Saturday, May 21, 2016"capitalism should be protected from capitalist "முதலாளித்துவம் ,


முதலாளிகளிடமிருந்து ,


காப்பாற்றப்பட வேண்டும் .....!!!


இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராமன் G ராஜன் இருக்கிறார். தமிழ்    நாட்டை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் மத்திய பிரதேசத்தில் அதிகாரியாக இருந்தார்பின்னர் மத்திய அரசு செயலகத்தி டெல்லியில் பணியாற்றினார். அவருடைய மகன் தான்ரகுராமன் .

ரகுராமன் போபாலில் I . I .t யில் படித்து பட்டம்பெற்றார்.பின்னர் இந்தியாவின் புகழ்பெற்ற அகமதாபாத் I I M  ல் நிர்வாக இயலில் பட்டம் பெற்றார். உலகபுகழ் பெற்ற கல்வி  நிறுவனமான  அமெரிக்க M I t இல படித்தார்.ஹார்வர்டு பல்கலையில் முனைவர் பட்டம் .சிக்காகோவில் பெரிய பதவியில்  உ த்யோகம் .  


இதெல்லாம் பெரிசல்ல . ஏழு எட்டு வருடத்திற்கு முன் அமெரிக்க பொருளாதாரம் கவிழ்ந்து விடும் என்பதை நான்கு வருடங்களுக்கு முன்பேயே கணீத்துச் சொன்னார்."சென்னை சிறுவனின் உளறல் " என்று அமெரிக்க நிபுணர்கள் ஏகடியம் பேசினார்கள்.  அமெரிக்க வங்கிகளும், வங்கி முதலாளிகளும்,அதிகாரிகளும் புரிந்த லீலைகளீல் அமெரிக்க பொருளாதாரம் குப்புற விழுந்தது.இன்னும் எழுந்திருக்க வில்லை .

ரகுராமன் முதலாளித்துவம் நாட்டிற்கு நல்லது. சமூகத்திற்கு நல்லதே செய்யும் . தனிமனித மேமபாட்டுக்கு நிச்சயம் உதவும் என்று தத்துவ ரீதியாக மனதார நம்புபவர். பின ஏன் முதளீத்துவத்தைஏற்றுக்கொண்ட நாடுகள் திணறுகின்றன ? ஆராய ஆரம்பித்தார்....


...................................................................................................................................................................

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் நடநதது..செட்டியார் குழுமம் உரத்தொழிற்சால அமைக்க விரும்பினார்.இரண்டு லட்சம் பொட்டூகம்பெனி ஆரம்பித்தார்.அவர் மைத்துனர், உற வினர்கள் வேண்டியவர்களென்று ஆளுக்கு கொஞ்சம் லட்சங்களை போட்டு அதில் சேர்ந்தனர்செட்டியார் கம்பெனி சேர்மன்,மற்றவர்களுக்கும் பதவி  மத்திய அரசு 70 கொடி ரூபாயில் உரத்தோழிர்சாலைக்கு அனுமதி அளித்தது.

எல்.ஐ.சி 5 கோடி ரூபாய்க்கு முதலீடுசெய்ய ஒப்புக்கொண்டது.நியூ இந்தியா ,ஸ்டேட்வங்கி என்று பொதுத்துறை நிறுவனங்கள் 19 கொடி கொடுத்தன .உற்பத்தி ஆரம்பமாகியது .


உரத்தை வினியோகம் செய்யும் உரிமை செட்டியாருக்கும் அவருடைய ஆட்களுக்கும் .இன்று ஆயிரக்கணக்கான அந்த கம்பெனி சொத்துக்கள் செட்டியார் வசம்  .

...................................................................................................................................................................

அதானி ஆஸ்திரேலியாவில் சுரங்கம் தோண்ட போனார் கையில்"கால் காசு" கொண்டு போகவில்லை .மோடி தயவில் ஸ்டேட் வங்கி 6000 கோடி கொடுத்துள்ளது. இந்தியாவில் எந்த முதலாளியும் தன கைகாசை போட்டு கம்பெனி ஆரம்பிப்பது இல்லை. முழுக்கமுழுக்க அரசு பணம்- மக்கள் பணம் . இதனைத்தான் crony capitalism என்கிறார்கள்.

இதனைப்புரிந்து கொண்ட ரகு  ராமன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் '

அந்த புத்தகத்தின்பெயர் தான் "save capitalism from capitalist ".


"முதாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்றுவோம் "  


"கார்பெரேட்  அடி நக்கிகள்" மோடி,சு.சாமி ஆகியொர் ரகுராமன் அவர்களுக்கு எதிராக போர் தோடுத்துள்ளது


அற்ப  விஷயமல்ல .  


4 comments:

சிவகுமாரன் said...

அவர் தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

சிவகுமாரன் said...

தங்களுக்கு உடன்படாத அரசியல் ஆன்மீகக் கவிதைகள் தவிர மற்ற எனது கவிதைகளை தாங்கள் பார்வையிடலாமே அய்யா. I miss you.

‘தளிர்’ சுரேஷ் said...

அட! இதில் இவ்வளவு அரசியலா? ரகுராமனை பாராட்டுவோம்! அவருக்காக குரல் கொடுப்போம்!

kashyapan said...

அவர் மராட்டியராக,வங்காளீயாக,பீஹாரியாக இருந்தாலும் பெருமை கொள்ளூவோம் கவிஞரே ! ---காஸ்யபன்.