பேராசிரியர்களே! மாணவர்களுக்கு
சொல்லுங்களேன் ......!
நான் சிறுவனாக இருந்த போது நெல்லை மந்திர மூர்த்தி பள்ளியில் 6ம் வகுப்பு படித்தேன்!(1948 இருக்கலாம்).
எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சண்முகம்பிளை,மகாலிங்கம்பிள்ளை ஆகியொர் முருக பக்தர்கள்! ஆண்டுக்கு ஒரு முறை "சிலோன்" சென்று கதிர் காமத்து கந்தனை வழிபட்டு வருவார்கள்! அதோடு அந்த ஊர் மக்களிடம் பள்ளிக்கு நன்கொடை வசூலித்து வருவார்கள்!
1971ம் ஆண்டு ! கதிர்காமம் நகரத்தில் நடுத்தெருவில் ஒரு இளம் பெண்ணை அடித்து இழுத்துவந்தார்கள்! அவளை நிர்வாணமாக்கி நான்கு பேர் கற்பழித்தார்கள்! பின்னர் அவளை சுட்டார்கள்! அவள் உயிர் பிரியும் தருணத் தில்" தண்ணீ ர் , தண்ணீர் " என்று கதறினாள்! எவரும் வரவில்லை !
அவளைக் கற்பழித்தவர்கள் இலங்கை ராணுவத்தினர்! ரத்தம் கொதிக்கிறதா!அவசரப்படாதீர்கள்! அவள் ஒரு சிங்களப் பெண்! இலங்கை முதலாளித்துவ அரசினை துக்கி எறிய ஆயுதம்தாங்கிபோராடும் "ஜனதாவிமுக்தி பெருமுனா " என்ற இடது சாரி இயக்கத்தைச் சார்ந்தவர்!
அதே 1971ம் ஆண்டு ! இலங்கைபூராவும் 4000 சிங்கள வாலிபர்கள் கொல்ல ப்பட்டனர் ! அவர்கள் சடலங்கள் எரிக்கப்பட்டன! விறகை வீணாக்க வேண்டாம் என்று பாதி எறிந்த சடலங்களை ஒடும் ஆற்றில் வீசி எறிந்தனர்!
வாங்க தேசப் போரில் இந்தியா சம்மந்தப் பட்டிருந்த நேரம்! இரு
ந்தும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியது! மேற்கத்திய நாடுகள் உதவின! மனித உரிமைக்காரகள் கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டு சப்பினர்!
கொல்லப்பட்டவர்கள் இடது சாரீஇளைஞர்கள் !
இதோடு நிற்க வில்லை !
1989ம் ஆண்டு ! இலங்கை பூராவிலும் 60000 வாலிபர்கள் அவர்கள் இடது சாரிகள் கொல்லப்பட்டனர் !
நம்ம ஊர் திராவிடக் குஞ்சுகள் ,தமிழ் தேசீய குஞ்சுகள் போத்திக்கிட்டு இருந்தாங்க!
இது வரலாறு!
இது பாவம் அப்பாவி மாணவர்களுக்கு தெரியாது!
ச்சீமான் வாயை ...வேண்டாம் தப்பா எழுதிருவேன் !!
லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்குமா தெரியாது!!
அட! ஒய்வு பெற்ற பேராசிரிய்ர்களாவது மாணவர்களுக்கு சொல்லலாமே!!!
" ஆரோக்கியமா...." இருக்குமே!
3 comments:
உல்கெங்கும் இடதுசாரிகள் கொல்லப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள் இல்லை என்பது தேசீயவாதிகளின் அரசியல்.
உல்கெங்கும் இடதுசாரிகள் கொல்லப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள் இல்லை என்பது தேசீயவாதிகளின் அரசியல்.
மறதி என்னும் வியாதி மக்களை ஆட்கொண்டிருக்கிறது
Post a Comment