Sunday, January 31, 2016

"அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் "




"அவிகளும் தனியா நின்னதாக 

வரலாறு இல்லை ...!!!"





காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க இளைஞராக இருந்தவர் அவர். காமராஜர்,மற்றும் இந்திராகாந்தி அம்மையாரின் அபிமனத்தையும் பெ ற்றவர்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் காவல் துறை அமைசராக வருவார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு பிரபலமானவர். 

காமராஜருக்கு  பிறகு  கருத்து வேறுபாடு காரணமாக தனிகட்சி ஆரம்பித்தார்

மதுரையில் உள்ள பத்திரிகை நிருபர்கள் பலருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டு. அந்த நிருபர் என்னை மிகவும் நேசிப்பவர்>"ஜி" என்று தான் என்ன அழைப்பார். மிகவும்  அந்தரங்கமான விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார். 

" ஜி ! ஒரு யோசனை சொல்லுங்களேன் "என்றார்.

"என்னப்பா ?"

தனிகட்சி ஆரம்பித்த அந்த பழைய காங்கிரஸ் தலைவர் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தாராம் . "உங்களுக்கு தான் மார்க்சிஸ்ட் கட்சி செய்லாளர் எ.பாலசுப்பிரமணியம் அவர்களை தெரியுமே ! அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியோமா ? "என்று கேட்டிருக்கிறார் .

"உனக்கு என்ன வந்தது ?"
 "இல்லை ஜி ! அவரு பழைய காங்கிரஸ் காரரு" 

"இந்த பாரு ! இதெல்லாம் பெரிய இடத்து விஷயம் . சந்திக்க ஏற்ப்பட்டு செய்யறதுல உனக்கு என்ன நஷ்டம் "
   அவர்கள் இருவரும் சந்தித்தனர்  !

1977 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில்  அண்ணா திமுக, ,மார்க்ஸ்சிஸ்ட் கட்சி, பார்வர்டு ப்ளாக் கட்சி கூட்டணி உருவாக்கி எம்.ஜி  ஆர் அவர்கள்முதன் முதலாக முதலமைச்சரானார். (அதிமுக 138 ,மார்க்சிஸ்ட் 12,பா.பி 1 சுயேச்சை 1 )


அடுத்து 1980 தேர்தலில் அதிமுக 129,மார்க்சிஸ்ட் 11 இடங்களை பெற்றது..

1989ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காங்கிரஸோடு சேர்ந்தது..

மதுரையில் இந்த கூட்டணிக்கு முதல்கட்ட பேச்சு வார்த்தையை துவக்கியவர் 
இன்று முதுபெரும் தலைவரான பழ.நெடுமாறன் அவர்கள்.

அந்த நிருபர்  "தீக்கதிர்"   நாராயணன் ஆவார்.


(இந்த தேர்தலில் எம் ஜி ஆர் அவர்களீன் வேட்புமனுவை முன் மொழிந்தவர் எங்கள் என்.நன்மாறன் ஆவார் )

 

தன்னந்தனியாக நின்று 

ஆட்சியை பிடித்ததாக 



"தி.மு.க.வுக்கு வரலாறு இல்லை "





தமிழகத்தில் முதல் தேர்தல் 1952ம் ஆன்டு நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த முதல்தேர்தல்  அது .
மொத்தமுள்ள 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடங்களில் வென்றது . கம்யூனிஸ்ட்கட்சி ,பிரகாசம் காருவின் கட்சி ,மற்றுமுள்ள கட்சிகளோடு சேர்ந்து கிட்டத்தட்ட. பெரும்பான்மையை நெருங்கும்நிலையில் ராஜாஜியின் தலையிட்டால் ஆள்பிடித்து காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தது.
இந்த தேர்தலில் தி.மு.க போட்டி இடவில்லை .
அடுத்து 1957ம் ஆண்டு தேர்தலில் திமுகபோட்டியிட்டு 13 இடங்களில்வென்றது .

1962ம் ஆண்டு தேர்தலில் திமுக 50 இடங்களைப் பிடித்தது.

1967ம் ஆண்டு திமுக மார்க்சிஸ்ட்,முஸ்ளீம்லீக்,சுதந்திராகட்சி உட்பட ஏழு கட்சிகளோடு கூட்டூச் சேர்ந்து 133 இடங்களைப் பெற்றது மொத்தம் 234 இடங்களாதலால்  தி.மு.க ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சிகளான 
 ,சுதந்திரா,முஸ்ளீம்கட்சிகளின் இடைஞ்சல்களை தவிர்க்க கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பி.ராமமுர்த்தி தி.மு.க.அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைக்கும்.நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தார் இந்த அறிவிப்பை திமுக வரவேற்றது..

அதன் பிறகு 1971ம் ஆண்டு காங்கிரஸ், மற்றும் சிலகட்சிகளொடு சேர்ந்து போட்டியிட்டு  ஆட்சி அமைத்தது 

அதன் பின்னர் 1989ம் ஆண்டு தான் ஆட்சியை பிடிக்கமுடிந்தது. ஜனதா மார்க்சிஸ்ட  ,கம்யுனிஸ்ட் கட்சியோடு கூட்டு  சேர்ந்து தான் ஆட்சியைப் பிடித்தது .
1996ல்,அதன்பிறகு 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது ஆனலும்பலவேறு கட்சிகளின் தயவில் தான் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.

தமிழகத்தில் திமுக பலமான கட்சிகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை..

ஆனால்  அந்த பலம் தன்னந்தனியாக நின்று ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்பது தாம் திமு.கவின் வரலாறு சொல்லும் சோகம்.




Wednesday, January 27, 2016









யாரோ  ஒரு வீட்டில் 

                  எவரோ   "தீ" வைக்க !

தங்க மகன்களன்றொ   

                    தண்ணீர் சுமக்கின்றார் !!

                                                                                                   நன்றி: செங்கீரன் 











Friday, January 22, 2016


அந்த கவிஞனின் கடைசி கவிதை ....!



ரஷ்யாவின் கவிஞர்களில்  மாயகொவ்ஸ்கி முக்கியமானவன். ரஷ்ய அதிகாரவர்க்கத்தை எந்தவிதமான சமரசமும்  இல்லமல் எதிர்த்து நின்றவன்.


தன் மூப்பதாவது வயதில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான் .


ஆயிரம்கரணங்களை ஆயிரம்பேர் சொல்வார்கள்.!


சாவதற்கு முன்பு அவன் எழுதிய கடைசி  கவிதை இது !


உலகம் போற்றும்


"இரவு மணி ஓன்றாகிவிட்டது " என்ற அந்த கவிதை இதோ '



இரவு ஒருமணியாகிவிட்டது !

நீ உன் மெத்தையில் தூங்க பொயிருப்பய் !

இரவுமுழுவதும் நட்சத்திரங்களால் வெள்ளீயாய் ஒளிந்திருக்கும்.!

எனக்கு எந்த அவசரமும் இல்லை !

அவசரமாக தந்தி கொடுத்து உன்னை எழுப்பவேண்டியதில்லை !

உன்னை சங்கடப்படுத்தவும் தேவை இல்லை !

அவர்கள் சொல்வது பொல அந்த விஷயம் முடிந்துவிட்டது !

அன்றாட வழ்ழ்க்கையின் சுழற்சியில் அன்பு எனும் தோணி முட்டி மொதி மூழ்கிவிட்டது !

நம் துக்கம், வலி , வேதனை பற்றி ஏன் கவலைப்படுகிறாய் !

நீயும் நானும் தான் பிரிந்து விட்டோமே !

உலகம் அமைதியாக அடங்கி விட்டது !

நட்சத்திரங்களின் பாராட்டுகள்மூலம் இரவு வானத்தை தழுவிக்   கொண்டுள்ளது !

இந்த் நெரத்தில் காலத்தையும்,வரலாற்றையும், படைக்கப்பட்டவர்களையும் நோக்கி கேட்க

ஒற்றை மனிதன் எழுந்து நிற்கிறான் !

Tuesday, January 19, 2016




"நிழலாக இருந்தவன் 

நட்சத்திரமாக ஆசைப்பட்டான் ...."





அந்த சிறுவன் இரவு நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அது பற்றி  கேள்விகளைக் கேட்டு தாயாரை தொந்திரவு செய்தான்.
அவர் அவனை ஒரு வாசகசாலைக்கு அனுப்பி வைத்தார்.அப்போது அவனுக்கு வயது ஐந்து.
அங்கு "நட்சத்திரம்போல் தெரிவது நட்சத்திரமல்ல. அதுவும் ஒரு சூரியன்.வெகு தொலவிலிருப்பதால்  அப்படி தெரிகிறது "என்றார்கள்..

அன்று அவனுடைய தேடல் ஆரம்பித்தது. ஆகாயத்தை, அண்டத்தை, பற்றி தேட ஆரம்பித்தான். 

அவன்தான் (carl sagan ), கார்ல் சாகன் என்ற வானியல் விஞ்ஞானி.

அமெரிக்க  ஆராய்ச்சி நிறுவனம் அவன அணைத்துக் கொண்டது. நிலவிற்கு  மனிதனை அனுப்பிய  குழுவின் பின்புலமாக இருர்ந்தவன் அவன் .

அண்டத்தில்   எங்கேயாவது புத்தியுள்ளவர்கள் இருந்தால் அவர்கள்  தெரிந்து கொள்ளட்டுமே என்று அவற்றின் புரிதலுக்காக ஓர் மொழியை உருவாக்கி  அனுப்பினான் .

வானியல்,அண்டத்தின் விஸ்வ ரூபம் என்று சதாசர்வகாலமும் அதனை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டான் 

இது பற்றி பக்கம் பக்கமாக எழுதிதள்ளீனான்.

அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் அவனுக்காக தனி ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்துக் கொடுத்தது.

1996ம் ஆண்டு கார்ல் சாகன் மறைந்தான்.

அந்த கார்ல்சாகனின் ஆராய்ச்சியை தொடர ஹைதிராபாத் வந்தவன் தான் ஐயா ரோகித் வேமுலா !

கார்ல் சாகன் போல எழுதப்போகிறேன் என்று வந்தான் தானே ஐயா அவன் !

அவன் சார்ந்த அம்பேத்கர் மாணவர் இயக்க கொடியால்   அவன் கழுத்தை நெரிக்க அனுமதித்தவர் யார் ?

நட்சத்திரமாக  மாற  நினைத்தவனை நிழலாக மாற்றியவர்கள் யார் ?









Sunday, January 17, 2016

தஞ்சை நாடக விழாவை 

இளைய ராஜா 

தட்டிக்கழித்தது ஏன் ...?



1979ம் ஆண்டு  மே மாதம் 25,26,27,ம்தேதிகளில் தஞ்சையில் த.மு.எ.ச நாடக விழாவினை நடத்தியது.
ஏழு முழு நாடகங்கள் நடந்தன இது தவிர ஐந்து குறு நாடகங்கள்   நடந்தன . 
இது தவிர பல கலை நிகழ்ச்சிகளும் இருந்தது.

நாடக கலைஞர்கள், எஸ்.வி .சகஸ்ரநாமம்,கர்நாடகத்தைச்சேர்ந்த சமுதயாவின் பிரசன்னா , த.மு எ.ச வின் புரவலர் சங்கரய்யா ,கேவை  மக்களின் பிரதிநிதியாக தோழர் ரமணி ஆகியோர் வந்திருந்து கருத்துரை ஆற்றினர்.

முழுநீள நாடகமாக,"நினைவுகள்அழிவதில்லை",நாடகத்தைவேல்லுரிளிருந்து வந்த நாடகக்குழு அரங்கேற்றியது
மதுரை பீபீள்ஸ் தியேட்டரஸ் குழு ஜெயந்தனின் "நினக்கப்படும்" நாடகத்தை நடத்தினர்.

மேலூர் எம்.கே. சுந்தரம் அவ்ர்கள் "காலங்களின்னிழல்கள் " என்ற அபத்தவகை  நாடகம்  ஒன்றை அரங்கேற்றினார்.

பிரம்பை செல்வனின் மௌன நாடகம்,விதினாடகங்கள் என்று நாடகத்தில் எத்தனைவகைஉண்டோ அத்துணை வகையும் இருந்தன.

நாடகத்தில் எத்தனை வடிவம் உண்டோ அவைகளும் நிகழ்த்தப்பட்டன.

உருவம் பற்றியும், உள்ளடக்கம் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

சமுதாயவின் பிரசன்னா, சஹஸ்ரநாமம் ஆகியொர் இவைபற்றி ஆழமாக விவாதித்தனர்.

இந்த விவாதங்களின் முத்தாய்ப்பாக தோழர்   கே.ரமணி அவர்கள் பேசினார்கள்.

"கரு நீர்த்திருக்கும்போது அது முட்டை வடிவம் கொள்கிறது. குஞ்சாகும் பொது முட்டையை உடைத்துக் கொண்டு இறக்கை,கால், அலகு கொண்ட வடிவத்தைபெருகிறது..உள்ளடக்கம் தான் வடிவத்தை தேர்ந்தெடுக்கும். "

என்று அவர் குறிப்பிட்டார் .

இறுதி நாள் அன்று புதிதாக வளர்ந்து வரும் இளையராஜா அவர்களின் இசை  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

விழாக்குழுவினர் தஞ்சை மாவட்டம் முழுவது காரில் பிரச்சாரம் செய்துமக்களைதிரட்டும் முயற்சியில் இருந்தனர்  நகரத்தில் "மைக்" கட்டி வான் மூலம் பிரச்சாரம் தூள் பறந்தது.
சென்னைதோழர்கள் தஞ்சைக்கு ரயில்டிக்கெட் எடுத்து இளையராஜாவிடம் அளித்திருந்தனர் . ஏனென்று தெரியவில்லை .வருகிறேன் என்று கூறிய 

இளைய ராஜா வரவில்லை.!!
வரவேற்புக்குழு தலைவரான பெ.மணியரசன் இடிந்து போனார் . ஆயிரக்கணக்கான் ரசிகர்கள் எமாற்றத்தினால் என்ன செய்வார்களொ  என்ற நியாயமான பயம் வேறு இருந்தது.

முற்போக்காளர்களின் கட்டுப்பாடும் எதயும்சமாளிக்கும் தெம்பும் அன்று பட்டுத்தெறித்து .
 



Saturday, January 16, 2016

"ரிஷி " மூலத்தையும்,

"ஞானி " களின் மூலத்தையும் ,

பார்க்கக் கூடாது ...!!!


1975ம் ஆண்டுக்கு முன்  நான் அடிக்கடி காந்தி கிராம பல்கலைகழகம் செல்வேன். தோழர் ராமானுஜம், மற்றும் ஆங்கில பேராசிரியர் பால சுப்பிரமணியம்  ஆகியோருடன் உரையாடிவிட்டு வருவேன். 
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றி  பல   அரிய விஷயங்களை  அலசுவோம்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிரபுக்களுக்காக பகலில் தான்  நடத்தப்படுமாம். இரவுக்காட்சிஎன்றால்அதனைஅர்த்தப்படுத்த அரங்கத்தின் இரண்டுபக்கமும்மெழுகு வர்த்தியை ஏற்றி வைப்பார்களாம். இப்படி பலவிஷயங்கள் கிடைக்கும்.

எங்களோடு பேராசிரியர் ஒருவர் கலந்து கொள்வார். கிராமீய பாடல்களை தொகுத்து  சேகரித்து வருகிறார் கிராமீயகலைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அவரிடம் இருந்த இசைதட்டுகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
இதே போன்று விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் என்ற அம்மையாரும் கிராமிய பாடல்களை சேகரித்து அவை அழிந்துவிடாமல் இருக்க இசை தட்டுகளில் சேமித்து வைத்திருந்தார்; நமது பேராசிரியர் அந்த அம்மையாரின் இசை தட்டுகள் சிலவற்றையும்போட்டுக்காட்டினார்

அதிலொரு பாடல் "மச்சான பாத்தீங்களா - மலைவாழ  தோட்டத்திலே" என்ற பாடல். 

அந்த இசைதட்டை வாங்கிபார்த்தேன்.

Music  composed by vijayalatsumi  Balakrishnan 

Orchestration by Ilayaraaja 

என்று அச்சடித்திருந்தது.

மறைந்த இயக்குனர் K .சுப்பிரமணியம் அவ்ர்களின் முத்த புதல்வர் பெயர் பாலகிருஷ்ணன். இசை அமைப்பாளர் sv ரமணன் அவர்களின் சகோதரர்.

 ராமாயணத்தை உருவாக்கியவர்  மகரிஷி வால்மீகி .

அவருடைய பூர்வசிரம பெயர் ரட்சன் என்பதாகும்

அவருடைய பூர்வாசிரம தோழில்

"கொள்ளை அடிப்பது "

ரிஷி மூலத்தையும்,

"ஞானி".மூலத்தையும் தேடக்கூடாது என்பார்கள்.

தயவு செய்து தேடாதிர்கள் !!!













Wednesday, January 13, 2016

மார்க்க்ஸ் மற்றும் 

அம்பேத்கர் வந்தாலும் .....!!!


(இரண்டு மாதத்திற்கு முன்னாள் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதனை மீண்டும் பதிவிடுகிறேன் )



மார்க்ஸ், அம்பேத்கர் வந்தாலும் 






உயர் மத்தியதர வர்க்கம் முக்கால் அழுதது . பெட்ரோல் விலை அநியாயத்துக்கு உயர்ந்து விட்டதாம்..  காரணம் என்ன என்பதை சிந்திக்கத்தேரியாத மூடர்கள் .  குறைத்தார்கள் .

ஹோட்டலில் உணவருந்தினால் பில் கொடுப்போம். 18 ரூ ஆனால் 20 ரூ நோட்டை நிட்டுவோம்.அவன் இரண்டு ஒத்த ரூ நாணயத்தை தருவான் வாங்கி கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தால் குருட்டு,நொண்டி ,கிழடுகள் கையேந்தி நிற்கும். கையில் உள்ள இரண்டு ரூபாயில் ஒன்றை பையில் போட்டுக் கொண்டு ஒன்றை எரிந்து விட்டு கர்ணன் பரம்பரையில் வந்தவன் போல நடை போடும் புத்தி நம்முடையது .

அதேபோல் தான் 50 காசு.90 காசு என்று பிச்சை போடுவது போல பெற்றோல்விலையை குறைத்தார்கள். மொத்தம் 6அல்லது 7 ரூ குறைத்திருப்பான்.  மகிழ்ந்து திளைத்து நிற்கிறோம்.-நமக்கு குறைந்து விட்டதல்லவா?

பொருளாதார புளுகுணிகள் புது புது வார்த்தைகளால் நம்மை மயங்க வைப்பார்கள். நமக்கு புரியக்குடாது என்பது தான் அவர்கள் எண்ணம்..
பெட்ரோல் விலை  உயர்வு என்பது CASCADING EFFECT  உள்ளதாம். பெட்ரோல் விலை உயர்ந்தால் கட்டணம் உயருமாம். கட்டணம் உயர்ந்தால் கச்சபொருள் விலை உயருமாம்.  அதனால் உற்பத்தியான பொருள் விலை குடுமாம். 
பெட்ரோல் விலையை காட்டி ரயில்  கட்டணத்தை உயர்த்தினார்கள். இப்போதும்  ரயில் கட்டணம் குறைக்கப்படவில்லையே. முனியாண்டியும்,முத்துச்சாமியும் தானே கொடுக்கப் போகிறார்கள் .
இதை சொல்லிதானே பஸ் கட்டனத்தை உயர்த்தினார்கள் கருணாநிதியும் ஜெயலலிதா அம்மையாரும்.

ரூபாய்க்கு முணு படி ன்னு புளுகி ஆட்சியைப்பிடித்தார்கள் . இன்று 1/2 படி அரிசி 25 ஓவா. கருணாநிதி இப்போது புலம்புகிறார் . ஒரு கிலோ துவரம் பருப்பு  180 ரூ. நல்ல விளைச்சல் இருந்தாலும் பச்சைப்பயறு 170ரூ . என்கிறார்..

நாம் கேட்க வேண்டியதை ,அவரிடம் நாம் கேட்க வேண்டியத அவர் கேட்கிறார்.

நமக்கு வேறு முக்கியமான பணிகள்  உள்ளன. . . 
குஜராத் காரர் அல்ல,வாஜ்பாயும், அத்வானியும் நினைத்தாலும் சம்ஸ்கிருதம் செல்வாக்கு பெறாது அதன நவீனப்படுத்த இந்த பரிவாரங்கள் அனுமதிக்காது
நமக்கு பாதிரியார் சொல்லிகொடுத்த புளுகு முட்டைகள் இருக்கிர்ர்ர்றதே..
சம்ஸ் கிரு தம்.பாப்பான்,பாப்பனியம் .ஆறுமாதமாய் எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இப்போது மாட்டிறைச்சி. மின் கிலோ 700 ரூ ஞான்ஆட்டிறைச்சி 500,600 ஞான்.
மாட்டிறைச்சி 300 ரூ ஞான். மைதா மாவு பஞ்சம் போக்கி பணியாரம்  உருண்ட  ஒன்னு 5 ரூ ஞான் . முனியாண்டியும் முப்புடாத்தியும் அததின்னுப்போட்டு வேலைக்கு போறான் .நாம அவனோட உரிமையை காப்பாத்த மாட்டிறைச்சி விருந்து வைக்கிறோம்.  

இந்தா இதுபுரட்டாசி மாதம்> ஐப்பசி ,கார்த்திகை வந்தாசுனா நமக்கு வேற சொலி வந்திரும். ஆமா அலங்கானல்லுரு  குலச்சாமி ,பண்பாடு, தமிழர் விரம் நு காப்பாத்த "ஜல்லிக்கட்டு " நடத்தனும்லா !

நமக்கு கருத்து சதந்திரம் உண்டு டே! 

எத ஏப்பம் சொல்லணும்கராத  அதானியும்,அம்பானியும் கார்பரேட் கம்பெனிகளும் தான் முடிவு பண்ணுவாங்க!

மார்க்ஸ் , அம்பேத்கர்,நு யார் வந்தாலும் இநதியாவை காப்பாத்த முடியுமா ???, 
யோசிச்சுதான் பதில் சொல்லணும் !!!!!

Tuesday, January 12, 2016

திருநாள்குண்டச்செரியும் 

அலங்கா நல்லூரும் ....!!!



அலங்காநல்லூர் -மதுரை சாலையில் உள்ள சாந்தி நகரில் நான் சொந்தமாக வீடு கட்டி 32 வருடங்கள் வாழ்ந்தேன்.

எங்கள் குடும்பங்களில் கலியாணம் போன்ற  வீசெடங்கள் நடந்தால் என்னை  அலங்கானல்லூரை அடுத்த பாலமேடு கிராமத்திலிருந்து "பால்கோவா " வாங்கி வரச்சொல்வார்கள்.. 

பங்களுரு.சென்னை, டெல்லி ஏன் அமேரிக்கா செல்பவர்களுக்கு கூட வாங்கி சென்றிருக்கிறேன்.

அதிலும் இனிப்பு சேர்த்தது. இனிப்பு சேர்க்காதது என்று இரண்டு வகை உண்டு .

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும
.இன்றுமாதிரி எல்லாம் கிடையாது .

திமுக ஆட்சி க்கு வந்த பிறகு ஜல்லிக்கட்டு பிரபலமானது.மதுரை மத்திய தொகுதியில் எம்.எல், எகோவிந்தராஜன் என்பவர்   முற்சியால் தான் .(1967 )
ஜல்லிக்கட்டுபிரபலமாகியது.
நாங்கள் சைக்கிளில்சென்று (8 கிமீ)  பார்த்து வருவோம்.

சுற்றுலா பயணிகளை குறிப்பாக வெளிநாட்டு பயணீகளைகவர அரசு முன்முயற்சி எடுத்தது.. விளம்பரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விர விளையாட்டு என்று எழுதி இருந்தார்கள்.

அங்குள்ள கோவில் அறங்காவலர்கள், பூசாரிகள்வியாபாரிகள் இதற்கு ஒரு தெய்வீக சாயம் பூசினார்கள்..

இதேசமயம் அலங்காநல்லூர் ரோட்டில் பொங்கலுக்கு மறு  நாள்  
பொதும்பு விலக்கிலிருந்து சலவத்தோழிலளர்கள் கழுதை பந்தயம் நடத்த ஆரம்பித்தனர்.

உவர் மண் அதிகமாக கிடக்கும் அந்தப்பகுதியில் மூட்டையாக கட்டிய மண் கழுதைகளின் முதுகில் ஏற்றி விரட்டி வருவார்கள். இது கழுதை களை வளர்த்து விற்கும் வியாபாரிகள் செய்து வந்தனர்

ஒருபுதிய பாரம்பரியம்-பண்பாடு உருவாகியது.
தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்பது பற்றி நமதுமுன்னோர்கள் குறிப்பாக அயோத்திதாசர் தமிழார் பண்பாடு  என்பது சாதிகளற்ற 
வாழ்வுமுறை என்கிறார் தமிழர்கள் பௌத்த பண்பாட்டை கொண்டவர்கள் என்கிறார். அவர்களிடையே சாதிபாகுபாடு இருந்ததில்லை என்கிறார்.

தன இறுதி நாட்களில் பௌத்தமதத்திற்கு மாறினார். 

ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பது வேறு.

அது என்னவோ பாரமபரியம் என்றும் தெய்வீகமானது என்பதும் வேறூ.

எந்தவித பாகுபாடுமில்லாமல் வாழ்ந்த சமுகத்தில் சாதிய பாகுபாடுகளை புகுத்தியது எந்த பண்பாடு?

எநத பாரம்பரியம்?

எண்பது வயதி கிழவரின் பிணத்தை அவர் தலித் என்பதற்காக போதுப்பாதையின் செல்லக்கூடாது \ன்று கூ றுவதுஎந்த  பாரம்பரியம்,?
பண்பாடு ?
அலங்காநல்லூர் இருக்கட்டும் !

திருநாள் குண்டச்செரிக்கு எநத நீதிமன்றம் பதில் சொல்லப்போகிறது !!!




Saturday, January 09, 2016

(இது ஒரு மீள் பதிவு )






நேருவின் குடும்ப சிலவிற்கு 


1954ம் வருடம் ."முன்னா " என்ரு ஒரு திரைப்படம் வந்தது. இந்தியில் பாட்டு இல்லாமல் வந்த முதல் படம்.குவாஜா அஹமது அப்பாஸ் எடுத்தது. கே.ஏ.அப்பாஸ் ஒரு இடது சாரி எழுத்தாளர். கலைஞர்.இயக்குனர். நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் 



நேரு ஒரு திரைப்படப் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

"'முன்னா " படத்தை நேரு குடும்பத்தினர் பார்ப்பதற்காக அப்பாஸ் தனியாக ஏற்பாடு செய்தார்.நேருவுக்கு படம் பிடித்திருந்தது.அதில் நடித்த சிறுவன் மாஸ்டெர்.ரோமி யின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருதது.மருநாள் காலை ரோமியை தன் வீட்டிற்கு காலை உணவுக்கு அழைத்துவர முடியுமா என்று அப்பாஸிடம் கேட்டார்.


"நேரு அவர்களே! படக்குழுவினர் அத்துணை பெரையும் அழையுங்களேன் அவர்களும் பெருமைப்படுவார்கள்"என்றார் அப்பாஸ்.


நேரு அருகில் இருந்த மகள் இந்திராவிடம் மெல்லியகுரலில் "இந்த கூட்டத்திற்கு உணவு தயாரிக்க முடியுமா?முட்டை, மற்ற சாமான்கள் இருக்கிறதா ? என்று கேட்டார். சிறிது நேர யொசனைக்குப் பிறகு இந்திரா சம்மதித்தார். 


மறு நாள் விருந்து முடிந்து எல்லாரும் விடை பெற்றுக் கொண்டார்கள். அப்பாஸ் விடை பெறும் போது,இந்திராவிடம் " விருந்திற்கு அழைக்க உங்களிடம் தயக்கமிருந்ததே! ஏன்?" என்று கேட்டார்.


" என்னசெய்ய! அவர் மாதசம்பளம் வாங்குகிறார்.அவருடைய சம்பளம்மட்டும்தான். பல மாதம் பலசரக்கு கடை,பால்காரன் என்று பாக்கி விழுந்து விடுகிறது அப்பா நிலமை தெரியாமல் விருந்துக்கு கூப்பிட்டு விடுவார். அதனல் என்னிடம் கேட்காமல் விருந்துக்கு அழைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன்.. நெருவின் வெளிநாட்டு பதிப்பகத்தார் ஆண்டுக்கு ஒருமுறைதான் உரிமைப்பணத்தை அனுப்புவார்கள். அதைவைத்துக் கொண்டுதான் கடனை சரிசெய்வேன் "என்றார்.


கண்கள்கசிய மனம் நெகிழ அப்பாஸ் விடை பெற்றார் .


( ரஷீத் கித்வாய் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.)

Friday, January 08, 2016

பனாரஸ் இந்து பலகலை கழகம் 

"அன்றும் இன்றும் ......"




அந்த பேராசிரியர் ........!!!

இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் ! பனாரஸ் இந்து பலகலைகழகம்.இந்த மாணவர்களின் யாகசாலையாக    இருந்தது !

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலையும் அது தான் !

அங்குதான் அவர் பெராசிரியராக    இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது ! பல்கலை வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது !  துணை வேந்தராக இருந்தவர் தான் அந்த பேராசிரியர் ! பல்கலை வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று கூறிவிட்டார் !

சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க மாட்டென் என்று அறிவித்து விட்டார் !

அவரை மிறி போலிஸ் நுழைந்தால் ...?

மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள் ! நிலைமையை அவரும் பரிசீலித்தார் ! 

"நீங்கள்வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு ! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள் ! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள் ! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள் !" என்றார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் நுழந்த பொது அவர்கள் தேடிவந்த மாணவர்கள்   அங்கு இல்லை ! 

அந்த துணைவேந்தர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் !
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!



Monday, January 04, 2016

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை முதலில் 


"ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள் "



இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.

பிரிட்டிஷ்ஏகாதிபத்தியஎதிர்ப்புதான்முக்கியகுறிக்கொளாகஇருந்தது.உழுபவனுக்கு  நிலம், என்று வளர்ந்து சோசலிசம் தான் தீர்வு என்ற இடத்திற்கு வந்தார்கள்.

இந்த கொள்கைகளை  சித்தரிக்கும் சிறுகதைகளை எழுதினார்கள்.கதைகளை உருது மொழியில் எழுதியவர்கள் இவர்கள்.

உத்திர பிரதேசத்தைச்  சேர்ந்த அகமது அலி,சஜத்ஜாகீர் ,முகம்மது உட்ஜாபர் ஆகிய மூவரும் தாங்கள் எழுதிய கதைகளை  ஒரு தொகுப்பாக வெளியிட்டார்கள். 1932ம் ஆண்டு வெளிவந்த அந்த தொகுப்பின் பெயர் "எரியும் தணல் ",(ஆங்கரே )  என்பதாகும். அப்போது ஆண்ட பிரிட்டிஷ் அரசு அந்த நூலை தடைசெய்து உத்திரவு போட்டது.இது 1932 ம்  ஆண்டு நடந்தது .

அஞ்சுமன் தாரிக் பசந்த் முசனாப்ஃஇன் -டி-ஹிந்த் என்ற அமைப்பை இவர்கள்   உருவாக்கிணார்கள். 

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  என்ற  இந்த அமைப்பில் ஹமீத அ க்தர்,ப்ஃஐஸ் அகமத் ப்ஃஐஸ் , அகமத் நசீம், சதத்  ஹாசன் மாண்டோ, இஸ்மத் சுக்தார் போன்ற  புகழ் பெற்ற எழுத்தாளர்கள் செயல்பட்டனர்.

11947 ம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு அகில பாகிஸ்தான் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை பாகிஸ்தானில் உள்ள உருது எழுத்தாளர்கள் ஆரம்பித்தார்கள்.-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களே !

எத்துணை அழகான பாரம்பரியம் உங்களுடையது>!!!
(இது விமரிசனமல்ல )




"காலத்தின்  குரல் "







" நீ  வாழும் காலம் பற்றிய புரிதல்   உனக்கு இல்லை என்றால் நான் எழுதிய சிறுகதைகளை படி .அவை  அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தால் நீ  அப்படிப்பட்ட காலத்தில்வாழ்கிறாய் என்றுபுரிந்து கொள் " 

சதத் ஹாசன் மாண்டோ , என்ற எழுத்தாளன், அகில இந்திய எழுத்தாளர் அமைப்பினை உருவாக்கிய வர்களில் ஒருவன் .அவனுடைய குரல் தான் இது .

உண்மையில் இந்திய எழுத்தாளர் சங்கம் ஆரம்பிப்பதற்கான வித்து 1935ம் ஆண்டு லண்டனில்  போடப்பட்டது.

அதனைப்பொட்டவர் டாக்டர் .முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள்.  

தொழிற் புரட்சிக்கு பிறகு மூலதனத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது 30ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம்.

அதனை  சமாளீக்க ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் தொழிலாளர்கள் மீது அந்த சுமையை ஏற்றி மூலதன வாழ்க்கை முறையை காக்க முயற்சிகள் நடந்தன.அதற்கு உறுதுணையாக "பாசிசம் " உருவானது.

மனிதாபிமானிகளும்,எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இதனை எதிர்க்க வந்தார்கள்.

இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் லண்டனில் உருவானது.

பின்னர் ஓராண்டுக்குப்பிறகு லக்னௌவில் 1936ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 11ம்தேதி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமானது.

முன்ஷி பிரேம் சந்த் தலைமையில்,உருவான அந்த சங்கத்தில்,முல்க்ராஜ் ஆனந்த், தாகூர், சையத், என்று அன்றய எழுத்தாளர்கள் உறுப்பினர் ஆனார்கள்.இந்த லக்னௌ மாநாட்டில்  அ ந்த "புத்தி ராட்சதன் " இ,எம்,.எஸ்நம்பூதிரி பாடும் உண்டு 
--------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு  நாள் தீக்கதிர் அலுவலகத்திலிருக்கும் போது அந்த சமூக போராளி எ.பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை அழைத்தார்கள். மிகவும்சோர்வாக இருந்ததால் "டேய் ! சாமா! எதாவது குடிக்க கோடு "என்றார்.அவர்  டீ ,காபி ஆகியவற்றைஅதிகம் விரும்பமாட்டார். கீழே ஜோசப் கடை க்க சென்று பால் வாங்கிவந்தேன்.."கிரஷாம் இல்லையா ?" என்றார்.
". ஏன் தோழார் நான்வாங்கி வரக்குடாதா?"
.சூடாககுடித்தார். படுக்கைபோன்ற  நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.கண்ணை முடிக்கொண்டார்.
"சாமா ! நாம இருக்கர கட்சி கம்யூனிஸ்த கட்சி  மட்டும் இல்லைடா கண்ணா !  மாமேதை லெனின் மெம்பரா இருந் கட்சி.மாசேதுங்கும்.ஸ்டாலினும் இருந்தகட்சி..சே குவேரா இருந்தகட்சி அடுத்த சந்ததிக்கு இத பத்திரமா கொடுக்கணும் டா " .

ஏற்கனவேசிவப்பானஅந்தமுகம்செக்கச்சிவப்பாகஜொலித்தது .கொஞ்சம் அமைதி யானார் . மொதுவாக கதவை சாத்திவிட்டு வெளியேவந்தேன்.தூங்கட்டும் .

-------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழ்  நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தன்னுடைய நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது.

அதனுடைய பாரம்பரியம் மிகவும் நீண்டது.
1936ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ம் தேதி லக்னௌவில் ஆரம்பமாகிறது.
2016ம் ஆண்டு ஏப்ரல்மாதம் அதன் 80 ஆண்டு விழா வருகிறது.

2036ம் ஆன்டு பல் விழுந்த தமிழ் செல்வனும், வழுக்கை விழுந்த சு.வெங்கடேசனும் அதன் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவார்கள் .நீங்கள்  அதை கண்டு களிப்பிர்கள் !!!








Saturday, January 02, 2016

அந்த இளம் விஞ்ஞானிகளை 

சந்திக்க முடியவில்லை !

சேவை செய்ய முடிந்தது !!!


பேராசிரியர் தோழர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள் மதுரை யிலிருந்து செல்லும் டெராடூன் எக்  மூலம்   நாங்கள் சண்டிகர் செல்கிறோம் "என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
சண்டிகரில் இளம் விஞ்ஞானிகள் மாநாடு. அதில் கலந்து கொள்ள பள்ளிக் குழந்தைகளுடன் புறப்பட்டு விட்டார்.

நாகபுரி ரயில் நிலையத்தில் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

காலை 8மணிக்கு அவரிடமிருந்து.தொலை பேசி வந்தது" .நாங்கள்போபால்தாண்டியாகிவிட்டது.நாகபுரி எப்போது வரும்"  என்று கேட்டார்."மேடம் ! இந்தியாவின் புவி  இயலை மாத்த முடியாது. நாகபுரி கடந்து  போபால்,டெல்லி என்று செல்லவேண்டும் "" என்று சமாதானப்படுத்தினேன்.

திரும்பி வரும்போது தகலவல் தாருங்கள்.சந்திக்க முடிமா என்று பார்க்கிறேன் என்றுகூறினேன்.

24-12-15 அன்று முத்துமிணாட்சிஅவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது2-1-16 அன்று review காலை 10 மணி என்று மருத்துவர் கூறி  இருந்தார்.

மோகனா அம்மையார் அந்த இளம் விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு 2-1-16 அன்று காலை நாகபுரி வழியாக மதுரை திரும்புகிறார்.
 குழந்தைகளுக்கு கால உணவும், மதிய உணவும் ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.

"எத்தன பேர்?" என்றுகேட்டேன்..

"நாற்பது பேர்" என்றார்.

சென்னை,நாமக்கல், என்று அவரோடு வந்த ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.
ஒருபக்கம் துணைவியாரின் கண் பரிசோதன.அதோடுகடுமையான குளிர். முதுமை,அதன் காரணமாக இயலாமை.

உணவை ரயிலடியில் கொண்டு சேர்ப்பதற்கு உணவு விடுதி  அம்மையார் பொறுபேற்றுக் கொண்டார்.

மோகனா அம்மையார் உணவு சிறப்பாக இருந்ததாக விடுதி பொறுபாளருக்கு தொலைபெசியில்கூறியதாக அவரே சொன்னார்.

மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அந்த இளம் விஞ்ஞானிகளை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

அவர்களுக்கு உணவு அளித்து சேவை செய்யமுடிந்ததே  .!

குழந்தைகளே !  சாலைகளில் நீங்கள் சந்திக்கும் "தாத்தா " போலத்தான் நான் இருப்பேன்.
எந்த தாத்தாவையும் நானாக பாவியுங்கள் !!! 

அந்த சின்னஞ்சிறுசுகளுக்கு என் அன்பு முத்தங்கள் ...!!!