Friday, November 25, 2011

போராளிகள் யார்?.......

போராளிகள் யார் ?...

இந்த நாட்டிற்கு சதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்கள் யார்?பகவதிசரண் வோரா,சந்திர செகர ஆஜாத்,பகவத் சிங்க் ,ராஜ குரு ,சுகதேவ் ஆகியொர் என்ன செய்தார்கள்?ஆட்டுப் பாலைகுடித்து , அரைநிர்வாண காந்தி மட்டும் தான் போராடினாரா? மற்றவர்கள் போரடவில்லையா?

காந்தியைத்தவிர மற்ற போராளிகளைப் பற்றி நமக்கோ நம் சந்ததிகளுக்கோ எவ்வளவு தெரியும்? இடுப்பில் கத்தியையும், கையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் தீவிரவாதியாகத்தானே பகத்சிங்கும் ,,மற்ற போராளிகளும் அறிமுகப்படுத்தபட்டிருக்கிறார்கள்.அவர்களுடைய தியாகம்.பட்டறிவு,ஜனநாயக மாண்புகள் ஆகியவை பற்றி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறதா?

சாவடி நெல்லையப்ப பிள்ளையும்,நீலகண்ட பிரும்மச்சாரியும்,வாஞ்சியும் ,மாடசாமியும் நம்மில் எத்துணை பெருக்குத்தெரியும்? இவர்கள் போராளிகள் இல்லையா?சிவராசனும், பொட்டுஅம்மானும்,திலீபனும் மட்டும்தான் போரளிகள் என்று சொல்லிக்கொடுப்பது ஏன்?

எல்.டி.டியை,பொடொவை,ஈரோசை தெரிந்த அளவுக்கு நவஜீவன் சபாவை,அனுசீலன் சமிதியை, நமக்கு தெரியப்படுத்தவில்லையே ஏன்? சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி,மக்கள் மனதிலிருந்து துடைத்தெரிய செய்யும் செயலன்றி வெறு என்ன?

தொழிசங்கத்தைக் கட்டுப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க பிரிட்டிஷார் சட்டம் கொண்டுவந்தனர்.இந்திய இளைஞர்கள் ஒரு குழுவாக கூடி இதனை எதிர்க்கத்தீர்மானித்தனர்.இதற்கான இயக்கத்தை ஆரம்பிதவர் பகத் சிங். இந்த இயக்கம் வெரும் தலவர்களின் ஆணைப்படி நடக்கும் ஒரு அராஜக அமைப்பாக இருக்கக்கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர். அதற்காக இயக்கத்தின் செயல் பாடுகளை தீர்மானிக்க மத்திய குழு ஒன்றை உருவாக்கினர்.சட்டத்த நிறைவேற்ற பராளுமன்றம்கூடியது.பாராளுமன்றத்தில்,ஆட்களே இல்லாத பகுதியில் சத்தத்தை மட்டும் எழுப்பும் குண்டு ஒன்றை வீச வேண்டும் என்ற யோசனையை பகத்சிங் கூறினார். குண்டை வீசினால் நிச்சயம் மரண தண்டனை என்பது அவர்களுக்குத்தெரியும்.இந்த குண்டை தானே வீசுவதாகவும் அதற்கு அமைப்பின் அனுமதி கோரியும் பகத்சிங் தீர்மனம் கொண்டுவந்தார்.

மத்தியகுழு கூடியது.விவாதித்தது.ஒரு சில மாற்றங்களோடு .அதில் முக்கியமானது குண்ட வீசுபவர் பகத் சிங்காக இருக்கக்கூடாது. அவர் இயக்கத்திற்கு முக்கியமானவர் .குண்டுவீச்சு நடந்தபிறகும் இயக்கத்தை முன் கொண்டு செல்ல அவர் அவசியம். ஆகவே வேரு இரண்டு பேர் செல்ல வேண்டும் என்று முடிவாகியது. இது நடக்கும் போது பகத் சிங்கிற்கு 21 வயது இருக்கும்.அவருடைய கூட்டாளிகளும் கிட்டத்தட்ட சமவயதினரே.

சாவு நிச்சயம்.இயக்கத்திற்கு தலைவன் அவசியம் அவனுக்குப் பதிலாக போக மற்றவர்கள் தயார். உலகை ருசிக்காத இளம் தீரர்கள். நெஞ்சு விம்முகிறது நண்பர்களே! தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சுகதேவ். அவர் பஞ்சாபிலிருந்து இரண்டுநாள் கழித்துவந்தார்.அவரிடம் தோழர்கள் தகவலைக் கூறினார்கள்.அவர் கோபப் பட்டார். இரண்டு தோழர்கள் உயிரிழப்பது நிச்சயம்.அதனால் என்னபயன் இயக்கத்திற்கு.உலகறிந்த பகத்சிங் இதனச்செய்தால் இந்தியா முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போல் துடித்து எழும் என்று அவர் கூறினார்..

மீண்டும் மத்திய குழு கூடியது.தன் தலைவன் உயிரப் பாதுகாக்க தீமானித்த குழு மறுபடியும் விவாதித்தது. தான் முதலில் கொண்டுவந்த யொசனை நிறைவேறப் போகிறது என்று பகத்சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .தீர்மானம் நிறை வேறியது. பகத்சிங் கூண்டுவீச தயாரானார்.
தியாகம் ,தீரம் , ஜனநாயகம் ஆகியவற்றை அன்ன ஹசாரே, கெசரிவால், அந்த அப்பாவிப்பெண்மணி கிரண் பேடி ஆகியோர் இந்த போராளிகளிடம் கற்றுக்கொள்வார்களா?

Tuesday, November 22, 2011

கடவுளை டெலஸ்கோப்பை வைத்து தேடுங்கள்- சர்.சி.வி .ராமன்.

கடவுளை டெலஸ்கோப்பை வைத்து தெடுங்கள் -சர் .சி .வி .ராமன் ....

சென்னையில் மாகாணக் கல்லுரியில் .பேராசிரியர் எலியட் பணியாற்றினார். அவருடைய வகுப்பில் ஒருமானவனை அவன் தவறி வகுப்பிற்குள் நூழைந்துவிட்டானோ என்று கருதி விசாரித்தார்.

"நீ பி.ஏ.மாணவனா?"

"ஆமாம்!ஐயா"

" உன் பெயர் என்ன?"

"சி.வி.ராமன்"

அந்த மாணவன் தான் பின்னாளில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமன்.இது 1903ம் ஆண்டு நடந்தது.ஸனாதனமன குடும்பம். குடும்பத்தினர் இசை,சமஸ்கிருதம்,அறிவியல் ஆகியவற்றைப் பற்றித்தான் பெசிக் கொண்டே இருப்பார்கள்.ராமனின் தந்தை கணிதவியல் பேராசிரியர்.

ஆரம்பத்தில் ராமன் ஒலி பற்றிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார். அது பற்றிய அவருடைய ஆராய்ச்சிக்குறிப்புகள் உள்ளன பின்னர் ஒளி பற்றி ஆராயத்தொட்ங்கினார்.
1928ம் ஆண்டு அவர் 'ராமன்பாதிப்பு" என்ற அவர் கண்டுபிடிப்பு வெளியானது.அவருடைய மாணவன் கே எஸ்.கிருஷ்ணனும் அவருமாக கண்டு பிடித்தனர்.தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று உறுதியாக நினைத்தார்.லண்டன் புறப்படுவதற்கு 1929ம் ஆண்டே டிக்கெட்டும் வாங்கினார். விழா 1930ம் ஆண்டு நடந்தது..
.விழாவின் பொது ஒரு மதுக்கோப்பையில் மதுவை ஊற்றி அதில் ஒளியைப்பாய்ச்சி தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார்.மாலை விருந்தின் போது அவருக்கு மது பரிமாறப்பட்டபோது,தனக்கு குடிக்கும்பழக்கமில்லை என்று மறுத்துவிட்டார் . கண்டுபிடிப்புக்கு கருவிகள் எதுவும் கிடைக்கவில்லை.கருவிகளை அவரே செய்து கொண்டார். மொத்தம்300 ரூ செலவானது. .

ஒரு முறை அவரிடம் கடவுளைப்பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.அவர் அதனைக் கவனிக்காதது போல் தவிர்த்தார். கேட்டவர் விடவில்லை.
"கடவுள் இருக்கிறார் என்றால் ஒரு டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடு.வெறும் யூகங்களை வத்துக் கொண்டு உன் நேரத்தை வீணாக்காதே" என்றார்.

1970 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தெதி சர்.சி.வி.ராமன் மறைந்தார்.

Saturday, November 19, 2011

திரைப்படம் பற்றியது அல்ல.....

திரைப்படம் பற்றியது அல்ல......

1954ம் வருடம் ."முன்னா " என்ரு ஒரு திரைப்படம் வந்தது. இந்தியில் பாட்டு இல்லாமல் வந்த முதல் படம்.குவாஜா அஹமது அப்பாஸ் எடுத்தது. கே.ஏ.அப்பாஸ் ஒரு இடது சாரி எழுத்தாளர். கலைஞர்.இயக்குனர். நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்


நேரு ஒரு திரைப்படப் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
"'முன்னா " படத்தை நேரு குடும்பத்தினர் பார்ப்பதற்காக அப்பாஸ் தனியாக ஏற்பாடு செய்தார்.நேருவுக்கு படம் பிடித்திருந்தது.அதில் நடித்த சிறுவன் மாஸ்டெர்.ரோமி யின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருதது.மருநாள் காலை ரோமியை தன் வீட்டிற்கு காலை உணவுக்கு அழைத்துவர முடியுமா என்று அப்பாஸிடம் கேட்டார்.

"நேரு அவர்களே! படக்குழுவினர் அத்துணை பெரையும் அழையுங்களேன் அவர்களும் பெருமைப்படுவார்கள்"என்றார் அப்பாஸ்.

நேரு அருகில் இருந்த மகள் இந்திராவிடம் மெல்லியகுரலில் "இந்த கூட்டத்திற்கு உணவு தயாரிக்க முடியுமா?முட்டை, மற்ற சாமான்கள் இருக்கிறதா ? என்று கேட்டார். சிறிது நேர யொசனைக்குப் பிறகு இந்திரா சம்மதித்தார்.

மறு நாள் விருந்து முடிந்து எல்லாரும் விடை பெற்றுக் கொண்டார்கள். அப்பாஸ் விடை பெறும் போது,இந்திராவிடம் " விருந்திற்கு அழைக்க உங்களிடம் தயக்கமிருந்ததே! ஏன்?" என்று கேட்டார்.

" என்னசெய்ய! அவர் மாதசம்பளம் வாங்குகிறார்.அவருடைய சம்பளம்மட்டும்தான். பல மாதம் பலசரக்கு கடை,பால்காரன் என்று பாக்கி விழுந்து விடுகிறது அப்பா நிலமை தெரியாமல் விருந்துக்கு கூப்பிட்டு விடுவார். அதனல் என்னிடம் கேட்காமல் விருந்துக்கு அழைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன்.. நெருவின் வெளிநாட்டு பதிப்பகத்தார் ஆண்டுக்கு ஒருமுறைதான் உரிமைப்பணத்தை அனுப்புவார்கள். அதைவைத்துக் கொண்டுதான் கடனை சரிசெய்வேன் "என்றார்.

கண்கள்கசிய மனம் நெகிழ அப்பாஸ் விடை பெற்றார் .

( ரஷீத் கித்வாய் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.)

Thursday, November 17, 2011

விஞ்ஞானம் மதத்தை வென்றது.......

விஞ்ஞானம் மதத்தை வென்றது.....

விஞ்ஞானம் மதத்தை வென்றது. உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களில் பெரும் பகுதியினர் கத்தோலிக்கர்கள் ஆவர் .அவர்களின் தலமை பீடம் ரோம் நகரத்தில் உள்ளது. அவர்களின் தலைவர் போப் ஆண்டவர் அங் குள்ளவாடிகன் நகரத்தில் வசிக்கிறார்.

அந்தமக்களுக்கு அவர் கூறுவதுதான் தெய்வவாக்கு. ரோம் நகரத்தில் "லா சாட்னியா" என்று ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. முழுக்க முழுக்கபோப் ஆண்டவரின் நிர்வாகத்தில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்குப் பின் ஜானவரி மாதம் ஆரம்பிக்கும்.போப் ஆண்டவர் வந்து ஆரம்பித்து வைப்பார்.2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வழக்கம் போல் ஆரம்பவிழா அறிவிக்கப்பட்டது.அப்பொது போப்பாக இருந்தவர் போப் பெனடிக் ரட்ச சிங்கர்.பல்கலைகழகத்தச் சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போப் பெனடிக் வரக்கூடாது என்று கூறினர்.திருச்சபை கூடி விவாதித்து,மத நல்லிணக்கத்தி நிலைநாட்ட போப் ஆண்டவர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிகழ்ச்சி எவ்வளவு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள நாம் 360 ஆண்டுகள் பின்னோக்கிச்செல்ல வெண்டும்.

1633ம் ஆண்டு கலீலியோ பூமி சூரியனைச்சுற்றி வருகிறது என்று அறிவித்தார்.திருச்சபையோ பூமி நிரந்தரமானது.சுரியன் தான் பூமியைச்சுற்றி வருகிறது என்ற கருத்தை கொண்டிருந்தது. கலீலியொவுக்கு முன்னரே கொபன்ஹெகர் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.இதனை வெளியே சொன்னால் திருச்சபை தன்னை தண்டிக்கும் என்று பயந்து தான் சாகும் வரை அதனை வெளியே சொல்லவில்லை

கலீலியோ தான் கண்டுபிடித்ததை அறிவித்து விட்டார். இது சபையின் மீதுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.ஆகவே கலீலியோ தண்டிக்கப்பட வேண்டும்.ஏசுவின்மீதுள்ள விசுவாசத்தைவிட திருச்சபையின்மீதுள்ள விசுவாசம் முக்கியமானது. இல்லையென்றால் சபை பலவீனப்பட்டுவிடும் அதனால் கலியொவை விசாரித்து போப்
ஆண்டவர் அவரைதண்டிக்க வெண்டும் என்று முடிவுசெய்தது.கலீலியோ சிறையில் அடைக்கப்பட்டார்.. வயதான காலத்தில் அவர் போப் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு சூரியந்தான் பூமியைச்சுற்றுகிறதுஎன்பதை எற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டார்..

கலீலியோவை இப்படி சித்திரவதை செய்தது தவறு என்ற கருத்து சபைக்குள் மெலிதாகவந்து வளர்ச்சி பெற்று இது பற்றி திருச்சபை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றகுரல் பலப்பட்டது.. 360 ஆண்டுகளுக்குப்பிறகு அப்படி ஒருவிசாரணையும் 1990ம் ஆண்டு நடந்தது.அதில் திருச்சபை சொல்வது தவறு.கலீலியோ சொன்னது தான் சரி என்று முடிவாகியது.கார்டினல்கள் இதற்கு வாக்களித்தனர்.கார்டினல் பெனடிக் ரட்சசிங்கர் என்பவர் மட்டும் கலீலியோ சொன்னது தவறு. திருச்சபை சொன்னது தான் சரி என்று வாக்களித்தார் . கால மாறுதலில் கார்டினல் பெனடிக் ரட்ச சிங்கர் போப் ஆண்டவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். 17-1-2008ம் ஆண்டு பல்கலை திறப்பு விழாவிற்கு அவர் வரவேண்டியதிருந்தது.

விஞ்ஞானத்தை அனுபவித்துக்கொண்டே விஞ்ஞானி கலீலியொவுக்கு எதிராக வாக்களித்த பெனடிக் திறப்பு விழாவுக்கு வரக்கூடாது என்று பல்கலைகழகத்தைச்சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போர்க்குரல் எழுப்பினர். திருச்சபை விழாவை போப் ஆண்டவர் கலந்து கொள்ளவிருந்த விழாவை மத ஒற்றுமையை மனதில் கொண்டு ரத்து செய்வதாக அறித்தது.

அந்த 67 விஞ்ஞானிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்.

(தோழர் இரா எட்வின் அவர்கள்"குற்றம் குற்றமே" என்று எழுதிய இடுகையத் தழுவி எழுதப்பட்டது.)

Saturday, November 12, 2011

ஸ்டார் சிஸ்டம் எப்படி உருவானது?.....

ஸ்டார் சிஸ்டம் எப்படி வந்தது?........

இரண்டாம் உலக யுத்தத்திற்கான தூவானம் 35களிலேயே விழ ஆரம்பித்தாலும் இடியும் மின்னலுமாக அது வந்தது 39ம் ஆண்டுகளில் தான்.ஐரோப்பாகண்டத்தையே ஆட்டிப்படைத்த அது முதலில் கடுமையாக பிரான்ஸ் நாட்டை பாதித்தது.

திரைப்படம் வர்த்தக ரீதியக உருவாகி உலகம் முழுவதும் பரவியது பிரான்சிலிருந்து தான் புரஜக்டரும் ,காமிராவும், மற்றுமுள்ள கருவிகளும் உருவானதுமங்குதான்.எல்லாவற்றுக்கும் மேலாக காமிராவுக்குத்தேவையான கச்சாபிலிமும் அங்குதான் தயரிக்கப்பட்டு வந்தது.

யுத்தத்தின் காரணமாக அவை வருவதில் சிரமம் எற்பட்டது .சிலவும் அதிகமாகியது.விலைகூடுதலாகியது. தயாரிப்பாளர்கள் யுத்த காலத்தில் மூலதனமில்லாமல் துவண்டனர். .

அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கவில்லை.படை வீரர்களுக்கு அத்தியாவசியம் என்பதால் உள் நாட்டில் பண்டங்கள் வருவது குறைந்து விட்டது. அரசு ரேஷன் முறை கொண்டுவர வேண்டியதாயிற்று.வியாபரிகள் பதுக்க ஆரம்பித்தனர். கள்ள மார்கட் உருவாகியது.கள்ளப்பணம் கொள்ளையாக சேர்ந்தது. கள்ளப்பணக்காரர்கள் இந்தப்பணத்தை என்ன செய்வது,எப்படி முதலீடு செய்வது என்று திக்கு தெரியாமல் அலைந்தனர்

கலை இலக்கியத்தில் ஈடுபாடும்,சமூக அக்கரையும் கொண்ட தயாரிபாளர்கள் மூலதனமில்லாமல் கையை பிசந்து கொண்டிருக்க கள்ளப்பணம் "வரட்டுமா? வரட்டுமா?" என்று ஆசைகாட்ட அப்பொது ஒரு "பொருந்தாதிருமணம்" நடந்தது.அதன் பயனைத்தான் இன்றும் அனுபவிக்கிறோம். .

பணமுள்ளவன் ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். காசைவீசினால் எழுத,நடிக்க,இயக்க ஆள்பிடிக்கலாம். பணத்தில் அக்கரையிருந்தால் படமெடுக்கலாம் என்று நிலமை மாறியது. சமூக அக்கரை, கலை,பின்னுக்குத்தள்ளப்பட்டு நான் போட்ட பணத்திற்கு லாபம் கொள்ளை லாபம் வேண்டும் என்பவர்கள் நுழைய ஏதுவாயிற்று.

படத்தில் நடிப்பவனை " ஆஹா ஒஹோ "என்று விளம்பரப்படுத்தி அந்த நடிகன் மீது மூலதனத்தைப் போட்டு லாபம் பார்க்கும் முறை உருவாகியது.அப்படி உருவகியவர்கள் தான் எம்.கே.டி ,பி.யு .சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்.

நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். இருநூறுக்கும் மேலானபடங்களில் நடித்தவர் சிவாஜி. ஜெமினியும் அப்படியே. ஆனால் தமிழ் திரையுலகின் மூடிசாடா மன்னனாகத் துலங்குபவர் ஏம்.கே.தியகராஜ பாகவதர்..1934ம் ஆண்டிலிரு ந்து 1955ம் ஆண்டுவரை அவர் திரைஉலகில் வளையவந்தார். அவர் நடித்த மொத்தபடங்களின் எண்ணிக்கை பதினான்கு தான். அவர்நடித்த பத்தாவது படம் "ஹரிதாஸ்". படம் ரிலீசானதும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதானார். அந்தப்படம் மூன்று ஆண்டுகள் ஒடியது.அதன்பிறகு அவர் பட்ம் (நான்கு ) புஸ்வணமாகியது.

விளம்பரத்தின் மூலம் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற வித்தை முன்னுக்கு வந்தது. ஸ்டார் சிஸ்டம் உருவான கதை இது தான்.

Thursday, November 10, 2011

ஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன?.......

ஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன?
80 ம் ஆண்டுகளின்முற்பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அதில் , நாவல்,கவிதை,சிறுகதை,நாடகம்,திரைப்படம் என்று துறைவாரியாக ஆய்வுக் கட்டுரைகள் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப் படவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

திரைப்படம் பற்றி திருச்சியைச்சேர்ந்த ஜகதீஷும் நானும் எழுதமுடிவாகியது..ஆரம்பகாலம் பற்றி நானும் நிகழ் காலம் பற்றி ஜகதீஷும் எழுத எங்களுக்குள் முடிவு செய்தோம்.

மாமேதை லெனின் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபொது மேற்கத்திய நாடுகளில் திரைப்பட்ம் என்ற புதிய வடிவம் உருவாகியுள்ளதைப் பார்திருக்கிறார். தன் நாட்டு மக்களுக்கும் இந்தவடிவத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு போதமூட்டவெண்டும் என்று நி னைத்தார். புரட்சி நடந்ததும் திரைப்படத்துறையை கல்வித்துறையொடு இணைத்தார். ஐசன்ஸ்டீன்,போடொவ்கின் ஆகிய இளைஞர்களை அனுப்பி திரைப்படம் பற்றி கற்றுவரச்செய்தார்.இந்தியாவிலும் ஆரோக்கியமாகவே ஆரம்பமாகியது.தமிழகத்தில் ஸ்டூடியோ சிஸ்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அஸ்திவாரமிட்ட முன்னோடிகளில் முக்கியமானவர் திரு.எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

தயாரிப்பாளர் சொந்தப்பணத்தில் பட்ம் எடுக்க வேண்டும் படம் எடுக்க தொழிற்கருவிகள் காமிரா, லைட்டுகள், சொந்தமாக இருக்க வேண்டும். படப்பிடிப்புக்கான தளங்கள் சொந்தமாக இருக்கவேண்டும் .தயாரிப்பாளர் வாசனுக்கு சொந்தமானதுதான் ஜெமினி ஸ்டூடியோ.

ஸ்டூடியோவோடு மாதச்சம்பளத்தில் நடிகர்களை வைத்திருந்தார். கணெசன்,புஷ்பவல்லி,சுந்தரிபாய் ,கொத்தமங்கலம் சுப்பு,நாகெந்திர ராவ் ,எம்.கே ராதா,ரஞ்சன் என்று அற்புதமான நடிகர்களை மாதாமாதம் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார்.

ஜெமினி கதை இலாகா என்று இருந்தது. ஆந்திராவின் இடதுசாரி எழுத்தாளர் ஆசார்யாவிலிருந்து, தேவன், சுப்பு,பட்டு, வென்று எழுத்தாளர்கள் மாதச்சம்பளத்தில் பணியாற்றினர்.

தயாரித்த படங்களை விநியொகம் செய்ய யார்தயவையூம் நாடாமல் ஜேமினி சர்க்யூட் என்ற அமைப்பும் இருந்தது.இவர்கள் ஊர் உஊராகச்சென்று படத்தை திரையிட்டு வர்வார்கள்.

அதனால் தான் அவரால் "சம்சாரம்","ராஜி என் கண்மணி" போன்ற படங்களை உருவாக்க முடிந்தது.

ஸ்டூடியோ சிஸ்டத்தில் ஒரு தயாரிப்பாளர் எதைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை கொடுக்கமுடியும்.அவரே வினியோகம் செய்வதால் தன் தாயாரிப்பு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.தமிழகத்தில் இதனை வெற்றிகரமாக செய்து காட்டியவர் திரு வாசன் அவர்கள்.

இந்த ஸ்டூடியோ சிஸ்டம் இற்று விழுந்து ஸ்டார் சிஸ்டம் வந்தது. எப்படி வந்தது ஏன் வந்தது என்ற வினாவுக்கான காரனங்களை திரை உலகுக்குள் தேடமுடியாது.அரசியல் பொறுளாதார சமுக காரணங்களால் அவை மாறின. அதனைத் தனியாக அடுத்த இடுகையில் பார்ப்பொம்.

Monday, November 07, 2011

காந்தியடிகளும் ஏசுநாதரும்.......

காந்தியடிகளும் ஏசுநாதரும் ..........

காந்தியடிகளின் குணசித்திரம் அவருடைய எளிமைதான் என்று கூறுபவர்கள் அவரைப்பற்றி எதுவும் அறியாதவர்கள் என்று பதிவர் அப்பாதுரை அவர்கள் பின்னூட்டம் முற்றிலும் சரிதான்.

இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜாண் செல்லத்துரை அவர்களின் இடுகையைப்படித்த பிறகு காந்தி பற்றிய புதிய தரிசனம் கிடைத்தது. ஐம்பது வயதைக்கூட தாண்டாத ஜாண் அவர்களுடைய அறிவார்ந்த கருத்துக்கள் என்னை பல முறை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்தமக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து குழுக்களுக்கிடையே கொலை வெறியோடு தாக்கிக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.அவர்களை சீரமைத்து வாழவைக்க வந்தவர் தான் "மோஸஸ்" .அந்தமக்களுக்கு அன்பு என்பதை கற்றுக்கொடுத்தார்." அண்டைவீட்டானை நேசி" என்றார்.

அதன் பிறகு வந்தவ்ர் தான் ஏசுபிரான். அன்பு மதத்தை உருவாக்க தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டார்.அவரோ " உன் எதிரியை நேசி" என்றார்.

அண்ணல் காந்தியடிகள் சேவாகிராமத்தில் வசிக்கும்போது அவரைப்பார்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு குழு வந்தது. அதில் ஒரு பாதிரியாரும் இருந்தார். மோஸஸையும் ஏசுபிரானையும் விட அன்பினைப் பற்றி காந்தியடிகளால் என்ன சொல்லிவிட முடியும் என்று அவர் கருதினார்.

" காந்தி அவர்களே! ஏசு பிரான் கூறியதைவிட அன்பினைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?"

"அவர் என்ன சொன்னார்?"

"உன் எதிரியையும் நேசி என்றார் " என்று பாதிரியார் கூறினார்.

காந்தியடிகள பரிதாபமாகக் கூறினார்" எனக்கு எதிரிகள் எவருமே இல்லையே

அடிகள் மவுன விரதமிருப்பார் தன்னை புடம் போட்டுக்கொள்ள. தன் உடலை வருத்தி உண்ணாமல் இருப்பார் தன் மக்களைப் புடம் போட.

சமீபத்தில் அன்னா ஹசாரே மவுன விரதமிருந்தார். அதனை முடிக்க காந்தியின் சாமாதிக்குச்சென்றார்.அவ
ர் பின்னால் பத்திரிகையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் காமிரவோடு சென்றனர் சமாதியில் வணங்கி விரதத்தை ஹசாரே முடித்தார்.

நிருபர்களிடம் " கங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யப்போகிறேன் " என்று அறிவித்தார்.

" அண்ணல் காந்தியடிகளே இவர்களை மன்னியும் "

Thursday, November 03, 2011

பி.லெனின் என்ற திரையுலகப் போராளி ....

பி .லெனின் என்ற திரை உலகப் போராளி ....

சமீபத்தில் தமிழ்நாடு சென்றிருந்தபோது லெனின் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை முதன் முதலாக திருப்பரங்குன்றத்தில் நடந்த கலை இலக்கிய இரவில் சந்தித்தேன் .வெகு நேரம்பெசிக்கோண்டிருந்தோம்.
60-70ம் ஆண்டுகளில் தமிழ்த் திரை உலகம் மூன்று மூன்றெழுத்து நடிகர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி வைத்ததுதான் தான் சட்டம் என்று இருந்தது. இந்த நட்சத்திர ஆதிக்கத்தை உடைக்க பல முயற்சிகள் நடந்தன.எல்டாம்ஸ் ரொடும் மவுண்ட் ரொடும் சந்திக்கும் கீதாகபே முனையில் திரையுலகை மாற்றியமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் பெசிப்பேசி தொண்டை வரண்டுபோய் நிற்பார்கள். கிரமங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் லட்சியகனவோடு வந்த இளம் கலைஞர்கள் 93சி மவுண்ட் ரோடு மொட்டை மாடியில் பட்டினியால் புரண்டு புரண்டு தூக்கம் வராமல் நெளிந்தது தான் மிச்சம்.இவர்களிடையே செயலூக்கமிக்க மூன்று இளைஞர்கள் துடிப்போடு இருந்தார்கள்.கமல ஹாசன் ,பாரதி ராஜா, பி.லெனின் தான் அந்த மூவரும்.சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.
பாரதிராஜாவிர்கு " 16வயதினிலே " ஒரு பாதையைக் கொடுத்தது. கமலஹாசனுக்கும் அந்தப் படம் தூக்கிவிட்டது."சகலகலா வல்லவன்" என்றபடம் வந்ததும் கமல ஹாசன் நட்சத்திர ஜொதியில் கலந்து போனார்.வெற்றியின் பின்னால் முகிழ்ந்து பொன பரதி ராஜாவும் பாதயை மாற்றிக்கொண்டார். தன்னந்தனியாக அந்தப்பணியை லெனின் தொடருகிறார்.
"நாக் அவுட்" பட பாராட்டுவிழாவிற்காக திருப்பரங்குன்றம் வந்திருந்த லெனின் அவர்களோடு இது பற்றி பெசிக்கொண்டிருந்தேன்.பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும்படங்களை எடிட் செவதை தவிர்த்தார். புதியவர்களின் படங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் வாங்கி தொகுத்தார். நட்டம் வந்தாலும் விடாமல் தன் போராட்டத்தை தொடருகிறார்.
1957ம் ஆஅண்டுவாக்கில் ஹைதிராபாத்தில் பணியாற்றினேன்.தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி போராடி நேருவின் துரோகத்தால் தொல்வியடைததின் பின்னணியில் கம்மம்,வாரங்கல், காசிபெட்டு,குண்டூர்,நாகார்ஜுனசாகர்,என்று சுற்றி அலைந்த காலம் அது. தெலுங்கானா பொராளிகளுக்கு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சாதாரண மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவியது நெஞ்சை நெகிழச்செய்யும்.
அந்தப் போராளிகளுக்கு திரை உலகமும் உதவியது என்பது ஆச்சர்யப்பட வைத்தது.சென்னையிலிருந்துசித்தூர்வி.நாகையா,ஜி.வரலட்சுமி,ரேலங்கி,சிவராம்,நாகபூஷணம்,நாடக நடகராயிருந்த ராமாராவ் ஆகியோர் உதவினர்.பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து.தெலுங்கானாவுக்குள் புகுந்து அங்கு கிராமம் கிராமமாக மக்களைத்திரட்டும் பணியில் "புர்ரகதா" நிகழ்ச்சிகளை ஜி.வரலட்சுமி என்ற நடிகை நடத்தியுள்ளார்.இந்ததகவலை உறுதிபடுத்த பல முயற்சிகளைச்செய்தும்தன்னந்தனியாக என்னல் முடியவில்லை.. இந்த நடிகர்களுக்கு துணையாக இருந்தவர்களில் ஒருவர் பீம்சிங். லெனினின் தந்தை .
லெனின் அவர்களடம் இது பற்றி பெசினேன். இந்த நடிகர்களின் வாரிசுகள், உயிரோடு இருக்கும் அவர்களுக்குத்தெரிந்தவர் ஆகியவர்களை அணுகி ஆவணப்படுத வேண்டும் என்று கெட்டுக்கொண்டேன்.வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய திரையுலகின் இந்தப் பங்களிப்பை ஆவணப்படுத்த என்னால் முடிந்ததை செய்வேன் என்று லெனின் கூறினார்.