Friday, March 29, 2013

தமிழ் "நாவல் "களும் 

தமிழ் "திரைப்படங்களும்".....!!!


"பரதேசி படம் வந்தாலும் வந்தது பாவம் இயக்குனர் பாலாவை திட்டிபோட்டியில் வாருகிறார்கள் ! அப்படியானால் தமிழில் நாவல்கள் படமாக்கப் பட்டதேயில்லையா!

என் நினைவிற்ற்கு பிரம் சந்தின் "சேவா சதனம்"  கே.சுப்பிரமணியம்  அவர்களால்  படமாக்கப்பட்டது! 

"லா மிசரபிள் " என்ற பிரஞ்சு நாவல் "ஏழை படும்பாடு" என்று படமாக்கப்பட்டது! சித்தூர் வீ நாகையா அற்புதமாக நடித்த படமாகும்! ஜாவர் என்ற போலிஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சீதாராமன் என்ற நடிகர் அவர் மரணமாகும் வரை "ஜாவர்"சீதாராமன் என்றே  அழைக்கப்பட்டார் !

"கல்கி"யின் "கள்வனின் காதலி"சிவாஜி -பானுமதி நடிக்க வெளிவந்தது ! அவரின் "பொய்மான கரடு " டி .ஆர்.ராமச்சந்திரன்,அஞ்சலிதேவி நடிக்க  "பொன்வயல் "என்று வந்தது !பார்த்திபன் கனவு " வந்தது ! அந்தமான் கைதிஎன்றபடம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வந்தது!

அந்தக்கலத்தில்வடுவூர் துரைசாமி ஐயங்கார் ,ஆரணிகுப்புசாமி முதலியார் ஆகியோர் ஆங்கில துப்பறியும் நாவல்களை தமிழில் தந்துள்ளார்கள் .
அவையும்படமாக்கப்பட்டன! இவையெல்லாம் பொதுவானவரவேற்பை பெற்றன !

இவற்றில் சக்கை போடு போட்ட படங்களும் உண்டு !

பட்சி ராஜா ஸ்டுடியோவின் தயாரிப்பான "மலைக்கள்ளன் " ஒரு வெற்றிப்படம்! மு.கருணாநிதி முதல்முதலாக தன்னுடைய அடுக்கு மொழியை விட்டு விட்டு யதார்த்தமான வசனங்களோடு வசனம் எழுதினார்! இந்த படம்தமிழ்,தெலுங்கு,கன்னடம் ,இந்தி ,சிங்களம் (தமிழ் தேசீயம் கவனிக்க) வந்து மிக அதிகமான மொழியிலேடுக்கப்பட்ட படம் என்று புகழ் பட்டது! எம்.ஜி.ஆர்,,பானுமதினடித்தபடம் அது!

விகடனில் வெளிவந்த தொடர்  நாவல் தான் "தில்லானா மோகனாம்பாள் "! 
படமாக எடுக்கப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கிறது ! துணப்பாத்திரங்களின் கம்பிராமான நடிப்பற்றலால் மிளிர்ந்த படமாகும்! நாகேஷின் வைத்தி,ஆச்சிமனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி ,பாலையா, சாரங்கபாணி ஆகியோரின் மேளம், தங்கவேலு டி ஆர் ராமசந்திரன் ,ஒத்து ஊதும் ஏ கருணாநிதி மறக்கமுடியாத சித்திரங்கள்! இன்றும் திரைக்கதைக்காக பாடமாக உள்ள படம்! நாவலைவிட மேன்மையாக இன்றும் பேசப்படும் படம் !  

சில படங்கள் ஊத்திக் கொண்டதும் உண்டு! 

ஞான ராஜசேகரன் எடுத்த "மோகமுள்" அப்படிப் பட்ட ஒன்று! கதை மாந்தரை குழப்பி விடடதுனால் வந்தவினை 

கடந்த நூறு வருடங்களில் நவீன தமிழ் இலக்கியத்தி வந்த பத்து நாவல்கள் என்று பணக்கெடுத்தோமானால் அதில் ஒன்று கு.சின்னப்பா பாரதியின் "தாகம்" ஒன்றாகும் என்று டாக்டர் கைலாசபதி குறிப்பிடுவார்!  திரைப்படமாக எடுக்க முயற்சிகள்னடந்தன ! இயக்குனர் ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் தொடங்கியது! ஒருகட்டத்தில் அது செல்வராஜின் படமாக மாறி "புதிய அடிமைகள்" என்று பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்படாமல் இருக்கிறது !
டி.செல்வராஜின் "தேநீர் "  குற்றுயிரும் குலை உயிருமாக " ஊமை ஜனங்கள்" 
என்று வெளி வந்து மூண்றாம்  நாள் டப்பவிற்குள் பதுங்கியது!

நல்ல இலக்கியங்கள் படமாக்கப்பட வேண்டும்!

பாலா எந்த இடத்திலும் "redtea " படமாக்கப் போவதாக சொல்லவில்லை ! அதன் உந்துதலால் "பரதேசி " என்ற படத்தை தந்தார்! 

இன்றுள்ள இயக்குனர்கள் காட்சிபடுத்தலில் மிகவும் யதார்த்தமாக இருக்கிறார்கள்! கருத்தியலில் கவனமில்லாமல்,அல்லது தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்காமலிருக்கிறார்கள்! 

கடையில்போய் பிள்ளையார் பொம்மையை வாங்கலாம்! அதில் வில்லும் அம்புமாக ராமர்,சீதை அனுமன் இல்லையே என்று அழுவது சிறுபிள்ளைத்தனம்!

