Tuesday, May 24, 2016





வெற்றியின் ரகசியம் .....  1






"எட்டி ரேசன் வாங்கிட்டியாடி ? "

"முந்தாநாளே வாங்கிட்டேனே அக்கா ?" "

"அடி பாதகத்தீ !  ஏ முட்டி சொல்லலை ?" வாரேன் ! அந்த ரேசன் முத்தையாவை பிடிக்கிறேன் ?"

--------------------------------------------------------------------------------------------------------------------------

"எக்கா ! இந்தாறு இங்கன வந்து சலம்பாத "

"அதேப்பிடில எல்லாருக்கும் தானே ரேசனு" :

"இந்தாபாரு எங்கிட்ட 2000 கார்டு இருக்கு அவன் 1000 கார்டுக்குகூட சப்ளைஇல்லைங்காண் "     "

"நான் கவுன்சிலர கூட்டிட்டு வாரேஂல ?"

"எக்கா உனக்கு ரேசன் வேணூம்கியா ?வேண்டாம்கியா ?"

"வேணும் "  

"நீ எந்த வார்டு "

"பதிமூணூ "

  "அப்பம் அந்த வட்டம் இருக்கன்ல ! "

"ஆமாம் "

" அவ தம்பி ய பாரு "

-------------------------------------------------------------------------------------------------------------------------

"எ ! ராசா! அரிசி போட்டா மண்ணெண்னை இல்லங்காண் ,மண்ணெண்ணெய் பொட்டா பாமாயி இல்லைன்கான் " 

"சரி பண்ணிருவம் அக்கா "

"நல்லா ருப்பே டே " 

" கொஞ்சம் செலவாகும் " 

"அட நாசமத்து போறவனே "  

"நாங்களும் பொழைக்கணும்ல " 

"எம்புட்டுல கேக்க " 

"ஐம்பது "

------------------------------------------------------------------------------------------------------------------------

-"புள்ளைய பள்ளி கூடத்துல செக்கணூஂல ?"

 "ஆமாட்டி ! அதுக்கு தான் சாதி சான்றிதழ் வேணும்காண் ? "

 "வாங்கிட்டு வாங்க "

" ஆமாம் உங்க மாமனா ஒக்காந்துகிட்டு கொடுக்கான்"

"அந்த கவுன்சிலர பாருங்க " 

" அவன் கால் தரல படறதில்ல "
" அவன் மச்சினன தான் செல்வாக்காம் "

--------------------------------------------------------------------------------------------------------------------------

" அண்ணே  வாங்கண்ணே "
 "தம்பி புள்ளைய பள்ளி கூடத்துல சேக்கணும் " 

"   சேத்துடுவம் " "

"சாதி சான்றிதழ் "  

"வாங்கிபுடுவம் ! கொஞ்சம் செலவாகும்ணே !"

"எம்புட்டு ?" 

"ஐனூறூ "

"தாங்காதுண்ணெ " 

"  புள்ளை   குட்டி எங்களுக்கும் இருக்குண்ணே "

"நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து கொடுத்துடறேன் அண்ணே "

--------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்க போராடுவிங்க ! அவன் செஞ்சு கொடுக்கான் !



3 comments:

சிவகுமாரன் said...

இலஞ்சம் வாங்க மாட்டேன் என்று அவர்கள் சபதம் எடுத்தால் தான் உண்டு . கொடுக்க மாட்டேன் என்று இருந்தால் வேலை நடக்காது. ஒரு வாரத்துக்குள் சான்றிதழ் வேண்டும், பள்ளியில் சேர்க்க வேண்டும் . போராட முடியுமா, சபித்துக் கொண்டே கொடுத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
புரையோடிப் போய் விட்டது அய்யா

மோகன்ஜி said...

நல்லாருக்கே சிவா? கொடிகட்டி,களப்பணி செஞ்சி,கைக்காசப் போட்டு நாங்க பதவிக்கு வருவோம். நோகாமே ஓசீல சான்றிதழ் வேணுமாமே? நல்லாருக்குதே ஞாயம்?

sury siva said...

கொடிகட்டி,களப்பணி செஞ்சி,கைக்காசப் போட்டு நாங்க பதவிக்கு வருவோம். நோகாமே ஓசீல சான்றிதழ் வேணுமாமே? நல்லாருக்குதே ஞாயம்?//

super

Bharat hai mahan.

is desh ko hey dina bhandoo
aap phir apnaayiye.

subbu thatha.