Tuesday, August 20, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



திருப்பூர் நாடக குழுவும் ,

"விழிப்பு" நடராசன் ,

அவர்களும்...!!!




127 நாட்கள் நடந்த போராட்டம். பின்னலாடைநகரமே துடித்து எழுந்தது. திருப்பூர் தொழிலாளர்களின் ஒரே கோரிக்கை "பஞ்சப்படி ".

பஞ்சப்படி எனறால் என்ன வென்றே தெரியாத அந் தொழிலாளர்களுக்கு போதமுட்டிஅவர்களை போராளிகளாக்கும் பணியை செய்தவர் தான்  "விழிப்பு "நடராசன்.

வசதி யுள்ள குடும்பம். textile engineering ல் பட்ட மேற்படிப்பு. ஆயிர க்கணக்கில் ஊதியம் கிடைக்கும் பதவிகளை வேண்டாம் என்று கூறிவிட்டு, பின்னலாடை தொழிலாளர்களின் பாடுகளை களைய வந்தவர்தான் விழிப்பு நடராசன்.    

அவர்களோடு பேசினார் விவாதித்தார் பஞ்சப்படி பற்றி விளக்கினார்.அவர்களே அத கதையாக்கினார்கள்.அந்தக்கதையை நாடகமாக்கினார். திருப்பூர் நாடக குழு பிறந்தது.

மணி க்குமார் ,பாவல்,நாகராஜ் என்று ஒரு ஜமா சேர்ந்தது.போராட்டம் நடந்த  அத்துணை நாட்களும் நாடகம் நடந்தது.தமிழகம் முழுவதும் வியப்பையோடு பார்த்த நிகழ்வாகும் அது.

நாடகக்குழு அதோடு நின்றுவிடவில்லை. தமிழகத்தில் நகராட்ச்சி தேர்தல் வந்தது. திருப்பூர் நகராட்ச்சி தேர்தலில் பிரசாரநாடகம்  நடத்தினார்கள். "முனிசிபாலிட்டி -முனிசிபாலிட்டி "என்ற நாடகத்தை உருவாக்கினார்கள் .அதில் நடிக்க நடிகை -தொழில்முறை நடிகை வேண்டியதிருந்தது. விழிப்பு, மணிக்குமார் , ராசமணி ஆகியோர் மதுரையில் என் வீட்டுக்கு வந்து  ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.மதுரையிலிருந்து இரண்டு நடிகைகளை  ஏற்பாடு செய்தே ன்.ஒருமாதம் திருப்பூரில் பணியாற்ற முடிந்ததுஅவர்களுக்கு,தங்குமிடம்,உணவுத்தவிர சம்பளமும் கொடுத்து நாடகக்குழுவினர் கவனித்து கொண்டனர்.

இந்த குழுவினர் வட்டங்கள் என்ற நாடகத்தினையும் நடத்தினார்கள். அசுவகோஷ் எழுதிய இந்த நாடகம் பரவலாக பேசப்பட்ட ஒன்றாகும்.

திருப்புர் கட்டக் குழுவினரின் "பஞ்சப்படி" நாடகமும், விழிப்பு நடரசனும் அந்த நகரத்தின் முன்னோடிகள் என்றால் அது மிகை அல்ல ....!!!


0 comments: