Wednesday, August 21, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



கோவில்பட்டி "தர்சனா " குழுவும் ,

"கோணங்கியின்" 

மறுபக்கமும் ...!!!




தமு எ ச வின் செயல் வீரர்களில் கோவில்பட்டி தோழர்களுக்கு சிறப்பான பங்கு  உண்டு.

சிறந்த படிப்பாளிகள் ! அதேசமயம் ஈவு இரக்கமற்ற விமர்சகர்களும் கூட !!

பால் வண்ணம் தலைமையில் ஒரு குழு  செயல்பட்டுவந்தது. Dr .மனோகர்,துரை பாரதி, கிருஷி, தமிழ்ச்செல்வன் ,ராமசுப்பு, மணி , கோணங்கி.உதய சங்கர் ,நாறும்பூ என்று அதில் பலர் உண்டு. 

இவர்கள் அமைத்ததுதான் தர்சனா கலை குழு. பல அற்புதமான நாடகங்களை இவர்கள் படைத்துள்ளார்கள் . அதில் "பச்சோந்தி" என்ற நாடகம் முதன்மையானது.

தெரு நாய் ஒன்று வழிப்போக்கனை கடித்து விடுகிறது.அவன் நகராட்ச்சி அதிகாரியிடம் புகார் அளிக்கிறான். அதிகாரி நாயை பவுண்டில் அடைக்க உத்தரவிடுகிறார். காவல்காரன் "ஐயா ! இது பட்டாளத்து அதிகாரி விட்டு நாய் போல்  தெறிக்கிறது   தெரு  நாயல்ல " என்கிறான்.

அதிகாரி  புகார் கடுத்தவன பார்த்து " ஏன்யா ! நாய் வாயுள்ள கைய கொடுத்த கடிக்காம என்ன செய்யும். இவனை பிடிச்சு சிறையிலே அடையுங்கள் என்று உத்தரவிடுகிறார். 

காவலாளி " ஐயா ! இந்த நாய் பட்டாளத்துக்காரர் விட்டுநாய் போல் தெரியவில்லை ! தெரு நாய் போலும் இல்லை. அவர்விட்டுக்கு அவர் தம்பி வந்திருக்கிறர் .அவர்கள் நாய் போல்தெரிகிறது." என்கிறான் . 

அதிகாரி தன்  உத்திரவை மாற்றுகிறார். 

ஜார் மன்னர் ஆட்ச்சிக்காலத்தில் அதிகாரிகள் எப்படி பச்சொந்திகளாக இருந்தார்கள் என்பதை கிழித்துக்காட்டும் ஆண்டன் செகாவின் நாடகம் இது. இதில் மனோகர் நடித்திருப்பார் .இன்றய குணசித்திரனடிகர் "சார்லி" தான் அன்றைய மனோகர்.

சம்ஸ்கிருத மொழியில் "ஆதிசங்கரர் " என்று பல விருதுகளை பெற்ற படம் வந்தது. அதன் தயாரித்து இயக்கியவர் ஜி .வி .அய்யர்.அந்த படத்தில் அய்யருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் இன்றைய துரை பாரதி.

இவர்களின் மாற்றோரு நாடகம் " ஜப்தி " என்பதாகும். கூட்டுறவு வங்கியில் கடன்வாங்கி செலுத்தமுடியாமல் தவிக்கும் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் நாடகம். ஜப்தி அதிகாரியாக கோணங்கி நடிப்பார்.மிகவும் soft ஆன முகம்கொண்ட கோணங்கி அதிகாரியின் ஆணவத்தோடு கூடிய கோரமுகத்தை காட்டி அருமையாக நடிப்பார். கடன்வாங்கிய விவசாயி ஜப்தி நடவடிக்கையால் கதறி அழும் காட் சியில் விவசாயின் நடிப்பில் பார்வையாளர்களும் அழுவார்கள் .விவசாயியாக தமிழ்ச்செல்வன் நடிப்பார்.

1979ம் ஆண்டு மதுர நாடக விழாவில் இவர்கள் "தேரோட்டிமகன்" நாடகத்திலிருந்து ஒருகாட்ச்சிய மட்டும்நடித்துக்காட்டினார். கோணங்கி, நாறும்பூ ஆகியோர் கிரீடம் தரித்து பஞ்ச பாண்டவர்களாக வந்தனர்.

"ஜப்தி " நாடகத்தின் பொது கோணங்கி  கூட்டுறவுத்துரையில் அதிகாரியாக பணியார்க்கொண்டிருந்தார் .அதுவும் கடன் வசூல் அதிகாரியாக. ஜப்தியால் விவசாயிகள் படும் அவதியை சித்தரிக்கும் நாடகத்தை போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நான் ஜப்தி செய்யும் அதிகாரியாக பணியாற்றுவது அநியாயம் என்று கருதி 

கோணன்ங்கி அந்த பதவியிலிருந்து விலகிவிட்டார்.

கோணங்கியின் மறுபக்கம் இதுதான்.

அவரை வாழ்த்துவோம் ...!!!

 









  

0 comments: