Sunday, March 25, 2018

பிரிவோம் ,

ஒன்று படவும் செய்வோம் !!!

நேற்று எப்போதையும் வீட அதிகமான நண்பர்கள் தொடர்பு கொண்டனர் . பதிவுகளும் வந்தன .ஏன் இப்படி எழுதுகிறாய் ? என்பது அவர்கள் கேள்வியாக இருந்தது. உன்னை brand பண்ணி விடுவார்கள் என்றும் எச் சரித்தனர் . 

தமிழக சட்டமனறத்தில் எதிர்க்கட்சி  தலைவர் அவர். மூன்று ரோஜா மாலையை கொண்டு வந்தார்கள். ஒன்றை பெரியார் கழுத்தில் . போடப்பட்டது . மற்ற இரண்டும் மணப்பெண்,மணமகன் ஆகியவர்களுக்கு.மாலைமாற்றியதும் திருமணசடங்கு முடிந்தது.மணமகன் பெயர் பி,ராமமூர்த்தி  ! 

அவரையே "பஞ்சா ப கேச அய்யர் மகன் தானே " என்று மறைந்த முரசொலி மாறன் வசை பாடினர். நான் கிடக்கிறேன் துரும்பு.

"நான் பஞ்சாபகேச அய்யர் மகன் தான் என்ற உண்மையைத்தான் சொல்கிறார்கள் விடுங்கள் "என்றார் பி.ஆர்.

சனாதன குடும்பத்தில் தான் பிறந்தேன் பூணுல் போட்டார்கள். கிராமத்தில் என் தாத்தா வயலுக்கு போய் பார்த்து வருவார்கள். நேரமாகிவிட்டால் நான் குளித்து திருநீறு பூசி,சாலிகிராமம், பளிங்கு குட்டி பிள்ளையார்  என்று அபிஷேகம் செய்து, அஷ்டோத்திரம் சொல்லி 9வயதில் பூஜை  செய்து மகா நெவித்யாம் செய்து சாப்பிடுவோம்.

என் பதினைந்து வயதில் பிரசிடென்சி கல்லூரி பேராசிரியர் (ஒய்வு) அவர்களிடம் பகவத் கீதை பயின்றேன். சின்மயா மிஷன் மூலம் உபநிஷத்துக்களை படித்தேன்.  ஏன் ? ஒருகட்டத்தில் சாந்திபனி கல்லூரியில் படித்து சன்யாசம் வாங்க விரும்பியவன் தான். 

மறைந்த மேதை எம்.ஆர் .வெங்கடராமன் கூறுவார் . "you must unlearn what you have lernt  if you want to learn Marxism " என்பார்.

மார்க்சிஸ்ட் கடசி அகில இந்திய கடசி . பார்ப்பன மார்க்சிசம், அம்பேத்காரைட் மார்க்சிசம் என்ற விவாதம் தமிழகத்தில் நடக்கிறது . கேரளாவில் இல்லை .ஆந்திராவில் இல்லை. மராட்டியத்தில்,பிஹாரில், மே .வங்கத்தில் இல்லை .

மராட்டியத்தில் ஒரு சொலவடை உண்டு. "மராட்டிய "மகர்" காந்திக்கு உயிர் கொடுத்தான். மராட்டிய பாப்பான் உயர் எடுத்தான் என்பார்கள் .

அண்ணல் அம்பேத்கார் கொஞ்ச்ம வெளிச்சம்  கிடைக்கும் வகையில் தேர்தல் இட ஒதுக்கீடு என்று வந்த பொது காந்தியார் அதனை எதிர்த்தார்>. சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார் . காந்தியாரின் உயிர் ஊசலாடியது .இந்தியா புராவிலும் பதட்டம் ஏற்பட்டது. காந்தியாரை காப்பாற்ற ஒருவரால் மட்டுமே முடியும் அவர் அண்ணல் அம்பேத்கார் தான் என்ற நிலை ஏற்பட்டது . கடுமை யான நிர்ப்பந்தம் . அம்பேத்கார் சமரசம் செய்து கண்டார். காந்தி உயிர் பிழைத்தார் .

சமரசம் ஏற்படவில்லை என்றால் ? கால தூர  வர்த்தமானத்தின் பின்னணியில் பார்த்தால் இந்திய அரசியல் வானத்தன் நிறம் மாறியிருக்கலாம் . அம்பேத்காரை இதற்காக விமரிசிப்பவர்கள் உண்டு.

தீண்டாமையை ஒவ்வொரு நொடியும்  அம்பேத்கார்அனுபவித்தவர்>. நீர்முழ்கி கப்பலில்  கடலின் மேற்பரப்பில் நடப்பது "பெரிஸ்க்கோப் " மூலம் தெரிந்து கொள்வார்கள். தீண்டாமையின் கொடூரத்தை நான் பெற்றது PERISCOPIC knowledge தான் !