பாலா படைத்ததை விமரிசிக்கலாம்!   
 எப்படி எடுத்திருக்க வேண்டும் என்று கூற வேண்டாம்!
முடியுமானால் நீங்கள் எடுங்களேன் !
உங்களால் முடியாது !!
பாலா முயற்சித்தாவது இருக்கிறார்!!!

அதனை திரைப்படமாக எடுக்க 

Sunday, March 24, 2013

"தேநீர் " நாவலும் 

"ஊமை ஜனங்கள் " திரைப்படமும்...!!!


மதுரைமாவாட்ட  த.மு.எ.ச முதல்மாவட்டச்  செயலாளராக மறந்த மருத்துவர் தா.ச. ராசாமணி இருந்தார்! அவரால்செயல்படமுடியாத நிலையில் என்னை மாவட்ட செயலாளராக ஆக்கினார்கள் 1 என் பணியின் அழுத்தம் காரணமாக வையை செழியனை (ப.ரத்தினம்) அவர்களை போட்டார்கள்! 
அப்போது மதுரை மாவட்டம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ராமேஸ்வரம் கடல் வரை வடக்கே சிங்கம்புணரியிலிருந்து தெற்கே சாத்தூர் வரை பரவியிருந்தது! மாவட்ட மாநாடு கமப்ம் நகரில்  நடநதது  காலம்  சென்ற கவிஞர் புத்தூரான் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார்!

மாநாட்டில் முக்கியமான விஷயம் முதன்முதலாக இளையராஜா குழுவினர் இசை  நிகழ்ச்சி! ராஜா வரவில்லை! பாஸ்கரன் அவர்களும்,கங்கை அமரன் அவர்களும் வந்திருந்தார்கள்!  

நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இரவு பத்து மணிக்கு நண்பர்கள் என்னை தனியாக அழைத்துச் சென்றார்கள் ! நாங்கள் வேறொரு அறைக்குச்  சென்றோம்!அங்கு,காலம் சென்ற கவிஞர் செம்மலர் செல்வன்,கமேலாண்மை பொன்னுச்சாமி,,மேலூர் சொக்கர், டி ..செவ்வ்ராஜ்  இருந்தார்கள்! இயக்குனர் ஜெய பாரதி அவர்களும் இருந்தார்கள் 

ஏற்கனவே யுகசக்தி என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு தாகம் நாவல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது! அதில் நான் நடித்துக்கொண்டிருந்தேன்! செல்வராஜின்  தேநிர் நாவல் படமாக்கப் போவதாகவும் என்னுடைய அபிப்பிராயத்தையும் கேட்டார்கள்  ஏற்கனவே ஒரு முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் அதனை முடித்த பிறகு தயாரிப்பில் ஈடுபடலாம் என்று என் கருத்தைச் சொன்னேன் 

இறுதியில் தேநீர் தயாரிப்பது என்றும் ஜெயபாரதி இயக்குவது என்றும் முடிவாகியது! நான் ஒதுங்கிக் கொண்டேன் 

பிரும்மாண்டமான முறையில் தயாரிக்க முன் வேலைகள் ஆரம்பமாகின ! கம்பெனி இயக்குனர்களாக செம்மலர் செல்வன்,மேலாண்மை தணிகை என்று செயல்பட்டனர் !

கதாநாயகனாக பாக்கியராஜ் ,கதாநாயகி பிரிதா விஜயகுமார் ,மற்றும் 
அறந்தை நாராயணன்,சமீபத்தில் காலமான பத்திரிகையாளார் செல்லப்பா,சரத்பாபு,கோபாலகிறுஷ்ணன் என்று முடிவாகியது இசை கங்கைஅமரன்! கண்ணதாசன்,தணிகை, செம்மலர் செல்வன்,சொக்கர் ஆகியோர் பாடல் எழுத தீர்மானிக்கப்பட்டது! பிரபஞசன் வசனம்!

பிரிட்டிஷ் காலத்து படம் என்பதால் ராஜாமுத்திரை போட்ட நாணயங்கள், உடைகள் , வீடுகள் என்று இயக்குனர் தேடி  அலைந்தார் !
 
செல்வராஜ் அவர்கள் பாடல்களடங்கிய காசெட் கொண்டுவந்து போட்டுக்கண்பித்தார்!

கே.முத்தையா அவர்களின் "செவ்வானம் "நாடகத்திற்காக தணிகை எழுதிய பாடல் அப்போது பிரபலமான ஒன்று!  

      கீழ்வானில் செம்பரிதிக் கோலம் --இது 
      கிழக்கெல்லாம்  சிவப்பாகும் காலம் 
      தாழ்வான மனித குலம் வெல்லும்--மக்கள் 
      தர்மத்தின் கை ஓங்கி  நில்லும் !

இந்தப்பாடலும் அதிலுண்டு ! 

சரியான நிதி ஏற்பாடு இல்லாமல் தயாரிப்புப்பணி சுணங்கியது ! ஒருகட்டத்தில்முழுமையாக பாக்கியராஜ் அவர்களிடம்விட்டு விடுவது என்று முடிவாகியது 

கதையில் மாற்றங்கள் வந்தன ! படம் பெயர் மாறியது! "ஊமை ஜனங்கள் " என்றாகியது ! 

படம் வெளியிடதேதியும் முடிவாகியது ! படம் பார்க்க ஆவலாயிருந்தோம் 1என் சொந்தபணிகாரணமாக ஒருவாரம் டெல்லி செல்லவேண்டியதாகியது! நொந்து கொண்டே போனேன்! 

