Tuesday, May 17, 2016

"​​​​​​​ அஞ்சலி "



சாதியையும் மறுத்தவர் ,

சாமியையும் மறுத்தவர் ,

அருள் தாஸ் .......!!!


   முப்பது ஆண்டுகளிருக்கும் .இரவு பத்துமணி . பெரியகுளம் கிளை தோழரும் நானும் மதுரை   பாத்திமாகல்லூரிக்கு பின்னால் இருக்கும் ரயிலே கேட் அருகே   சாலையில் பதுங்கி காத்திருந்தோம் . டாக்சி ஒன்று வரவேண்டும். அதில் மணப்பெண் ரயில்  ஊழியர் தியாகராஜன் விட்டில் இறங்க  மணமகன் எங்கள் பொறுப்பில் சாந்திநகர் எல் ஐ சி   காலனியில் தங்க விருக்கிறார். மறுநாள் காலை 10மணிக்கு அரசமரம் சந்திலுள்ள ஜெனரல் ஒர்கேர்ஸ் ஊழியர் சங்கத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம்.அந்த மாபெரும்மக்கள் தலைவர் எ.பாலசுப்பிரமணியம் தலைமையில்.  எ.பி  அவர்களை அழைத்து வரும்  பொருப்பு எனக்கு.

காலை பத்து மணிக்கு அந்த சின்னஞ்சிறு கட்டிடத்திற்குள்   நுழைந்தேன்.

நாரயணசிங்,தண்டபாணி ,கிருஷ்ணன் , பாஸ்கரன் என்று ஒரு பத்து பேர் இருந்தனர். மணப்பெண் நாகலட்சுமி அவர்களும், அருள்தாஸ் அவர்களும் இரு  நாற்காலிகளில்  மணக்கோலத்தில் அமர்ந்திருந்தனர்.

எ.பி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

இன்று முன்று மகன்கள் .மருமகள்கள். பேரன்,பெயர்த்தி என்று குடும்பஸ்தனாகிவிட்டார். 2014ம் ஆண்டு நாகபுரிக்கு  தமபதிகளாக வந்திருந்தனர்.

அருள் தாஸ் சிறுவயதில் டயோசிசனோடு தொடர்பு கொண்டவர். 

"கிருஸ்தவ சர்ச் ஆகமங்கள் முழுமையாக   அவருக்கு தெரியும் " என்றார் நாகலட்சுமி அம்மையார்.

"அதனால் தான் எசு  நாதரிடமிருந்து  வருத்தமில்லாமல் பிரியமுடிநதது"  என்று  அருள்   broad smile  லோடு சொன்னார்.

நாகலட்சுமி அம்மையார் சனாதன பிராமண குடும்பத்தில்பிறநதவர். அம்மையார் சாதியை மட்டுமல்லமல் சாமியையும் மறுத்து வந்தவர். 

அம்மையாரின்தாயாரை (மாமியாரை) அவரின் இறுதிக்காலம் வரை காப்பாற்றியவர் அருள்தாஸ். நானும் முத்து மீனாட்சியும் வந்தால் அருள் வீட்டில் தான தங்குவோம் .

"நான் பெக்காத பிள்ளை  உங்கள் நண்பர் ! எனக்கு நு தனியா  ரூம் ! நான் பிராமணத்தி இல்லையா !! எனக்கு நு சமையல் செய்ய பாத்திரம் பண்டங்கள் ! யார் செய்வா இந்த காலத்தில் " அந்த வயது முதிர்ந்த வரின் குரல் உடைந்தது.           

அந்த அம்மையார் இறந்தபோது , அவருடைய மகனை வரவழைத்து ஐயர் மந்திரம் சொல்ல இறுதி காரியங்களை அந்த  வீட்டில் நடத்தினார்.

16ம் தேதி இரவு மரணச் செய்தி கிடைத்தது.

என் மகனிடம் சொன்னேன் . அதிர்ந்து விட்டான்.

"கிரிகெட் விளையாட எங்களை எல்லாம் ஊக்குவிப்பார்  அப்பா! கைகாசு செலவழித்து விளையாட செய்வார் " என்று சொன்னவன் மெலே பேசமுடியாமல் நிறுத்திக் கொண்டான்.

அவருடைய பேச்சு கொஞ்சம் rough and tough  ஆக தோன்றும் . நெருங்கிபழ்கியவர்களுக்குதான் அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மனித  நேயமும் அன்பும் புலப்படும் .

மார்க்சீய ஞானத்தை ஏற்றுக்கொண்ட தோழர் இறுதிவரை கட்சிப்பணி ஆற்றிவந்தார். 

தோழா !  உனக்கு எங்கள் அஞ்சலி !!!        





  

3 comments:

சிவகுமாரன் said...

வருத்தமில்லாமல் ஏசுநாதருடமிருந்து பிரிந்தவர் அவரிடமே சேரட்டும். ஆழ்ந்த அஞ்சலிகள்.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த இரங்கல்கள்!