அதிலிருந்து தன மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் சாதி கொடுமை நீக்கப்பட்ட வேண்டும். அன்றய பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் . அந்த முயற்சியை அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது> அத்துணை பெரும் ஒன்று கூடி  எதிர்த்தனர்>இந்த கூட்டத்தில் இடது சாரிகள் அம்பேத்கார் பக்கம் நிர்க்க வில்லை  . 

தன மக்களுக்கு ஏதும் செய்யமுடியாமல் போனது .கடைசி முயற்சியாக புத்தமதம் என்றார் . இன்று இது சரியா என்று விவாதிக்க வேண்டியது உள்ளது . கிறிஸ்துவனான தலித் இட ஒதுக்கீடு கேட்கிறான் .இஸ்லாமிய தலித் இட ஒதுக்கீடு கேட்கிறான்> லடக்கணக்கான புத்திஸ்ட் தலித்துகள் மராட்டிய மாநிலத்தில் படும் பாட்டை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாக உள்ளது.

பெரியார் மக்களுக்கு செய்தது மகத்தானது .!

அவரை வீட பரந்த தளத்தில் அம்பேத்கார் செயல் பட்டார்.!!

இவை இரண்டின் போதாமையை நிறைவு செய்ய மார்க்சிசாம் ஒன்றே வழி !!

COM . NEETHI RAJAN  LET US AGREE TO DISAGREE !!! 

பிரிவோம் ,

ஒன்று படவும் செய்வோம் !!!நேற்று எப்போதையும் வீட அதிகமான நண்பர்கள் தொடர்பு கொண்டனர் . பதிவுகளும் வந்தன .ஏன் இப்படி எழுதுகிறாய் ? என்பது அவர்கள் கேள்வியாக இருந்தது. உன்னை brand பண்ணி விடுவார்கள் என்றும் எச் சரித்தனர் . 

Friday, March 23, 2018

ஐம்பது ஆண்டுகளாவது ,

இருக்கும் ...!!!
அப்போது நன் ஹைதிராபாத்தில் இருந்தேன் . ஹிறேன் முகர்ஜி, புபேஷ் குப்தா , ஏகே,கோபாலன்  ,நாத்பாய்,துவைவேதி, கே.ஆர்,கணேஷ் என்று நாடாளுமன்றமு இடது சாரிகள் கலக்கிக் கொண்டிருந்த காலம். 

இதில் தமிழகத்து எம்.பி களும் உண்டு.இந்திய சீன  எல்லைத்தாவா முக்கிய  பிரசசி னையாக  எழுந்தது . கம்யூனிஸ்ட் கடசிக்குள் தத்துவார்த்த விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம்.  

மத்திய அரசு ஊழியர்கள் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வெடித்து கொண்டிருந்தது. நாடாளுமன்ற மேலவையில் மக்களவையில் மேலே குறிப்பிட்ட உறுப்பினர்கள் நேரு அரசை கடுமையாக விமரிசித்து கொண்டிருந்தனர்> எனக்கு இவர்களை எல்லாமே வீட அந்த தமிழகத்து எம்.பி பேசுவது நிரம்ப பிடிக்கும். சட்ட நிபுணர். மேலை நாடு சென்று படித்தவர்> வசதியான குடும்பம்>அப்பழுக்கற்ற நேர்மையாளர். தன வசதி வாய்ப்பை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஏழை எளிய மக்கள் நலன் காக்க கம்யூனிஸ்ட் கடசிக்கு வந்தார் .

நான்  மாற்றலாகி வந்ததும்  அவரோடு நேரடி தொடர்பு ஏற்பட்டது  .மிகவும் எளிமையான வாழ்க்கை என்னை வசீகரித்தது. அவர் காலடியிலேயே கிடந்தேன்.

கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப்பெரும் பிளவை சந்தித்து கொண்டிருந்தது.

முத்த தோழர்கள் அவரை வந்து சந்திப்பார்கள் எப்படியாவது தாய் கடசி பிளவு படாமல் காக்க வேண்டும் என்று அழுதுகொண்டே வேண்டுவார்கள்.

"அப்படி  எல்லாம் ஒன்னும் ஆகாது தோழர் !"என்பார் 1அவர்கள் முகம் மலரும் .

"பிறகு என்னத்துக்கு தோழர் வலது கம்யூனிஸ்ட்,இடது கம்யூனிஸ்டா  னு பிரிக்கானுவ ? "

"ஒண்ணுமில்லயா !இரண்டு தலைவர்கள் சண்டை. சரிபண்ணிரலாம்! "

"என்னதான் சண்டை தோழர் ? "

"மனசுக்குள்ள வச்சுக்கிடும் !  மராட்டிய பாப்பானுக்கும் கேரளபாப்பானுக்கும் உள்ள சண்டைதான் ! "

நான் அன்றிலிருந்து அவரோடு இருந் தொடர்பை நிறுத்திக் கொண்டேன் .ஐம்பது ஆண்டுகளாவது ,

நான் அன்றிலிருந்து அவரோடு இருந் தொடர்பை நிறுத்திக் கொண்டேன் .Wednesday, March 21, 2018

கிராமிய  பாடல்களும் .

"சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சியும் ...!!!

கர்நாடக  மாநிலத்தின் வடபகுதியில் இருக்கிறது தார்வார் நகரம். இங்குள்ள பல்கலைக்கழகம் கிராமிய கலை வடிவங்கள் பற்றி ஆராய்சசி  நடத்துகிறது. தோழர் சிவ  சங்கர பிள்ளை அவர்களுக்கு fellowship கொடுத்து ஆராய சொன்னார்கள் .தமிழகத்தில் தோழர் கு.சி.பா அவர்களையும் ஆராய்சசி செய்ய சொன்னார்கள் .நெல்லையைச சேர்ந்த வானமாமலை அவர்களும் கிராமியப்பாடல்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

நமது தோழர் எஸ். .ஏ . பெருமாள் அவர்கள் பல கிராமிய கலைஞர்களை மேடை ஏற்றியுள்ளார்.மறைந்த  தலைப்பக்கட்டு கோட்டைசாமி அதில்  முக்கியமானவர். திருமூர்த்தி அவர்களின் "முக்கா முழம் "  பாட்டை அவர் பிரபலப்படுத்தியவர் அவர்.   " அக்கா குருவி " பாட்டை மேடை ஏற்றியவர் எஸ்.ஏ.பி. 

"பத்து தலை ராவணனை " மற்றும் "எங்களைதெரியலையா " என்ற பாடலை எழுதிய பறிணாமன் போன்றோரும் அற்புதமான பாடல்களை எழுதியவர். 

இவர்கள் அத்துணை பெரும் இடது சாரிகள். 

சூப்பர் சிங்கரில் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் என்பவர் பாடினர். சந்தையில் பள ப்பள  வென்று காய்கறியை விற்பார்கள்.சூத்த கத்தரிக்காய்<வெம்பிய மாங்காய் ஆகியவற்றை கூறுபோட்டு தனியாக விற்பார்கள். பாடகர்கள்,அனுராதா, உன்னி கிருஷ்ணன் ,சீனுவாசன், போன்ற மார்கெட் போன வர்களை நடுவர்களாக போடுவார்கள். இவர்களுக்கு தனியாகவும்தெரியாது,சொன்னாலும் கேட்கமாட்டார்கள் .எதோ உலகமகா வித்வான்கள் போல இவர்கள் போட்டியாளர்களை விமரிசிப்பதை "தேவுடு "கேட்டுக் கொண்டு இருப்பதை தவிர வேறு வழி இல்லை.

செந்தில் "அம்மா உன் சேலை " என்ற பாடலை பாடினர். இதைக்கேட்ட நடுவர்கள் தங்கள் மேதாவித்தனத்தை "முக கமலம் " மூலம் காட்டினார்கள்.

இந்தப்பாடல் யாருடையது,இசை அமைத்தவர் யார் என்ற கேள்வியை கேட்ஜ்கவில்லை> அந்த பையன் செந்திலும் சொல்லவில்லை.

கவிஞர் ஏகாதசி எழுதிய பாடல் அது .கரிசல் கருணாநிதி மெட்டமைத்து த.மு.எ .ச மேடையில்  அரங்கேற்றிய பாடலாகும் அது. 

வர்க்க மயம் வணிகமயமாகும் போது  இப்படி குழப்பங்கள் வரத்தான் செய்யும் !! 
 
Tuesday, March 20, 2018அண்ணல்  அம்பேத்கரும் ,

அரசியல் அமைப்பு வரைவு குழுவும்...!!!உலகின் மிகசிறந்த  அரசியல் அமைப்பு சட்டங்களில் ஒன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டமாகும் .இதனை வரைவு செய்தகுழுவின் தலைவராக பணி  செய்த அண்ணல் அம்பேத்கார் அவர்களின்  பொறுமையும்,திறமையும் நிகரற்ற ஒன்றாகும். 

