Wednesday, August 26, 2015

(இது ஒரு மீள்  பதிவு )




உலகம் அறியாத ஒன்று ....... !!!




உலகம் அறியாத ஒன்று நடந்தது ! 59 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது !

ஆம் ! இந்திய அரசாங்கத்தின் முடிவு ஆயுள்இன்சுரன்சதேசஉடமையாக்கும   முடிவு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது!

இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசர சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது!

திறமையாக , எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல் படுத்த திட்டம் தீட்டப்பட்டது !

அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக் அவர்கள் தன்னுடைய வரலாற்று நுலில் இதனை  குறிப்பிடுகிறார்!


"நான் எச்.எம் படேலை வர்த்தக அமைச்சர் டி டி கிருஷ்ணமாசாரியாரை சந்திக்க அனுப்பினேன் ! அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் முலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல ! என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன் !"


அன்று இரவு ஒரு அவசர சட்டம் தயாராக இருந்தது ! அன்று இரவு அது கையெழுத்தாயிற்று !  மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக போறுக்கி  எடுக்கப்பட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இன்சுரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் ! அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த  அதிகார உத்திரவை காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் !ஆயு்ள்  இன்சுரன்சு தேச உடமையாக்கப்பட்டது !இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ,இனி எப்போதும்   நடத்த முடியாத சம்பவமாகும் !"




ஏன் இவ்வளவு ரகசியம் ? !


முன்னமெயே தெரிந்திருந்தால் கோடிகணக்கான கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்ற பயம் தான் காரணம் !

எச்.எம் படேல்,பி.கே.கவுல்,எ,ராஜ கோபாலன் ஆகியமுவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள்.! அவர்களுக்கு உதவியாக வையாபுரி,எம்.ஜ.ராவ் ஆகியோர் இருந்தனர் ! இந்த நடவடிக்கையை அமைச்சரவைஇன் ஆமொதிப்புக்காக வைக்கவில்லை ! பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !

பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகாளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தெதியெஅனுப்பினார்கள்  ! அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை ! அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன ! அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது !  

இந்த அதிகாரிகளுக்கன பயண ச்செலவுக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை ! முத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள் !  ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !

19-1-56 அன்று இரவு 8.30 க்கு  நிதி அமைச்சர் வானொலி முலம் இன்சுரன்சு நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி  அறிவித்தார் !

கம்பெனி முதலாளிகள் அவசர சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர் ! மறுநாள்  20-1-1956  அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்டஅதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர் ! 

கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர் ! வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது ! 

இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடியது    அகில இந்திய இன்ரன்சு ழியர் சங்கம் .

"long live A I I E A !!!


Sunday, August 23, 2015

"ஏன் இப்படி ?  "  



கோபால் ராம் எங்கூட படிச்சவன். நெத்தில குங்கும பொட்டு வச்சிருப்பான். பேசும் போது கொஞ்சம் - கிறுக்கன் இல்ல சார் - அப்படி சில பெருக்கு தோணலாம் ! தோள்ல துண்டு பொட்டிருப்பான். மஞ்சகலர்ல இருக்கும் அதுலகருப்பு எழுத்துல "ராம் ! ராம் ! கிருஷ்ண ! கிருஷ்ண! " நு எழுதி இருக்கும் ! நல்லவன் சார் தப்பா  நினைகாதீங்க !


" பெட்ற்றோல் விலை சகட்டு மேனிக்கு குறைச்சுட்டாங்க பாத்தியா ?" என்றான் என்னப் பார்த்து.

"ஆமம் ! டெ " 

"என்ன ஓமாம் !டே" 

"என்ன செய்யணும் க " 

"அத appriciate பண்ண மாட்டீயளோ ?"

"ஏல ! நான் என்ன காரால வச்சு ஓட்டறேன் ? "

"ரயில்ல போரால்ல! "  கொபால்ராம் இப்படித்தான் மாட்டிக்குவான் .

"பெற்றொல் வெலை ஏறினா ரயில் சார்ஜை ஏத்துவிய ! இப்பம் குறஞ்சு போச்சுல்ல ! சார்ஜை கொறக்க வேண்டியது தானே!" "

"ஆமம் ல ! ஏன் இப்படி "என்று ஆச்சரியபட்டான் கொபால் ராம் . 

அவன் துண்டுல "ராம் ! ராம் ! "நு  எழுதிய இடத்தை தடவிக்கிட்டிருந்தேன் .

"துண்ட விடு டெ" "

"அத தாண்டா நானும் சொல்றேன்" என்றேன்.






















Monday, August 17, 2015

அட.... பாவிகளா !!!

இந்தியா சுதந்திரம் பெற்றாலும் அதற்குள் சில கண்ணி வெடிகள  வைக்க ஏகாதி பத்தியம் திட்டமிட்டது .

வடக்கே காஷ்மீரம்,மேற்கே ஜுனாகத், கிழக்கே அசாம் மலைகாடுகள், மத்தியில் ஹைதிராபாத், தெற்கே கேரளம் என்று கண்ணி வைத்தார்கள். இடது சாரிகளும்,தேசபக்தர்களும் அதனை தடுத்தாட் கொண்டார்கள். இதில் அமெரிக்க,பிரிட்டிஷ், பிரெஞ்சு எகாதிபத்தியம் என்ற வித்தியாசமே  இல்லை. 

நிஜாம் ஆட்சிய எதிர்த்து விவாசாயிகளின் புரட்சியை கம்யுனிஸ்ட்கட்சி தலமை தாங்கி நடத்தியது. அன்று அவர்கள் செய்த தியாகத்தை ஹைதிராபாத்தில் உள்ள "சுந்தரய்ய விஞ்ஞான கெந்திர" காட்சியகத்தில் இன்றும் பார்க்கலாம்.

ஒரு பக்கம் நீஜாமின் கொடுங்கோலாட்சி. மறு பக்கம் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் அடக்குமுறை ! இந்தியாவில் அவர்களின் ஆட்சியை எதிர்த்த சுதந்திர போராட்டம். இந்த சூழலை எதிர்கொண்டு வெற்றி பெற்று மூன்றுஆண்டுகள் ஹைதிராபாத் சம்ஸ்தானத்தை கம்யூனிஸ்டுகள் ஆண்டனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது அந்த பொராளிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இந்தியாவோடு இணந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கனவு காண  ஆரம்பித்தார்கள்.

நிஜாம் இந்தியாவோடு சேர மறுத்துவிட்டார். இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள்  கம்யுணிஸ்டுகளொடு கைகுலுக்க தயராக இல்லை. அன்றய நேரு அரசு ஹைதிராபத் நிஜாமை அடக்க ராணுவத்தை அனுப்பியது. கர்னல் சௌதிரி தலமையில் படைவந்தது. சர்வதேச சிக்கல் வரமலிருக்க இந்த ராணுவ நடவடிக்கையை " police action "  என்று பொய் சொல்லி நடத்தினார்கள். போராளிகளுக்கு ஒருபுறம் நிஜாம்-மற்றொரு புறம் இந்திய ராணுவம் --நிஜம் சரணடந்தார்-  விவசாயிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறினர். 

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஹைதிராபாத் 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தெதிதான் இந்தியாவோடு இணந்தது.

செப்டம்பர் 17ம் தேதியை தெலுங்கானா ராஷ்ற்ற கட்சி முதலவர் சந்திர செகர ராவ் கொண்டாட மறுக்கிறார்.அவருக்கு முஸ்லீம்கள் வாக்கு முக்கியம்.

பா.ஜ.கா இதனைகொண்டாடியே தீர வேண்டும் என்று நிற்கிறது . முஸ்லீம்களை எதிர்க்க ஒரு வாய்ப்பு என்பதால் .

அந்த விவசாயிகளின் புரட்சியை இந்தபாவிகள் எவ்வளவு கேவலப்படுதமுடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தவே செய்வார்கள்..

என்ன செய்ய !!!

  

Sunday, August 16, 2015

அந்த மூன்று கம்யுனிஸ்டுகள் ஏற்றிய தேசீயக் கொடி.

இறக்கப்படுவதே   இல்லை.........!!! 

57ம் ஆண்டுகளி லிருந்து நான் ஹைதிராபாத் நகரத்தில் இருந்தேன். பிரும்மாண்டமான நாகார்ஜுன சாகர் அணை கட்ட ஆரம்பித்திருந்தார்கள். அடிக்கடி நண்ப ர்களௌ அங்கு செல்வேன். கிருஷனானதியின் நீர்வீழ்ச்சியில் குளித்திருக்கிறென். அணையின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்த குன்றும் அதில் இருந்த சிற்பங்களும் நாகர்ஜுன பல் கலை கழகத்தின்பெருமைகளை பறை சாற்றிக்கொண்டிருந்தன. .

அந்த காட்டுப்பகுதியிலுள்ள "லமபாடி"மக்களோடு நனபர்களின்  உதவியோடு பேசி மகிழ்ந்திருக்கிறேன்.தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்புரட்சியில்பங்கு கொண்ட முதியவர்களையும் சந்தித்திருக்கிறேன்.  அந்த வீரர்களூக்கு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆந்திர,தமிழகப்பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும் ,உணவுப்பெருட்களையும் காடுவழியில்கொண்டுசெல்ல இந்த லமபாடி வனகுடி மக்கள் செய்த சாகசங்கள் இதிகாசதன்மை வாய்தவை .

( "கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து "என்ற என் நாவலில் இதனை விவரமாக எழிதி இருக்கிறேன் )

இ ந்த சம்யத்தில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த விவாசாய வீ ரர்கள் ஆடிப்பாடிமகிழ்ந்தனர்.இந்திவின் சுதந்திர கொடியை ஏற்றி விழா நடத்தக் கூடாது என்றி அன்றய நிஜாம் அரசர் உத்திரவிட்டர். அவருடைய தளபதியாக இருந்தவன் சௌதி நாட்டைச்செர்ந்த காஜிம் ரஜ்வி. அவனுடைய தனிப்படையின் பெயர்"ரஜாக்கர்" கள். ஹைதிராபாத் ராஜ்யத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுவதை  தடுக்க படையை ஏவினான்.

இந்த விவசயப்புரட்சிக்கு தலமைதாங்கியவர்கள் கம்யுணீஸ்டுகள்.

நல்கோண்டா மாவட்டத்தில், ராஜாபேட்டை என்ற கிராமம் உள்ளது அதில் உள்ள குக்கிறாமாம் 

பேகம்பேட்டை. .அங்கு மூண்ரூ கம்யூணீஸ்ட் இலைஞர்கள் -ஜிட்டா ராமசந்திர ரெட்டி, சிம்குலா மல்லையா, பத்தம் நரசிம்க ரெட்டி,என்ற முவரும் கிராமத்தின் மையப்பகுதியில் கோடியை ஏற்றிவிழா எடுத்தனர்..

நிஜாமும் ,ரஜாக்கர்களும் கொடியை இறக்க தங்கள் பலத்தை பயன்படுத்தினர். அந்த கிராமத்துமக்கள் எதிர்த்து ரஜக்கர்களை விரட்டியடித்தனர்>நிஜாமிடமிருந்து விடுதலை ஆகும்வரை இறக்கவிட மாட்டோமென்று நின்றனர்.

இன்றுவரை அந்த கோடியை  அவர்கள்  இறக்க அனுமதிப்பதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டுபதினைந்தாம் தேதி அன்று  புதுகொடியை எற்றமட்டுமிறக்குவார்கள்.அதெபோல்கிராமத்தில்னடக்கும் தசரா" விழாவின் போதும்கொடியை மாற்றி புது கொடியாய் எற்றுவார்கள் .    

Wednesday, August 12, 2015

"அந்த இளம் தாயின்

பிரகடனம் ........ "




"ஸ்ஸூ...... அது ஒரு ஆண் குழந்தை....:):) அம்மா சென்டிமெண்ட்டை காலத்துக்கும் பெரிசா  ஏன் பேசராங்க என்பதை இப்போ உணர்ந்துகிட்டென் . இனி நானும் டயலாக் விடுவேன்.. உன்னை பத்து மாதம் சுமந்து பெத்தவா டா ... நு...ஆனால் மிகவும் கூர்மையாக பார்த்தால் ...இந்த அம்மா சென்டிமென்டுக்கு பின்னால் அல்லது இந்த தாய்மை கதைகளுக்கு பின்னால் .....பல ஆத்மாக்கள் அந்த முழுமையான உணர்வினைப் பெற ...:):) அதனால நாந்தான் சுமந்தேன் நு....எனக்கு மட்டும் தான் வலி நு ...எனக்குமட்டும்தான் வேதனை நு... சொல்ல மாட்டேன் ......இந்த சமயத்தில மற்றவர்களிடமிருந்து நான் அபரிமிதமான அன்பை பெற்றேன்...என்னுடைய நெருக்கமன நண்பர்களாகட்டும்... உறவினர்களாகட்டும்.... என்னுடன் பணியாற்றியவர்களாகட்டும்...நான் சந்தித்தவர்களாகட்டும்...  ஓவ்வோருவரும் ...ப்ப்ப்ப்பா ...மனிதர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறாங்க .....அதுவும் என்ன சுத்தி எவ்வளவு நல்லவங்க.....இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் !!!! நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் நு சொல்றதெலாம் சின்ன வர்த்தை...... நானெல்லாம் இப்படி உங்க யார்கிட்டயும் இருந்ததில்ல ....இப்படி இருப்பனா நு தெரில...என்னோட பையன் இத்தன பேரோட கவனிப்புல ....இத்தன பேரோட அன்புல....இத்தன பேரோட பாசத்துல பிறந்திருக்கான்...இதுக்கும் மேல என் குழந்தைக்கு நான் எதுவும் வெணும் நு கேக்கல.....!!! நான் சந்தித்த அத்துணை உள்ளங்களுக்கும் என் அன்பும் அணைப்பும் உரித்தாகுக..:):) என்  தாய்மையை நான் உணர்வது உங்களால் தான்...என் பையன் எல்லருக்குமாக இருப்பான்.... நல்லா வளருவான்...நம்பிக்கை ...தைரியம் எனக்கு இருக்கு....."



எங்கள் அன்புத்தோழன் "அசாக்கி "ன் மகன் ஜெய சந்திர ஹஷ்மி. அவன் மனைவி "அன்பு" ! சின்னஞ்சிறு பெண் ! அசாக்கிற்கு பேரனை நேற்று பெற்று கொடுத்திருக்கிறாள் . என்னை "தாத்தா-தாத்தா ' என்று அழைப்பாள் . அந்த சின்னப் பெண்ணுக்குள்ளே எவ்வளவு பெரிய உள்ளம்

....அசாக்கு நீர் கொடுத்து வைத்தவர்...ஹஷ்மி நீயும்தான்.... நீடூழி வாழுங்கள்  .


("அசாக்  " அந்த புரட்சிகர பத்திரிகயான "தீக்கதி" ரின் ஆசிரியர்.  அவரை "ஏல ! "அசாக்கு "நு  கூப்பிட முடியாது, ஹஷ்மி ,அன்பு அந்த சின்னப்பயல நான் "ஏல ! ஏல ! "அசாக்கு" நு ஆயிரம் தடவை கூப்பிடுவேன் . சரியா ? )

Sunday, August 09, 2015

(சிறு கதை)

"எங்கே அவர்கள் ?"

"பாபா ! டாகூர் தாத்தா ஒக்கந்துகிட்டு இருக்கார் " என்றான் கொள்ளுப்பேரன் "பிக்லி"

பந்து ச ர்க்கார் எட்டிப்பார்த்தார்.படுக்கையின் மேல் நிர்மல் சர்க்கார் அமர்ந்திருந்தார். பந்து மெதுவாக அவர் அறைக்குள் சென்றார். நிமிர்ந்து பார்த்த பெரியவர் " என்னப்பா? ஏதாவது சொல்லணுமா... ?

"ஆமாம் ...தாதா..." 

"என்ன?'

"பதட்டப்படாதீங்க..." 

"பளீசின்னு சொல்லேன் ...?

"ப்ரசாந்த் சூர் காலமாயிட்டார்..." 

"ஆங் " திறந்த வாய்மூடவில்லை. கண்கள் கலங்க குபுக் என்று கண்ணீர் பெருக்கெடுத்தது.அருகில் இருந்த திவானில் அமர்ந்திருந்த மகருன்னிசாவை பார்த்தார்.

அப்பாவிடம் அவ்சரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று பந்து கவலைப்பட்டார். பந்துவிற்கு வயது அறுபத்து ஓன்று . அப்ப நிர்மல்சர்க்காருக்கு எண்பத்தி ஒன்று.அம்மா  மெகருன்னிசாவிற்கு எண்பத்தி ஐந்து.எத்தனை வருடம்?...எத்தனை வருடம் ..?பிரசாந்த் தானே அப்பொது நிர்மலையும் அவர் குடும்பத்தய்யும் பாதுகாத்தான். ...அவன் ..அவன் .போய்விட்டானா...? நிர்மலின் நினைவலைகள் புரண்டு எழுந்தன .

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் வெள்ளிக்கொழமை....ஆகஸ்டு 15. ...மேருமலை முகடுகளீருந்து குமரிமுனை வரை...அஸ்ஸாம்காடுகளிலிருந்து தார் பாலைவனம் வரை.....எவரும் முந்தய இர்வு தூங்கவில்லை .டெல்லி நவ இந்தியாவை வரவேற்க தயாராகி உள்ளது.மவுண்ட் பாட்டன் பிரபு,பண்டித  நேரு,அபுல்கலாம் ஆசாத்,சர்தார் வல்லபாய் படேல் ....எல்லோரும்...எல்லொரும்...

மவுண்ட் பெட்டன் " நாம் ஒருவரலாற்று நிகழ்ச்சிக்காக கூடி இருக்கிறோம். ஆனால் ஆதிகர்த்தாவான அந்த மனிதரை...மகாத்மா காந்தியை இங்கே பார்க்க முடியவில்லைஆனாலும் நமது கண்களும் நீனைவுகளும் அவரையே விரும்புகின்றன ." என்றார்.

கல்கத்தா நகரத்து பாழடைந்த ஹைதாரி மான்ஷன் என்ற  குப்பை மேட்டில் கொடூர கலவர பூமியில்  அண்ணல் காந்தியடிகள் தன்னுடைய தக்ளியில்  நூல்நூற்று க்கொண்டிருந்தார்.

நவகாளீயில் இந்துக்கல் கொண்று குவிக்கப்படுகிறார்கள்.அகதிகளாக அவ்ர்கள்குற்றுயுரும்குலை உயிருமக அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.அண்ணல் அங்கு செல்ல டெல்லியிலிருந்து கல்கத்தா  புறப்பட்டார்

ஆனல் கிழ்க்கிலிருந்து வரும் அகதிகள் ..அவர்கள்  சொன்ன செய்திகள் மக்களை  வெறிபிடித்து அலற செய்தது.முஸ்லீம்கள் வசிக்கும்,பைக்பரா,சித்போர், பெல்காசியா,மாணிக்டோலா,நர்கல்டங்கல்,பெலியகட்டா,எந்தாலி,தான்ரா, ராஜாபஜார்,ஆகிய பகுதிகலில் கலவரம் மூண்டது.கலகத்தாவின் முன்னாள் மேயரும்,முஸ்லீம்ளீக்தலவருமான முகம்மது உஸ்மான்,வங்காளமாகாண பிரதமர் சுரவர்த்தி,ஆகியொர் காந்தி அடிகளை சந்தித்து நவகாளி பயணத்தை தள்ளி  வைத்து,கலக்த்தா நகரத்தை காக்க வேண்டினர் .

காந்தி பெலியகட்ட சென்றார். "காந்தி உன் அஹிம்சை எங்களுக்கு வேண்டாம். இந்த நகரத்தில் ஒருமுஸ்லீம்கூட இருக்க விட மாட்டோம்."என்று கோஷம் போடும்மக்களி \டையே நடந்தார்.

"எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் ராணூவ பாதுகாப்பு வேண்டாம்என் சக  இந்தியர்கள்...இந்துமுஸ்லீம் சகோதரர்கள்...என்னைகாக்கட்டும்...அல்லதுகொல்லட்டும்..."என்று நடந்தார். 

குப்பயும் கூளமுமாக இருந்த ஹைதாரி மான்ஷன் முன்வாயிலை சுத்தப்படுத்த ஆரம்பித்தார். 

கலவரக்காரர்கள் மின்சாரம் பாய்ந்தவர்கள்  போல் அதிர்ந்து நின்றார்கள்.மாலை நான்கு மணீக்கு அடிகளின் பிரர்தானை க் கூட்டம் நடந்தது  முப்பதாயிரம் பேர் திரண்டிருந்தனர் இந்துக்களும் முஸ்லீகளுமாக.......

பந்து   சர்க்கார் தொழிற் சங்க அலுவலகத்திலிருந்து வரும் போது முக மலர்ந்திருந்தது .பெலியகட்ட,பெல்காசியா பகுதிகலமைதி காத்தன..

"இந்து சகோதரனே முகாமில் தங்கி இருக்கும் முஸ்லீம்களை நீ போய் அழைத்து வா" என்றார் காந்தி அடிகள்.முஸ்லீம்கள் மீண்டும்தங்கள் வீடு திரும்பினர்.

ஆனாலும்முழுமைடாக பிரச்சினைமுடியவில்லை  கணவனை இழந்த ,வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், அனாதையாக்கப்பட்ட குழந்தைகள்சிறுவர்கள்இவர்களின்மறுவாழ்வு....அதுமட்டுமல்ல...கிழக்கிலிருந்து வந்தவர்கள் புனர்வாழ்வு...?

"நவ இந்தியாவின் நவயுக இளைஞன் என்னை கைவிட மாட்டான்.இளம் விதவைகள்,பலாத்காரம்செய்யப்பட்டோர்,....இந்து என்ன ..முஸ்ளிமென்ன ....அவர்களை மணந்து  மறுவாழ்வுகொடுங்கள்" என்றார் காந்தி அடிகள்.

பந்து சர்க்காருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ...அவருக்கு நான்கு குழ்ந்தைகள். தொழிற் சங்கத்தில் இது  பற்றி  விவாதித்துமுடிவு எடுத்துள்ளார்கள். குடும்பத்தில் திருமணவயதில் இளைஞன் இருந்தால் அவர்களின் பரிபூரண சம்மதத்தோடுஇத்தகைய திருமனத்தை நடத்த முன் வரவேண்டும்.\என்பதுதான் முடிவு.

பந்து ஸ்ர்காருக்கு முதல்  மூண்றும் பெண்கள்....கடைசி தான்  நிர்மல்சர்க்கார் பத்தோன்பது வயது. .. இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருகிறான்.

மாணவர்கள் ,இளைஞர்கள் மத்தியில் காரசாரமான் விவாதங்கள்..சமரசங்கள் ...இந்துக்கள் இந்துப்பெண்களைமணக்கலாம்...முஸ்லீம்கள்முஸ்லீம்பெண்களைமணக்கலாம்.கருத்தரங்கம்...கூட்டங்கள்...சமூக அக்கரை கொண்டவர்களின் முன் முயற்சி....

பிரச்சந்த சூர்தான் முதலில் பந்து சர்காரிடம் பேசினான். அவன் இந்துஸ்தான்கொவாபரேடிவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.அனாதையாக்கப்பட்ட முண்று  பெண்குழ்ந்தகளை  எடுத்து வளர்க்கிறான்... 

"நீ செய்வது சரியா? " என்று  பந்து சர்க்கார் பிரசாந்த்திடம் கேட்டார்.

"சரி தவறு என்பது மன நிலையைப் பொறுத்தது காகா"

" இருந்தாலும்..... உன் மனைவியை கலந்து கொண்டாயா? "

" கலந்து கொண்டேன்."

"என்ன சொன்னாள் ?"

"சம்மதம்" என்றாள்.

"இப்பொது அப்படித்தான் சொல்வாள் " 

"......... ......பேச்சு மாறமாட்டாள் " 

"நாளைக்கு குழந்தை பிறந்தால்"

"பிறக்காது " 

பந்து சர்க்கார் ஆச்சரியத்தோடு பார்த்தார்.

"ஜெயபிரகாஷ் நாரயணன் பெற்றுகொள்ளவில்லயே"

பந்து சர்க்காரின் நெஞ்சக்குழியில் பந்து போல உணர்ச்சி கொப்பளித்தது .அவனை கட்டி த்தழுவிக்கொண்டார். "நவ இந்தியா...நவ  இந்தியா" என்று  அவர் வாய் முணுமுனுத்தது.

நிர்மல் கல்லூரியிலிருந்து வந்ததும்,பந்து சர்க்கார் தான் பேச்செடுத்தார்.பிரசாந்த் சூரும் இருந்தான்.

"நிர்மல்  "

"என்ன தாதா? "

"நண்பர்களொடு கலந்து கொண்டாயா?"

"ஆமாம்.."

மெகருன்னிசாவிற் குவயதுஇருபத்திநான்குகலவரத்தின்போதுஅவளை நான்கு  பேர் சின்னபின்னப்படுத்தி விட்டனர். மூன்று மாதமாக அவள் முகாமில் இருந்தாள்.அவள் உறவினர்கள் யாரும் வரவில்லை. மருத்துவ பரிசோதனையில் அவள் கர்ப்பம் என்று தெரியவந்தது. பிற க்கப்போகும் குழந்தைக்கு தகப்பன் யார் என்று தெரியாது "

"நான் தகப்பனாக  இருக்கிறேன்" என்றான் நிர்மல் சர்க்கார்.

மெகருன்னிசாவிர்கு ஆண்  குழந்த பிறந்தது அப்பவின் பெயரான "பந்து" என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதன்பிறகுமெகருன்னிசாவிற் குபென்குழந்த பிறந்தது.அன்னபூரணி என்று அழைத்தார்கள்.திருமனமாகி இப்போது ஒரு பேத்தியும்பேரனும் இருக்கிறார்கள்.

மெகருன்னிசாவும்,நிர்மலும் ஆதர்ச தம்பதிகளா கவே இருந்து வந்தனர்.மெகருக்கு நிர்மல் என்றாலே ஒரு நெகிழ்ச்சிதான்.

"தாதிமா ...தாதிமா"        என்று ஓடிவந்தாள் ஆறு வயது பேத்தி.

"என்னம்மா?...ஓடிவராத...விழுந்திட போற..." 

"பாட்டி ....நீ நமாஸ் பண்ணூவியா ? பூஜை பண்ணுவியா ? "

"ஏன் கேக்கர கண்ணூ ?"

"நீ நமாஸ்தான் பண்ணுவே நு அண்ணன் சொல்றான்" 

"ஆமாம்" 

"அப்ப பூஜை பண்ணமாட்டியா ?"

"பூஜையும்பண்ணுவேன்" 

"புத்து... புத்து...நான் என்ன கெக்கறென்னு புரியலையா?"

"புரியுது"

"நமாஸ் பண்ணூம் போது எந்த சாமிய நினைச்சுப்பே" 

பாட்டி மெகர்  பேத்தி கையை பிடிச்சு அணைத்து  உச்சி மோந்தாள் .

" சொல்லு பாட்டி ". பேத்தி அவசரபடுத்தினாள்.

பெத்தியை அணை த்துக் கொண்டே "மொகன் தாஸ் கரம் சந்த் காந்தி "என்று ஓதினாள்.

"பூஜைபண்ணும்போது ?"

உதடுகள் துடிக்க,கண்கள்குளமாக ..."நிர்மல் சர்க்கார் " என்றாள் மெகருன்னிசா.

திரும்பிப் பார்த்த தாத்தாவுக்கு மெகர் ஏன் அழுகிறாள்  என்பது தெரிந்தே இருந்தது.

ஆதரம்:

(1.. lasat 200 days of Mahathma Gandhi - Hindu Publications.

 2. ஆடன்பரோ இயக்கிய "காந்தி" திரைப்படம். )

(செம்மலரில் வந்த இந்தக்கதை சம்ஸ்கிருத மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு  தொகுப்பில்  உள்ளது )

Thursday, August 06, 2015

கருப்புக் கொடி

 

காட்டினார்கள்.....!!!



காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்ல இந்திய தேசமே கருப்புக் கொடி காட்டியது. கருப்புக்கொடியை காட்டியது மின்றி "சைமன் கமிஷனே திரும்பிப்போ" என்று பிரிட்டிஷ் இந்தியாவே அதிர முழக்கமிட்டது.!


ஆம் ! 1928ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பது பற்றி ஆலோசிக்க , இந்தியர்களின் தகுதி என்ன என்பதை ஆராய பிரிட்டிஷ் அரசு சைமன் கமிஷ்னை அனுப்பியது. எங்களுக்குக் ஆளும் தகுதி  உண்டா என்று ஆராய நீ யார் ? என்று கொதித்தெழுந்த கண்டன ஆர்ப்பட்டங்கள்.கருப்புக்கொடி என்று சீறிப்பாய்ந்தது.இந்தியா.


லாகூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலமையில் நடந்தது . போலீசார் கடுமையான தடியடி நடத்தினார்கள். அவர்கள குறி லாலா லஜாபதி தான் . அவர் மண்டையை உடைத்தார்கள். மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட  அவர் இன்னுயிர் ஈத்தார்.


மக்கள் ஆவேசம் கூடியது. உத்திர   பிரதேசத்தின் வழியாக கல்கத்தா போக அரசு தயங்கியது.

பனாரஸ் இந்து பல்கலைகழக மாணவர்கள் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்திருந்தார்கள். அவர்களின் தலைவன் கிராமம் கிராமமாக சென்று மக்களைத் தீரட்டி தயார் செய்தான். அரசு மானவர்களின் நடவ்டிக்கையை மொப்பம் பிடித்தது. 


சைமன் கமிஷனை சாலை வழியாக கொண்டு செல்லாமல் கங்கை ஆற்றின் நடுவே படகில் கொண்டுசெல்ல முடிவெடுத்தது. மாணவர்கள்  திகைத்தனர். ஆனால் மாணவர் தலைவன் திட்டத்தஒ மாற்றினான்.


ஆற்றின் இருகரையிலும் மக்கள் நிற்க வேணும். ஒரு படகில் மாணவ்ர்கள் சிலர் மின்பிடிப்பவர்கள் போல் செல்ல வேண்டும். இடுப்பில் கொவணம் கட்டி மேலே கருப்பு துண்டு கட்டவேண்டும். நடு ஆற்றில் மீன்பிடிப்பது போல்.பாசங்கு செய்து கொண்டே சைமனின் அலங்கரிக்கப்பட்ட படகு நெருங்கியதும்  துண்டை அவிழ்த்து  கருப்புக் கொடியாக காட்டி கொண்டே 'சைமன் கமிஷனே திரும்பிப் போ" என்று கோஷ மிட வேண்டும். 


ஆயுதம் தாங்கிய போலீசார் சைமனின் பாதுகாப்பிற்கு இருப்பார்கள் !    சுட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனல் மாணவர்கள் ஐவரும் கோஷம் போட்டுக்கொண்டே ஆற்றில் குதித்து தப்பி விட வேண்டும்.இந்த ஆபத்தான ஏற்பாட்டிற்கு  மாணவர்கள் தலைவனும் மற்றும் நான்கு பேரும் தயாரானார்கள்.


இருகரையிலும் கிராமத்து மக்கள் கூட்டம் ! மானவர்களீன் படகை சைமனின் படகு நெருங்கியது . மாணவர் தலைவன்  சமிக்ஞை செய்தான். " அரைதுண்டை அவிழ்த்து கருப்புக்கொடி காட்டிக் கொண்டே "சைமன் கமிஷனே திரும்பிப்  போ" என்று கோஷம் மிட்டனர் ! 


இருகரையிலும் கூடியிருந்த மக்கள் இந்தியாவே அதிர பதில் கோஷம் இட்டனர்.


மாணவர் தலவன் மீண்டு சமிக்ஞை செய்ய அவர்கள் ஆற்றில் குதித்து தப்பினர் .


அந்த மாணவர் தலைவனை அவர்கள் "மதறாஸி -மதறாஸி " என்று அழைப்பார்கள்.


அவன் பெயர்  பீ.ராமமூர்த்தி  !!!    

Monday, August 03, 2015

புத்தக விமரிசனம் 

"சாதி ,வர்க்கம், மரபணு" 

ஆசிரியர்:ப.கு.ராஜன்.

வெளியீடு:பாரதி புத்தகாலயம்,

7,இள்ங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை-

600018 .

விலை : ரூ 40/- 

இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர் ப.கு.ராஜன் அவர்கள்  மார்க்சீய அறிஞர்.

மார்க்சிய இலக்கியத்தின் மூல நூல்களை பயின்று மற்றவர்களுக்குக்ற்றுக்கொடுக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர்  !

மரபணு ஆய்வாளர் டாக்டர் பாம்ஸாத் அவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தை பாருங்கள் :

" மரபணு நிபுணன் அல்ல நான் .உயிரியல் வல்லுனனும் அல்ல.தொழில் ரீதியாக மின்சாரப் பொறியாளன் .தமிழ்  நாடு அறிவியல் இயக்கம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர் சங்கம் ஆகிய சில அரசு சாரா முற்போக்கு இயக்கங்களொடுஇணைந்து பணியாற்றி கொண்டிருக்கும் ஒர் ஆர்வலன் மட்டுமே " என்கிறார் ! இது அவருடையா அடக்கமல்ல! பலம்.!

அவருடைய புரிதல்களை குறிப்பிடுகிறார்.

 1.இந்தியாவிற்குள் மூன்று அலைகளீல் குடியேற்றம் ஆகியுள்ளது .60000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,6000 ஆண்டுகளுக்குமுன்னால்,3500 ஆண்டுகளூக்கு முன்னால்.

2. பின் இரண்டுகுடியேற்றங்களும் மேற்கு யூரேசியா,மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து வந்தவை.பெரும்பாலும் ஆண்களடங்கிய கூட்டம்.

3 தாயின் கொடிவழி,தந்தையின் கொடிவழி மரபணு கட்டுமானத்தில் வித்தியாசம் உள்ளது

.4.இந்தோ ஐரோப்பிய மரபணு குறிப்பான்கள் உயர்சாதியினர்மத்தியில் அதிகமாகவும்,அடிமட்ட சாதியினர் மத்தியில் மிககுறைவாகவும் காணப்படுகின்றன.!

5.அடிமட்ட சாதிமக்களூக்கும் பழங்குடி மக்களுக்கும் மரபணுரீதியாக நெருக்கம் அதிகம் உள்ளது.

அது மட்டுமல்ல .

என்னுடைய இந்த புரிதல் சரியா என்றும் டாக்டர் பாம்ஸாத் அவர்களீடம் கேட்கிறார் .

இந்தநூலில் மரபணு பற்றிய கட்டுரை பகுதி மிகவும் நேர்த்தியாக வந்திருப்பதாகவே நான் கருதுகிறென்.

சாதி ,வர்க்கம் பற்றிய இரண்டாவ்து பகுதி சரளமாக உள்ளதால் பலர் அதன பாராட்டவே செய்வார்கள்.

" வர்க்க ரீதியாக சுரண்டப்படும் வர்க்கமாகவும்,சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவுமிருக்கும் பெரும்பானமை மக்களை இடது சாரிகளால் வென்றெடுக்க முடியவில்லை"

"சாதீய ஒடுக்குமுறைக்கு சோசலிசமில்லாமல் முழுமையான தீர்வு இல்லை என்பது உண்மைதான்"

"இந்திய குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம் தான் இதற்கு முடிவு கட்ட முடியும்" 

இவற்றை சாதிப்பதற்கு நாமென்ன செய்யவேண்டும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத்தான் செய்கிறார். 

அவை இன்னும்முழுமையாக விவாதிக்கப்படவேண்டும் .

அத்தகைய விவாதத்தை முன்னுக்கு கொண்டு வந்ததில் ப.கு ராஜனும் அவருடைய இந்த நூலும் தனிது நிற்கின்றன .

வாழ்த்துக்கள் 

Sunday, August 02, 2015

தமிழின் சிறப்பு 

"ழ" கரம் ......!!!




தமிழ் மொழியின்  "ழ" கரம் ஒடிஷா மொழியிலும், மராட்டிய மொழியிலுமிருப்பதாக திருமதி ஹன்ஸா காஷ்யப் தன் முகநூலில் குறி ப்பிட்டிருந்தார்.


ஒடிஷா மொழியில் இருக்கிறதா என்பது தெரியவில்லை>மராட்டிய மொழியில்( நவீன வரவூ ) இருக்கிறது.

மலையாளத்திலும் உள்ளது. புழல் என்ற வார்த்தை அந்த மொழியில் உள்ளதாகத் தெரிகிறது. "ஆலப்புழா " என்பதை உச்சரிக்கவும்,எழுதவும் மலையாளத்தில் முடியும்.


இந்த சிறப்பு "ழ"கரம் தமிழுக்கு மட்டும் என்பதாக சொல்ல முடியவில்லை. ஐரொப்பிய மொழிகளீலும் உள்ளது. பிரெஞ்சு மொழியில் "ழ"கரம் உண்டு. ஐரோப்பியர்கள்  இந்தியாவை ஆண்டபொது தமிழகத்தின் சிலபகுதிகளை ப்ரான்சு நாட்டினர் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள்  வசம் சோழ நட்டின் பகுதிகள் இருந்துள்ளது. அதனை தங்கள்  ஆவணங்களில்பிரன்சுமொழியில்CHORAMANDALஎன்றுகுறி ப்பிட்டுள்ளார்கள் . "ழ"என்ற தமிழ்  எழுத்தை  "RA " பிரெஞ்சு வரிவடிவத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.


பிரிட்டிஷ் காரர்கள் இதன" கோரமண்டல்" என்று வாசிக்க தென் இந்திய ரயில்வே (S I R ) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில்தொடரை விட்டது.


வடமாநிலங்களில் உள்ள தமிழ்  அமைப்புகள் தமிழ் வகுப்புகளை  நடத்து கின்றன. இந்திமராட்டி,வங்காளி மாணவரகள் அகில இந்திய பதவிகளூக்காக தேர்வுகளில் விருப்பபாடமாக இதன  கற்கின்றனர். டெல்லி,கல்கத்தா ,மும்பை போன்ற நகரங்களில் இவை நடை பெறுகின்றன .உச்சரிப்பில் தான் இந்த மாணவர்கள்  சிரமப்படுகிறார்கள் .


உதாரனமாக "கங்கை " என்பதை நாம் " Gangai " என்று உச்சரிக்கிறோம். அதேசமயம் "கடவுள் " எனபதை"khadavull" என்று  உச்சரிக்கிறொம். எழுத்து என்று வரும் போது இரண்டுக்குமே "க ' என்ற எழுத்தையே உபயோகிக்கிறோம் . எங்கு "Ga "எங்கு"Kha "  என்பதில் இந்த மாணவர்கள் திணரூகிறார்கள் . 

தமிழில் "க" என்ற உச்சரிப்பு மட்டுமே ண்டு."Gha " உச்சரிப்புகிடையாதுஎன்று  தமிழ் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

"கங்கை  "என்று மட்டுமே உச்சரிக்க வேண்டும். "Gangai "என்று உச்சரித்தால் மொழியின் தூய்மை  கெட்டுவிடும் என்கிறார்கள் . 

இதனை இன்னும் தீவிரமாக அறிவியல் துணை கொண்டு ஆராய வேண்டும்.

தமிழ் மொழி தொனமையான மொழி எனும்போது  பெருமைதான் . கல்தோன்றா மூத்தகுடி பெசிய மொழி எனும் பொது சிலிர்க்கத்தான் செய்கிறது ! 

  கல் தோன்றவில்லை என்றால் மனிதன் தோன்றி இருக்க முடியுமா? மனிதன் தோன்றாமல் மொழி தோன்றியிருக்க முடியுமா?


அறிவியல் கேள்விகள் பயமுறுத்துகின்றன. 


மொழியியல் வல்லுனர்கள் இவை மடத்தனமானவை என்று சொல்கிறார்கள் .


மடமையை கொளுத்துவோம் ...!!!













Saturday, August 01, 2015

அபுல் கலாமும் , 

அப்துல் கலாமும்...!

அவர் பெயர்" அபுல் கலாம் முகையுத்தீன்"  !  "ஆஜாத்." என்ற புனை பெயரில் எழுதி வந்தார் ! இந்தியா சுதந்தியரம்  அடைந்த போது  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ! இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் "தேஜ்பூரை" நெருங்கிவிடும் என்று பயந்த பிரிட்டிஷார்வங்கம்  உட்பட  கிழக்கு இந்தியாவில் உள்ள தொழிற்சாலகளை வெடிவைத்து தகர்த்து எதிரிகள் கையில் சிக்கவிடாமல் செய்ய முயற்சித்தது ! "ஆஜாத் "எதிர்த்தார்.  காந்தி  பிரிடிட்டிஷாரை ஆதரித்தார் ! கம்யுனிஸ்டுகள் பிரிட்டிஷாரிடமிருந்தும் ஜப்பானியரிடமிருந்தும் தொழிற்சாலைகளை காக்க ஆலை வாசல்களில்  நின்றனர்  ! "ஆஜாத் "காங்கிரஸ் காரர்களை கம்யுனிஸ்டுகளொடு சேர்ந்து காப்பற்றும் படி உத்திரவிட்டார் காங்கிரஸ் காந்தியின் பேச்சை கேட்டு "ஆஜாத் " அவர்களை எதிர்த்தது. நேரு    ஆஜாத் தை ஆதரித்தார் இருவரும் காங்கிர்ஸ் காரிய கமிட்டியில்   இருந்து  ராஜினாமா செய்தனர் . பின்னர் சமரசமானது !.

அவருடைய சுய சரிதையை "India Wins Freedom" என்ற நூலாக எழுதியுள்ளார்.ஹுமாயூன் கபீர் அதனை ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளார் .

குஜராத்தில உள்ள chief secretory  அத படிக்க வில்லை போலருக்கு. அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் மறைவு காரணாமாக துக்கம் அனுசரிக்கப்படும்    நு சுற்றரிக்கை எழுதி கையெழுத்து பொட்டிருக்கார் அந்த கெட்டிக்காரர் .

 இவர் ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் ! சுதந்திரம் கிடைக்கும் போது இவர் பள்ளி மாணவன்.!