Friday, August 23, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




Dr .செல்வராஜின் ,

நாடக ,

உலகம்...!!! 




78ம் ஆண்டாக இருக்கலாம். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மதுரை பச்சரிசிக்கார சந்தில் கவி அரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறது.

ஒரு பையன். கருப்பாக - மூ க்கும் முழியுமாக - அப்படியே மடியில்வைத்து கொஞ்சசும் அழகுடன்-மேடையில் ஏறுகிறான். நெருப்புத்துண்டங்களாக வார்த்தைகள்கள் விழுகின்றன.

அருகில் இருந்தவரை பையன் யார் என்று கேட்டேன்.மதுரை  மருத்துவகல் லூரி   மாணவன். மாணவர் இயக்கத்தில் இருக்கிறான். பட்டிவீரன் பட்டி அருகில் ஒருகுக்கிராமம்.பெயர் செல்வராஜ் என்கிறார்.

Dr சேதுராமன், Dr .சீனிவாசன், சக்தி, சத்தியநேசன்,  முருகன் ஆகியோர் வளர்த்த மதுரை மருத்துவ மாணவர் சங்கத்தினபாரம்பரியத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கல்லூரி வளாகத்திற்குள் தி.மு.க; அதிமுக என்று யாரும் அண்டவிடாமல் பார்த்துக் கொண்ட வர்.

அதிமுக பிரமுகர் பழக்கடை பாண்டி " மருத்துவ கல்லூரில  செல்வராஜ் னு ஒருபய இருக்கான்பா ! நம்மளா உள்ள  விட மாட்டேங்கங் பா " என்று போது மேடையில் புலம்பும் அளவுக்கு செல்வராஜின் செயல்பாடுகள் இருந்தது.

என்ன வளர்சசி ! எத்தகைய வளர்சசி !! அந்த பையன் தான் இன்று மதுரையில் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான Dr .செல்வராஜ். 

அதோடு செல்வராஜ் நாடகங்களும் போட்டுக்கொண்டிருந்தார். அவரே எழுதி இயக்குவார் .அதில் "வாடகை வீடு " மிக முக்கியமான நாடகம்.ஏழை எளிய மக்களை கசக்கி பிழியும் சொந்தக்காரகளமுண்டு> 

 புறம் போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாடகைக்கு விடும் சண்டியர் நிறைந்த ஊர்தான் மதுரையும். ஏழை எளிய மக்களை கசக்கி பிழியும் வீட்டு சொந்தக்காரர்களும் உண்டு  இந்த முரணை அற்புதமாக சித்தரிக்கும்நாடகமாகும் அது. 

உணவு,உடை,இருக்க இடம் தரவேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது. இருக்க இடமளிக்கவேண்டும்.என்று அரசி ன் பொறுப்பை சுட்டிக்காட்டும் நாடகம் ஆகும். சுமார் 200 முறை போட்ட நாடகமும் அதுதான்.

செல்வராஜின் மாற்றோரு நாடகம் "கல்கி வந்தார் " என்பதாகும்.பாபர் மசூதி யின் பின்புலத்தில் மகாவிஷ்ணு கல்கி அவதரம் எடுத்து வருவார்> அவரோடு நாரதரும் வருவார் .அயோத்தியில் ராமன் பிறந்தானா ? என்று கேள்வியை எழுப்புவார்.

செல்வராஜ் எழுதிய நாடகங்கள் புத்தகமாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியராகஇருந்து ஒய்வு பெற்ற மனை வியொடு Dr .செல்வராஜ் மதுரையில்வசித்து வருகிறார்..அவருடைய ஒரேமகள் குஜராத் பல்கலையில் ஆராய்சசி மாணவியாகஇருக்கிறார்.

மன அமைதி,நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கொண்டு Dr செல்வராஜ் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன்.




0 comments: