Wednesday, May 11, 2016

அ .தி.மு.க ; தி.மு.க ;

அதர்ம யுத்தம் ஆரம்பம் ....!!!ஐந்து நாள் இருக்கிறது .ஆறாவது நாள் வாக்கு பதிவு  ஆளும் கட்சியும்   ஆண்ட கட்சியும் ஒன்றை ஓன்றுசங்கை   நெரித்துக்கொண்டு   நிற்கிறது.

தனக்கு வாக்கு விழவேண்டும் . அதை விட தன எதிரிக்கு வாக்கு விழாமல் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டதாக பேசப்படுகிறது.

நாகபுரி மாநகராட்ச்சியில்  தேர்தல்நடந்தது. நகரங்களில் தலித் மக்கள் வாழும் சேரிப்பகுதி  இருப்பது உண்டு .

தலித் மக்கள் பொதுவாக பா.ஜ.கட்சிக்கு வாக்கு போட மாட்டார்கள். அவர்கள்  காலம் காலமாக  காங்கிரசுக்கு தான் போடுவார்கள்.ஒரு பகுதியினர் குடியரசு கட்சினருக்கு போட ஆரம்பித்துள்ளனர் .

இந்த முறை பாஜக "எப்படியாவது " வெற்றி பெற துடித்தது. 

மூத்த பா.ஜ.கவினர்  தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது.

நாகபுரியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் ஒரு வழிபாட்டு கோவில் உள்ளது. அது சிறு தெய்வ வழி பாட்டு கோவில்.   குறிப்பாக தலித்மக்கள்  வழிபடும் கோவில்.பாழடைந்த அந்த கோவிலை சீரமைத்து விழா நடத்தினார்கள்.அந்த விழாவிற்கு நாகபுரி நகர தலித் மக்கள் சென்று தங்கி வர எற்பாடு செய்தார்கள். விழா தேர்தலுக்கு முந்தின தினமாக ஏற்பாடு செய்தார்கள்.           தங்களுக்கு வராது  என்று நிச்சயமாக தெரிந்த வாக்குகள், எதிர்கட்சியான காங்கிரசுக்கு வராமல் இதன் முலம் பார்த்துக் கொண்டார்கள். பா ஜ.க  வெற்றி பெற்றது.

தமிழகத்தில் " திருமங்கலம்  பார்முலா " போல்"சிங்கப்பூர் பார்முலா " உருவகி  இருப்பதாக வதந்திகள் உலா வருகின்றன. தி.மு.க இடைமட்ட தலைவர்கள் இந்த வார கடைசியில் தூர கிழக்கு நாடுகளுக்கு  சுற்றுலா   செல்ல ஆளும்கட்சி ஏற்பாடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது  . இதற்கு மாற்றாக திமு.க புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முடி உள்ள சீமாட்டிகள் வலக்கொண்டையும் போடலாம் இடக் கொண்டையும்  போடலாம். 

 பணபலம் இருப்பதால் அவர்கள் எந்த அளவுக்கும் போவார்கள். மக்கள்  கூட்டணி -தே .மு.தி .க , த.மா.கா கவனமாக இருக்க வேண்டிய நேரம்             நம் நண்பர்களும் ஆதரவாளர்களும் காரியத்தில்   இறங்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 20 வாக்காளர்களை சாவடிக்கு கொண்டுவர உறுதி கொள்ள வேண்டும்.   வாக்காளர்களை நமது வாக்குகளாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு என்று ஏற்கவேண்டும்.

கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது இந்த ஐந்து நாட்களும் நாம் செய்யும் பணிதான் முதன்மையானது.

நமது எதிரிகள் பலமான வர்கள். 

நம் நேர்மையும் உறுதியும் தான் நம் பலம் .

இந்த அதர்ம யுத்தத்தில்  வெற்றி காண்போம் . 

தோழர்களே இப்போது இல்லை  என்றால் பின் எப்போது ???     .     

  

 
 

3 comments:

சிவகுமாரன் said...

அயராதீர்கள், எப்பாடு பட்டேனும் தமிழ்நாட்டின் தலைசிறந்த " குடி"மகனை முதல்வராக்குங்கள்.

kashyapan said...

தினம் "ஜீஞ்சர் " சாப்பிடுபவரை தெரியுமா ? இரவு பத்து மணிக்கு மேல் அடையார் பீச்சில் அமைச்சரவை சகாக்களுடன் "-------- விருந்து" நடத்தியவரை தெரியுமா ? "இங்கு "கூடி" இருக்கும் பெண்களிடம் கெட்கிறேன்" என்று எம் .ஜி.ஆர் உடல் நலமிலாமல் இருந்த போது பெசியதை கிண்டலடித்த தலைவரை தெரியுமா? " உதய சூ"தி"யனுக்கு வாக்கு பொ"து"ங்கள் என்பது சரிதானா? நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் கவிஞரே! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

நீங்கள் சொல்கிற எல்லோரையும் தெரியும். நேற்றுவரை கிண்டல் அடித்துவிட்டு இன்று கூட்டனி சேர்ந்தவுடன் அடக்கி வாசிப்பவர்களையும் தெரியும்.
நான் NOTA கட்சி அய்யா.