சாம்பார் (ஜி )
புராணம் ........!!!
நன் 1948ம் ஆண்டு 12 வயதுசிறுவனாக இருந்த போது முதன் முதலாக நாகபுரி வந்தேன் ! அப்போது என்னை மராட்டிய நண்பர்கள் "மதராசி " என்று அழைப்பார்கள்! அதிலொரு நியாமும் இருந்தது !அன்று இருந்த மதறாஸ் மாகாணத்தில், தெலுங்கு ,கன்னடம்,மலயாளம்,தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தனர்! பின்னர் மொழிவாரி மாநிலங்கள் வந்தன !
இப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களை "இட்லி-சாம்பார் " என்கிறார்கள் !
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ,சிவாஜி, ஜெமினி ஆகியோர் திரைத்துறை யில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரம்! சிவாஜியும்,எம்.ஜி.ஆறும் திராவிடக்கட்சியில் இருந்தனர்! அதனால் அவர்களுக்கு தன மான தமிழர்களின் வெறித்தனமான ஆதரவு இருந்தது! ஆரம்பகாலத்தில் அவர்களும் அதனை தங்களின் முன்னேற்றத்திற்கு லாவகமாக பயன்படுத்தி வந்தனர் ! லால்குடியில் நடந்த மாநாட்டில் "அண்ணா ஆணையிட்டால், கருணா கட்டளையிட்டால் எக்ரிமென்டுகள் எத்தன இருந்தாலும் கிழித்திஎறிந்து விட்டு இயக்கம் காட்டும் பாதையில்செல்வேன்" என்று சூளுரத்தவர் தான் சிவாஜி!
மூகாம்பிகை கோயிலுக்கு போனவர்தான் எம்.ஜி .ஆர்!
இவர்களுடைய ஆதரவாளர்களான திராவிடக் குஞ்சுகள் "ஜெமினி கணேசனை
"சாம்பார்" என்று கிண்டலடிப்பார்கள் ! ஏன் ? பிற்காலத்தில்கமல ஹாசனையும் சாம்பார் என்று கிண்டலடித்தார்கள் !
வடநாட்டில் "சாம்பார் " தமிழனையும்,தமிழ்நாட்டில் பாப்பானையும் கிண்டல் செய்ய பயன்பட்டு வந்த வார்த்தையாக இருந்தது!
சாம்பார் என்பது தமிழ்நாட்டில் ஒரு உணவுப் பொரூள் ! அதன் மூலம் பற்றி சமீபத்தில் கிடைத்த செய்திகள் வியப்பை அளிப்பதாக இருந்தது !
தமிழ்நாட்டில் தஞ்சை பகுதியில் மராட்டியர் ஆட்சி நடந்தது! சரஸ்வதி மகால் என்ற அற்புதமான புத்தகக் காப்பாகம் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது மராட்டிய மன்னர்கள் கலை ,இலக்கியம்,ஆகிய துறைகளை வளர்த்தெடுப்பதில் அக்கறைகாட்டினர்!
ஷாஜி ராவ் என்ற தஞ்சை மன்னர் சமையல் கலையிலும் வல்லவர்! தர்பாருக்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு தன்கையால் சமைத்து உணவு பரிமாறுவார்! புதிது புதிதாக செய்து அளிப்பார்!
மராட்டியர்கள் புளியை அதிகம்சேர்க்க மாட்டார்கள் ! அவர்கள் செய்யும் "தால்
துவரம் பருப்பினை கடைந்து செய்யப்படுவது! அதில் புளிப்பிற்காக எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்வார்கள் உரப்பிற்காக இரண்டு பச்சை மிளகாயை கிள்ளிபோட்டுக் கொள்வார்கள்!
தமிழ் நாட்டு உணவு வகையில் புளி ஒரு முக்கியமான அம்சம்! சில வடநாட்டு நண்பர்கள "இம்லிவாலா " என்று தமிழ் நாட்டவர்களை குறிப்பிடுவார்கள்!
அரசர் ஷாஜி மராட்டிய 'தால் " ,புளி, காய்நத மிளகாய் மூன்றையும் சேர்த்து ஒரு புதிய குழம்பினத் தயார் செய்தார்! புதிய பண்டம் செய்தால் அதற்கு பெயர் வைப்பது அவருடைய வழக்கம்!
சிவாஜியின்மகன் "சாம்பாஜி" யின் மீது மிகுந்த மதிப்புக்கொண்ட அவர் அந்த புதிய குழம்பிற்கு "சாம்பாஜி " என்று பெயர் வைத்தார்!
தமிழ் நாட்டில் ஒரு பழக்கமுண்டு ! ராமன் என்றால் மனிதன்! ராமர் என்றால் கடவுள்! கிருஷ்ணன் என்றால் மனிதன்! கிருஷ்ணர் என்றால் கடவுள் தங்கள் மரியாதைக்கு உரியவர் என்றால் "ர் " விகுதி போட்டு அழைப்பர்கள் !
"சாம்பாஜி"யை "சாம்பார் " என்று சொல்ல ஆரம்பித்தார்கள்!
"சாம்பார்" என்ற உணவு வகை மராட்டிய -தமிழக கலப்பு !!
2 comments:
சாம்பார் - பெயர்க் காரணம் சுவாரஸ்யம்...
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சொன்ன போது நானும் வியந்து போனேன்.
Post a Comment