இந்த குழுவில் கோவிந்த் வல்லப பந்த், கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்,கோபால சாமி அய்யங்கார், மி ட்டர்,கைதான், சத்தத்தின் , என்று பலர் இருந்தனர் .

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கிய என்.எஸ்.கிருஷ்ணன், எம்,கே .தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரையும் வாதாடி விடுவித்தவர் வக்கீல் முன்ஷி.

ஆந்திரா,கர்நாடகா,கேரளா தமிழகத்தை கொண்ட மதராஸ் மாகாணத்தின் அட்வகே ட் ஜெனரலாக இருந்தவர் அல்லாடி! 

ஜம்மு காஷ்மீர் ராஜ்யத்தின் பிரதமராக இருந்தவர் கோபாலசாமி..தென்னிந்திய ரயில்வே ,பெங்கால் நாக்பூர் ரயில்வே, எம்,எஸ் என் ரயிலே என்ற கம்பேனிகளை தேசஉடமையாக்கி இரவோடு இரவாக உலகத்தின் பிரும்மாண்டமான இந்தியன் ரயில்வேயை உருவாக்கியவர் கோபால் சாமி. 

இந்தியாவின் மிகசிறந்த வக்கீல் மீட்டர் . தொழில் முதலாளி கைதான் குடும்பத்தை சேர்ந்த பிரபல வக்கீல் கைதான் .

முஸ்லீம் லீக் தலைவரும் அசாம்மாநில பிரதமருமாகஇருந்தவர் சத்தத்தின்.

இந்த கமிட்டிக்கு ஆலோசகராக இருந்தவர் பி.என்.நர்சிங் ராவ் பின்னாளில் உலக நீதி  மன்றத்தின் தலைவராக வந்தவர்.. இவ்வளவு மேன்மக்கள் இருந்தும் இந்த கமிட்டியையா பற்றி விமர்சனங்கள் எழாமல் இல்லை.

அடிப்படையில் இது பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஒன்று. முற்றிலும் இந்துக்களை அதிகமாக கொண்ட ஒன்று. முதலாளி மார்களை சார்ந்து நிற்பவர்களை கொண்ட து. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அல்ல. தொழிலாளர்கள் சார்பில் எவரும் இல்லை . அது மட்டுமல்ல. கமிட்டி முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்  ஆயிற்று.

பொதுவாக கமிட்டி அல்லது கமிஷன் பற்றி குறிப்பிடும் பொது,அதன் தலைவர் பெயரில் குறிப்பிடுவது மரபு. அதற்காக மற்ற உறுப்பினர் கட்டமண்ணாகவும்,குட்டிசுவராகவும் இருந்தார்கள் என்று சொல் வதற்கில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தம் செய்யப்பட ஒன்றாகும்.
அண்ணல்  அம்பேத்கரும் ,

அரசியல் அமைப்பு வரைவு குழுவும்...!!!

உலகின் மிகசிறந்த  அரசியல் அமைப்பு சட்டங்களில் ஒன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டமாகும் .இதனை வரைவு செய்தகுழுவின் தலைவராக பணி  செய்த அண்ணல் அம்பேத்கார் அவர்களின்  பொறுமையும்,திறமையும் நிகரற்ற ஒன்றாகும். 

இந்த குழுவில் கோவிந்த் வல்லப பந்த், கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்,கோபால சாமி அய்யங்கார், மி ட்டர்,கைதான், சத்தத்தின் , என்று பலர் இருந்தனர் .

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கிய என்.எஸ்.கிருஷ்ணன், எம்,கே .தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரையும் வாதாடி விடுவித்தவர் வக்கீல் முன்ஷி.

ஆந்திரா,கர்நாடகா,கேரளா தமிழகத்தை கொண்ட மதராஸ் மாகாணத்தின் அட்வகே ட் ஜெனரலாக இருந்தவர் அல்லாடி! 

ஜம்மு காஷ்மீர் ராஜ்யத்தின் பிரதமராக இருந்தவர் கோபாலசாமி..தென்னிந்திய ரயில்வே ,பெங்கால் நாக்பூர் ரயில்வே, எம்,எஸ் என் ரயிலே என்ற கம்பேனிகளை தேசஉடமையாக்கி இரவோடு இரவாக உலகத்தின் பிரும்மாண்டமான இந்தியன் ரயில்வேயை உருவாக்கியவர் கோபால் சாமி. 

இந்தியாவின் மிகசிறந்த வக்கீல் மீட்டர் . தொழில் முதலாளி கைதான் குடும்பத்தை சேர்ந்த பிரபல வக்கீல் கைதான் .

முஸ்லீம் லீக் தலைவரும் அசாம்மாநில பிரதமருமாகஇருந்தவர் சத்தத்தின்.

இந்த கமிட்டிக்கு ஆலோசகராக இருந்தவர் பி.என்.நர்சிங் ராவ் பின்னாளில் உலக நீதி  மன்றத்தின் தலைவராக வந்தவர்.. இவ்வளவு மேன்மக்கள் இருந்தும் இந்த கமிட்டியையா பற்றி விமர்சனங்கள் எழாமல் இல்லை.

அடிப்படையில் இது பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஒன்று. முற்றிலும் இந்துக்களை அதிகமாக கொண்ட ஒன்று. முதலாளி மார்களை சார்ந்து நிற்பவர்களை கொண்ட து. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அல்ல. தொழிலாளர்கள் சார்பில் எவரும் இல்லை . அது மட்டுமல்ல. கமிட்டி முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்  ஆயிற்று.

பொதுவாக கமிட்டி அல்லது கமிஷன் பற்றி குறிப்பிடும் பொது,அதன் தலைவர் பெயரில் குறிப்பிடுவது மரபு. அதற்காக மற்ற உறுப்பினர் கட்டமண்ணாகவும்,குட்டிசுவராகவும் இருந்தார்கள் என்று சொவதற்கில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தம் செய்யப்பட ஒன்றாகும்.

Thursday, March 08, 2018"நடிப்பும் -

அரசியலும் ...!!! "

ஜி .வரலட்சுமி என்ற நடிகை இருந்தார் .என்.டி .ராமராவ்,எம்,ஜி,ஆர், சிவாஜி ஆகியோரோடு போட்டி போட்டுக் கொண்டு நடித்தவர். 

கல்யாணம் பண்ணிப்பார்,குலேபகாவலி,ஹரிசந்திரா என்று பலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். குலேபகாவலி படத்தில் "மயக்கும் மாலை பொழுதே "என்றார் பாடல்  காட்ச்சியில் அற்புதமாக நடித்திருப்பார் .சிறந்த பாடகியும் கூட !

தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை நடத்திய பொது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர். விவசாயிகளின் புரட்ச்சியின் நோக்கத்தை கிராமம் கிராமமாக சென்று தெலுங்கானா முழுவதும் பிரசாரம்  செய்தவர் .திரைப்படத்தில் நடித்துக்கொண்டே ஆந்திர கிராமிய வடிவமான "புர்ர கதா " வடிவத்தில் ஊர்தோறும் சென்று நடித்து ஆதரவு திரட்டியவர். (அரசுக்கு தெரியாமல் ).

பால்றாஜ் சஹானி என்ற இந்திநடிகர் பாகிஸ்தானில் பிறந்தவர். தத்துவ படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார் லண்டன் சென்று அங்கு ஒலி பரப்பு துறையில் நல்ல சம்பளத்தில் பணியாற்றினார்; இந்தியய சுதந்திரத்திற்காக போராட விரும்பி இந்தியா வந்தார்கம்யூனிஸ்ட்கட்ச்சியில் சேர்ந்து பணியாற்றினார் அகில் இந்திய வாலிபர் சங்கத்தை கட்டி உருவாக்கி அதன் முதல் தலைவராக இருந்தார் இந்து திரைப்படங்களில் நடித்தார். மிகசிறந்த நடிகராக விருதுகளையும் பெற்றார் காங்கிரஸ் அரசு அவரை சிறையி அடைத்தது. மன்னிப்பு எழுதி கம்யூனிஸ்ஸ்ட்டுகடசியை கைவிட்டால் விடுதலை செய்கிறேன் என்றது அரசு. தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தித்தனர் ,முடியாது என்று கூறி விட்டார் .தயாரிப்பாளர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர் அவர்களை நட்ட மட்யைக்கூடாது என்று கருதிய அரசாங்கம், அவர் நடிக்க  சம்மதம் தெரிவித்தது .காலையில்போலீஸ் காவலில் படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்வார் மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் "மேக்கப் "   பை கலைத்து விட்டு போலிஸ்காவலில் சிறைக்கு வர கொட்டடியில் பூட்டப்படுவார்.

பிஷமஷஹானி பால்றாஜ் அவர்களின் தம்பி. பஞ்சாப்சி பல்கலையில் ஆங்கில பேராசிரியர் .கம்யுனிஸ்டும் கூட !  இந்துத்வா,ஆர்.எஸ் .எஸ் இயக்கங்கள் பிரிவினையின் பொது மதவெறியை கிளப்பிவிட்டதை சித்தரிக்கும் "தமஸ்" என்ற நாவலை எழுதி விருது  பெற்றவர் அதனை  கோவிந்த் நிகிலானி  படமாக்கிய பொது அதில் நடித்தார்.மதவெறியின் கோரமுகத்தை சித்தரிக்கும் "mr & mrs IYER " என்றபடத்தில்நடித்தவர் .

