Tuesday, April 23, 2013

(இது ஒரு மீள் பதிவு )

இ.பி கோ 375
சிறு கதை


இ.பி.கோ---375 (காஸ்யபன்)

யாதவ குல அரச வம்சத்தில் புகழ் பெற்றவன் சுரன் இவனுடைய மகன் தான் வசுதேவன். சுரனுக்கு வசுதேவன் தவிர பிரீதா என்ற மகளும் உண்டு.

அந்தப்புரத்தில் அமர்ந்து சுனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுரன்.தூரத்தில் சிறுவன விளையாடிக்கோண்டிருந்தான். மூன்ரு வயது.பிரீதா வயதான தாதியுடன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்தந்தை சுரனைப் பார்த்ததும். ஓடிவந்து தந்தையின் மடியில் அமர்ந்த்தாள்.

"தந்தையே! நாம் போஜநாட்டிற்கு போகப்போகிறோமா?"

"ஆம் மகளே!ஆனால் நான் வரவில்லை நீ மட்டும் தான் சிறிய தந்தை குந்தி போஜனோடு செல்கிறாய்"என்றான் சுரன்

சுரனும் குந்தி போஜனும் தாயாதிகள்.நெருக்கமான நண்பர்கள். போஜனுக்கு வாரிசு இல்லை.சுரனுக்குப் பிறக்கும் இரண்டாவது குழந்தையை போஜனுக்கு தத்துக் கொடுப்பதாய் சுரன் சத்தியம் செய்து கொடுத்திருந்தான்.

துர்வாசரும், வியாசரும் மந்திரகோஷங்களை முழங்க,குந்தி போஜன் சுரனின் மகளான பிரீதாவை தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டான்.

"குழந்தாய்! இனி போஜன் தான் உனக்கு தந்தை. இனி போஜநாட்டிலேயே நீ வாழவேண்டும்." என்று சுரன் கூறினான்.

சிறுமி புரிந்தும் புரியாதவளாக தலையை ஆட்டிவிட்டு கிழத்தாதியைப் பார்த்தாள்.

"பிரீதா என் று இனி உன்னை அழைக்க முடியாது குழந்தாய்! நீ குந்தி போஜனின் மகளாகி விட்டாய்.இனி உலகுக்கு குந்தி என்றே அறியப்படுவாய்" என்றார் மகரிஷி துர்வாசர்.

. குந்தி போஜன் நண்பனும் யதுகுல அரசனுமான சுரனிடம் விடை பெற்றுக் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏறினான்.அவர்களுக்கு முன்னும் பின்னுமாக ஏராளமாக பொன்னும் பொருளும் தாங்கிய வண்டிகள் சென்றன.

-----------------------------------------------------------

கிழத்தாதி குந்தியைப் பார்த்து முகிழ்ந்தாள்.அவளுடைய அழகும் புத்திசாலித்தனமும் கிழவியைத் திணற வைத்தது.அழகழகான உடைகளை தேடிபிடித்து குந்திக்கு உடுத்தி தாதி அழகு பார்ப்பாள்.எந்த உடையும் பத்து நாட்களுக்கு மேல் தாங்காது.உடை முழுவதும் குந்தி நிரம்பி வழிவாள்.வயது ஏறிக்கொண்டு வருகிறது. உடலில்சிறு சிறு மாற்றங்கள்.

இப்போதேல்லாம் குந்தி கேட்கும் கேள்விகளுக்கு கிழத்தாதியால் பதில் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஆண்-பெண் பற்றீ குந்தி கெட்கும் கேள்விகள் விரைவில் அவள் பரிபக்குவம் அடையப்போகிறாள் என்பதி தாதிக்கு உணர்த்தியது.

குந்தி போஜன் குந்தியின் மீது உயிரையே வைத்திருந்தான்.ஆன்டுதோறும் அவளுடைய ஜன்ம தினத்தன்று முனிபுங்கவர்களை அழைத்து நட்சத்திர ஹோமம் நடத்துவான்.

ஹொமத்திற்கு வந்திருந்த துர்வாசர் விடை பேற்று செல்ல வந்திருந்தார்.போஜன் மகள் குந்தியோடு வந்திருந்தவர்களுக்கு தக்க சன்மானங்களைக் கொடுத்துக்கொண்டுஇருந்தான்.

"முனிபுங்கவ! தங்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன்." துர்வாசரைப் பார்த்துக் கேட்டான்.

"போஜராஜனே! எமது ஆசிரமத்தில் குற்றேவல் புரிய உன் மகள் குந்தியை அனுப்பி வை"என்றார் துர்வாசர். திடுக்கிட்டுப் போன போஜன் இருகரங்களையும் கூப்பி" சுவாமி! அவள் சிறுமி!....அவளால்.."என்றான

"அதனால் தன் கூப்பிடுகிறேன் "

துர்வாசரின் கோபத்தை அறிந்த போஜன் அதற்குமேல் பெசவில்லை.

_______________________________________________

துர்வசரின் ஆசிரமத்தில் ஓடியோடி குற்றேவல் புரிந்து வந்தாள் குந்தி.கிழத்தாதியோடு நதியில் நீராடிவிட்டு பூக்களை பறிப்பாள். மாலைகளைத்தொடுப்பாள். ஒரு நாள் தனிமையில் இருந்த போது கிழத்தாதியை துர்வாசர் தனியாக அழைத்துப்பேசினார்.

"சுவாமி...!"

" குந்தி எப்படி இருக்கிறாள்?" என்று துர்வாசர் தாதியிடம் கேட்டார்.

"சின்னஞ்சீறுமி! ஓடியாடி பூப்பரித்து விளையாடி மகிழ்கிறாள்"

"அவளுக்கு எல்லாம் சொல்லிவத்திருக்கிறாயா?"

" சுவாமி! அவள் சிறுமி..."

"இன்று இரவு அவள் பஞ்சணையில் நீ படுக்க வேண்டாம்"

திடுக்கிட்டு துர்வாசரை பார்த்தாள் தாதி.கண்கள் சிவந்திருந்தன.தாடிக்குள் பருத்த உதடுகள் கோரமாய் வளைந்திருந்தது.

------------------------------------------------------------------------------

" இரண்டு மூன்று நாட்களாக இரவு நீ ஏன் என் பஞ்சணைக்கு வருவதில்லை"குந்தி தாதியிடம் கேட்டாள்.

"---------"

" நான் கேட்கிறேனே பதில் சொல்"

தாதி ந்மிர்ந்து பார்த்தாள். மிரண்டு போன குந்தியின் கண்கள் தெரிந்தன.

" என் அடி வயிறு வலிக்கிறது"

குந்தியை ஆதூரமாக அணைத்துக்கொண்ட தாதி குந்தியின் வயிறை வருடிவிடாள்.

"தாதி! எனக்கு உணவு வேண்டாம்.உணவைப்பார்த்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது"

'குந்தி! நீ அவரத்தடுக்க வில்லயா?"என்று கேட்ட தாதியையே பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தி.

" என்ன நடக்கிறது என்பது தெரிவதற்கு முன்பே எல்லாம் நடந்துவிட்டது"

"பிண்?"

" நான் பரிபக்குவம் அடையவில்லை என்று அவரிடம் கெஞ்சினேன்"

-------------------------------------------------------------------------------------

"குந்தி! நீ இப்போது கர்ப்பமாகி இருக்கிறாய்" என்றாள் கிழத்தாதி.("தீக்கதிர்" பத்திரிகையின் இணைப்பு இதழான" வண்ணக் கதிரில்" 2004ம் ஆண்டு ஜூலை வெளியானது)
   

0 comments: