Thursday, August 29, 2013

ஏன் அப்படி ......?


பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தவர் கன்ஷிராம் என்பவர் ! தலித்துகள்,பின் தங்கிய வகுப்பினர் ,முஸ்லீம்கள் என்று வெகுஜன மாக்கள் எல்லாரும் ஒன்று பட வேண்டும் என்று பாடுபட்டார் ! மத்திய அரசு ஊழியராக  இருந்த அவர் தன வேலையை விட்டு பகுஜன் கட்சியை உருவாக்கினார் ! அந்த  கட்சி மாயாவதி தலைமையில் உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது !

1996ம் ஆண்டு கன்ஷிராம் டேல்லியில்  ஒரு நிருபரை  அடித்து விட்டார் ! மிகப்பேரிய பரபரப்புச் செய்தியாக அது பத்திரிகைகளில் வந்தது ! அவர் ஏன்  அடித்தார் என்பது பற்றி எந்த பத்திரிகையும் சொல்லவில்லை ! இது பற்றி யாரும்கவலைப்படவும் இல்லை ! அவர் அடிக்கலாமா ? அடித்தது தவறல்லவா! என்று பக்கம் பக்கமாக எழுதினார்கள் !

நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் "கூனர் " என்பவர் மட்டும் இது பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் ! பத்திரிகையாளர்களிடையே கன்ஷிராம் சொல்வதை காது  கொடுத்து கேட்க எவரும் இல்லை ! தலித்துகள் எவருமே பத்திரிகையாளராக இல்லை ! 

தலித்துகளிடையே செல்வாக்கு மிக்க பத்ததிரிகையாளராக வரும் அளவுக்கு கல்வி யறிவு இல்லை என்பது தான் உண்மை என்று அவர் கண்டறிநதார் !
  
இது நடந்து பதினேழு வருடமாகிவிட்டது !

இன்று தலித்துகளுக்கு கல்வி அளிக்க பல தன்னார்வ நிறுவனங்கள் முன் வந்து கொண்டிருக்கின்றான !

குறிப்பாக அம்பேத்கர் கல்வி மையம் தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் தலைமையில் சக்கை போடு போடுகிறது !

இதற்கு உதவியாக தமிழகம் முழுவது எல்.ஐ. சி ஊழியர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் !

முன்னாள் எல்.ஐ.சி ஊழியன் என்ற முறையில் எனக்கும் பெருமைதான் !!!   

GLORY  to A .I .I .E .A  !!! 







3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எல்.ஐ.சி ஊழியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராட்டுவோம்

'பரிவை' சே.குமார் said...

பாராட்டுவோம்...

அப்பாதுரை said...

சிறிய விதை பல நேரம் யார் தயவும் இல்லாமல் வளர்ந்து யார் வேண்டுமானாலும் இளைப்பாற வல்ல ஆலமரமாகிறது. நல்லெண்ணங்களும் அப்படித்தான். கன்ஷிராமின் செய்கை ஒரு உதாரணம்.