"முகலாயர்களின் ரத்தினக்கல்."
கிட்டத்தட்ட ஐம்பது அல்லது ஐம்பத்திரண்டு ஆனண்டுகள் சென்ரறுவிட்டன அப்போது நான் ஹைதிராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.ரஃபீக் அகமது, ஜமீல் கான்,ரஹமான் கான் என்று நண்பர்கள்.ராமாரவ், ராம்மோகன் ராவ் என்று தெலுங்கானா நண்பர்கள் உண்டு.மாத்ருபூதம் என்று தஞ்சாவூர் பெரியவர் ஒருவர் எங்களோடு பணியாற்றியனார்.லட்சுமி இன்சூரன்ஸ் கம்பெனியின் கராச்சி அலுவலகத்தில் இருபது ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பிரிவினைக்குப் பின் இங்கு வந்தவர்.அவர் உதட்டிலிருந்து ஆங்கிலம்,சமஸ்கிருதம்,உருது மொழிகள் பிரவாகமாகக் கொட்டும்.அப்போதெல்லாம் ஒரு மரபு இருந்தது.நண்பர்களுக்கு பிறந்த தினம் என்றால் மதிய இடைவெளையில் "முஷியாரா" (கவியரங்கம்) உண்டு.உருது மொழியில் பிறந்த நாள் நண்பரைப் பற்றி ஆளுக்கு ஒரு கவிதையாவது பாட வேண்டும்."சௌதவி-கா-சாந்த்"', காகஜ்-கி-பூல்","சாஹிப்-பீவி-குலாம்" ஆகிய படங்களை சேர்ந்து பர்ப்போம்.வசனங்களில் உருது மணம் கமழும்,
"முகல்-இ-ஆஜம்"(முகமதியனின் ரத்தினக் கல்)என்ற படம் 1960 ஆண்டுவாக்கில் வந்தது.அன்றே ஒன்றரைக் கோடி தயாரிப்பு செலவு. அந்தப் படத்தின் ஒவ்வொரு வசனத்தையும், பாடல்களையும் ரஃபிக்கும்,ஜமீலும் சொல்ல நாங்கள் பரவசமாக கேட்போம்.(uruthu is a romaantic language)உருது மொழிக்கு என்று கூடுதலான அழகியல் உண்டு
அக்பரின் மனைவி "ஜோதா பாய்". கிருஷ்ணபகவானின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.எந்த சந்தர்ப்பத்திலும் அக்பர் தன் மனைவியை மதம் மாறும் படி சொல்லவில்லை. மனைவிக்காக அரண்மனைகுள்ளேயே ஒரு கிருஷ்ணன் கொவிலைக் கட்டிக் கொடுத்தார். அந்தக் கோவிலில் ஆண்டுதோரும் நடக்கும் "கிருஷ்ண ஜயந்தி விழா"ஜோதா பாயா"ல் சிறப்பாக நடத்தப்படும்."முகல்-இ-ஆஜம்" படத்திலும் இந்தக்காட்சி உண்டு.
"என் காதலன் நந்தலாலா(கண்ணன்) என்னைச் சீண்டுவான்.எனக்கு விருப்பமிருந்தாலும் நான் பொய்யாக கோபத்தைக் காட்டுவேன்.நான் பெண்ணல்லவா!ஆனால் சபையில் நான்கு பேர் முன்பு சீண்டும்போது நான் என்ன செய்வேன்'என்று கண்ணனின் காதலி பாடுவதாக வரும்.
இந்தப்பாடலை எழுதியவர் "ஷகில் பாதயுனி" என்ற இஸ்லாமியர்.மற்றொரு இஸ்லாமியர் "நௌஷத்" இசை அமைத்தார்.இந்தப் படத்தை இயக்கியவர் அசிஃப் என்ற இஸ்லாமியர். கண்ணன் வாழ்ந்த இடங்களான மதுரா,பிருந்தாவன் ஆகிய இடங்களில் பேசும் வட்டார மொழி 'பிரிஜ் பாஷ' என்ற இந்தியாகும் கவிஞர் ஷகில் பாடலில் அதனைத்தான் பயன் படுத்தி இருப்பார்.
' ஆரம்பத்தில் இந்தப் பாடலை எடுத்துவிடும்படி விநியோகிப்போர் கூறினர்.அரண்மனைக்குள் கோவில் இருந்ததும் அங்கு விழா நடந்ததும் உண்மை. நான் அந்தக் காட்சியோடுதான் வேளியிடுவேன் என்று அசிஃப் அறிவித்தார்.
பின்னர் மதுரை வந்துவிட்டேன்.என் தாய் மாமன் ஒருமுறை வந்திருந்தார்.காலை ஐந்து மணிக்க எழுந்.து குளித்து,வ டக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோவில் சென்று வந்தார். நான் அப்போதுதான் எழுந்தேன்."கிருஷ்ணஜெயந்த்தி. கொவிலுக்கு பொயிட்டுவாடா" என்றார். தூக்கக் கலக்கத்தில் "அல்லாஹு அக்பர்" என்றென். 'தாயோ....."என்று என் மாமா செல்லமாக என்னை அடிக்க கையை ஒங்க்கினார்..
6 comments:
முகல் இ ஆஜம் இந்திய திரை வரலாற்றில் கூட ஒரு வைரக் கல்லே !
சில வருடங்களுக்கு முன் பழைய பிரின்ட்டுகளை தொழில்நுட்ப ஜாலத்தில் வண்ணமயமாய்ப் புதுப்பித்து திரையிட்ட பின்னே பார்த்தேன்.திரைக் கவிதை.திலிப் குமாரும் மதுபாலாவும் தொட்டுக் கொள்ளாமல் கண்களாலேயே காதலைப் பேசும் காட்சிகள் அருமையானவை.அமரத்துவம் பெற்றப பாடல்கள்.உங்கள நினைவுப் பரணிலிருந்து அப்படத்தை நினைவு கூர்ந்த்திருப்பது ரசமானது.இம்மாதிரியான பழைய படங்கள்,பாடல்கள்,நாடகங்களை உங்கள பரணிலிருந்து தூசு தட்டி வெளியிடுங்களேன்!காத்திருக்கிறேன்
ரொம்ப அருமை சார்.
அக்பர் பாட்ஷா பற்றி , என் இஸ்லாமிய நண்பரிடம் இதை பற்றியெல்லாம் முன்பொரு முறை கேட்டேன் அதற்கு அவர் "அதுனால தான் அக்பரை நாங்க நல்ல முஸ்லிம்னு ஒத்துக்க மாட்டோம் " என்றார். மதன் அவர்களின் "வந்தார்கள் வென்றார்கள்" படித்த பின்பு அவருக்கு ஏன் "Akbar the Great "என்று அழைக்கிறர்கள் என்று புரிந்தது.
முகல் இ ஆசம் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இந்தி மொழி தெரியாதது நிறைய பேசப்படும் திரைப்படங்களை பார்க்க விடாமல் செய்துவிட்டது. எனக்கு பொதுவாகக் காட்சி ஊடகத்தின் மீது ஒரு கண்! (பின்னே காதா இருக்க முடியும்?) பரம திரை ரசிகன், பாடல் சுவைஞன், நடிப்பையும், வசனங்களையும் அப்படியே திரும்பச் செய்து காட்டுவதில் எனது இளமைப் பருவம் பெயர் வாங்கிக் கொடுத்ததுண்டு. ஆனாலும் இந்தி மொழியில் வெளி வந்த அற்புதக் காவியங்கள் பலவற்றை இழந்துதான் விட்டேன்.
உங்களது கடந்த கால நினைவோட்டம் சிறப்பாக அமைகிறது. ஆட்களையும், பெயர்களையும், நிகழ்வுகளையும் இலேசாகத் தெரிவது போன்ற முறையில் மிக லாவகமாக அடுக்கி வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
என்ன, அந்த முஷியாராவா, இன்னது அது? அதிலிருந்து இரண்டு உருது உருப்படிகளை எடுத்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். இன்னும் காலம் கடக்கவில்லை. முயற்சி எடுக்கலாமே.
எஸ் வி வேணுகோபாலன்
அதிக இந்தி படங்கள் பார்த்திராத (மொழி தெரியாததால்) எனக்கு, முற்றிலும் புதிய தகவல்.
நன்றி சித்ரா அவர்களே!திருநெல்வேலி டவுண் தான் எனக்கும்.இக்ணேஷியஸீல் தான் என் பேத்திகள் படித்தார்கள்..---காஸ்யபன்
தோழர்... முகல் இ ஆஜம் படம் பற்றி நிறைய்யப்பேசுவார்கள்.அல்லது குறிப்பிடுவார்கள் அதைப்பார்க்கவேண்டுமென்கிற ஆவலைத்தூண்டுகிறது பதிவு.
Post a Comment