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் உத்பல் தத்.! சித்தார்த்த சங்கர் ரே யின் அரை ப்சிபாசிச  ஆட்ச்சியை கடுமையாக எதிர்த்தவர்.கடசி உறுப்பினர் .ரே அவரை 18 மாதங்கள் சிறையில் அடைத்தார்> வெளியே வந்ததும் ரே யின் ஆடிசியை விமரிசித்து, "துர்சொன்ன நகரே " கல்லோல் "  மாரீச மான் : என்று நாடகங்களை போட்டார் .மம்தா,தாஸ்முன்ஷி,சுப்ரதா போன்ற குண்டர்கள் பார்வையாளர்களை வரவிடாமல் தடுத்தபோது நாடகங்களை நடத்திக்காட்டிய தீரர் ! சத்யஜித் ரே, சென் ஆகியோர் படங்களில் நடித்து விருதுகளை பெற்றவர்.

இவர்களை எல்லாம் எனக்கு நிரம்ப பிடிக்கும்.

தமிழகத்திலும் ராதாரவி,வாகை சந்திரசேகர், சரத் குமார், ரஜனி,கமல் என்று உள்ளார்கள்.

நல்ல நடிகர்கள்.

நடிக்க மட்டுமே தேர்ந்தவர்கள் !!!"நடிப்பும் -

நடிக்க மட்டுமே தேர்ந்தவர்கள் !!!

Wednesday, March 07, 2018"மார்க்சியத்திற்கு "

மரணமில்லை !!!
அவசரநிலை முடிந்து நடந்த தேர்தலில் ஜனதா கடசி ஆடசி பீடமேறியது . ஜனதா  இருந்தாலும்,காங்கிரஸாக இருந்தாலும் அவர்கள் எஜமானர்களான மூலதனம்  சொல்வதைத்தான் கேட்கமுடியும் . கம்யூனிஸ்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் அதிகாரத்தின் அருகில் கூ ட வரக்கூடாது என்பது இருவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான அறிவுரை என்றார் பெயரில் உத்திரவு.

ஜனதா ஆடசி வந்தபிறகு சட்டமன்ற தேர்தலில் இந்த சில்லுண்டி ஜனதா தலைவர்கள் படுத்த்யபாடு ஒரு நாவலே எழுதலாம். தமிழகத்தில் அப்போது ஜனதாவின் செல்வாக்கு மிகுந்த தலைவராய் இருந்தவர் குமாரி அனந்தன். அவர் ஆடிய ஆட்டம் --- பாவம் முதியவர் எம்.ஆர்.வெங்கடராமன் அவர்களை கேட்டால்   தெரியும். தொகுதி உடன்பாடு காண பேசசுவார்த்தைக்கு ஆபிசுக்கு வா என்பார் " அங்கு போனால் வீட்டுக்கு வா என்பார் இறுதியில் விடுதியில் இருப்பதாக தொலைபேசியில் கூறுவார்.

77 நாடாளுமன்றத்தேர்தலில் இ.காங்கிரசோடு அதிமுக சேர்ந்தது. தி.மு.க குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தது பலர் கட்ச்சியை காட்டிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து தப்பினர். அரசியல் கடசிகள்  திமுகவை தொழுநோயாளியாக கருதி தீண்டாமையை அனுசரித்தனர்.

நெஞ்சில்  உரமும் ,நேர்மை திறமும் கொண்ட மார்க்சிஸ்டுகள் திமுகவை ஆதரித்தனர் . தி.மு.கே 2இடங்களில்மட்டுமே வெற்றி பெற்றதுமார்க்சிஸ்ட் படுதோல்வியை சந்த்தித்தது. .

உடனடியாக சட்டமன்ற தேர்தல் வந்தது . இ.காங்கிரஸ் ஆட்ச்சியை இழந்து நிற்கிறது. ஜனதாமத்திய ஆட்ச்சியை எதிர்க்க வேண்டும் எம்ஜி.ஆர் கையைப்பிசைந்து கொண்டு நின்றார் . ஜனதாவின் குமாரி அனந்தன் கண்ணாமூசசி    ஆடிக்கொண்டிருக்க தெளிவான அணி உருவாகவில்லை .இந்த நிலையில் 

ஒருநாள் நானும் தீக்கதிர் நிருபர் நாராயணன் அவர்களும் மதுர மேலமாசி வீதியில் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவரநாராயணனை அழைத்தார்நாராயணன் அவரிடம் தனியாக பேசினார் பின்னர் என்னிடம் வந்து "ஜி ! நான் நெடுமாறனை பார்க்க அவசரமாகபோகவேண்டும். நீங்கள் போங்கள் ! நான் பிறகு சந்திக்கிறேன் " என்றார் .

இரண்டு நாள் கழித்து நெடுமாறன் அவர்கள் தீக்கதிர் அலுவலகம் வந்து A .பாலசுப்பிரமணியன் அவர்களை சந்தித்தார் .அன்று இரவு நான் வீடு திரும்பும்போது  பெரி ய்யவர் ராமராஜ் என்ற ஆர்.ஆர் "என்னடாக்கண்ணா ! சோர்ந்து இருக்கே ! "என்று  கிண்டலடித்தார். 

"தேர்தலை நினைச்சா  பயமா இருக்கு "

"என்ன செய்ய ஒத்தன் கூட வரமாட்டேங்கங் ! ஏங்கண்ணா ! பேசாம எம்ஜிஆர் கூ ட சேந்துருவமா ?  கேடர்ஸ்  ஒத்துக்க மாட்டாங்க இல்லையா ?"

 நான் பதில்  சொல்லவில்லை.வீடுவந்து விட்டேன்.

மறுநாள் கால பத்திரிகையில் அதிமுக -மார்க்சிஸ்ட் கூட்டு என்று செய்தி வந்திருந்தது.எனக்கு பொறி தட்டியது நாராயணனை நெடுமாறன் கூப்பிட்டது,நெடுமாறன் AB அவர்களை சந்தித்தது.-நான் நாராயணனை தொடர்பு கொண்டேன்.

ஆமாம் ஜி ! நெடுமாறன் AB .யை உடனே பாக்கணம்னார் .நான் AB யை தொடர்பு கொண்டேன் .இரண்டு பெரும் நெடுமாறன் வீட்டுக்கு போனோம் அவர் எம்.ஜி ஆர் சொல்லித்தான் வந்திருக்கார் .விஷயம் முடிஞ்சாச்சுபோச்சு" . 

"இதுக்கெல்லாம் நீ சாட்ச்சி ! ஆனா எங்கிட்ட சொல்லல!"

"சாட்ச்சி தான் ஜி ! ஆனால் வாய் பேசாத  சாட்ச்சி "

அதிமுக வின் முதல் தேர்தலில் எம்பி வாங்கி கொடுத்ததும் மார்க்சிஸ்டுகள் தான் . என்.ஜி.ஆரை முதல்வராக்கியதும் மார்க்சிஸ்டுகள்  தான் .

"சம்பவாமி யுகே! யுகே !!"
"மார்க்சியத்திற்கு "

Monday, March 05, 2018

மலேசியாவில் "அபிநவ் "

சர்வதேச போட்டியில் 

மூன்றாவது இடம் !!!அபினவ் இப்போது  மலேசியாவில் இருக்கிறான்.அங்கு நடக்கும் MUTE COURT என்னும் நிகழ்ச்ச்சியில் கலந்து கொள்ள சென்றான் . நீதிமன்றத்தில் வாதிடும் பயிற்சி கொடுப்பார்கள். இந்த தடவை அதனை போட்டியாகவே அறிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 70 நாட்டு மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் .அதில் அபியும் ஒருவன் .சர்வதேச அளவில் நடந்து இந்த போட்டியில் அபினவ் மூன்றாம் இடத்தில் வந்துள்ளன. நாளை இரவு நாடு திரும்புகிறான் .

16-3-18 அன்று வியன்னா செல்கிறான் !

(தகவலுக்காக ). 

Friday, March 02, 2018

"ஜனசங்க " தலைவர் 

மரணத்தை விசாரிக்க 

மறுப்பது ஏன் ?1947ம் ஆண்டு சுதந்திர வெளிச்சம் படர ஆரம்பித்து விட்டது .அதுவரை காங்கிரஸ் கடசிக்குள் இருந்துவந்த பத்தாம்பசலி இந்துத்வா காரர்களும், வலது  சாரிகளும் வெளிவந்து பகிரங்கமாக செயல்பட விரும்பினார் .அவர்கள் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்  சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது.

நேரு அமைச்சரவையில் இருந்த சியாம் பிரசாத்   முகர்ஜி வெளியேறினார். வலது சாரிகள் அவரை பிடித்துக் கொண்டனர் "ஜனசங் "என்ற கடசியாக்க   முயற்சி உருவானது முகர்ஜிக்கு உதவியாக ஆர்.எஸ் எஸ் அமைப்பு தன்னுடைய விசு வாசமிக்க ஆட்களை அனுப்பியது.

அவர்கள்  ,நானாஜி தேஷ்முக்,தீனத்தயாள்  உபாத்யாயா , வாஜிபாய் ,எல்.கே அத்வானி ஆகியோர் ஆவர் .பிஹார்<உப்பி,ராஜஸ்தான்,ம.பி ஆகிய பசு வட்டத்தில் செயல்பட ஆரம்பித்தனர்.

சிறிது காலத்திலேயே முகர்ஜி மறைந்தார். அவருக்கு பதிலாக கடசி தலைவராக யார்வருவது என்பதில் இழுபறி   நடந்து வந்தது. நானாஜி சிறந்தநிர்வாகி.உபாத்யாயாஎல்லாராலும்நேசிக்கப்படுபவர்வாஜ்பாய சுயகாரிய புலி ! 

இறுதியில் உபாத்யாயா வந்தார் . கடசிக்குள் பால்றாஜ் மோதக் என்பவர்  மட்டும் உபாத்யாயாவின் தீவிர ஆத ரவாளராக இருந்தார்கடுமையாக சுற்றுப்பயணம் செய்து உபாத்யாயா கடசியை  வளர்க்க ஆரம்பித்தார்.

1968ம் ஆண்டு .பிபர்வரி மாதம் 11ம் தேதி உபி  மாநிலத்தில் உள்ள மொகல்சராய் ரயில் நிலையத்தில் உபாத்யயா வரவிருக்கிறார்ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். ரயில் வந்தது ஆனால் உபாத்யாயா வரவில்லை . தேட  ஆரம்பித்தார்கள். முகல்  சிராய் ரயில் நிலையத்திலிருந்து சிலாகிமி  மீட்டர் துரத்தி ரயில் பாதையில்   சடலம்  கிடப்பதாக தகவல் வந்தது. கையில் ஒரு ஐந்து ற்பாயா நோ ட்டுடன் உபாத்யாயாவின் சடலம்  தான் அது .

யார் செய்த கொலை இது நாடெங்கம் பரபரப்பு. மத்தியில் ஆளும் காங்கிரஸ்தான் என்று  குற்றம் சாத்தினர் . விசாரணை நடந்தது> ரயில் திருட்டில் சம்மந்தப்பப்பட்டுள்ள இருவர் கைதாகினர்.  எதிர்த்த உபாத்யாயாவை கீழே தள்ளிவிட்டு தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.மேல் முறையீட்டில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனசங்  கடசி விடுவதாயில்லை பாலராஜ் கடுமையாக போராடினார் கடசிதலமை மந்தமாக இருபகாக கூறினார் நிசசயமாக தலைமை  விரு ம்பினால் கொலைகாரனை கண்டுபிடிக்க முடியுமென்றார். 

ஜனசங்  கலைக்கப்பட்டு ஜனதா கடசியாக மாறியது. பால்றாஜ் மாற மறுத்தார் . ஜனசங் கடசியாக செயல்பட ஆரம்பித்தார் .மொரார்ஜி மூலம் உபாத்யாயா மரணத்திற்கு  விசாரணை நடத்த கமிஷன் போடப்பட்டது. வாஜபாயும் , அத்வானியும் அமைச்சரவையில் இருந்தும் விசாரணை நீர்த்துப்போனது .

மீண்டும்    வாஜ்பாயாய் பிரதமரானார். உள்துறை அமைசராக பிரமோத் மகாஜன் இருந்தார் .13நாளில் அமைசச்சரவை  கவிழ்ந்தது  .

ஐந்து ஆண்டுகாலம்  கழித்து வாஜ்பாயாய் வந்தார் ,உபாத்யாயா படம் திறக்கப்பட்டது. விசாரணை இல்லை இப்ப ப.ஜ.க ஆடசிதான்  நடக்கிறது. இப்போதும் உஆத்யாயா மரணம் பற்றி விசாரிக்காமல் இருப்பது  ஏன் ?

காந்திஅடிகள்   பற்றி விசாரணை கேட்கிறாங்க. போபர்ஸ் பற்றி விசாரிக்க .துடிக்கிறார்கள்  . 

உபாத்யாயா மரணம் பற்றி விசாரிக்காமல் இருப்பது ஏன்?

"ஜனசங்க " தலைவர் 

மரணத்தை விசாரிக்க 

மறுப்பது ஏன் ?
1947ம் ஆண்டு சுதந்திர வெளிச்சம் படர ஆரம்பித்து விட்டது .அதுவரை காங்கிரஸ் கடசிக்குள் இருந்துவந்த பத்தாம்பசலி இந்துத்வா காரர்களும், வலது  சாரிகளும் வெளிவந்து பகிரங்கமாக செயல்பட விரும்பினார் .அவர்கள் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்  சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது.