நட்புக்கும் மேலாக------
௨௦௦௦மாவது வருடம்
ஜனவரி மாதம் 25ம் தேதி அது நடந்தது.கேரள மாநிலம் வடக்கு அம்பலபுழாவில் நடந்தது.அந்த ஊரில் உள்ள இருப்புப்பாதையின் நடுவே ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தாள். எதிரில் டீசல் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் வந்து கொண்டிருந்தது.அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ளத்தான் ஓடுகிறாள் என்று சந்தேகப்பட்ட வேறொரு பெண் அவளை இழுத்து காப்பாற்றுகிறாள்.
ஓடிவந்த பெண்ணுக்கு அறுபது வயதிருக்கும்.நம்பூதிரி குடும்பத்துப் பெண்.பெயர் செல்லம்மாள் அந்தர்ஜனம்.அவரைக் காப்பாற்றிய பெண்ணின் பெயர் ரஜியாபீவி.
செல்லம்மாளுக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவரும் வெகு சீக்கிரத்திலேயே இறந்து விட்டார் உறவினர்களின் அக்கரையற்ற,உதாசீனமன,வெரு
ப்பான போக்கு செல்லம்மாளை தெருவுக்கு விரட்டியது.அவள் தனக்கு ரயிலிடம் புகலிடம் கேட்க ஓடியபொதுதான் ரஜியாபீவி அவளைத் தடுதாட்கொண்டாள்.
ரஜியா பீவி வடக்கு அம்பலப்புழாவின் பஞ்சாயது உறுப்பினரும் ஆவார்.செல்லம்மாளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அவருடைய கணவரும் நான்கு மகன்களும் அன்போடு வரவேற்றனர். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் செல்லம்மாவுக்கு என்று வீடு கட்ட பஞ்சாயத்தை ரஜியா அணுகினார். ஆதரவற்ற பெண்களுக்கான பஞ்சாயத்து திட்டம் மூலம் உதவி கேட்டார்.
செல்லம்மாள் ஒரு இந்து.அவளுக்காக நீ ஏன் அக்கரைப் படுகிறாய் என்று உறவினர்களும் ஊர்க்காரர்களும் ரஜியாவை தடுத்தனர்.
ரஜியா கவலைப்படவில்லை.தன் செலவிலேயே ஒரு ஏற்பாடு செய்தார்.தற்போது செல்லம்மாள் தனியாக வசிக்கிறார் ரஜியா தினம் ஒரு. முறை சென்று பார்த்து வருகிறார். ரஜியா தனக்கு செல்லம்மாள் என்ற தாய் கிடைத்துவிட்டதாக சொல்கிறார். தனக்கு "ரஜியா மகள்" கிடைத்து
விட்டதாக செல்லம்மாள் பூரிக்கிறாள்.
இந்தச் செய்தியைக் கெள்விப்பட்ட இயக்குனர் பாபு திருவில்லா இதனை திரைப் படமக எடுக்கிறார். எற்கனவே "தனியே", "அமரம்" என்ற படங்களை எடுத்தவர் அவர்.ரஜியா பீவி யாக கல்பனாவும் செல்லம்மாவாக சுப்புலட்சுமியும் நடிக்கிறார்கள்.இந்த்ப்படத்தின் மூலம் மத நல்லிணக்கம் பற்றி ஒரு செய்தியை மக்களுக்கு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம் என்கிறார் பபு திருவில்லா.
(ஆதாரம்: இந்து 21-8-10 )
4 comments:
நல்ல செய்தி!!எல்லா மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளி வரவேண்டும் என்பது என் கருத்து
பகிர்வுக்கு நன்றி.
என்ன ஆச்சு.
தலைப்பே இல்லாமல் பதிவு வந்திருக்கிறது.
நெகிழ்வான, மகிழ்ச்சியான செய்தி. பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்
அரிய மற்றும் அவசியமான தகவல் தோழரே.
தலைப்பு இல்லை.ஆதலால் பழையதுதானோ என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது.
Post a Comment