Wednesday, August 07, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )


குமரேசன் ---

தொழில் முனைவர் ,

நடிகரான கதை ...!!!




"அசாக்" என்ற குமரேசன் கல்லூரி நாட்களிலேயே  முனைப்பாக செயல்படுபவர். படிக்கும் காலத்திலேயே தி.வி சந்திர சேகரன் போன்ற நன்பர்களளோடு திரிவார். பின் நாளில் சந்திரு "திவேசன் " என்ற புனை பெயரில் செம்மலரில் எழுதிவந்தவர் .ஒரு இடதுசாரி. 


அவரோடு குமரேசனுக்கு பல இடது சரி நன்பர்களுக்கிடைத்தனர்> விவாதங்கள்.வகுப்புகள் ,கூட்டங்கள் என்று அவர் மனதில்  அந்த சிந்தனைக்கள் பதிந்தன. படிப்பு முடிந்ததும் சந்திர சேகரன் ஸ்டேட் வங்கியில்பணியில் சேர்ந்தார் .தொழிற்சங்க ஈடுபாடு அவரை ஒரு அகில இந்திய .தலைமைக்கு அருகில் இட்டுச்  சென்றது. . 


படிப்பு முடிந்ததும்   குமரேசன் தொழில்முனைவரானார்  அப்போதெல்லாம் மதுரையில் நூற்பு ஆலைகள்  அதிகம். பஞ்சை  நூலாக நூற்று "கண்டு"களில்பொதிவார்கள். ஆலைகளுக்கு கண்டு களை சப்பளை  செய்யும் தொழிலை செய்துவந்தார்.மதுரையில் ஐந்து ஆலைகள் ,விருதுநகர்,கோவில்பட்டி , விக்கிரம சிங்க புறம்.என்று தென்தமிழகத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். நல்ல வருமானம். நல்லவசதி.


மதுரையில் எம்.பி ராமசந்திரன் என்று இடதுசாரி தலைவர் இருந்தார்.. தொழிற்சங்க தலைவரும் கூட. அவர் வாலிபர்கள்,மாணவர்கள்  ஆகியோரை வைத்து நாடகங்கள் நடத்துவார்.அப்படிப்பட்ட நாடாக்கக்குழுதான் செம்மலர் கலைக்குழு. எம்.பி ஆரோ டு சேர்ந்து குமரேசன் நாடகத்துறையில்செயல்பட்டார். மதன் என்பவர் இயக்குனராகவும், ரகமத்,ஜீவா போனறவர்களா நடிகர்களாகவும் அந்த முழூ மதுரைநகரையே கலக்கிவந்தது .தினம் வீதி  நாடகங்கள் ,இவர்கள் நாடகம் போடாத இரவே இல்லை என்றநிலை ஏற்பட்டது.


இதனால் குமரேசனின் தொழில் பாதிக்கப்பட்டது..தொழிலா? இயக்கமா? என்ற கேள்வி எழுந்த பொது குமரேசன் கட்சியினமுழுநேர ஊழியராக சேர்ந்தார். தீக்கதிர் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவில் இணைந்து முழுநேர ஊழியரானர் .

இந்த சமயத்தில் தான த.மு.எ சங்கம் சென்னையில் மூன்றாவது நாடகவிழாவை நடத்த முடிவுசெய்தது. பெரியவர் கே.முத்தையா அவர்கள் மதுரை  பீப்பிள்ஸ் தியேட்டர் அதில் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். "காஸ்யபன் " அப்போது எழுதிய நாடகம் தான "வண்ணங்கள் வேற்றுமை பட்டால்" என்ற நாடகமாகும்'


தெற்கத்திய தென்னைமர தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய கதை  அமைப்பு.அதிலப்துல்கபூர் என்ற கதாயகன் பாத்திரத்தில் குமரேசன் னைத்தாரா. முன்வழுக்கையும் நாராய்த்த தாடியும் கொண்ட இன்றைய குமரேசன் அல்ல. அன்று இளமையும் துடிப்பும் கொண்ட குமரேசன் அவர்.


அரங்கேறிய நாடகத்தை பார்வையாளர்கள் மின்சாரம் பாய்சசியது போல் கரகோஷத்தோடு வரவேற்றனர் .நாடக முடிந்ததும்,கோமல் சுவாமிநாதன் ஓடிவந்து காஸ்யபனை கட்டி தழுவி "bold very  bold என்னால் கூட முடியாது" 

என்று பாராட்டினார்.


இந்த நாடகம் தமிழகத்தில் போடாத கிராமமே இல்லை என்று ஆகியது. குமரேசன் தமிழகம் அறிந்த நாடக நடிகரானார்.


அப்போது சென்னையில் இருந்த தீக்கதிர்ப்பதிப்பினை பலப்படுத்த கட்ச்சி முடிவெடுத்தது.குமரேசனை  கட்ச்சி சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தது.மனைவி,இரண்டு குழந்தைகளோடு குமரேசன் சென்னை வந்தார்.. சென்னையில் வாடகை வீடு , குடும்பச்செலவு என்று சொற்ப அலவன்ஸில் அவர் எப்படி வாழ்ந்தாரா என்பதை மார்க்ஸ் தான அறிவார்.


ஆனால் பத்திரிகை  யில் சிறப்பாக பணியாற்றினார் .குறிப்பாக பண்பாட்டுத்துறையிலும்,நாடக திரைப்பட விமரிசனங்கள்.இலக்கிய நிகழ்சசிகள் என்று பத்திரிகையையே பரவலாக்கினார். இதனை அங்கிகரித்த கடசி குமரேசனை சென்னை பதிப்பின் பொறுப்பாளராக்கியது.


முதுமையின் காரணமாக ஒய்வினை  ஏற்ற குமரேசன் தொலைக்காட்ச்சிகளில் கட்ச்சியின்கருத்தாளராக செயல்பட்டு வருகிறார்.


குமரேசன் அவர்கள்,மனஅமைதி,நல்ல ஆரோக்கியத்தொடு  நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியில் ஈடுபட்ட வாழ்த்துகிறேன். !!!      

  

0 comments: