Tuesday, August 24, 2010

தமிழும், எம் தமிழ் மக்களும் வாழ்க!

தமிழ் வாழ்க! எம் தமிழ் மக்களும் வாழ்க!

நான் பணி புரிந்த அலுவலகத்தில் ந.திருமலை என்ற நண்பர் என்னோடு பணியாற்றினார்.அவர் ஒரு ஸ்கூட்டர் வாங்கினார்.அதன் முகப்பில் "மெல்லுந்து" என்று பிளாஸ்டிக் எழுத்துக்களால் பொறித்திருந்தார்.அது எனக்கு விசித்திரமாக இருந்தது.அவரிடம் "பைக்"என்றால் என்ன எழுதுவீர்?

"வல்லுந்து"

"மொப்பெட் என்றால்?"

"சில்லுந்து"

"சைக்கிள்?"

"மிதி உந்து"

நான் அசந்துவிட்டேன்.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் தமிழில் தான் கையெப்பமிடுவார். வருகைப் பதிவேட்டில் "நதி" என்று குறுங்கையெழுத்திடுவார்.வங்கி காசோலையில் தமிழில் தான் கையொப்பமிடுவார்.அன்று அவரை ஒரு தமிழ் வெறியர் என்று நினைத்தேன்.

1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.'பக்தவத்சலக் குரங்கே! பதவியை விட்டு இறங்கு! என்று மாணவ்ர்களுக்கு குரல் எழுப்ப கற்றுக்கொடுத்தேன்.60--70 மாண்டுகளின் முற்பகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் துறைகளின் பெயர்பலகைகளை மாற்ற அரசு உத்திரவிட்டது.முதன் முதலில் போலீஸ் இலாகாவில் தான் மாற்றினார்கள்.அப்போது அந்த இலாகாவின் அமைச்சர் பக்தவத்சலம். திருவல்லிக்கேணியில் பெரியதெரு உள்ளது.அதுவும் வலாஜா ரோடும் சந்திக்கும் இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தது.அதன் பெயர்ப்பலகையை மாற்றி "காவல் நிலையம்" என்று எழுதினாரகள்.அப்பப்பா! ஆங்கிலப் பத்திரிகைகள் தலையங்கம் மூலம்

திட்டித்தீர்த்தன."அது என்ன காவல் நிலையம்? ஊர்க்கவலா? கடற்காவலா? பேசாமல் போலீஸ் ஸ்டேஷனென்று தமிழிலேயே எழுத்தித்தொலைக்க வேண்டியது தானே?" என்று கூக்குரலிட்டார்கள்.

1897ம் ஆண்டுவாக்கில் "தயாப்ஜி" தலைமையில் காங்கிரஸ் கட்சியீன் மாநாடு நடந்தது. ஆங்கிலத்தில் தான் பெசுவார்கள். தஞ்சையைச்சேர்ந்த சிங்கனாசாரி என்ற விவசாயி சார்பாளராக வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் தெரியாது.காங்கிரஸ் மஹாசபையில் தமிழில் ஒலித்த முதல் குரல் சிங்கனாசாரியினுடயதாகும். ஏன்? தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக தமிழில் பேசியவர்கள் பி.ராம மூர்த்தியும், ஜீவாவும் ஆகும்.கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மதறாஸ் மகாணத்தை மொழிவாரியாகப் பிரித்து அந்தந்த மொழிபேசும் மக்களை அந்தந்த மக்களோடு இணைக்க நடந்த போராட்டத்தில் முதல் அடி பட்டவர் கம்யூனிஸ்ட் தலைவர் காலம் சென்ற எம்.ஆர்.வெங்கட ராமன் ஆவார்.

தமிழைக் காசாக்கி,காசைக் கூழாக்கி,கூழைக் குடித்துவிட்டு, கும்மாளம் போடுபவர்களும் உண்டு.

எனது அருமை நண்பர் வேணுகோபால் எனக்கு எப்போது கைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பினாலும் தமிழில் தான் அனுப்புவார்.

தமிழை வாழவைப்பவர்கள் ந.திருமலை,வேணு கோபால் போன்ற சாதாரணமானவர்கள்.தமிழுக்கு அடி உரமாக இருப்பவர்கள் எம் தமிழ் மக்கள்.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு.

ஆங்கிலப் புலமை இருந்தும் தமிழிலேயே உரையாடும் எழுதும் பொது உடைமை தலைவர்களை அதனால் தான் எனக்கு பிடிக்கும்.

பா.ராஜாராம் said...

மிக நல்ல பகிர்வு சார்.

ராசராசசோழன் said...

நல்ல சொன்னீங்க...தமிழ்..தமிழ்னு பிழைப்பு நடத்துபவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்....

kashyapan said...

நன்றி ராம்ஜி!
நன்றி ப.ரா!
நன்றி ராச ராச சோழன்!

சுருதிரவி..... said...

தங்கள் பதிவின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழுக்காய் ஒரு பதிவிட்டதற்கு பாராட்டுக்கள்.

kashyapan said...

என்ன செய்ய?வாழ்க்கையின் ஒரு பகுதி கணினி எதிர்ப்பில் கழிந்தது.தட்டச்சு கூட தெரியாது. நாகபுரியில் வசிக்கிறென்,(தற்போது) பேரனுக்குமராத்தி.இந்தி,ஆங்கிலம் எழுத,பெச, படிக்க வரும். "சன் டி.வி" யில் எழுத்துப் பொட்டால் ஓடிவந்து என்னிடம் கேட்பான்.இந்தியும் தமிழும் தெரிந்த நண்பர் இதனை ஆரம்பித்துத் தந்தார்.தலைப்பில் கூட ஆங்கிலத்தைத்தான் பயன் படுத்தி வந்தேன். மாதவ்ஜி தான் தலைப்பை தமிழில் பொடுங்கள் என்றார். முகப்பு,மற்றும் சகலமும் சாத்தூரிலிருந்து அவர் செய்த ஏற்பாடுகள் தான். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி....காஸ்யபன்.

மோகன்ஜி said...

காஷ்யபன் சார், உங்கள அனுபவமும் வேதனையும் ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படுகிறது. தமிழ் வாழ்வது எளியவரிடத்திலேதான்.தமிழின் அருமையும் தாகமும் தமிழ் நாட்டைவிட்டு ஆறு மாதம் எங்காவது இருந்தால் தெரியும். தமிழுக்கான தவிப்பை ஜூலை மாதம்
ஒரு இடுகை'தமிழே என் தமிழே'என இட்டிருந்தேன்.பார்க்கவும்.என் அன்பு அனைவருக்கும்