Monday, May 09, 2016"ஆசாரப் பாப்பான் 

காசிக்கு போன "கதை ......!!!

"நீயா? நானா? "  கோபிநாத் கொஞ்சம் குசும்பு காரரோ  நு சந்தேகம் உண்டு .விவாதம் பாதி  நடந்துகிட்டு இருக்கும் போது சிறப்பு விருந்தினர்னு சொல்லி சிலரை உக்காத்து வாறு. சிலசமயம் பா.ஜ.க நு   சொல்லி  சில பேரை விடுவாரு.

ராமசுப்பிரமணியம் ஒத்தரு -அவரு ஆடிட்டரா ,வாக்கீலா தெரியாது அவர கூப்பிடுவாரூ. இவங்க கிட்ட உள்ள கஷ்டம் என்னன்னா தெரியாத்தத கூட தெரிஞசமாதிரி புளுகுவாங்க .

2014 ல மோடி திருச்சி வந்தாரு. பேசட்டும். நமக்கென்ன ! உப்புசத்தியாகிரகத்துல வா.உ.சி கலந்து கிட்டதா விரிவா சொன்னாரு.ஐந்தாம் கிளசு பையன் கூட அவுத்துபோட்டு சிரிச்சான். நமக்கு அது குட பெரிசா தெரியல.இந்த பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் அண்ணே ! ஒரு பய அத கண்டுக்கல பாத்தியளா ? அது தான் சங்கடமா போச்சு.

"நேத்து நீயா? நானா ? " (8-5-16)     பாத்தேன் .  நல்லா  இருந்தது . கட்சிகள்.மக்கள்எதிர்பார்ப்பு ,தேர்தல் அறிக்கைகள்  நு விவாதம் நடந்தது> பத்திரகையாளர்கள் , கட்சிகாரர்கள் ,கட்சியின் செய்தி தொடர்பாளர்கள்  நு  விவாதம். நல்லாவே இருந்திச்சு.

அ ..தி.மு.க சார்புல ஆவடி குமார் பேசினாரு. தமிழகம் எப்படி "மின்மிகை"மாநிலமா  ஆச்சு நு  "விரிவா" சொன்னாரு .ஆச்சரியத்தோட எல்லரும்கெட்டாங்க.கோபிநாத் நம்ம பா.ஜ.க ராமசுப்பிர மனியத்தையும் கூப்பிட்டிருந்தாறு. 

மோடி,அமித்ஷா , ஜாவேத்கர் ஆகியோர் அ .தி.மு.க வை ஏசினதை தொலைகாட்சில பாத்திருப்பரு போல. 

" தமிழகம் "மிகைமின்" மாநிலமாக மாற நாங்க ( மத்திய பாஜக)  70சதம்கொடுத்ததாலதான்  நு" ஒரு போடு போட்டாரு. 

இரண்டு பக்கமும் மத்தவங்க பேசினாங்க . 

ராமசுப்பிரமணியத்துக்கு அடுத்த இருக்கைல கனகராஜ் ஒக்காந்து இருந்தாரு .கனகராஜ் யாரு நு கேக்கேளா ?  அவரு மார்க்சிஸ்ட் கட்சியோட மாநில செயற்குழு உறுப்பினர் .தொலைக்கட்சி விவாதத்துல பங்கேற்பவர்.

பா.ஜ.க;,ஆர்.எஸ்.எஸ்  ; நா "கொத்துகரியாக்கி கைமா போட்டு " ஒவ்வொரு துண்டா திம்பாரூ. அவருடைய முறை வந்தது. பேசினாரு.

"ஐயா ! ராமசுப்பிர மணியம் தமிழகத்துக்கு அவங்க 70 சதம் கொடுத்தாக சொன்னாரு. நீக்க யாராவது அது பற்றிகுரிபிடுவீங்க நு எதிர்பார்த்தேன். அப்படியேபோச்சுன்னா நிகழ்ச்சிய பார்க்கவங்க அது உண்மைனு நினச்சுருவாங்க .நெய்வேலில மற்ற மாநிலங்களுக்கு கொடுத்து போக மிச்சமிருக்கிற மின் உற்பத்திய எங்களுக்கு தாங்கன்னு தமிழகம் கேட்டது மாட்டேன்னு சொல்லிட்டாங்க>கூடங்குளத்தில இருந்து கொடுங்க நுகேட்டங்க . முடியாது நு சொல்லிட்டாங்க. அவங்க எந்த உற்பத்தி நிலயத்திலைருந்து எந்த தொகுப்பு மூலமா ஒரு யூநிட் மின்சாரம் கொடுத்தாங்க நு சொல்லட்டும். சொல்லமுடியாது . ஏன்னா ? அது உண்மையல்ல !அவ்வளவும் உண்மைக்கு புறம்பானவை " என்று குறிப்பிட்டார். 

பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.

ராமசுப்பிர மணியம் தலை குனிந்தது .

நிகழ்ச்சி முடியும்வரை அவரால் நிமிர முடியவில்லை.

பாவம் !

காசிக்கு போனாலும் இவங்க பாவம் தீராது !!!.  

  


2 comments:

சிவகுமாரன் said...

அப்படிப்போடுங்க

சிவகுமாரன் said...

அப்படிப்போடுங்க