"நீயா ? நானா ?"வில்
சந்திர சேகரன் சொன்னது
சரிதனா?....!!!
சென்ற வாரம் நடந்த நீயா?நானா? நிகழ்ச்சி காதல் திருமணம் ,சாதீய எதிர்ப்பு, தீண்டாமை என்று பல விஷயங்கள் பற்றி விவாதித்தது!
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட சந்திரசேகர் என்ற பார்வையாளர் சில புதிய செய்திகளைச் சொன்னார்!
அவருடைய பேச்சின் மையப்புள்ளியாக " சாதியையும்.தீன்டாமையையும் இங்கு வந்துள்ளவர்கள் தெளிவில்லாமல் பேசுகிறார்கள் " என்பது இருந்தது!
"சாதி இருந்தது! ஹரப்பா காலத்திலும் இருந்தது ! ஆனல் தீண்டாமை இல்லை !அசோகர் காலத்தில் சாதி இருந்தத்து ! தீண்டாமை இல்லை! நம் நாட்டில் 5000 ஆண்டுகளாக சாதி இருந்தது! தீண்டாமை கி.பி 5ம் நூற்றாண்டில் தான் வந்தது! இன்றைய தலித்துகள் அன்று பௌத்தர்களாக இருந்தவர்கள் " என்று குறிப்பிட்டார்!
தமிழகத்தைப் பொறுத்தவரை இருண்ட காலம் என்று 2ம் நூற்றாண்டிலிருந்து 5ம் 6ம் நூற்றாண்டு வரை என்பார்கள்! இதே காலம் களப்பிறர்கள் காலம் என்று கருதுகிறவர்களும் உண்டு! களப்பிரர்கள் பௌத்தர்கள் என்றும் கூறப்படுவதுண்டு!
பண்டய சேர சோழ பாண்டியர்கள் உதிர்ந்த நிலையில் களப்பிறர்கள் ஆண்டனர்! இந்து மதத்தை உயிர்பிக்க வந்த சங்கரர் போன்றோர்
பௌத்தர்களை களையெடுக்க செய்த யுக்தி "தீண்டாமை" என்றும் கருதுபவர் உண்டு !
வரலாற்றாளர்களும் ,அறிவியலாளர்களும் பரிசீலித்து உண்மையை தேடவேண்டும் !!!
டு
2 comments:
ஆதாரம் இல்லாமல் -- எதையும் நம்ம இயலாது.
தீண்டாமை இன்னும் கிராமங்களில் தழைத்துக் கொண்டே இருக்கிறது.
சாதி இருந்தது ஆனால் தீண்டாமை இல்லை என்பது புதிய செய்தியாக உள்ளது அய்யா.நிச்சயம் ஆய்விற்கு உரியது.
Post a Comment