Tuesday, December 30, 2014
Friday, December 26, 2014
"Tyranny of Democracy "
"கொடுங்கோன்மை ஜனநாயகம் "
பெரும்பான்மை கருத்தாளர்கள் சிறுபான்மை கருத்துக்களை கேட்டு அதனையும் அணைத்துக் கொண்டு செல்வது தான் ஜனநாயகம் !
"என்னிடம் பெரும்பான்மை உள்ளது ! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை " என்று செயல்படுவது ஜனநாயக மல்ல !
மூ லதன ஜனநாயகத்தில் இத்தகைய மனநிலை ஆட்சியாளர்களுக்கு உருவாவது மிகச்சாதரணமானது தான் ! அதிகார பலம் ,பணபலம் கொண்டு ஆள் சேர்த்து அதற்கு ஒருஜனநாயக வடிவம்கொடுப்பார்கள் !
இதனைத்தான் "Tyranny of Democracy " (கொடுங்கோன்மை ஜனநாயகம் ) என்று வர்ணிக்கிறார் மாமேதை லெனின் அவர்கள் !
முகர்ஜி என்ற ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்திட்ட "அவசரசட்டம்" அதனையே காட்டுகிறது !
இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முடலீட்டினை உயர்த்தவும், நிலக்கரியை எடுக்க தனியாருக்கு தாரை வார்க்கவும் என்ன டா அவசரம் ! அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாமே !
இன்சூரன்ஸ் மசோதா மாநிலங்கள் அவையில் வந்தது ! அதனை select குழுவின் பரிசீலனக்கு அனுப்பினார்கள் ! மீண்டும் அவையின் பரி சீலனைக்கு வந்தது ! அவையின் பரி சிலனை விவாதம் ஆகியவை இன்னும்முடியவில்லை ! இன்றைய நிலையில் அது மாநிலங்கள் அவையின் சொத்து ! ஜனாதி பத்தி அதில் தலையிடலாமா ?
கேட்டால் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமால் செய்கிறார்கள் என்று ஆளும் பா.ஜ.க சொல்கிறது !
சுக்ராம் நு ஒரு மந்திரி ! தொலை பேசி துறையில் ஊழல் செய்தார் ! அதை விசாரிக்க வேண்டும் என்று பதினைந்து நாட்கள் நாடாளுமன்றத்தை நிலைகுலையச்செய்தாரே goodgovernance வாஜ்பாய் ! பின்னர் அதே சுக்ராமை தடவி உச்சிமோந்தது வேறு விஷயம் !
நாடாளுமன்ற ஆவணங்களை பரிசீலிக்கலாமா ? நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று பார்ப்போமா ?
"ஜனநாயகம் ,ஜனநாயகம் " என்று கூச்சலிடுவான் முதலாளி அவன் நலன் காக்கப்படும் வரை !
இல்லை என்றால் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு இது தான் ஜனநாயகம் என்று கொக்கரிப்பான் !
இதனைத்தான் Tyranny of Democracy என்கிறார் லெனின் !!!
கொடுன்கோன்மை ஜனநாயகம் என்பது இது தான் !!!!!
Thursday, December 25, 2014
"தியேட்டருக்கு "
போகாதீர்கள் .......!!!
நான் திரை அரங்கிற்கு போனது கடைசியாக "நண்பன் " என்ற திரைப்படம் நாகபுரியில் "ரிலீஸ் " ஆன சமயம் ! நங்கள் குடும்பத்தோடு ஐந்து பேர் போனோம் ! சுமார் 1500 /- ரூ செலவு ! என்மகனிடம் கேட்ட பொது சொல்ல மறுத்துவிட்டான் ! பின்னர் தெரிந்து கொண்டேன் ! அன்று முடிவு செய்தேன் இனி தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டாம் என்று !
அதன் பிறகு தியேட்டரில் பார்க்கவில்லை ! சென்னையிலிருந்து உறவினர்கள் மூலம் "சிடி" வாங்கி வீட்டிலேயெ பார்ப்பேன் ! மூப்பின் காரணமாக தியேட்டர், படி ஏறி இறங்குவது சிரமமாக இருப்பதும் ஒரு காரணம் தான் !
இப்பொழுதெல்லாம் வீட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு பார்ப்பது கூட சிரமமாக இருக்கிறது ! மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக உட்காருவது முடியவில்லை ! ஒரு படத்தை முன்று sitting ல் பார்க்க வேண்டியதுள்ளது ! "சதுரங்க வேட்டை " சிடி வந்து ஆறு மாதமாக துங்கிக்கொண்டிருக்கிறது !
புதனன்று என் மகன் "Pk " என்ற படம் நன்றாக இருக்கிறது ! நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் !அமீர்கான் நடித்தபடம் ! சர்சைக்குரிய படமாதலால் தடை செய்ய வாய்ப்பு உண்டு ! நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் ! நான் online ல் டிக்கட் வாங்கிவிட்டு காரை எடுத்து வருகிறேன் !தயாராக இருங்கள்" என்றான்!
'அமிர் கானா ? கண்டிப்பாக தடை வராது ! ஏற்கனவே "மோடியை " பார்த்ததாக செய்தி வந்துள்ளது ! நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ! அரசியல் செல்வாக்கு இருக்கும் "என்றேன் !
மதியம் நான் "கதறகதற " என்னையும் முத்து மினாட்சியயும் தியேட்டருக்குள் தள்ளி விட்டான் !
ஒரு டிக்கெட் 240 /-ரூ ! இர்ண்டு பேருக்கு 480 /- ரூ ! தண்ணி பாட்டில் கொண்டு போகக்கூடாது ! அது ப்பாட்டில் 40/- ரூ ! காபி 60/-ரூ ! பாப்கார்ன் 80/ரூ !
விஜய், சூர்யா என்று மக்களை தியேட்டரில் படம் பார்க்கும்படி கேட்கிறார்கள் !
"சிடி"யை தடை செய்ய விஷால் முன் நிற்கிறார் !
தீயெட்டர் காரனை பாருங்க சாமிகளா !!
இல்லைனா "தியேட்டருக்கு போகாதிங்க மக்களே!!
இப்பொழுது எல்லாம் விட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு
Wednesday, December 24, 2014
"pk "
(இந்தி திரைப்படம் )
2014ம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம் என்று நான் கருதுகிறேன் அது என்ன "PK " என்ற தலைப்பு ?
கேரளத்திலும் ,இலங்கையிலும் ஆப்பிரகாம் கோவூர் என்ற பகுத்தறிவு வாதி (rationalist ) இந்தியாவையே கலக்கிக் கொண்டிருந்தார் ! அவருடைய வாழ்க்கையின் சில பகுதிகளை ஒரு பாத்திரத்தில் புகுத்தி கோவூர் என்று அழைக்கப்பட்ட அவரின் மாதிரியாக "pk " என்று வைத்தேன் என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி ! (K for kovoor )
கதை
வேற்று உலகத்திலிருந்து பூமியை அறிய வருகிறான் ஒருவன் ! அவன் மிண்டும் தன வாகனத்திற்கு செல்ல அவனி டம் ஒரு REMOTE உள்ளது ! அவன் இறங்கிய இடம் ராஜஸ்தானம் ! அவனுடைய REMOTE ஒரு திருடனால் களவாடப்படுகிறது ! அவனை விரட்டி செல்லும் பொது திருடனின் டேப்ரி கார்டார் அவன் கையில் சிக்குகிறது ! அந்த வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் தான் "PK "!
மக்களைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ! அவர்களுடைய தோல் பலநிறத்தில்,பச்சை,சிவப்பு,மஞ்சள்என்று பலவண்ணங்களில் உடலிலிருந்து வழிந்து கொண்டு இருக்கிறது ! பின்னர் புரிந்து கொள்கிறான் ! அவர்கள் தங்கள்தோலுக்கு பாதுகாப்பாக ஆடை அணிந்துகொள்கிறார்களென்பதை ! டேப்ரிகார்டரை கொண்டு தன் மானத்தைமறைத்துக்கொள்கிறான் !
அவனுக்கு பேச்சு மொழி தெரியாது !ஆனால் ஒருவர் கையைதோட்டால் அவனால் அவர்கள் நினைப்பதைபுரிந்துகொள்ள முடியும் ! அறிந்து கொள்ளமுடியும் ! ஆண் - பெண் என்று வித்தியாசம் பாராமல் தொடுவதால் அவன் அடிவாங்குகிறான் ! அவனை செகாவத் என்பவர் கப்பற்றுகிறார் ! அவனுடைய remote ஐ டெல்லிபோய் தேடும்படி சொல்கிறார் !
அங்கு அவன் ஜகஜனனி என்ற பெண்ணை சந்திக்கிறான் ! ஜக்கு என்று அழைக்கப்படும் அவள் பெல்ஜியத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றியவள் ! பெல்ஜியத்தில் சப்ஃரோஜ் என்ற இளைஞனைக் காதலிக்கிறாள்! அவனொரு பாகிஸ்தானி ! ஜக்குவின் தந்தை இதனை ஏற்க மறுக்கிறார்! தன குருஆன சாமியாரை கேட்கிறார் ! சாமியார் இந்த திருமாணம் நடக்கக்கூடாது என்று சொல்கிறார் !
மீறி சர்ச்சில் திருமண ஏற்பாடுகளை இருவரும் செய்கிறார்கள் ! தகவல் தவறால் இருவரூம்பிரிய நேருகிறது ! ஜக்கு பெல்ஜியத்திலிருந்து புது டெல்லி வருகிறாள் ! அங்குதான் அவள் pk யை சந்திக்கிறாள் ! தொலை காட்சி அறிவிப்பாளறான அவள் pk வை வைத்து நிகழ்ச்சி நடத்த விரும்புகிறாள் !
மக்கள் எதையும் "பகவான் " செய்வார் என்று வாழ்வது pk வுக்கு ஆச்சரியமளிக்கிறது !
தன்னுடைய remote "பகவான் " மூலம்கிடைக்குமா ?என்று தேடுகிறான் ! அனுமார்,கிருஷணர் ,ஏசு,நபிகள், புத்தர் என்று யாருமே அவனுக்கு உதவவில்லை !
அவனுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது ! இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவன் என்கிறீர்களே ! உங்கள் உடம்பில் அடையாளமிருக்கிறதா ! என்று கேட்கிறான் ! மருத்துவமனைக்குச் சென்று பிறந்த குழந்தயின் உடலில் அடையாளம் இருக்கிறதா என்று சோதிக்கிறான் !
இறுதியில் ஜக்குவின் குடும்பசாமியாரிடம் அவனுடைய ரிமோட் இருப்பது தெரிகிறது ! தொலைக்காட்சி நிகழ்ச்சியில் pk -சாமியார் விவாத மேடையில் சாமியார் தோற்க remote ஐ பெற்றுக்கொண்டு தன்கிரகத்திற்கு செல்கிறான் pk !
நமக்கு ஒரு சங்கடம் வந்தால் நாம் உடனடியாக தீர்வை தேட கடவுளிடம் தான் செல்வோம் ! ஆனால் கடவுளுக்குத்தான் எத்தனை "மானேஜர்கள் " ! இவர்களை சாடுவது தான் இந்தப்படத்தின் ஆதார சுருதி ! அற்புதமான திரைகதை அமைப்பு !
"pk " வாக நடிக்கும் அமீர் கான் சிறப்பு ! குறிப்பாக முதல் பாதியில் பேசாமல்.தன கண்கள்,உடல் மொழிமூலம் தன்னுடைய பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் !
"பகவான் ஹை கஹாங் ரே தொ" (கடவுள் எங்கே இருக்கிறார்) என்ற பாடலுக்குப்பின் அவர் கணபதி,சரஸ்வதி ,கிருஷ்ணர் சிலைகளுக்கு முன் நின்று பேசும் போது நம் நெஞ்சமும் கதறுகிறது !
ஜாக்ஜ்ஜனனியாக நடிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு இந்த ஆண்டு விருது கிடைக்கவேண்டும் ! மகிழ்ச்சி,துக்கம், பரவசம் என்று கண்சிமிட்டும்னேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ! anchor ஆக நடிக்கும் அவரின் உடல் மொழி பாவனைகள் பிரபலமான ஒருவரை கண்முன் நிறுத்துகிறது !
முரளிதரனின் காமிரா மிகவும் நேர்த்தி !
வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே ,அழவும், சிந்திக்கவும் ,தெளிவு பெறவும் வைக்கும் படம்
"PK "
Monday, December 22, 2014
N .M .S அவர்களே
1963ம் ஆண்டு ! காப்பிட்டு ஊழியர்களின் தென்மண்டல கூட்டமைப்பின் அங்கமாக தமிழ் நாடு,கெரளா,ஆந்திரா,கர்நாடகா ,பாண்டிசெரி ஆகிய மாநிலங்கள் இருந்த காலம் !
மண்டல மாநாடு மதுரையில் நடக்க விருந்தது !
மண்டலதலைவராக அந்த மாபெரும் போராளி மோகன் குமார மங்கலம் இருந்தார் !
செயலாளர்.மற்றும் மண்டல பொறுப்பாளர்களாக தோழர்கள்மேனன்,ராம்ஜி என்று அழகு சேர்த்தனர் !
மாநாடு மதுரை அழகப்பன் அரங்கில் நடந்தது !
மொகன் தன் அலுவல்கள் காரணமாக பதவியிலிருந்து விடுப்ட்டு தன்னுடைய நண்பர் இளம் வக்கீல் சங்கரன் அவர்களை கொண்டுவர விருப்பம் தெரிவித்தார் !
தென் மண்டல் பொதுச்செயலாளராக புதியவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள் !
மிகவும் இளமையான ,நெடிய ,என்.எம் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
அன்றிலிருந்து ,ஓய்வு பெற்றது வரை ,அதற்குப்பிறகும் இடைவிடாத போராட்டக்களத்தில் நின்று காப்பீட்டுக் கழக ஊழியர்களுக்கு மட்டுமல்லமல் , உழைக்கும் மக்களுக்காக பணியாற்றிய
N.M.S அவர்களே
காலம் மாறத்தான் செய்யும் ! ஆனாலும் உங்கள்
கம்பீரம் குறையவில்லை ! குறையாது !!!
Com .N.M.S I love you
நெப்போலியன் - மயோபதி - பா.ஜ.க ...!!!
துரைசாமி-சரஸ்வதி தமபதியரின் மகன் நெப்போலியன் ! திருச்சி கல்லூரி ஒன்றில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்றவர் ! திரைப்பட நடிகர் ! அவருடைய உறவினர் அரசியலில் பெற்ற செல்வாக்கினால் எம்.எல்.எ ஆனவர் ! பின்னர் பெரம்பலூர் எம்.பி ஆனார் ! மத்திய அமைச்சரும் ஆனார் !
அளவான குடும்பம்.மனைவி இரண்டு மகன்கள் !
இந்த மனிதரின் வாழ்க்கையில் சூறாவளியாக தாக்குதல் நடந்தது ! 8வயது மித்த மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி வந்தது ! ஆம் ! தசை சிதைவு நோய் !
குழந்தை வளர அவளர எலும்பு வளரும் ! ஆனால் அதே அளவுக்கு எலும்புக்கு பக்க பலமாக இருக்கும் தாசை வளராது ! பையன் அடிக்கடி கிழே விழந்தான் ! கைகால் அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறந்தது !
அதிர்ந்து போன நெப்போலியனும் அவர் துணைவியாரும் மருத்துவர்களை தேடி அலைந்தார்கள் ! இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலை தெரிந்தது !
நாட்டு வைத்தியத்திற்கு திரும்பினார் !
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் டாக்டர் ராமசாமி என்பவர் மயோபதி என்ற சிகிச்சை முறைமூலம் இதனை சீர் செய்கிறார் என்று அறிந்து அங்கு என்று தங்கினார் !
இங்கு மருந்து கொடுப்பதில்லை ! மாறாக கடுமையான பயிற்சிகளின் மூலம் குழைந்தகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறார்கள் ! குறிப்பாக நீச்சல் பயிற்சி சிறப்பு அம்சம் !
நெப்போலியனின் மகன் கொஞ்சம் தெளிவு பெற்றான் ! மேலும் சிகிச்சை பெற வெளி நாடு போகவேண்டும்! குறிப்பாக அமேரிக்கா !
மகனையும் மனைவியையும் அனுப்பி சிகிசை நடக்கிறது ! இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் தொடர்பில் !இருக்கிறார் ! தன மகனை பரிசோதனையில் ஈடுபடுத்த அனுமதிக்கிறார் ! லட்சக்கணக்கான குழந்தகளின் நிலையையும்,தாய் தந்தையாரின் மனக்கஷ்டத்தையும் புரிந்து கொண்ட நெப்போலியன் இந்தியாவிலும் அத்தகைய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் !
இன்றுவீரவனல்லுரி;ல் பிரும்மாண்ட மான ஆராய்ச்சி மையம் எழுந்துள்ளது ! டாக்டர் ராமசாமி தலைமையில் ! தன வாழ்நாள் சம்மபாத்தியம் முழுமையையும் கொட்டி நெப்போலியன் அதனை எழுப்பி வருகிறார் !
நாகபுரியில் எனது டாக்டர் நண்பர் ஒருவரின் 12 வயது மகன் ! இதே நோயால் பாதிக்கப்பட்டவன் அங்கு சென்று சிகிச்சைபெற்று வந்தான் !
வீரவநல்லூர் சென்று அந்த மருத்துவ மனையையும் பார்த்தேன் ! சேரன் மாதேவி அம்பை ரோட்டில் தினசரி நோயாளிகள் வந்து சிகிச்சை பெருகின்றானர் ! உள் நோயாளிகளுக்கு ஊருக்கு உள்ளெ பிரும்மாண்டமான வளாகம் உள்ளது ! நான் சென்றிருந்த போது குறந்தது நூறு குழைந்தகளாவது சிகிச்சையில் இருந்தார்கள் ! "கட்டுச்சிகிச்சை " என்றமுறையில் சிகிச்சை நடக்கிறது !பயிற்சிக்காக மிகப்பெரிய நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள் !!
பீஹார்.ம.பி.ராஜஸ்தான்,மராட்டியம்,என்று வடநாட்டு மக்கள் தான் அதிகம் ! அவர்கள் தங்குவதற்கும்,நோயாளிக்குழந்தைகள் தங்குவதற்கும்சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன !
சிகிச்சை,மருந்து இலவசம் !
இந்த மருத்துவமனையை எனக்கு அடையாளம் காட்டிய தோழர் கவிஞர் கிருஷி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ! கிருஷி த.மு எ க .சாவின் மாநிலக்குழு உறுப்பினரும் ஆவார் !
-------------------------------------------------------------------------------------------------------------------------
நெப்போலியன் பா..ஜ.க.வில் சேர்ந்தது சரியல்ல ! நல்ல மனிதர் ! மோசமான கட்சிக்கு போவானேன் !
தசை சிதைவு நோயாளிகளுக்கு அவர் ஆற்றும் பணியை மனதில் கொண்டு அவரை முகநூல் நண்பர்கள் விமரிசிக்கலாமே !!!
Friday, December 19, 2014
இயக்குனர் மகேந்திரன்
"கருப்பு கருணா" வை தெரிந்திருக்க மாட்டார் ....!!
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது ! கோ ட்டு போட்ட பெரியவர்கள் ,சரத்குமார் ஆகியொர் ஆங்கிலத்தில் பேசினார்கள் ! தமிழக அமைச்சர் பேசும் போது விழாவுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்டார் !
இயக்குனர் மகேந்திரன் பேசினார் !
"உலகத்திரைப்படங்களைப் பற்றி அறிவேன் ! திரைப்பட உலகத்திப் பற்றி அறிந்து கொள்ளவில்லை " என்று ஆரம்பித்தார் !
" நமது கதாநாயகர்களும்,நாயகிகளும் இன்னும் மரத்தைசுற்றி வருகிறார்கள் ! இதை நிறுத்தப்போகிறோமா ? அயல்நாட்டு படங்கள பார்த்து ,அவர்களின் பண்பாட்டு, பழக்கவழக்கங்களை அறிந்து கொள்கிறோம் ! நமது ரசனையை விரிவு படுத்து கிறோம் ! இதற்கு இத்தகைய விழாக்கள் உதவுகின்றன ! "
"சென்னையத்தாண்டி இந்தப்படங்களை கொண்டு போக வேண்டாமா ! அதற்காக என்ன செய்யப்போகிறோம் ! செய்யவேண்டாமா ? "என்று கேட்டார் !
" ஐயா ! இவை நடக்கத்தான் செய்கின்றன ! "என்று கத்தவேண்டும் போல் தோன்றியது !
"சாலையே இல்லாத குக்கிராமத்திற்கு" புரொஜெக்டரை " தோளில் சுமந்து கொண்டு "கருப்பு கருணா "என்ற எங்கள் எஸ்.கருணா உலக த்தின் மிகச்சிறந்த படங்களை போட்டு காண்பிக்கிறான் ! ரயிலே போகாத "கம்பம் நகரில் " சர்வதேச திரைப்பட விழாவை நடத்து கிறான் ! அவனுக்குத் துணையாக எங்கள் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம் இருக்கிறது ! "
"மத்திய மாநில அரசுகளிடமிருந்து "மூக்கா துட்டு " பெறாமல் மூச்சு காட்டாமல் இது நடக்கிறது !"
இயக்குனர் லெனின் போன்ற சில நல்லவர்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் !
வளர்ந்து வருகிறோம் !
மாற்று சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவோம் !!!
உங்களையும் அழைப்போம் !
வாருங்கள் ! பாருங்கள் !
அந்த மக்கள் சர்வதேச திரைப்பட விழாவை !!!
எல்லாப் புகழும் த.மு.எ.க.சங்கத்திற்கே !!!
"
Thursday, December 18, 2014
அம்மன்குடி அய்யங்கார் மக
"ஆயிஷா "வை மதம்
மாத்துங்கடா !!!
கிறிஸ்துவர்களையும்,இஸ்லாமியர்களையும் இந்துக்காளாக மாற்றி இந்துமதத்தைகாப்பாத்த "மோடி " அரசு முடிவு பண்ணியிருக்கு !
கேட்டா "நான் இல்ல ! ஆர்.எஸ்.எஸ் சொல்லுது " ம்பான்ங்க !
ஆர்.எஸ் எஸ் கிட்ட கேட்டா விஸ்வ இந்து பரிஷத் சொல்லுதும் பான் !
"ஆர்கனைசர் பத்திரிக்கை " தலையங்கம் தீட்டி இருக்கு !
அம்புட்டு பயலுவளும் அதுக்கு அடங்கினவுங்க !
பெரிய ஆளு ஒத்தன் சொல்லியிருக்கான் !" இந்துவா மாறினா உனக்கு எந்த சாதி வேணுமோ அதுக்கு போய்க்கோ " நு சொல்லிட்டான் !
பிராமணான ஆகிகொயில்ல மணியாட்டணூம்னாலும் சரி போய்க்கோ ஞான்!
கிறிஸ்துவன் நா இரண்டு லட்சமாம் ! இஸ்லாமியன்னா ஐந்து !
நமக்கு தேவை இல்லாத சந்தேகம் வருது !
"நக்வி " நு ஒரு மந்திரி இருக்காரு ! அவர மாற சொல்லலாமே ! மாட்டாரு ! கட்சிய மாத்திடுவாரு !
நம்ம தஞ்சாவூரு அம்மன்குடி ராமானுஜ அய்யங்காரு மக கிட்ட பேசிபாருங்களேண் !
அதுதான் அண்ணே ! "கனவுக்கன்னி " ஹேமமாலினி ! பா.ஜ.க எம் பி !
தர்மேந்திரா பஞ்சாபி ! கலயாணமாகி குழந்தைகுட்டியோட இருந்தாரு ! அவர கட்டிக்க ஆசைபட்டங்க !
" ஏண்ணே ! தப்பா ? "
அவரு வீட்டுக்கார அம்மா முடியாதுண்ணுட்டங்க !
தர்மேந்திரா முஸ்லிமா மாறி "தில்வார் கான் " ஆயிட்டாரு ! அம்மையார் ஹேமா "ஆயிஷா" வா மாறிட்டாரு ! கட்டிக்கிட்டாங்க !
பா.ஜ.க எம்பி ஆயிட்டாங்க !
"ஆயிஷா" வை மதம் மாறசொல்லுங்க வே !
"இந்து " மதத்தை காப்பாத்தலாம் !!!
Wednesday, December 17, 2014
தோழர் அர்சுணனும் ,
நாடகமும் .......!!!
முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரையில் நாடகபயிற்சி வகுப்பு !
பல்வேறு குழுக்கள் நாடகம் நடத்தின !
ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் !
வத்தலான ஆசிரியர் தன குழந்தைகளுக்கு தினபதற்காக ஆரஞசுபழம் வாங்கிக்கொண்டு வருவார் ! ஒரு பழம் வாங்கினாலும் நான்கு குழந்தகளும் பங்கிட்டுக் கொள்ளவார்கள் அல்லவா! ஆசிரியர் அவ்வளவுதானே செலவழிக்க முடியும் !
அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வருவார் ! வீட்டு வாசலில் ஆரக்ன்சுப்பழத்தோல் வீசி இருப்பதைப்பார்த்து பதறி விடுவார் !
"என்ன உடம்பு ? யாருக்கு உடம்பு சரியில்லை ? " என்று பதறிக்கொண்டு கேட்பார் !
உடல் நலமில்லை என்றால் தான் ஆரஞசுபழம் திங்க முடியும் என்ற அவல நிலையில் இருக்கும் ஆசிரியர்களைபடம்பிடிக்கும் "பாவனை:நாடகம்" !
ஸ்ரீவில்லைபுத்தூரிலிருந்து வந்த அந்த ஒல்லிப் பையன் ஆரஞ்சு விற்பவனாக நடிப்பார் !ஆரஞசுப்பழத்தை கையில் வைத்து உருட்டி,தூக்கிபிடித்து அசல் வியாபாரியாக அவர் பாவனை செய்து வந்த காட்சி கைதட்டல் பெற்றது !
அவர்தான் இன்று விருதுநகர் மாவட்ட செயலாளராக வந்திருக்கும் தோழர்.அருச்சுனன் !
வாழ்த்துக்கள் தோழரே !
Monday, December 15, 2014
"அவா " பாடப்போறா ,
"இவா "ளுக்காக ....!!!
சென்ற வரம் முழுவதும் சென்னையில் இருந்தேன் ! கடுமையான குளிர் பகுதியிலிருந்து வந்தவனுக்கு சென்னையின் மிதமான குளிரும் ,அவ்வப்போது பெய்த மழையும் ரம்மியமாக இருந்தது !
நகரத்து "பிளக்ஸ் " போர்டுகளில் நித்யஸ்ரீ அவர்களும்,சௌம்யா அவர்களும் கர்நாடக இசையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் !
ம்யுசிக அகாடமி,நாரதகான சபா என்று பட்டியலிட்டு .ரவா தோசை,அடை அவியல், பூரி கிழங்கு, என்று எந்தெந்த காண்டீனில் எது நன்றாக இருந்தது என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன !
ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் ஆபீசர் நட்ராஜிளிருந்து மாயவரத்தான் வரை விமரிசிக்கப் போகிறார்கள் !
சில நாட்களுக்கு முன்பாக டி .எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரை நினைவு தட்டியது!
"இசைக்கு சாதி உண்டா ? நாதஸ்வரத்தை குறிப்பிட்ட சாதியினரே பாடுகிறார்கள் ? கர்நாடக இசை "அந்த " சாதிக்கு மட்டுமே உள்ளதா ?"
கிருஷ்ணா தன கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்விகள் இவை !
இன்று காலை கோவை வக்கீல் தோழர் ஞான பாரதியை நலம் விசாரித்தபோது அவர் சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது !
இசையில் ஆரோகணம்,அவாரொகணம் என்பது முறை ! இதனை மீறி ஆரோகணம் மட்டுமே கொண்ட இசையை நிகழ்த்திக் காட்டியவர் இளைய ராஜா ! பிஸ்மில்லாகான் "சாஸ்த்ரீய "சங்கிதத்தில் போற்றப்படுபவர் !" என்று அவர் விளைக்கினார் !
--------------------------------------------------------------------------------------------------------------------