சாதியை ஒழிக்க ...........!!!
இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் சார்ப்பில் மதுரையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது ! காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழிக்கமுடியும் என்ற பொதுவான கருத்து அங்கு நிலவியது என்று நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன் !
சாதி பற்றியும், காதல் பற்றியும் நம் பொதுப் புத்தியில் உருவாகியுள்ள தவறான கருத்தின் அடிப்படையில் இந்த நிலை உருவாகியுள்ளதோ என்று
அஞசுகிறேன் !
இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப் பட்டபோது "தீண்டாமை கொடியது அதன ஒழிக்க வேண்டும் " என்று மிகச்சரியாக முடிவு எடுத்தனர் ! அதே சமயம் தீண்டாமையின் ஆணிவேறான சாதீய கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வில்லை என்பது ஏதோ எதேச்சையாக நடந்தது என்று கூற முடியுமா ?
சனாதனவாதிகளொடு ஏற்பட்ட சமரச ஏற்பாடாக இருக்க வாய்ப்பில்லையா!?
அண்ணல் அம்பேத்கரால் உருவாகாப்பட்ட சட்டத்தில்சாதி ஒழிப்பு ஏன் சேர்க்கப்படவில்லை ? அப்போது அம்பேத்கரின் நிலை என்னவாக இருந்தது ? அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதக் குறிப்புகளின் இண்டு இடுக்குகளில் மறந்து கொண்ட வரலாறாக ஆகிவிட்டது !
அப்படியானால் அரசியல் சட்டத்தைஉருவாக்கியவர்கள் ஏன் இந்த "கண்ணாமூச்சி " ஆட்டம் ஆடினார்கள் !
அவர்களுக்கு "தீண்டாமையை " ஒழிக்கவும் மனமில்லை ! "சாதியை ஒழிக்கவும் மனமில்லை" என்று என்று கூறலாமா? உண்மை இங்கேதான் மறைந்து உறங்கிக்கொண்டிருக்கிறது !
அந்த கேரளத்து "புத்தி ராட்சசன் " இ.எம்.எஸ் "அலகும் பிடியும் மாற்றி அமைக்க வேண்டும் " என்று அரசியல் சட்டம் பற்றி குறிப்பிட்டானே!
எவ்வளவு சத்தியமான வாக்கு !!!
இரண்டாவதாக காதலையும் சாதியையும் போட்டுகுழப்பிக்கொள்கிறார்கள் ! காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழக்க முடியும் என்று மனதார நம்புகிறார்கள் !
சாதி நிலைத்து நிற்க "அகமணமுறை "தான் என்று நினைப்பவர்கள் இவர்கள் !
மகன் இந்துவாகவும் மகள் கிறிஸ்துவாகவும் திருமண உறவுகளைக் கொண்ட குடும்பங்களை தென் தமிழகத்தில் காணலாம் ! நாடார் கிறிஸ்டியன்,பிள்ளை,தலித் கிறிஸ்டியன் என்று இன்றும் வாழ்கிறார்களே! ஏன் ?
அண்ணன் சீக்கியப்பெண்ணயும்,தங்கை இந்துவையும் காதலித்து அல்ல arranged marriage நடந்த பஞசாபில் சாதி அழியவில்லையே !
கியானி ஜெயில் சிங் குக்கு ஒரு தண்டனை ! அவர் தங்க ஆசாரியாம் !
உள்துறை அமைச்சராக இருந்த பூட்ட சிங்குக்கு அவர் தலித் என்பதால் வேறு தண்டனை கொடுத்ததே அகாலி சிரோன்மணி குரு பீடம் !
அக்பர் இந்து பெண்ணைத்தான் மணந்தார்! அரண்மனைக்குள் கிருஷ்ணன் கோவில்கட்டி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினார் ! "தீன் இலாகி " என்றர் ! அடித்துக் கொண்டு சாகிறார்களே ! ஏன் ?
இந்தியாவில் அறுபது கோடி ஆணு-பெண்ணும் முப்பது கோடி குடும்பமாக வாழ்கிறார்களே! இவர்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருலட்சம் இருப்பார்களா ? இரண்டு லட்சம்,பத்துலட்சம் ஒருகோடி ..... ! மற்றவர்கள் தாய் தந்தையரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்கள் தானே!
மேலை நாட்டில் ஒரு இளைஞனோ யுவதியோ தன வாழ்க்கையினைத்
தீர்மானிக்க உரிமை பெற்றவர்கள் ! இதனையும் காதலிக்கும் உரிமையையும் போட்டு குழப்பிக் கொள்கிறோம் !
அங்கு காதலித்து திருமணம்செய்து கொண்டவர்களை விட தாய் -தந்தையர்
மூலம் நடக்கும்திருமணம் அதிகம் ! இதில் ஆண் பெண் விருப்பம்மட்டுமே முக்கியமானது!
தயவு செய்து காதல் திருமணத்தை நான் எதிர்ப்பவன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் !
சமூகத்தின் சில அடி ப்படைகளை மாற்றுவதற்கு காதலால் முடியும் என்பது பிரச்சினையை மலினப்படுத்துவதாகும் !
சாதி ஒழிப்பு என்பதை மிகவும் கடினமான, தீவிரமான , போராட்டங்கள் மூலம் நடத்த வேண்டும் ! அடிப்படையான சட்ட திருத்தங்கள் மூலம் செய்ய வேண்டும் !
2 comments:
சமீபத்தில் வன்னிய சாதி பெண்ணை மணந்த இளவர்சன் கொ லைசெய்யப்பட்டான்! ஒருவேளை அரசாங்கம் கலப்புமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஒரு முன்னுரிமை அளித்தால் ஒரு சமூகபாதுகாப்பு இருக்கிறது என்று உண்ருவார்கள். பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளே நடக்கும் காதல் /கலப்பு மணத்தை ஏற்பவர்கள் தலித்வுடன் எனும்போது தான் சிக்கல் ஏற்படுவதை பார்க்கிறோம். caste no bar என்ற விளம்பரங்கள் மூலம் செய்யப்படும் திருமணம் பற்றி ஒரு கட்டுரை அ.குமரேசன் தீக்கதிரில் எழுதியிருக்கிறார் வெறும் விளம்பரம்ன்றி வேறில்லை.
சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆள்பவருக்கு இல்லை ! சாதியால் மக்கள் ஒற்றுமை குலைவது அவர்களுக்கு நன்மை ! மிகவும் கடுமையான பிரச்சினை ! காதல்,கலப்புமணம் ஆகியவை மட்டும் தீர்த்துவிடும் என்று கருதுவது அபாயகரமான ஒண்றாகும் ! ---காஸ்யபன்!
Post a Comment