ஒருவாரம் கழித்து வந்தேன்! ரயிலடியில் படம் எங்கு ஓடுகிறது என்று கேட்டேன் ! எந்த படம் என்றார்!" ஊமை ஜனங்கள் " என்றேன்!
"உத்திக்கிட்டுச்சு சார்! எடுத்துட்டாங்க!" என்றார்!

நல்ல காலம் ! விளம்பரத்திலோ படத்திலோ "தேநீர்" என்ற வார்த்தை பயன் படுத்தப் படவில்லை!

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு ! உழக்கு வட்டமாக இருக்கும் !

"ஏல! உழக்கில கிழக்கு மேற்கு பாக்கலாமாடா " என்பார்கள் !

நாம் பார்த்தோம் !!!

.
Thursday, March 21, 2013

"குறும்படம் "

"CARELESSNESS "


70ம் ஆண்டுகளின் இறுதியில் த.மு.எ.ச வின் மாவட்ட மாநாடு பரமக்குடியில்   நடநதது  மையத்திலிருந்து கே. முத்தையா அவர்களும்,நானும் சென்றிருந்தோம்! சென்னையிலிருந்து  சிகரம் பத்திரிக்கை ஆசிரியர் செந்தில் நாதன் அவர்கள் வந்திருந்தார்கள்!

எனக்கு திரைப்படம் பற்றி பேசவேண்டும் என்று சொல்லியிருந்தனர்! குறும்படம் பற்றி பேச விரும்பினேன்! நினைவில் இயக்குனர் பெயர் இல்லை என்றாலும் அப்போது பலபத்திரிகைகளி ல்  வந்திருந்த படம் பற்றி பேசினேன்! 

அது ஒரு சிறுகுடும்பம்! கணவன் ,மனைவி மூன்று  வயது சிறுவன் கொண்ட குடும்பம்! குழந்தையின் மீது பாசம்கொண்ட தம்பதியர் ! தினம் குழந்தையோடு விளையாடாமல் இருக்கமாட்டன் தந்தை ! சந்தோஷத்தில் குழந்தையை தலைக்கு மேல் போட்டு கொஞ்சுவான்! இரு கைகளிலும் தூக்கிபோட்டு குழ்ந்தை கலகல வென்று சிரிக்கும்போது பிடிப்பான்! அவனுக்கு சந்தொஷம்வந்தால் இதனசெய்து குழந்தையை  முத்தமிடுவான்!

அன்றுகாலை அவன் முகவசீகரம் செய்துகொண்டிருந்தான்! அருகில் இருந்த மகன் பிரஷ்ஷை எடுத்து முகம்பூராவும் சோப்பைத் தடவிக் கொண்டான்! கணவனும் மனைவியும் அதனப்பர்த்து மகிழ்ந்தார்கள்! குழந்தையை உச்சி மோந்தார்கள்! 

பிறி தொருநாள் காலை அவன் அலுவலகம் சென்றான்! திடீரென்று அவனுக்குநினைவு  தட்டியது ! வீட்டில் மேஜைமேல் முகவசீகரம் செய்துவிட்டு பிரஷ்,பிளேடு ,சோப்பு ஆகியவற்றை எடுக்கா
ல் வந்தது நினைவுக்கு வந்தது! அடிவயிறு கலங்கியது! சுட்டிப்பயல் ,பிளேடினை எடுத்து ....நினைக்கவே கதி கலங்கியது! வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி விட்டிற்கு ஓடினான்!  அவசர் அவசர மாக உள்ளெ சென்றவன் மகன் விளையாடிக் கொண்டிருப்பதிப் பார்த்து உச்சி மோந்தான்! அவனை  அள்ளி எடுத்து தலைக்கு மேல் தூக்கி மேலே போட்டன்! 

"வீல்" என்ற சத்தத்தோடு சில துளி ரத்தம்    அவன் சட்டையின் மீது தெரித்தது !

மெலே சுத்திக் கொண்டிருந்த மின் விசிறியில் ......\

கால தூர வர்த்தமானத்தில் இதனை எடுத்தவர் படத்தின் பெயர் நினைவில் இல்லை !

ஆனாலும் மனத்தை விட்டு  அகலாது !!!


Friday, March 15, 2013

"பவந்தர் "

(sandstorm )-பாலைவனப்  புயல் 


(பதிவுலக நண்பர் ஹரிஹரன் நல்ல திரைபடம் பற்றி எழுதுங்களேன் என்றுகேட்டிருந்தார் ! பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இந்தி ,ராஜஸ்தானி ,ஆங்கில மொழியில் வந்த "பவந்தர்" படம் பற்றி இதோ ) 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த செய்தி!ராஜஸ்தான் மாநிலத்தில்பதேறி என்ற கிராமம்! அங்கு கிராமசெவகியாக பன்வாரி என்ற பெண் வசிக்கிறாள்! கிராமத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவது அவளுடைய பணிகளில் ஒன்றாகும் ! அவள் வந்த பிறகுஅத்தகைய திருமணங்கல்தடுத்து நிறுத்தப்பட்டன! ஒருகட்டத்தில்  மேல் சாதியினர் இதனல்கோபம்கோள்கிறார்கள்! பன்வாரிக்கு பாடம் கற்பிக்க முயலுகிறார்கள்! ஒருநாள் பன்வாரியும் அவள் கணவன் மோகனும் விறகுவெட்ட போகிறார்கள்! அப்போது மேல்சாதியின்ர் ஐந்து பேர் மோகனிய  அ டித்து கட்டிபோட்டு அவன் கண்ணெதிரிலேயே அவளை கூட்டாக கற்பழிக்கிறார்கள் ! 
 மோகனும் ,பன்வாரியும் போலீசிடம் போகிறார்கள் ! போலிஸ் மருத்துவ சான்று இல்லை!என்பதால் புகாரை எற்கமறுக்கிறது! மாவட்ட தலைநகர் சென்று மருத்துவ சான்று வாங்குகிறார்கள்! வழக்கு பதிவாகிறது !

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்சாதியினர்! வேதமந்திரங்கள்  ஓது பவர்கள்!  நீதிபதி  முன்னால் குற்றத்தை மறுக்கிறார்கள்! புனித கங்கை  நீ ரை கையில் வைத்துக் கொண்டு சத்தியம்செய்கிறார்கள்! இவ்வளவு புனிதமானவர்கள் இத்தகைய ஈனத்தனமான குற்றங்களை செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி நீதிபதி அவர்களைவிடுதலை செய்கிறார்! பன்வாரி நியாயம் கேட்டூஉயர் நீதி மன்றம் செல்கிறார் !........!

இதனைத்தான் "பவந்தர்" என்ற திரைப்படமாக கொண்டுவந்தார்கள் ! சட்டச் சிக் கலைத்தவிர்க்க ,பன்வாரி  சன்வரியாகவும் மோகன்  சோகன் என்றும் பாதேரி கிராமம் தாபேரி என்றும்பெயர் சூட்டப்பட்டது! 

நந்திதாதாஸ் சன்வரியாகவும், ரகுவீர் யாதவ் சொகனாகவும் ,நடித்தார்கள் ! சொகனை அடித்து குற்றுயிராக போட்டுவிட்டு அவன் முன்னலேயெ சந்வாரி கற்பழிக்கப்படும் காட்சி மனதை உருக்கிவிடும்! மயங்கிய நிலையில் சந்வாரி அரூகில் வந்து சோகன்   கையறு நிலையில் கதறும் காட்சியும், சந்வாரி கணவன கட்டிக்கொண்டுஅழும்காட்சியும் நம்   ஆஸ்கார் நாயகர்கள் 
பாடம் கற்க வேண்டிய ஒன்றாகும்! 

சந்வாரியின் துணிச்சலைப் போற்றி பிரதமர் நரசிம்மராவ் விருது வழங்கும் போது எனக்குவிருது வேண்டாம் நீதி வேண்டும் என்று சன்வாரிமுழங்குவதோடு படம் முடியும்1

ஜக் முந்திரா என்ற இளைஞர் இயக்கிய இந்த படம் 2000 ஆண்டு வெளிவந்தது! நாகபுரி சென்றிருந்தபோது !என் மகன் " அப்பா! ஒரு அருமையான காசட்! இந்தாருங்கள்! "என்றுகொடுத்தான்!

மதுரை வந்ததும் நண்பர்களுக்கு போட்டுகாட்டினேன்! மதுர புறநகர் செய்லாளர் ,மற்றும் மற்றும்மாதர்சங்கத்தை சேர்ந்த பொன்னுத்தாய் போன்ர தோழர்கள் பார்த்தார்கள்! 

நண்பர் யாரோ காசட்டை வாங்கிச் சென்றார்கள் !நண்பர் பெயரும்மறந்து விட்டது! காசட்டும் திரும்பிவரவில்லை !

u tube ல் உள்ளது ! தயவு செய்து பாருங்கள்!

  
 


Tuesday, March 12, 2013

நீதி ராஜன் ,நீதி நாயகம் ,

வன்கொடுமை தடுப்புச் சட்டம்  


அருமை தோழர் நீதிராஜன் அவர்கள் சென்னையில் தாராபூர் கோபுர வாசலில் நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றி இடுகை இட்டிருந்தார்! வன்கொடுமைச் சட்டத்தைபலப்படுத்த வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தி எழுதியிருந்தார் !

1955ம் ஆண்டு சட்டம் வந்தது! சட்டத்தை கொண்டுவந்தவர்கள் முழு மனதோடு கொண்டுவரவில்லை என்பதும் தெரிந்தது தான்! அதில் தெரிந்தே அரசியல் சட்டத்திற்கு முரணாக சில  அம்சங்களைச் சேர்த்திருந்தனர்!ராமதாஸ்     மற்றும் சிலர் அதன சுட்டிக்காட்டி எதிர்க்கின்றனர் !

1989ம் ஆஅண்டு இந்த சட்டம் விரிவு படுத்தப்பட்டது! இதன் நன்மை தீமை பற்றி பலசந்தர்ப்பங்களில் விவாதிக்கப் பட்டுள்ளது! இது பற்றி பிரம் குமார் ஷிண்டே ஒரு புத்தகம் எழுதியுள்ளார்! "dalith --The broken future என்ற அந்த நூல் தீண்டாமைஎதிர்ப்பு முண்ணணி நண்பர்கள் அவசியம்படிக்க வேண்டிய ஒன்றாகும் !

நான் பணியாற்றிய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இட ஒதுக்கீடு ஆரம்பத்திலில்லை! அது அரசு நிறுவனம் அல்ல என்று காரணம் சொன்னா ர்கள்!ஊழியர் சங்கம் (aiiea ) கடுமையாகப போராடி இட ஒதுக்கீடு வந்தது !
தலித் நண்பர்களுக்கு அந்த சலுகையைப் பெற்றுத்தந்தது!

வெளியில் உள்ள தலித் உதிரி தலவர்கள் தங்களுக்கு க்கிடைத்த வாய்ப்பாக கருதி புதிய சங்கத்தை Lic க்குள் கொண்டுவர முயன்றனர் ! 

1989ம் ஆண்டு சட்டத்தில் "தலித் அல்லாத ஒருவர் தலித் ஒருவரை சாதி சொல்லி குறிப்பிட்டால் அது தண்டனைக்குரியது "என்ற விதியுள்ளது!

இந்தவிதியினை பயன்படுத்தி aiiea சங்க முன்னணியினரை இம்சைப்படுத்த சுய நல தலித் தலைவர்கள் முயன்றனர்!

சேலம்,சென்னை,தஞ்சை,மதுரை ,கோவை பகுதிகளிலிப்படியான வழக்குகள் பதியப்பட்டான!இதனை சட்ட ரீதியாக சந்திப்பதை தவுர வேறு வழியில்லை என்ற நிலைமை உருவாகியது ! 

அப்போது Writ மனுமூலம் தடை வாங்குவதில் சாமர்த்தியசாலியான  இளம் வக்கீல் சந்துரூ  அவர்களை அணுகினோம்! தடை உத்திரவு பெற்றுத்தந்த சந்துரு அவர்கள் இந்த வாழ்க்கை மேற்கோடு தொடர வேண்டாம் என்று கூறி னார்! 

நங்கள் சங்கத்தின் தலைமையை அணுகினோம்! அவர்களும் சந்துரு அவர்கள்யோசனைதான் சரி  என்று அபிப்பிராயம் கூறினார்கள்!

"தமிழகத்தில் உள்ள தலித்துகள் கொஞ்சம் பரவாயில்லை! மத்திய பிரதேசம்,மராட்டியம்,உ.பி,பிஹார் ஆகிய வட மானிலங்களில் உள்ள தலித்துகள் மனிதததன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள்! அவர்களுக்கு உள்ள ஒரே பாதுகாப்புஇந்த சட்டம் தான்! மேல் முறையீடு செய்தால் சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ultrevires என்று சட்ட புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விடும்! ஆகவே அந்த நிலையை நாம் உருவாக்க கூடாது" என்பது தான் ஆலோசனையாக வந்தது!

சட்டத்தைம்கொண்டுவந்தவர்கள் இண்டு இடுக்குகளை வைத்தே தான்
கொ ண்டு வருவார்கள்! அவர்கள் சட்டத்தை எதிர்ப்பவர்களையும் மனதில் கொண்டுதான திரிவார்கள் !

இந்த சட்டம் மேலும் பலப்படுத்தபட  வேண்டும்!

தமிழாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ஒய்வு பெற்ற நீதி  நாயகம் சந்துரு,மற்றும் சமுக ஆர்வலர்கள் இணந்து இது பற்றி விவாதித்து தலித் மக்களின் உரிமை களை பாதுகாக்க முடிவுகளை எடுக்க வேண்டும்! 

 Monday, March 11, 2013

சென்னை திரைப்பட சங்கமும் ,

சங்கங்களும் ........!!

சென்னை திரைப்பட சங்கத்தின் ஆண்டுவிழா ஆழைப்பிதழைப் பார்த்தேன்! பெருமையாகவும் பொறாமையாகவும் இருந்தது !

த.மு.எ.ச.வின் வளர்ச்சி பார்த்து பெருமை ! நான் ஓரமாக ஒதுங்கி இருக்க, கருணாவும்,விஜயனும்,முத்துவும் ஓடியாடி செயல்படுவது பார்த்து
பொ றாமை !

film society என்ற கருத்தாக்கமே  70ம் ஆஅண்டுகளில் தான் எனக்கு அறிமுகமாயிற்று! வியாபாரிகளின் குடும்பங்கள் பல எனக்கு பழக்கமுண்டு. (காப்பீடுதுறை  )வட்டிக்கடை செட்டியார்கள்,பலசரக்குகடை முதலாளிகள், நகைவியாபாரிகள் என்று பல குடும்பங்களைச்ச் சார்ந்த  இளைஞர்கள் எனக்கு பழக்கம்! இவர்கள் எல்லாருமாக சேர்ந்து ஒரு பிலிம் சொசைட்டி  வைத்திருந்தார்கள்  ஒருமுறை அழகேசன் என்ற நண்பர் என்னையும் அழைத்துக் கொண்டு போனார்!

பிரெஞ்சு படம்! thy name is hioshimaa  !கோதார்டு என்ற இயக்குனரின் படம்! அந்த படத்தில் படுக்கையறைக் காட்சி ! இருவருமே நிர்வாணமாக இருப்பர்கள் !அவர்கள் இருவரும்,யுத்த அபாயம்,அணுகுண்டு அபாயம்,சமூக பிரச்சினைகள் என்று பேசிக்கொண்டே இருப்பார்கள் !"வேலையே பாருங்கடா! பேசிக்கிட்டே இருக்கனுங்க! என்றான் அழகேசன் ! எனக்கு எரிச்சலாக இருந்தது 

இவர்கள் சொசைட்டி வைத்திருப்பதே  இத்தகைய சென்சாராகாத படங்களப் பார்பதற்கே என்பதை புரிந்து கொண்டேன் ! பார்வையாளர்கள் மொத்தம் முப்பது நாற்பது பேர் இருக்கும் ! அதில் வங்கி ஊழியர்கள் வெங்கடேஸ்வரன்,சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர் !

நாங்கள் புதிதாக ஒரு சொசைடி ஆரம்பிக்க முடிவு செய்தோம்! யதார்த்தா பிற  ந்தது!, டாக்டர் .கோவிந்தன், ஸ்ரீதர் ராஜன், டாக்டர் மோகன் என்று ஒரு ஜமா சேர்ந்தது உலகத்தின் மிகச்சிறந்தபடங்களைப் பார்க்க முடிந்தது. யதார்த்தாவின் மூலம் புனே திரைப்பட கல்லூரி நடத்திய "திரைப்பட ரசனை வகுப்புகளில் கலந்துகொண்டோம் ! 

ஒரு கட்டத்தில் யதார்த்தாவை நடத்துவதில்  சிரமம் எற்பட்டது! மாற்றல்,குடும்பம் என்றுஆகியது ! த.மு.எ.ச  எடுத்து நடத்த வேண்டும் என்று நான் விரும்பினேன்.சம்மந்தப்பட்டவர்களிடம் கலந்து கொண்டேன் ! அனுமதி  கிடைக்கவில்லை ! அப்போது நகரச் செயலாளராக இருந்த mm என்ற முனுசாமி தோழர ஏற்றுக்கொண்டார !  ஆனால்மாவட்ட அளவில் அனுமதி கிடைக்க வில்லை ! நொந்து நூலாகி விட்டேன்!
 
அதனால் என்ன !!
 
என் வாரிசுகள் வந்துவிட்டார்கள் !!

பின்னி பெடலெடுக்கிறார்கள் !!!


(1930 ஆண்டுகளில் madras film society ஆரம்பிக்கப்பட்டது! ஆரம்பித்தவர் காங்கிரஸ் தலைவர் தீரர் சத்திய மூர்த்தி! அது பற்றி தனி இடுகை போடவேண்டும்)
Saturday, March 09, 2013

"ரெட்டைமடி" வலையும் ,

தமிழக மீனவர்களும் .....!!!


மூன்று  பக்கமும் கடல் சூழ்ந்த இந்தியாவின் மொத்த மீனவர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் இலங்கையின் மக்கள் தோகையை விட அதிகமாக இருக்கலாம். இந்தக் கொள்ளையில் தினம் மீனவர் இலங்கை கடல் பகுதியில்தாக்கப்படுகிறார்கள்! திமுக  ஆட்சியில் இருந்தபோதும் கடிதங்கள் எழுதப்பட்டன! தற்போதும்  எழுதப்பட்டு  வருகிறது! மத்திய அரசும் எதாவது பதில் சொல்கிறது !

"உள்குத்து " ஏதாவது உள்ளதா? அப்படியானால் திமுக ,அதிமுக தலைமைக்கு  தெரியாதா?   தமிழ்  தேசீய சிங்கங்களுக்கு தெரியாதா ? இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது !  

ராமநாதபுரம்,உச்சிபுளி,மண்டபம்,நாகை என்று விசாரித்ததில்கிடைத்த தகவல்களை பதிவிடுகிறென்!  

பொதுவாக தமிழக மீனவர்களீடையேயே போட்டி உண்டு! வல்லத்தில் மீன் பிடிப்பவர்கள் ,படகில் செல்பவர்கள் ,விசைப்படகில் செல்பவர்கள் என்று போட்டி இருக்கும்!நமது கடற்பகுதியில் நண்டு,கடல்குதிரை,தான் கிடைக்கும்! 
இலங்கைகட்ற்பகுதியில் மின் வளம் அதிகம்! அந்தப் பகுதியில் மீனவர்களின்   எண்ணீக்கை குறைவு நம்மவர்கள் அங்கு சென்று மீன்பிடிப்பார்கள்! இலங்கை அரசும் "எதற்கு வம்பு" என்று வேடிக்கை பார்த்து வந்தது 

நம்ம ஊர் வியாபாரிக்கு "எச்சில்" ஊ ற  ஆரம்பித்தது ! ஒரு தரம் கடலுக்கு போக  50000 ரூ செலவழித்தாலும் இரண்டு முன்று லட்சம் கிடைக்கும் !

வலை பெரியதாகைருந்தால் பத்துலட்சம்கிடக்கும்! இதுல "ரெட்டைமடி " வலை ன்னு  ஒண்ணு இருக்கு! இதை போட்டா கடல்தரைமட்டம்வரைபோய் மீனை மட்டுமில்லாமல் குஞசுகுளுவான் ஒண்ணுமில்லாம  அ றிச்சிட்டு வந்துறும் !  அங்க ஆறு மாசத்துக்குமீன் இருக்காது ! வியாபாரிங்க இப்படி செய்வாங்கன்னு அரசாங்கங்களுக்கும் தெரியும் ! அதுனால தான் ஜூலை ஆகஸ்டு மாதத்துல 45 நாள் மீன்பிடிக்க தடை செய்யறாங்க! 

இலங்கை மீனவர்கள் பிடிச்சிட்டு போங்கப்பா! கொஞ்சம் எங்களுக்கும் விட்டுட்டு பிடிங்க ங்காங்க !   

வலைய அறுப்பதும், பிடித்த மீனை கடல்ல கோட்டரதுமதுக்காக தான் !மிஞ்சிய  முட்டை ,தலைபிரட்டையாவது வளரட்டுமே என்பதுதான் !

இது அம்புட்டு பேருக்கும் தெரியும்!

வியாபாரியை பகைச்சுக்க முடியுமா!

இது இலங்கை,தமிழக மீன் வியாரிகள் போடும் நிழற்சண்டை!! 

   

Thursday, March 07, 2013

"துரோகமே "உன் பெயர் .......?


(தென் அமெரிக்கநாடுகளின் முகப்பையே மாற்றி அமைத்த மாமனிதர் சாவேஸின் மரணம் பற்றி முகனூலில் தமிழ் தேசிய குஞ்சுகள் எழுதிய பின்னுட்டங்கள் மனதை நோகடிப்பதாக  இருந்தது ! அவர்கள் திருந்தவும் போவதில்லை !  அப்பாவி இலங்கை தமிழர்களின் பெயரைச் சொல்லிவயிறு வளர்க்கும் தலைவர்களின் தொண்டரடிபொடிகள் அவர்கள் ! ஆனாலு ம்
நினைவிலிருப்பதை சொல்லித்தானே ஆகவேண்டும் ! இதோ .....)

தமிழ் ஐக்கிய விடுதலை இயக்கம் (tamil united liberation front )  என்ற அமைப்பு (1989)செயல்பட்டு வந்த காலம்! நீலம்திருச்செல்வன் ,அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்,சிவசிதம்பரம் என்று பலதலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காகபோறாடி வந்தார்கள். 
மலேசியா எப்படி சிங்கப்பூரை தனி நாடாகசம்மதித்ததோ அதேபோல் தமிழர் களுக்கும்தனிநாடு அளிக்க இலங்கை அரசுசம்மதிக்க வேண்டும் என்று கோரியவர்கள் அவர்கள்! பின்னர் அது சர்வதேச அங்கீகாரம் பெறாதுஎன்று  உணர்ந்து  அதன கைவிட்டவர்கள் இவர்கள்!

இவர்களின் தலைவர் நீலம் திருச்செல்வன் கொல்லப்பட்டார்! 

Tulf  ன் போதுச்செயலாளராக அமிர்தலிங்கம் வந்தார்! அதன் அரசியல்தலமை க்குழு உறுப்பினரில் ஒருவர் யோகேஸ்வரன் !

போராளிகளுக்கும்,tulf க்கும் இடையேயுள்ள கருத்து வித்தியாசத்தை களைந்து விட முயற்சிகள் நடந்தது! இதில்மிகவும் ஆர்வத்தோடு செயல்பட்டவர்  யோகேஸ்வரன்!  தமிழ் இளைஞர்கள் விசு,என்பவரும்,அலோசியஸ் என்பவரும் இதில்  யோகேஸ்வரனோடு ஒத்துழைத்தார்கள்!யோகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்கள்! அவர்வீட்டுக்கு எப்போது வேண்டுமானலுமவர்கள்போகமுடியும் ! அப்போது tulf  தலவர்கள் கொழும்பு நகரத்திலிருந்தனர்!

யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்தோடு பேச விரும்பினார்! அப்போது அவரோடு விசு,அலோசியஸ் ஆகிய இருவரோடு விஞ்ஞான் என்பவரும் இணந்து கொண்டார்! மற்றொரு தலைவரான் சிவசிதம்பரமும் இருந்தார்! அவர்கள் உள்ளெ செல்லும் போது செக்யுரிட்டி சோதன இட வந்தார்! விசுவும்,அலோசியஸும் என் நண்பர்கள் அவர்களை சோதன இட வேண்டாம் என்று யோகேஸ்வரன் கூறி  தடுத்து விட்டார்!
விஞ்ஞான் வாசலிலேயே நின்றுவிட்டார்! மற்றவர்கள் விட்டினுள்ளே சென்று விட்டனர்!
வரவேற்பறையில் அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன்,சிவசிதம்பரம் விசு ,அலோசியஸ் ஆகியோருக்கு யோகேஸ்வரனின் மனைவி சரீஜினி அவர்கள் தேனீர் அளித்தார் ! அவர் வீட்டினுள்  சென்றதும் விசுவும் அளொசியஸும் துப்பாக்கியால் சுட்டனர் ! அமிர்தலிங்கம்,யிகேஸ்வரன்  ,அந்த  இடத்திலேயே இறந்தனர்! சிவா சிதம்பரம் காயங்களோடுதப்பினார்! 


விசு,அலோசியஸ்,விஞஞன் மூவரும்  போராளி குழுவைச்  சேர்ந்தவர்கள்! யோகேஸ்வரனின் நம்பிக்கையை பெற நடித்தவர்களென்று பின்னர் தெரியவந்தது! 
 

Sunday, March 03, 2013

(சென்ற ஆண்டு மார்ச் மாதம்  எழுதியது )
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Saturday, March 31, 2012

இலங்கைத் தமிழருக்காக .........
இலங்கை தமிழர்களுக்காக........

இலங்கை ராணுவத்தின் திறமை பற்றி ஒரு அனுமானமுண்டு . கிட்டத்தட்ட இருபது விமானங்கள் பராமறிப்பு இல்லாமல் ,இயந்திரக் கோளாரினா ல் வீழ்ந்து நொறுங்கின.தற்போது கற்ற பாடமும் நல்லெண்ணமும் என்ற அறிக்கை ( L.L.R.C) புதிய தகவல்களத்தருகின்றன.

போர் முடிந்து பரிசொதனையில் இந்த விமனங்கள் விடுதலைப்படயினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது/ அவர்களின் ஆயுத்க்கிடங்குகளில் மிச்சமிருந்த எவுகணைகளை இலங்கரா
ணுவம் கண்டெடுத்துள்ளது.இவை ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா ,சீனா போன்ற நாடுகள் எதிர்த்தன .அதற்காக அந்தநாடுகளை திட்டியவர்கள் --அம்மா,அக்க பேரைச்சொல்லவில்லை--உண்டு .நிருபர்கள் கேட்டால் ரஷ்யத்தலைவர்கள். மறுப்பார்கள்.ஏனென்றால் இதில் ராஜீயச்சிக்கல் உண்டு
எனது குடும்பத்தச்சேர்ந்தவர் விமானப்பட்டையில் இருந்தார். தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்தர். "என்ன செய்ய மாமா ! அமதிப்படன்னு தான் பேரு! ஹெலிகாப்டர் வந்தா கைகால் போன சொல்ஜர்கள்தான். பாதிப்பேர் தமிழ் பேசரவங்க" என்பார்.

என் சகோதரரின் மகளுக்கு திருமணம் ஆகும்போது மாப்பிள்ளை காஷ்மீரி இருந்தார்.தமிழர் என்பதால் அமைதிபடை மூலம் இலங்கை சென்றார்.எனக்குப் பெருமைதான். வெளிநாட்டில் இருப்பது பெருமை இல்லையா? கூடுதல் சம்பளம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. நீங்க ஒண்ணு! முக்காத்துட்டு கூட தரமாட்டான் .கைகால் போச்சுன்னா ஆக்சிடென் கணக்கு .அமைதிப்படையில்லா? என்றார். மனம் "திக்" என்றது.

கார்கில் போரின் போது சவப்பெட்டியைச்சுமந்து வந்து" ஓட்டு" கேட்டது ப.ஜ.க அப்போது இறந்த தமிழர்களைவிட அமைதிப்படயில் இறந்த தமிழாகத்து சோல்ஜர்கள் அதிகம்.இவை எல்லம் வரலாற்றின் இண்டு இடுக்குகளில் தான் இருக்கும் .இவற்றை அதிகார பூர்வமாக எற்கவோ மறுக்கவோ மாட்டார்கள்.

எண்பதாம் ஆண்டுகளில் மதுரை பாத்திமா கல்லூரிக்குப் பின்புறம் உள்ள சாந்தி நகரில் குடியிருந்தேன். அங்குள்ள ரயிலார் நகரை ஒட்டி கண்மாய்.மழை காலத்தில் மட்டுமே நீர் இருக்கும். சிறுவர்கள் கிரிக்கெட்,கால்பந்து விளையாடுவார்கள்.விடுதலைபடையினர் அங்கு பயிற்சி எடுப்பார்கள்.கூடல் நகரிலிருந்து அலங்காநல்லுர் வரை " ரூட்மார்ச்சு" நட்த்துவார்கள். அலங்காநல்லுரூர் அருகில் உள்ள அணைக்கரையில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும். வத்திறாயிருப்பு,குற்றாலம்,ஆனைமலை , மத்தியப் பிரதேச காடுகளில் பயிற்சி நடக்கும். இது உலகம் பூராவும் தெரியும்.

இந்திரா அம்மையார் காலத்திலும் நடந்தது. ராஜீவ் காலத்திலும் நடந்தது.

இந்தியாவின் நல்லேண்ணத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது யார்?

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டது யார்?

கோவணத்தையும் இழந்து நிற்பது யார்?ழுதிய பதிவு .   இங்கு மீண்டும் வருகிறது )

Friday, March 01, 2013

சமணர்களும் துறவறமும் ......!!


பதிவர் தோழர் ராமன் அவர்கள் "முரண்பாடாய்  ஒரு துறவரம்" என்று இடுகையிட்டிருந்தார்! சமணர்கள் கூடுதலாக வாழும் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சமண பெண் துறவரம் மேற்கொண்டது பற்றிய பதிவு அது!

மிகவும் விமரிசையாக நடத்தப்பட்ட நிகழ்வாக இருந்தது என்றும் உலகத்தைத் துறந்து வாழப்போகும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்றும் கேட்டிருந்தார் !

ஏனோ தெரியவில்லை எல்லா மதத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது !

ஏசுவுக்கு ஊழியம் செய்ய பெண்கள் வரும்போது    அதனை  விழாவாக கொண்டாடுகிறார்கள் !

காஞ்சி சாமியார் குளத்தில்குளித்து பூணுலை அறுத்து சந்நியாசம் வாங்குவது ஒரு திருவிழாவாக நடந்தது !

குஜராத்திலும்,ராஜஸ்தானிலும் இன்னும் பெரியதாக  சமணர்கள் நடத்துவார்கள்!

தமிழ் இலக்கியத்திற்கும்,வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, சமணர்களின் பங்களிப்பு மகத்தானது !

ஐம்பெரும்காப்பியங்களில்   ஒன்று  கூட சைவ வைணவ புலவர்களால் வந்ததில்லை!

நாகமலை,ஆனமலை,திருப்பரம் குன்றம்,கழுகுமலை குடக்கோவில்கள்  சமணர்கள் தந்தது !

இன்று ஆனமளையிலும், நாகமலையிலும் உள்ள சிற்பங்களும்,பள்ளி,படுகைகளும் "கல்குவாரி" களாக மாறிக் கொண்டு வருகின்றன!

கேட்க நாதியில்லை !

சமண  மதத்துப் பெரியவர்கள் தங்கள்மதச் சின்னங்களைக் காக்கவாவது இதில் தலையிடலாம்!

வசதி படைத்தவர்கள் அதிகம்கொண்ட இந்தசமூகத்தினரின் பார்வைஇந்த திசைவழியில் செல்ல வேண்டும்!

வர்த்தகச் சூழல் அவர்கள் கண்ணை மறைக்கிறது ! 

மும்பையில் நான்கு இடங்களில் ஆடுமாடுகளை வெட்டி மாமிசம் தயாரிக்குமிடம் உண்டு !

அதில் மூன்று  இடங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் சமணர்கள் !

ராமன் அவர்களே! மதமே முரண்பாடாய் இருக்கிறதே!!

என்ன செய்ய?