(நாடக விழாவை முன் நிறுத்தி )
"சென்னை நாடக குழுவும் ",
பிரளயனும் .......!!!
த .மு.எ .ச வின் மாநில மாநாடு திருநெல்வேலியில் 90ம் ஆண்டு நடந்தது. அதன் கலை நிகழ்ச்சியில் சென்னை கலைக்குழுவினர் முழுநீள முன் மேடை நாடகம் போட்டனர். முன்ஷி பிரேம் சந்த எழுதிய "மோதிராம் " என்ற இந்தி நாடகத்தை பிரளயன் அவர்கள் நெறியாளுகை செய்து மேடை ஏற்றினார்.
ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய கோவிந்த ராஜன் மோதிரமாக சிறப்பாக நடித்தநாடகம் இது.
சப்தர் ஹஷ்மியின் ஜனநாட்ய மஞ்ச் இந்த நாடகத்தை போட்டுள்ளனர். "வேசி " யாக மாலா ஸ்ரீ யும் அவரால் மயக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக ஹபீப் தன்விரும் நடிப்பார்கள். சென்னை கலைக்குழுவினர் போட்ட மேடை நாடகம் இது.
பிரளயனின் முன் முயற்சியில் பல பரிசோதனைகளை இந்தக்குழுவினர் செய்துள்ளனர். வீ தி நாடகங்களாக அவர்கள் சென்னை நகரத்தையே கலக்கி வந்தனர்.தொழிலாளர் போராட்டங்கள்,தேர்தல் கால பிரசாரங்கள் என்று அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
பரிசோதனை முயற்சியாக அவர்கள் இசைநாடகங்களையும் நடத்தினர்.நான்கு கால்களைக்கொண்ட மிருகம் ,முதுகெலும்பை நிமிர்த்தி முன் கால் களை கைகளாக மாற்றும் இசை நாடகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நடிகர்கள் பாடி ஆடிக்கொண்டே "தாஜ்மகால் " சிற்பமாக மாறும் காட்ச்சி பிரமிப்பை உண்டாக்கும்.
"ஏகைலைவன் பெருவிரல் " ஒரு அற்புதமான படைப்பாகும்.
பிரளயன் ஷண்முக சுந்தரம் சந்திர சேகரன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ,அகிலஇந்தியாவில் ஏன் உலகம் தழுவிய நாடகவியலாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் அவர் "மத்தவிலாச பிரகாசம் " என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் . 7ம் நூற்றாண்டில் மகேந்திர வர்மா பல்லவன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாடகமாகவும் அது. சிவனை ஆராதிப்பவர்களில் காபாலிகர்களும் உண்டு. அவர்கள் மண்டையோட்டை பயன்படுத்துவார்கள்.சைவர்கள் வேறுவகையில் வழிபடுவார்கள்.பல்வேறு சிவப்பக்த்தார்கள் பல்வேறு முறையில் வழிபடுவார்கள்> ஆனாலும் சிவன் ஒருவன்தான்.இதனை பகடியாக உயர்ந்த தளத்தில் சொல்வது தான் இந்தநாடகத்தின் பலமும் பலவீனமும் ஆகும் .
தான் கொண்ட கருத்துக்களை மக்களுக்கு சொல்ல பிரளயன் நாடகத்தை பயன்படுத்தி கொண்டார்.
நாடகத்துறை பிரளயன் சண்முக சுந்தரம் சந்திர சேகரனை பயன்படுத்திக்கொள்கிறது.
எனக்கு பிரளயனை நிரம்ப பிடிக்கும் ...!!!
0 comments:
Post a Comment