரர்களும் பிரிவினைக்குப் பிறகு இந்தியா வந்தவர்கள்தான்.கிஷன் சந்தர் மும்பையில் வசிக்க ஆரம்பித்தார்..

அவருடைய சிறுகதைகள் 16 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.1977ம் ஆண்டு "அந்தப் புறவுக்காக" என்ற நாவலை எழுத ஆரம்பித்தார்.முதல் வரி"நூரானிக்கு புறா,குரங்கு, வண்ணப் பறவைகளைப் பிடிக்கும்......." என்று எழுதிக் கொண்டிருந்தவர் கையில் பேனாவைப் பிடித்தபடியே மாரடைப்பு எற்பட்டு மரணமடந்தார்.தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியை அமரகாவியமாகப் படைத்த "மா பூமி" என்ற தேலுங்கு திரைப் படத்திற்கு கதை எழுதியவரும் அவரே."தானம்"சிறு கதை தமிழில் நாடகமாக அரங்கேறியது.

பொள்ளாச்சி கவிஞர் வேலுச்சாமி எனக்கு அறிமுகம் உண்டு.த,மு,எ.ச வின் முதல் மாநாடு மதுரையில் நடந்தபோதுதான் நேருக்கமாக பழகினோம்."செம்மலரில்" கவிதைகள்,கதைகள் எழுதுவார்.60ம் ஆண்டுகளின் முற்பகுதியில் "செம்மலர் குழு" என்ற நாடகக்குழுவை நடத்தி வந்தார். கோவைப் பகுதியில் நாடகங்களை இந்தக் குழு நடத்தி வந்தது."தானம்" சிறு கதையைப் படிதுவிட்டு

நாடகமாக்கினார்.பலமுறை அரங்கேறினாலும் அன்றய நிலையில் போதிய வாய்ப்பு இல்லாததால்

குழு சிதைந்தது     

0 comments: