Monday, November 12, 2018

"மா பூமி"யும்,"கவுதம் கோஷு"ம் ...!!!

வங்கத்தில் 1950 ஆண்டு பிறந்தவர் கவுதம் கோஷ.  குறும்படங்கள் தயாரித்துக்கொண்டிருந்த கவுதம் 1979ம் ஆண்டு முழுநீள  கதை ப்படம் தயாரிக்க விரும்பினார்..


இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான பகுதியை இந்தியாமுழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்று விரும்பினார்.

இநதியா  முழுவதும் சுற்றி வந்து தேடினார் விக் ட்டோரியா  லைப்ரரியில் உள்ள ஆவணங்கள், கெஜேட்டுகள் என்று படித்து பார்த்தார்.

சாம்பரான் விவசாயிகள் போராட்டம்,  அவர் கவனத்தை கவர்ந்தாலும் முழு திருப்தி கிடைக்கவில்லை. 

அப்போது தான் தெலுங்கானாவில் விவசாயிகள் நிஜாமை எதிர்த்து போராடினது பற்றி தெரியவந்தது .மீண்டு லைப்ரரியில் சரணடைந்தார். ஒரு கட்டத்தில் ஆந்திர மாநிலம் ஹைதிராபாத் சென்று தகவலை சேகரிக்க  விரும்பினார். ஹதீராபாத்,கம்மம், நந்தியால்,வாரங்கல்  என்று அலைந்தார் . ஹைதிராபாத்தில் Policeaction என்ற பெயரில் ஒரு போராட்டம் நடந்ததாக பலர் சொன்னார்கள் . ஆயுதம் தாங்கிய புரட்ச்சி நடந்த இடத்துலே அதற்கு அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் அமுக்கப்பட்டு இந்தவீரியமிக்க போராட்டத்தை ஆயுதப்புரட்ச்சியை  முதலில் அந்த தெலுங்கு மொழிபேசும் மக்களுக்கு சொல்லி வீட முடிவு செய்தார் "மா பூமி "  யை தெலுங்கில் உருவாக்க முடிவெடுத்தார்.   

உண்மையான அந்த தளபதி பி.சுந்தரய்யா எழுதிய  telungaanastrugle என்ற நூலை  படித்தார். ராஜசேகர ரெட்டி எழுதிய நூலை யும் படித்தார்.படப்பிடிப்பை ஆரம்பித்தார்.

இந்த படத்தில் விவசாயிகள் ஜமீன்களையும்,ஜாகிரகளையும் விரட்டியடிப்பார்கள்.அவர்கள் ஜமீனை விட்டு ஹைதிராபாத்த்ல் தஞ்சமடைவார்கள்.பின்னாளில் கர்னல் சவுத்திரியின் தலைமையில் இந்திய ராணுவம் வந்து புரட்ச்சியை  நசுக்கிய பின்னர் ஜமீன்தார்கள் காங்கிரஸ் கடசியில் சேர்ந்து ராணுவம் புடை சூழ கதரகுல்லா கதர் ஜிப்பாவோடு ஜமீனுக்குள்நுழைவார்கள் .இதற்காக பிலிம் டிவிஷனின் படசுருளை பயன்படுத்தி இருப்பார் .

தணிக்கையில் இதை அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்த்திர்கள் என்று கேட்ட பொது " படம் எடுக்கும் போதே நான் எதற்கு சமரசம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தடுத்தால்பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். மேலும் தணிக்கைக்குழுவின் intelectual level பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருந்தது. அவர்களின் அறிவு பற்றி நான் கொண்டிருந்த எண்ணம்  சரியாகவே இருந்தது"என்றார் கவுதம்.

கவுதம் இந்தியில் எடுத்து சர்வதேச விருதுகளை வென்ற படம் "பார் " என்பதாகும் . பன்றி வளர்க்கும் சக்கிலிய தம்பதிகள் பற்றிய படம் .பன்றிகளை கங்கை ஆற்றை கடக்க படகில் ஏற்றமாட்டார்கள் . ஆற்று நீரில் நீந்த விட்டு மேய்த்துக் கொண்டு செல்லவேண்டும். மிகவும் ஆபத்தான பணி .சோத்துக்கு வழியில்லாத சகிலிய தம்பதி இந்த பணியை ஏற்றுக்கொண்டு செல்வார்கள் . நசுருதின் ஷாவும்,ஷபானா ஹஷ்மியும்  நடிப்பார்கள்.சர்வதேச விருது சிறந்த நடிப்புக்காக பெற்ற படம் அது.

(பி.கு .  தெலுங்கானா புரட்ச்சியை பின்புலமாக கொண்டு ஒரு நாவல் எழுத விரும்பினேன். அதற்காக குண்டூர்,விஜயவாடா, வாரங்கல் , நந்தியால் என்று அலைந்து தகவல் பெற்றேன்.  தோழர்கள் சுந்தரய்யா,சிந்து பூந்துறை அண்ணாசி ஆகியோரையும் கதையில்சேர்த்தேன். ஆனால் குறுநாவலாக தான் அவசரத்தில் எழுதினேன் . "கிருஷ்ண நதிக்கரையில் இருந்து " என்ற இந்த நாவலை ncbh பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை தெலுங்கிலும் இந்தியிலும் மொழிபெயர்க்க முயற்சி ஆரம்பமாகியுள்ளது.

மதிப்பிற்குரிய SAP அவர்கள் இந்த பின்புலத்தில் நாடகம் எழுதி அதனை மதுரை எம்.பி ராமசந்திரன் நாடகமாக போட்டார் . ) 


Saturday, November 10, 2018

"சர்கார் " திரைப்படத்தை 

முன் நிறுத்தி ......!!!

அரசியல் படம் பற்றிய சர்சசையில் ஈடுபடுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.நான் அறிந்த அரசியல் படம் பற்றி சொல்வது தான் நோக்கம்.

அப்போதெல்லாம் சர்வதேச திரைப்பட விழாக்கள் டெல்லியில்நடக்கும்.பின்னர் மும்பை,கல்கத்தா,சென்னை என்று நடத்தினார்கள். 

 பங்களூருவில்நடந்தது .பிரான்சு,பிரிட்டன்,அமெரிக்கா ,ரஷ்யா, என்று சர்வதேச படங்கள்வரிசையாக நின்றன. அந்த ஆண்டு மிகசிசிறந்த அரசியல் படம் தேர்ந்தெடுக்கப்பட இருந்தது.

இந்த போ \ட்டியில் மிகசிறந்த படமாகதெலுங்கில் வந்த படமான "மா பூமி " என்ற படம் தேர்ந்தெடுக்கப்பட்டது .

நிஜாம் ஆட் சியில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியில் ஈடுபட்டு ஜமீன்களையும் ஜாகீர் ர்களையும் விரட்டிவிட்டு அந்த நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளித்துவிடுகிறார்கள் . நிஜாமின் சௌதி அரேபிய  கூலிப்படையை எதிர்த்து மூன்று ஆண்டுகள் ஆட்ச்சியை நடத்து கிறார்கள். இந்த போட்டாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் தான் சுந்தரய்யா, ராஜசேர்க்கர் என்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் .நிஜாம் தவித்து நின்றபோது நேருவும் ராஜாஜியும் சதி  செய்து இந்திய  ராணுவத்தை அனுப்புகிறார்கள். கர்னல் சௌத்திரியின் (பின்னாளில் ஜெனரல் ) தலைமையில் ஹைதிராபாத்திற்குள் நுழைந்த இந்திய ராணுவத்திடம்  நிஜாம்   ஒப்பந்தம் செய்து கொள்கிறார். புரட்ச்சி நசுக்கப்பட்டு நிலம் மீண்டும் ஜமீன்களிடம் கொடுக்கப்படுகிறது.

"மா பூமி " (என் நிலம் ) என்ற இந்த படத்தை எடுத்தவர் கவுதம் கோஷ் என்ற வங்கத்தைஸ் சேர்ந்த இளைஞர்.

சிறந்த விமரிசகரான ஷிவ்குமார் இதனை DOCOFICTION என்று வகைப்படுத்தி பாராட்டசினார். 

விரட்டியஅடிக்கப்பட்ட ஜமீன் களும் ஜாக்கிரகளும் இந்திய ராணுவம் புடை சூழ மீண்டுவந்து நிலங்களை பெற்றுக்கொள்வார்கள் . இந்தியா பிலிம்  டிவிஷனிலிருந்து வந்த படசுருளை கவுதம் கோஷ்  இதில் பயன்படுத்தி இருப்பர் .

இது ஒரு சர்வதேச பிரச்சினை யாகிவிடாமல் தடுக்க இந்தியா இதனை  இது ஒரு POLICEACTION என்று உலகிற்கு அறிவித்தது.

இன்றைய தெலுங்கானா மக்களுக்கு policeaction என்றுதான் தெரியும். அது ஒரு ஆயுதம் தாங்கிய புரட்ச்சி என்பது அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்  எனப்பதற்காகத்தான் இந்தபடத்தை எடுத்தேன் என்கிறார் கவுதம் கோஷ் .

அரசியல் படத்திற்கும், போஸ்டர் படத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுய தருணம் வந்துவிட்டது.


Saturday, November 03, 2018
நான் என்ன 

தப்பு செஞ்சென்

அண்ணே ?

- ராஜலட்சுமி .


 சிறுமி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவள் முச்சுக்குழல் அறுபட அவள்  பேச்சு நின்றது. கழுத்தை அறுத்து வாகனத்தை நோக்கி சென்றிருக்கிறான் ! 

ஒருபய கேக்கல !  அரசு இருக்கிறது.! அதற்கு ஒரு அரசியல் தலைமை யிருக்கிறது!கேக்க நாதியில்லை !

20 மாவட்டத்துல தலித்துகள் கலக்டறா இருந்தா !

25 மாவட்டத்துல பட்டியல் இனத்தவர் dsp யா இருந்தா !!

50 தசில்தார்  தாழ்த்தப்பட்டவர் இருந்தா !!

100பேர் ரெவின்யூ இன்ஸ்பெக்டரா இருந்தா !!

"--காளி " இப்படிநடந்திருக்குமா ?

empowerment ! அதிகாரத்தில் பங்கு !அதுதான் முக்கியம் !

அதற்கு என்ன வழி !

மாநில அரசு ஊழியர் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றே திரை வேண்டும்.

இதனை ,சிவப்பும் நீலமும்  இணைந்து போராடி பெறவேண்டும் !

கருப்பு ?

வரும் ...ஆனா.. வராது !!!