Saturday, August 14, 2010

The real owners

திராவிட நாகரீகம் ஆரிய நாகரீகத்திற்கு முந்தயது என்று வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களே! அப்படியானால் கீழ்படியத் தயார்தானா?கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கும்.ஆனால் எல்லாவற்றிர்க்கும் தலையாய கேள்வி இயற்கையாகவே எழும் கேள்வி ஒன்று உண்டு.
இந்தநாட்டின் சொந்தக்காரன் யார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
உலகத்தில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் பல உண்டு.அவற்றில் ஒன்று மனிதன் தோன்றி பல ஆண்டுகளுக்குப் பின்னர்,பலப்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதுதான் மதம் என்பதாகும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்கிறது.வேறு பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வந்து அவர்களும் வாழத் தலைப்படுகிறார்கள். ஆக்கிரமித்தவர்கள் சில காலம் ஆளுகிறார்கள்.இந்த சில காலம் என்பது வலாற்றில் பல நூற்றாண்டுகளாகும்.இந்த நூற்றாண்டுகளில் அவர்களின் பழக்க வழக்கங்கள் ,மொழி,கலாச்சாரம்,ஆகியவை எற்கனவே இருந்த மொழி, கலாச்சாரத்தொடு பின்னிப் பிணைந்து சங்கமமாகின்றன.
எந்த ஒரு நாட்டின்நாகரீகமும் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ளவும்-- செழுமைப்படுத்திக் கொள்ளவும்--வீரியப்படுத்திக் கொள்ளவும் இதே முறையைத்தான் பின்பற்றும். இது உலகின் சகல நாட்டுச் சரித்திரத்தின் பொதுவான பாதை.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் "இந்து"என்பவன் இருந்ததில்லை. புத்தன் பிறப்பதற்கு முன்னால் சீனாவிலும். ஜப்பானிலும் புத்த மதம் இல்லை.கிறுஸ்து பிறப்பதற்கு முன்னால் ஐரோப்பாவில் கிறிஸ்தவன் இருந்ததில்லை.முகம்மது நபி பிறப்பதற்கு முன் இஸ்லாமியன் இருக்கவில்லை.இவை எல்லாம் இல்லாத சமயத்திலும்"மனிதன்" இருந்தான்.மக்கள் வாழ்ந்தார்கள். காடு திருத்தி, வீடுகட்டி,அணை கட்டி, வாய்க்கால் வெட்டி,இரும்பையும் வேண்கலத்தையும்,உருக்கையும் உபயோகப்படுத்தி தங்கள் வாழ்க்கைத்தேவையை இட்டு நிரப்பிக் கொண்டார்கள்.அப்போது ஏது "இந்து"?"ரிக்வேதம்" ஏது?
நபிகள் பிறப்பதற்கு முன் அரேபியர்கள் கற்களையும் மரங்களையும் வணங்கினார்கள் பெர்சியர்களும்,எகிப்தியர்களும் நெருப்பையும் சூரியனையும் வணங்கினார்கள்.
அவர்கள் வாழ்ந்த பகுதிகளின் உள்ளேயும், வேளியேயும் புதிய சக்திகள் தோன்றி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றின.புதிய வழிபாடுகள், கலாச்சாரங்கள்,மதங்கள் தோன்றின. ஆனாலும் அதே மக்கள் தான் வாழ்ந்தார்கள்.வம்சம் வம்சமாக அவர்கள் உழுதார்கள்,நெய்தார்கள்,நிர் மாணித் தார்கள்.இந்த மண்ணோடு தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள்.ஆள்பவர்கள் கூறியதால் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டார்கள்.ஆனால் வாழும் மண்ணை மாற்றிக் கொள்ளவில்லை.மதங்கள் வந்தன.போயின.நிரந்தரமான வாழ்வைச் சமைப்பவன் மனிதன் தான் என்ற பேருண்மையை மட்டும் மாற்ற முடியவில்லை.
இந்துமத அடிபடைவாதி ஒருவன் இந்த நாடு "இந்து"வுக்குத்தானென்று கூறும்போது இல்லை என்று கூறும் துணிவு வேண்டாமா?
இந்த மண்ணிலே பிறந்து,வாழ்ந்து,உழன்று மறைந்தவர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு சொந்தமானது.என்று கூற துணியவெண்டும். ஏனேன்றால்
மதம் பிந்தயது: மக்கள் முந்தியவர்கள்!
மதம் தாற்காலிகமான சம்பவமே!

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

yep we all know this, so whats different here

kashyapan said...

Ramji sir, U know this. pl act on this using the aquired knowledge...kashyapan

vimalavidya said...

I AM NOT INTERESTED IN like these topics and debates.So many issues are here and there to be discussed for the PRESENT problems..No meaning at all to talk MORE ON PAST THINGS..Contemporary issues and on those debates are important and need of the hour