Friday, August 02, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"தஞ்சை 

விழாவின்

 வெற்றி..."

தமுஎச மாநிலம் தழுவிய அளவில் இரண்டாவது நாடக விழா  இரண்டு  வகையில்வெற்றி கரமாக நடந்தது .

முழு நீள  நாடகமாக ஜெயந்தனின் "நினைக்கப்படும் " நாடகத்தை பீப்பிள்ஸ் தியேட்டர் காரர்கள்  அரங்கேற்றியது ஒன்று.

நான்கு அங்கமாக விரியுமிந்த நாடகத்தில் ஒவ்வொரு அங்கமும் ஒரு கதையாகும்.

முதல் அங்கத்தில் ஒருகுடும்ப தலைவரின் பாடுகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். லஞ்சம் வாங்கி அவர் வீட்டிற்கு பணத்தை கொண்டுவந்து கொட்டுவார். வீட்டில் உள்ளவர்களை அதனை ருசித்து அனுபவிப்பார்கள் . ஓரூ கட்டத்தில் ஒரு இளைஞன் கொடுத்த புகாரின் பேரில் அவர் மாட்டிக்கொள்வார் . குடும்பத்தினர் அவரை வெறுப்பார்கள் .பிழைக்கத்தெரியாதமனுஷன்  என்று வசை பாடுவார்கள். செய்வதறியாது திகை \த்த தலைவர் புகார் கொடுத்த     இளைஞரிடம்புகாரை வாபஸ் வாங்க சொல்லி கெஞ்சுவார். இறுதியில் அந்த இளைஞன் காலில் விழுந்துவிடுவார். அதிர்ந்து போன அந்த இளைஞன் விம்மி அழுவான் .நாடகம் முடிகிறது.

குடும்பத்தலைவராக துரைராஜும் , இளைஞனாக எல்.ஐ சி சூரிய போஸும் அற்புதமாக நடிப்பார்கள்.இறுதிக்கட்ச்சியில் அவர்கள் மேடையில் "உறைநிலை"யில்  நிற்க பார்வையாளர்கள் அதிர்ந்து நிற்பார்கள்.

இரண்டாவது அங்கம்,தமிழக கேரள எல்லையோர கிராமத்தில்நடப்பதாகும் .பிழைக்க வழியில்லாத கிராமத்து மக்கள். அந்தக்கிராமத்து பெண்கள் ரேஷன் அரிசியை வாங்கி கேரள த்தில் விற்று வயிறு வளர்க்கும் நிலை .காவலர்களும்,வாட்சர்களும் அவர்களை பிடித்து கடத்தல் காரர்கள்,பதுக்கல் காரர்கள் என்று வதைப்பார்கள். அவர்களுக்கு லஞ்ச்ம கொடுத்தல் குடும்பவருமானம் போய்விடும் என்பதால் அந்த பெண்கள் அவர்களுக்கு "சுகம்" கொடுப்பார்கள் .

மூன்றாவது அங்கம் ஒரு பத்திரிகை அதிபர் பற்றியது எப்படி எழுத்தாளர்களை சுரண்டப்படுகிறார்களா என்பது சித்தரிக்கும் காட்ச்சியாகும். பதிப்பு தொழில் எப்படி printing  industry  ஆகிவிட்டது என்பதை சொல்லும்.

நங்கவது அங்கம் ஒரு வெற்றிகரமான திரைப்பட நடிகை பற்றியதாகு ம்.மிகவும் சிறந்த நடிகையான அவர் படங்களில் நடிக்க போட்ட ஒப்பந்தங்களில் horizantal  agrement  ம் உண்டு என்ற அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.

இந்த நாடகத்தை ராஜ குண சேகர் இயக்கி இருந்தார். விழாவில் வெகுவாக பாராட்டப்பட்ட நாடகம் இது.

முத்தாய்ப்பாக தஞ்சையில் போட்ட நாடகம் தான் 

"நினைவுகள் அழிவதில்லை " காவியமாகும் ...!!! 





  

 


0 comments: