Thursday, August 22, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



ஜீவ பாரதியின் ,

"இங்கே மாப்பிள்ளை கிடக்கும் "

நாடகம்...!!!



அத்வானியின் ர(த்)த யாத்திரை முடிந்து நாடு குழம்பிப்போயிருந்த நேரம். கலை துறையில் செயலாற்றிக்கொண்டிருந்த இடதுசாரி கலைஞர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். 

நாடுமுழுவதும் உள்ள கலைஞர்களை டெல்லிக்கு வரச்செய்து ஆலோசனை நடந்தது. முழுக்க முழுக்க தோழர் சீதாராம் எச்சூரி தலைமையில் கூட்டம் நடந்தது.

'ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்களுக்கு சொந்தமானது. அறிவார்ந்த கருத்துக்கள் நமக்கும் சொந்தமானது தான்> அவற்றை பயன்படுத்தவேண்டும். "சம்பவாமி யுகே யுகே "  என்ற நாடகத்தை துக்ள க் சோ போடுகிறார். நாம் என் அப்படி செய்வதில்லை. புராணங்களை மறுவாசிப்பு செய்யவேண்டும்." என்று அவர் கருத்துக்களை சொன்னார்.

இந்த கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து பண்பாடு செய்லபாட்டாளர்களான கலைஞர்கள் அருணன்,காஸ்யபன், டாக்டர்.செல்வராஜ், பிரளயன்,ஜீவபாரதி ஆகியோர் சென்றிருந்தோம். 

அந்த ஜீவ பாரதி எழுதிய நாடகம் தான் "இங்கே மாப்பிள்ளை கிடைக்கும்." என்ற நாடகம். 

கும்பகோணம் பாத்திரத்தொழிலாளர்கள் இடையே தொழிற்சங்க பணியாற்றிக்கொண்டிருந்தவர் தோழர் ஜீவ பாரதி. 

பஜாரில் உள்ள கடை  அது.முகப்பில் "இங்கே மாப்பிள்ளை கிடை க்கும் " என்ற போர்டு தொங்கும். உள்ளே பல்வேறு ஷோ கேசுகளில் விதம் விதமான மாப்பிள்ளைகள் உயிரோடு அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். ஒரு ஏழை விவசாயி மகளை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வாங்க வருவான்>.ஷோ கேசில் உள்ள மாப்பிளை ஒருவன் பார்த்து அந்த பெண் தேர்ந்த்டுப்பாள் .அழகான டாக்டர் மாப்பிள்ளை . விவசாயி விலை கேட்ப்பான். அவனால் கொடுக்க முடியாது. அவனுடைய தகுதிக்கு கால்  முடமான ஒரு மாப்பிள்ளையை வாங்கிக்கொண்டு மகளை அழைத்துக்கொண்டு செல்வான்.

சிறிது நேரத்தில் விலை  உயர்ந்தகாரில்  செல்வந்தர்  ஒருவர் வருவார். அவரோடு அவருடைய மகளும் வருவார்.ஷோ கேசில் தேடி அலை ந்து ஒரு ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளையை தேர்ந்த்டுப்பாள் . செல்வந்தர் கடைக்காரர் சொன்ன விலைக்கு செக்கை கொடுத்துவிட்டு "சரி ! பாக் பண்ணி கார் டிக்கில போடும் " என்று உத்திரவிடுவார்.நாடகம் முடியும். 

ஷோ கேசில் உள்ளமாப்பிள்ளிகள் தங்கள் தகுதி,விலை ஆகியவற்றை கிளிப்பிள்ளைகள்போலசொல்லிக்கொண்டிருப்பார்கள்.

பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.

 "உஷ் ! சத்தம் போடாதீர்கள்.நீங்களும் உங்கள் மகளுக்காக என்கடக்குதான் வரவேண்டும் என்பார் கடைக்காரர்.

 கடை க்காரராக ஜீவ பாரதி நடிப்பார் . செல்வந்தராக மிடுக்கான நடையும் கம்பிரமும்கலந்து எல்ஐசி ஊழியர் ரகுபதி அவர்கள் நடிப்பார்கள்.

தமிழ்நாடு  முழுவதும் வலம் வந்த நாடகமாகும் இது. பல மொழிகளில் சென்றதும் ஆகும்.

மறக்க முடியாத நாடகங்களில் ஒன்றும் கூட ...!!! 

   


  

0 comments: