Saturday, May 07, 2016

இன்று "Mothers day "




மைதிலி சிவராமன் 

கல்பனாவின் தாய் மட்டுமல்ல ....!!!








"சிதறிய காலம் "

"Fragments of past "







மைதிலி சிவராமன் அவர்கள் அமெரிக்காவில்பணியாற்றி ய காலம் அது. ஐக்கிய நாடுகள்சபையின் காலனி ஆதிக்க எதிர்ப்பு கமிட்டியின் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார் .


விடுதலைக்காக போராடியமக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. - அவருடைய வாழ்வைப் புரட்டிப் பொட்டது.அவர் நெஞசைக் கவர்ந்த தலைவர்களில் முக்கியம்மானவர்கள் மூவர் .

ஒருவர் மார்ட்டின் லூதர் கிங் .

இரண்டாமவர் சே குவேரா

மூன்றாமவர் பிஃடல் காஸ்ட்ரோ. 


காலனி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வார். இவற்றை படங்களாக ஆவணங்களாக படமாக்கி அவருக்கு அவருடைய அருமை மகள் கல்பனா காட்டிக் கொண்டிருக்கிறார்.


ஒரு சின்னக்குழந்தை வாய்பிளக்க பார்ப்பதுபோல் மைதிலி அவர்கள் அதனைப் பார்த்து கைதட்டி மகிழ்கிறார்.

"இது  எல்லாம்  நான்தானா? அவர் எழுதிய கட்டுரைகளைப்பர்த்து இதை நான் தான் எழுதினேனா ? " அவர் சின்னக்குழந்தையாய் கேட்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.


"அம்மா உனக்கு ஓண்ணும் இல்லை அம்மா.உன்னுடையஞாபக சக்திகுறைந்து வருகிறது. அது   உன்குற்றம் அல்ல "

மகள் தாயை தேற்றுகிறாள்.  

"தோழர் ! தோழர் !" என்று என் இதயம்கதறுகிறது.


"எப்பேர்பட்ட ஆளுமை தாயே !!"


அமெரிக்க ஏகாதிபத்தியம் குயூபா வை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றிய காலம். "k" 

எழுத்தை உச்சரித்தாலே சுட்டு வீழ்த்த சி.ஐ எ  தயாராக இருந்தது..


அந்த தீரமிக்க பெண் அமெரிக்க அரசின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சின்னஞ்சிறு விமானம் மூலம் ஒரு சிறு travel bag ஐ மட்டும் எடுத்துக்கொண்டு குயூபா  சென்றுவந்தார்.  


மதுரையில் மாதர் சங்க அமைப்புக் கூட்டத்திற்காக வந்திருந்தார் .மாவட்ட கட்சி அவரை தங்க வைக்க வேண்டிய பணியை என்னிடம் அளித்தது. என்விட்டில் இரண்டு நாள் தங்க  ஏற்பாடு.  மண்டையன் ஆசாரி சந்திலிருந்து செல்ல வேண்டும்.ஆட்டோ பார்த்தேன்.


"தோழர் எதற்கு ஆட்டோ?." ஸ்கூட்டரின் பின்னாலமர்ந்து ஒரு சின்ன travel bag ஓடு  வந்தார்.


"தோழர் ! நீங்க க்யூபா போயிருக்கெளாமே ?"


"அது ஒரு wonderfull experience. வண்டிய பாத்து ஓட்டுங்க ! அப்புறம் பேசலாம் !" என்றார்.

  

மறுநாள் காலை குளித்து உடைமாற்றிக்கொண்டிருந்தார்   "தோழர்! தோழர் ! என்று இறைந்து  கூப்பிட்டர்.

 "Com . the is the same bag I took to Cuba " I never miss it "  என்று கை கொட்டி சிரித்தார்.


அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பௌனார் ஆசிரமத்தில் விநோபவை சந்தித்திருக்கிறார்.


கீழ் வெண்மணி பற்றி அவர் எழுதிய காட்டுரை மிகவும் பிரபலமானது. "46 பேரை தீயிட்டு பொசுக்கிய கிராதகர்களை நீதி மன்றம் விடுதலை செய்தது. 

 "these gentlemen will  never kill " என்பது தீர்ப்பு .


"The gentlemen killers of kizhavenmani " என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினார் மைதிலி அவர்கள்.


ஆவணப்படத்தில் இந்த காட்சி காண்பிக்கப்படுகிறது."நானா ! நானா ! எழுதினேன் " என்று அவர் கேட்கும் பொது " தாயே ! தாயே " என்று நெஞ்சம் அலறுகிறது.


மைதிலிஅவர்களின் மகள் கல்பனா " விடுதலை போரினில் வீழ்ந்த மலரே "  என்று பாட முடியாமல் துக்கம் அவர் தொண்டையை அடைக்கிறது.. சமாளித்துக்கொண்டு பாடுகிறார்.அவர் கண்கள்.குளமாக நாமும் கண்  கலங்குகிறோம்  .


கலை இலக்கிய அன்பர்கள், ஊழியர்கள் அத்துணை பெரும் போற்றீ  பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம் . 




( இது ஒரு மீள்  பதிவு )

0 comments: