Tuesday, November 30, 2010

கடல்----

கடல்......


மதுரையில் பணியாற்றுவதற்கு முன்பாக நான் ஹைதுராபாத்தில் பணியாற்றினேன். ஹைதிராபாத்தையும் செகந்திராபாத்தையும் இரட்டை நகரம் என்பார்கள். இரண்டு பகுதிக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது.(57-58ம் ஆண்டு) அந்தக்குளத்திற்குப் பெயர்தான் ஹுசைன் சாகர்.

மத்திய இந்தியாவின் மையப்பகுதிகளில் பெரிய கம்மாய் என்றாலே சாகரம் என்று பெயர்வைத்து விடுவார்கள். .இங்குள்ள மக்கள் 500லிருந்து 1000 மைலாவது சென்றால் தான் கடலைப் பார்க்கமுடியும்.இந்தபகுதியின் தென் கோடியில் இருப்பதுதான் தக்காண பீடபூமி.

ஹைதிராபாத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் உண்டு.அப்பொது நான் திராவிடநாடு பிரிந்தால் தான் நாம் உருப்படுவோம் எனும் விடுதலை இயக்கத்தின் ஆதரவளன்.தெலுங்கானா மக்கள் நம்ம திராவிட நாட்டவர்கள் என்ற எண்ணமும் உள்ளூர இருந்தது

ராமாராவ்,ராம்மோகனராவ்,அனுமந்தராவ்,ரஃபீக் அகமது ஆகியோர் எனக்கு நெருக்கமானவர்கள்.. மதிய உணவு இடைவேளையில் பெசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் "கடல்" பற்றியதாகத்தான் இருக்கும்.அவர்கள் சமுத்திரத்தையே பார்த்திராத்வர்கள்.

"வேவ்ஸ் ஐஸி ஆதி கியா?" என்று ராமாராவ் கைகளை உயர்த்திக்காட்டுவான். பரிதாபமாக இருக்கும்.

"நான் சமுத்திரத்தை சினிமாவில் தான் பர்த்திருக்கிறேன்" என்பான் ரஃபிக்.நான் அள்ளி விடுவேன். அலைகளின் மிது ஏறி விளயாடுவது பற்றி அளப்பேன்.

ராமேஸ்வரத்தில் குளித்திருக்கிறேன்.குளத்தில் கூட கொஞ்சம் கூடுதலாக அலைவீசும்.திருச்செந்த்தூரில் குளித்தது பற்றி அளப்பேன்.இறுதியில்.நான் அவர்களை அழைத்துக்கொண்டு மெட்றாஸ் போய் மெரினா பீச்சை காட்டுவதாக உறுதி அளித்ததும் கலைவோம்.இது தினம் நடக்கும்.

ஹைதிராபாத்.நாகபுரி,ஜான்சி, போபால்,டெல்லி, ஏன் அயொத்தி ஆகியநகரங்களில் உள்ளவர்களில் பலரின் நிலமையும் இது தான். டெல்லியிலிருந்து சென்னை வரும் வடநாட்டவர்கள் கூடூர் தாண்டியதும் சமுத்திரம் தெரிகிறதா என்று பார்க்க ஆரம்பிப்பார்கள்.பார்த்தவுடன் பெரியவர்கள், முதியவர்கள் கன்னத்தில் பொட்டுக்கொள்வார்கள். குழந்தைகல் குதூகலிப்பார்கள்.

மத்தியப்பிரதேசத்தின் விந்தியமலையின் ஒரு சிகரம்தான் திரிகோணமலை. அதன் அடிவாரத்தில் உள்ள பெரிய நீர் நிலையை வால்மீகி கவித்துவமாக சாகரம் என்று கூறியுள்ளார். அங்குள்ள கொண்டு இன மக்களின் தலவனை இன்றும் ராவணண் என்று அழைக்கிறார்கள் என்று கூறுவொரும் உண்டு.

வால்மீகி ராமாயணத்தை குறிப்பாக உத்தரராமாயணத்தை படிக்கக்கூடாது என்பார்கள்.எதைக் கூடாது என்கிறார்களோ அதனச்செய்து பார்பது மனித இயல்பு.நானும் மனிதன் தானே. மலையாளத்தில் "காஞ்சன சீதா" என்று ஒரு திரைப்படம் வந்தது.அரவிந்தன் எனற புகழ் பெற்ற இயக்குனர் எடுத்தது.ராமர் யாகம் செய்கிறார். சீதையில்லாமல் யாகம் செய்யமுடியாது. அதனால் தங்கத்தால் சீதையின் பதுமை செய்து அருகில் வைத்துக்க்கொண்டு யாகம் செய்கிறார்.

ராமர் பிறந்த இடத்தை நீதிமன்றமே அடையாளம் காட்டிவிட்டது. "வில் ஒன்றும் சொல் ஓன்றும்" கொண்ட விரன் ராராமன்.பராக்கிரமத்தில் அவனுக்கு ஒப்பார் இல்லை. அவனுடைய நினவிடம் எது?

அரவிந்தன் அடையாளம் காட்டுகிறார். யாகம் முடிந்து சரயு நதிக்கு நீராடச்சென்ற ராமர் "கசத்தில் " விழுந்து இறக்கிறார்.

ராமருக்கு நீந்தத் தெரியாது!

Sunday, November 28, 2010

ரயில்........

ரயில்.....


நான் பிறந்துவளர்ந்தது திருநெல்வெலி பாட்டப்பத்து கிராமம்.அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. பள்ளியின் பின் புறம் வாய்க்கால்.அதன் மீது ரயில் பாலம். ரயில் வரும் நேரம் பார்த்து"சார்"என்று ஒற்றை விரலைக்காட்டிவிட்டு ரயில் கடகட சத்தத்தோடு பொவதைப் பார்க்க ஓடுவோம்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொது திலி டவுண் ரயிலடி வழியாகச்செல்வோம்.நின்று கிளம்பும் ரயிலில் "மோஷனில்" ஏறி இறங்குவோம்.ம.தி.த இந்து கல்லூரி திலி ஜங்ஷனில் உள்ளது.அங்கு இண்டர் படித்தேன்.கல்லிடைக்குரிச்சியிலிருந்து தினம் 22மைல் ரயிலில் வந்து படித்தேன்.இதுவல்லாம் முக்கியமல்ல. அப்பொது நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது.சென்னயிலிருந்து நாகர் கோவிலுக்கு டிக்கெட் கொடுப்பார்கள். திலி.ஜங்ஷனில் இறங்கி out agency எனப்படும் பயோனியர் பஸ்மூலம் நாகர்கொவில் செல்லவேண்டும்.

களக்காடு தொடங்கி கன்யாகுமரி வரை ரயில் கிடையாது. கல்விச்சுற்றுலா என்று கூறி பள்ளீ மாணவர்களை ரயில் பார்க்க ஜ்ங்ஷன் அழைத்து வந்து பர்த்தால் உண்டு.அந்தக் காலத்தில் ரயில் பார்க்காத கல்லூரி மாணவர்கள் குமாரி மாவட்டத்தில் உண்டு.

பல மாநிலங்களில் பணியாற்றிவிட்டு மாற்றலில் மதுரை வந்துசெர்ந்தேன்.மேற்கு வெளிவீதியில் உள்ள பாரத் கட்டிடத்தில் தான் அலுவலகம்.புதிதாக .நியமனம் பெற்றவர்களில் நாகர்கோவிலைச்சார்ந்த மூன்று பெர் அதில் உண்டு.ரயிலையே பார்க்காதவர்கள்.வெளிவீதிக்கு அடுத்து மதுரை குட்ஷெட்.,ரயில்நிலயம் உள்ளது.

நாகர்கொவில் பையங்கள் முன்று பெரும் காலையிலேயே வந்துடுவிடுவார்கள்.மூன்றாம் மாடிக்குச்சென்று ஜன்னல் அருகில் நிற்பார்கள்."எல!ராமந்த்ரா! எல!இஞ்சினுல! எம்புட்டு பெரிசு பாத்தியால! இங்கவால!" துரைசாமி ராமச்சந்திரனைக் கூப்பிடுவான்."சும்மாகெடக்கணம் தொரை! மெள்ள பேசேம்ல! இந்த ஊர் புத்திமான் நம்மள பட்டிக்காட்டான்னு நினைக்கப்போறான்" என்று ராமந்ரன் பதில் சொல்லுவான்.மூண்றாவதாக உள்ள விட்டல் தாஸ் அழுத்தமானவன். அமைதியா பார்த்துக்கோண்டிருப்பான்.

மாலை 5மணியானால் அருகில் இருக்கும் ரயில் நிலையம் சென்று விடுவார்கள்.இஞ்சின் அருகில் இருந்து சாவி மாற்றுவதைப் பார்ப்பார்கள். டிரைவர்,கார்டு,டி.டி.இ, பாயிண்ட்ஸ்மான்,ஏன் பொர்டரிடம் கூட ரயிலைப் பற்றி அதிசயிப்பார்கள்.

இப்போது ராமசந்திரன் மகன் ஒருவன் டெல்லியிலும்,மற்றோருவன் சிங்கப்பூரிலும் இருக்கிறான்."டெல்லிபோகும் போது சொல்லேன்ரயிலடியில் பார்க்கிறேன்"என்றால்" எங்கப்பா!இந்தப் பயிலுக ரயில ஏறப்படாதுங்கா.பிளைட் தான் இப்போ"என்று பதில் வருகிறது.குமரி மாவட்ட c.i.t.u தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

துரைச்சாமி பேரன் பேத்தியோடு சவுகரியமாக இருக்கிறான். விட்டல் தாசின் ஒரே மகள் அமெரிக்காவில் வசிக்கிறார்.

Friday, November 26, 2010

"மழை"....

மழை


தீராதபக்கங்களில் பதிவர் மாதவராஜ்."மழைக்காலம்"என்றொரு அற்புதமான பதிவினை இட்டிருந்த்தார்.வேப்பமரத்தின் கிளையில் நனைந்த காகம் கரையாமல் அமர்ந்திருந்ததயும், பச்சைநிற பூச்சி ஒன்று ஊர்ந்துசெல்வதையும் வர்ணித்திருந்தது அழகுணர்வின் உன்னதமாக இருந்தது." இன்னைக்கு எங்களுக்கு லீவு" என்று சிறுவர்களும்,சிறுமிகளும் கூவிக்கொண்டு ஒடும்போது நாம் கால தேச வர்த்தமானங்களை மறந்து பரவசப்பட்டோம்.

நான் இப்போது வசிப்பது நாகபுரியில்.இந்த ஊரின் கோடை வெப்பம் உங்களுக்கு நினவில் வரலாம்.இந்த ஊரின் மழையும்,பனியும் கூட அற்புதமான அனுபவத்தைக்கொடுக்கும்.

மழை என்பது வானுக்கும் பூமிக்கும் கடப்பாரைக்கம்பிகளால் சாரம் கட்டியதுபோல் இரண்டுநாள் மூன்றுநாள் அடிபின்னும்.நீரில்லை என்ற நிலமை வந்தது கிடையாது.ஊர் எப்போதுமே பச்சைப்பசேல் என்றிருக்கும் "மாசற்ற சூழலைக் கொண்ட ஒரே நகரம்" என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஊர் இது.

தேசீய சுற்றுச்சூழல் பொறியியல் ஆரய்ச்சி மையம்(.NEERI).இங்குதான் உள்ளது.தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலைக்கு அனுமதிமறுத்த நிருவனம் அது மழை பெய்தால் ரயிலடியில் ரயில் வருவது.தெரியாத அளவிற்கு கொட்டும்.

சமிபத்தில் மதுரை நண்பர்கள் சிலர் டெல்லி சென்றார்கள். அவர்களைச்சந்திக்க ரயிலடி சென்றிருந்தேன். மழை கொட்டியது.நிலயக் கட்டிடத்தை நோக்கி ஓடினேன். வாசலில் வெட்டவெளியில் சிறுவர் சிறுமியர் உள்ளாடை மட்டும் அணிந்துகொன்டூ மழையில் நனைந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்தால் இந்தியர்களைபோல் தெரியவில்லை. செக்கச்செவேல் என்று ஈரானியர்களைப் போல் இருந்தார்கள்.அவர்களின் உதவியாளர்களைப் போல் இருந்தவரிடம் விசாரித்தேன்.அவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள்.ஷேக் குடும்பம். உதவியாளர் மெலும் சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவர்கள் ஊரில் மழையே பெய்யாதாம். குழந்தைகளுக்கு மழை என்றால் என்ன வென்றே தெரியாது.ஷேக்குகள் குழந்தகளை மே, ஜூன் மாதங்களில் மும்பை அழைத்து வந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி மழைக்காக காத்திருப்பார்கள். மழை வந்ததும் புல்வெளியில் நனைந்து ஆடிப்பாடி மகிழ்வார்களாம்.

பூமிப்பந்து எப்படிப்பட்ட பூகோள அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கிறது!

மழையைப் பார்க்காதவர்கள் உண்டு..... சரி!

ரயிலைப் பார்க்காதவர்கள் உண்டா?......உண்டு.

Thursday, November 18, 2010

டாக்டர் அம்பேத்கரும் நாமும்....

அம்பபேத் கரும் நாமும்


" டக்டர் பாப சாகெப் அம்பெத்கர்" என்ற தமிழ் திரப்படம் டெசம்பர் மாதம் 3ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.கம்ய்னிஸ்ட்கள் எடுத்த "பாதைதெரியுது பார்"என்ற படத்தை விநியோகிப்பதற்காக ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாங்கினார்.பெரிய கம்பெனி-அனுபவஸ்தர்-படம் சக்கைபோடு போடும் என்று தோழர்கள் மகிழ்ந்தனர்..சென்னைக்கு அருகிலுள்ள கிராமத்து கீத்துகொட்டகையில் ஒருவாரம் ஒட்டிவிட்டு பட டப்பாவை கிட்டங்கியில் பொட்டுவிட்டார்.அந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன்.ஜயகாந்தன்.கெ.சி.அருனாசலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.இசைத்தட்டு விற்பனைமட்டுமே நட்டமில்லாமல் ஆக்கியது.

டாக்டர் அம்பேத்கர் படத்தையும் அப்படிப்பண்ணக்கூடிய ஆபத்து தெரிவதால் இதுபற்றி படத்தை பார்க்க மக்களைடம் போகவேண்டும் என்ற யோசனையும் வந்தது.அந்தப்படம் பற்றி ஒருஇடுகை எழுதியிருந்தேன்.

வெளிநாட்டு நண்பர் ஒருவர் " நான் பள்ளியில் படிக்கும் போது காந்தி,நேரு பற்றி படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு அம்பேத்கர் பற்றி தெரியவில்லை.நான் படித்த பள்ளியில் மட்டும் அப்படியா?" என்று எழுதியிருதார்.

மற்றொரு நண்பர்" நானும் படித்ததில்லை. திருமாவளவன்,கிருஷ்ணசாமி போன்று மராட்டியத்தில் அம்பேத்கரும் ஒரு தலைவர் என்று தான் கருதியிருந்தேன்" என்கிறார்.

" நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு இவையெல்லாம் பாடமாக இருக்கவில்லை' என்று கூறினார் இவர்களில் பலர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

இன்றய தமிழக தலித் தலைவர்கள் "அம்பேத்கர்" பெயரைச்சொல்லி தங்களை வளர்த்துக் கொண்டார்களோ என்று தோண்றுகிறது.மராட்டிய நண்பர்கள் சிலரிடம் பேசினேன்." அவர்கள் தங்களை " தலித்" என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அழைத்துக் கொள்வதில்லை. "நான் ஒரு அம்பெத்கரைட்" என்று நெஞ்சுயர்த்தி கூறி கொள்கிறார்கள்." அம்பேத்கரைட்" என்பது ஒரு இயக்கமக மாறியதால் தான் அவர் பெயர் நிலைத்துவிட்டது.

அம்பேத்கர் ஒரு "பௌத்தர்" என்று கூறிக்கொண்டு பௌத்த மதத்தை வளர்க்கும்சாக்கில்,தலித்துகளை புறந்தள்ளும் பணிக்கு ஜப்பான், தாய்லாந்து நாடுகள் மூலம் கோடிகணக்கில் நிதியாதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அம்பேத்கர் வாழ்ந்த காலதில் கடுமையாக போராடவேண்டியதிருந்தது.

அவருடைய மரணத்திற்குபிறகும் இதே நிலை தொடரலாமா?

Tuesday, November 16, 2010

டாக்டர் பாபா சகேப் அம்பெத்கர் திரைப்படம்......

டாக்டர் பாபா சாகேப் அம்பெத்கர் திரைப்படம்....


டிசம்பர் மாதம் 3ம் தேதி அன்றுஅண்ணல் அம்பெத்கரின் வாழ்வினைச்சித்தரிக்கும் திரைப்படம் தமிழில் வெளியிடப்படுகிறது.இதில் அம்பேத்கராக நடித்த மம்முட்டிநடிப்புக்கான தேசீய விருதினைப் பெற்றார். நிதின் தேசாய் கலை இயக்குனர் விருதினைப்பெற்றார். இதனை இயக்கிய டாக்டர் ஜப்பார் படெல் சிறந்த இயக்குனருக்கான விருதினை ஏற்கனவே பெற்றவர்.

பூனே நகரத்தில் உள்ள குழந்தை மருத்துவத்தில் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் டாக்டர் படெல். அவருடைய இதய தாகம் நாடகங்கள்..Theatre Accademy என்ற அமைப்பை உருவாக்கினார். விஜய் தெ.ண்டுல்கரின் உலகப்புகழ் பெற்ற நாடகமான "காசிராம் கொத்வால்" நாடகத்தை இயக்கியவர் ஜப்பார் படேல்.

"தலித் இலக்கியம் மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அது உயர்ந்த நிலைக்குச்சென்றது. பலமானதும் கூட.அதனால் புத்தியுள்ள மராட்டியனுக்கு அம்பெத்கர் யார் என்று தெரியும் யாரும் தலித் இலக்கியத்தை ஒதுக்கமுடியாது" என்கிறார் ஜப்பார் படெல்.

" அம்பேத்கர் பாத்திரத்திற்காக வெளிநாட்டில்கூட தேடினோம்.இறுதியில் இரண்டு பேரை முடிவு செய்தோம். அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்க நினைத்தோம் ஆனால் எனக்கு மமுட்டி மீது ஒரு கண் இருந்தது.மூன்றாவது நபர் மூலம் தொ.டர்பு கொண்டபோது ஒரு புன்னகை தான் பதிலாக வந்தது.கம்ப்யூட்டர் மூலம் அவர் முகத்தில் சில மாற்றங்களை வரைந்து பார்த்தேன். அம்பேத்கருக்கு மிக நெருக்கமான உருவ ஒற்றுமை.கிடத்தது" என்று விளக்கினார்.

" நடிக்க ஏற்றுக்கொண்ட பிறகு அவரிடம் ஏற்பட்ட மாற்றம் அற்புதமான ஒன்று. அம்பேத்கர் மாதிரியே புன்னகை. அவரைமாதிரியே கோபம்.அவரை மாதிரியே அறிவார்ந்த பாவனையை கொண்டுவந்த அழகை படம் பார்த்துத்தான் அனுபவிக்கவேண்டும்.உள்ளார்ந்த ஈடுபாடுஇல்லையென்றால் இதனைச்சாதிக்கமுடியாது" என்று வர்ணித்தார்.

"நான் சொல்வதை மிகக் கூர்மையாகக் கவனிப்பார்.திரைக்கதையை மீண்டும் மீண்டும் படிப்பார்.அம்பேத்கர் என்ற மாமனிதரை உள்மனத்தில் அறிவின் உதவியோடு நிர்மாணித்துக் கொண்டார். படத்தில் அவருக்கு மிகப்பெரிய உரைகள் கிடையாது.மௌனத்தின் மூலமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தினார்." என்கிறார் ஜப்பார் படேல்..

"காந்தியைப்பற்றி அதிகம் சொல்லவில்லை என்ற விமரிசனம் எழுந்ததே ?"என்று கேட்டபோது"நான் அம்பேத்கர் பற்றிதான் படம் எடுக்கிறென்.அதில் காந்திக்கு எவ்வளவு இடமுண்டு' என்றார்.

"அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் படித்தகாலத்தில் அந்த வளாகத்திற்குள் கருப்பின மக்கள் நுழையக்கூடமுடியாது. பல்கலைகழகத்தின் எதிரில் தான் நிக்கிரோக்களின் செரி.அந்த்ப் பகுதியில் அவர் நடந்து சென்றிருப்பாரே! ஏதாவது நட்ந்திருக்குமே" இவை எல்லம் என்மனதிலோடியவைகள்.நாங்கள் அங்கே சென்றும் படம் பிடித்தோம்"

"காந்தி படத்திற்கு 18 கோடி கொடுத்தார்கள். இந்தப்படத்திற்கு மராட்டிய மாநிலம் ஒரு கோடி கொடுத்தது.மத்திய அரசு 5கோடி கொடுத்தது." என்று ஜப்பார் படெல் குறிப்பிட்டார்.

Monday, November 15, 2010

முகேஷ் அம்பானியின் 27மாடி வீட்டில் ஒருநாள்.......

முகெஷ் அம்பானியின் 27 மாடி வீட்டில் ஒரு நாள்...


. மும்பையில் 8000கோடி ரூபாயில் 27மாடி வீட்டில் தான் முகேஷ் அம்பானி வசிக்கிறார். அவருடைய வீட்டில் ஒரு நாள்.......

காலை 6மணிக்கு 15வது மாடியிலிருக்கும் அவருடையபடுக்கை அறையில் எழுந்து விடுவார்.எழுந்ததும் குளத்தில் போய் குளிப்பது அவருடைய வழக்கம்.

17வது மாடியில் அவருக்காகவே ஒரு குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளம்.அங்கு போய் குளிப்பார்.

குளித்ததும் காலை சிற்றுண்டி வேண்டுமல்லவா! அதற்காக 19வது மாடிக்குச் செல்வார். அதன் பிறகு

வெளி வேலைகளுக்குச்செல்லவேண்டும்.உடைமாற்ற 14வது மாடிக்கு ச்செல்வார்.வெளியே செல்வதற்கு முன் அவருடைய தனி அலுவலகம் இருக்கும் 21வது மாடிக்குச்சென்று தேவையான கோப்புகள், கைபெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்வார்.

அவருடைய நீதபாய் அம்மையாரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவர் வெளியே சென்றதில்லை. அவரிடம் சொல்லுவதற்காக 16வது மாடிக்கு செல்வார். குழந்தைகள் 13வது மாடியில் தான் தங்குகின்றன போவதற்கு முன் அங்கு சென்று குழந்தைகளிடம் "டாடா" வங்கிக்கொண்டு புறப்படுவார்.

அவருக்கு எப்போதுமே மெர்சிடெஸ்-பென்ஸ் வண்டி என்றால் பிடிக்கும்.250லட்சம் ரூபாயில். (2.5கோடி) நிற்கிறது.கார்களை நிறுத்துவதர்க்காகவே மூன்றாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதுமே அவருக்கு மெர்சிடெஸ்-பென்ஸ் காரை அவரே ஓட்டிச்செல்வதுபிடிக்கும். மூன்றாவது மாடிககுச்சென்று காரைத்திறக்க சாவியை எடுக்.... சாவியில்லை.பாண்ட் பாக்கட்டில் தெடினார். கோண்டுவரமறந்துவிட்டர். எங்கு விட்டிருப்பேன்? எந்த மாடி? 15ஆ?17ஆ? 13,16, 19,21? பணியாட்கள்,சமயல்காரன்,காரோட்டிகள், தோட்டக்காரன். எல்லாரும் தெடினார்கள். கிடைக்கவில்லை.வருத்தத்தோடு "அயோனா" வண்டியை எடுத்துக்கொண்டு போனார்.

அவருடைய வீட்டில் துணி துவைக்கும்பெண்வரவில்லை.தாற்காலிகமாக ஒரு பெண் வந்து கொண்டிருந்தார்.16வ்து மாடியின் பால்கனியில் உலர்த்தியிருந்த பாண்ட் காற்றில் பறந்துபோய்விட்டது சாவீ அந்த பாண்டில் தான் இருந்திருக்கும் என்று நீதுபாய் கருதுகிறார்.

இரண்டு நாள் கழித்து நீதுபாய் கேட்டார்" ராத்திரி பூராவும் ஒரே சத்தம்".விர்-விர்" என்ற சத்தத்தில் தூங்கவே முடியவில்லை.நீங்கள் லேட்டாக வந்தீர்களா?" என்று அம்பானியிடம் கெட்டார்." இல்லையே" என்றார் அவர்மெர்சிடேஸ்- பென்ஸ் கம்பெனி ஜெர்மனியில் இருக்கிறது.சாவி தொலந்துவிட்டது அல்லவா? புது சாவி வாங்க ஜெர்மனி போன ஹெலிகாப்டர் சாவியோடு திரும்பிவந்து 27வது மாடியில் இறங்கிய சத்தம் தான் அது.

(நெட்டில் சுட்டு கொஞ்சம் விரிவாக்கப்பட்டது.)

Sunday, November 14, 2010

திரைப்படத்தில் நான் நடித்த காதை.......2

திரைப்படத்தில் நான் நடித்த காதை


மனிதர்களுக்கு வாய்ப்புவரும் அதுவும் ஒருமுறைதான் வருமாம்.நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்களை எழுதியிருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன்.த..மு.ஏ.ச.தலைவர்களில் ஒருவரான செந்தில் நாதன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.நாம் எடுக்கப் போகும் திரைப்படத் தில் நீங்கள் நடிகிறீர்கள்.உடனடியாக கு.சி.பா வை தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதியிருந்த்தார்.நாமக்கல் சென்று அவரைத்தொடர்பு கொண்டு படக்குழுவோடு சேர்ந்து கொண்டேன்

முதன் முதலாக காமிரா முன் நிற்கிறேன். கற்பழிக்கும் காட்சி பங்களுருவில் உள்ள நாடகக்குழுவான "சமுதாயா"வின் தோழர் சுதாவை கற்பழிக்கும் காட்சி. இதற்கு சாட்சியாகத்தான் அந்த ஜன்னலில் தெரிந்தமுகம் எப்படிப்பட்ட வாய்ப்பு!

எனக்கு தத்துவ போதம் அளித்தவர்களில் ஒருவர்,சுத்ந்திரப்போராட்ட தியாகி, மார்க்சிஸ்ட் கட்சியீன் மத்தியகுழு உறுப்பினர், மாநிலத்தலைவர்களில் ஒருவர்- தோழர் என்,சங்கரய்யா தான் ஜன்னலில் நின்று பார்த்துக் கோண்டிருந்தார். நான் தயங்குவதைப் பார்த்து இயக்குனர் செல்வராஜ்" என்ன சார்! என்ன சிக்கல்" என்றார்."ஒங்க சித்தப்பா அங்க நிக்காரு. நான் எப்படி சார் நடிக்க" என்று பதில் கூறினேன். ஜன்னலருகில் சென்ற அவர்" சின்ன நாயினா! உள்ளவாங்க" என்று சொல்லி காமிராவுக்குப்பின்னால் இருட்டான பகுதியில் நாற்காலியில் அமர்த்தினார். அவர் இருட்டில் இருந்தாலும் நான் வெளிச்சத்தில் செய்வதை பார்க்கத்தானே செய்வார்.

படப்பிடிப்பு சென்னயில் தொடர்ந்தது. டப்பிங்கும் அங்குதான்.இரண்டுக்கும் செல்லவேண்டியதாயிற்று சவுண்டு இஞ்சினியர் வைத்ததுதான் சட்டம். தொழில் முறை டப்பிங்கலஞர்களைத்தான் அவர் விரும்புவார்.என் காட்சிகளுக்கு நான் குரல் கொடுத்தேன். நான் மதுரை திரும்பியதும் அதை வெட்டிவிட்டார்.

டெக்னீஷியங்களிடமும், உதவியாள்ர்களிடமும் துணைநடிகைகள் படும் பாடு சொல்லும்படி இல்லை. பாவம்! சுயமரியாதை என்பதை நினைகக்கூட முடியாது. சீனியர் துணை நடிகைகள் புதியவர்களை வசக்குவார்கள். பதினந்து வயதுப் பெண் கச்சையை இறுகக் கட்டி பத்துவயது சிறுமியாக நடிக்க வாய்ப்பு கெட்டு உதவியாளர்களை நாடுவார் ""வா!பாப்பா! வா! "என்று மடியில் அமர்த்திக் கொண்டு அந்தத்தடியன் தடவுவான்.அவன் எண்ணம் சிறுமிக்கு இல்லை அந்தப்பெண்ணுக்கு புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதைவிட கொடுமையானது தூரத்தில் நிற்கும் அவளூடைய தாயின் நிலை.

துணை நடிகர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் அவர்கள் தவியாளர்களிடம் படும்பாடு--புழுவைவிட கெவலமாக மதிக்கப்படுவது--உண்ண அனுமதிகிடைத்ததும் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி தலைதெரிக்க ஓடுவது--சகிக்கமுடியாதவைகள்.

"ஹாலிவுட்" உறுவானது பற்றி ஹெரால்டு ராபின்ஸ் Dream Merchants என்ற நாவலில் விவரிப்பார். கோடம்பாக்கத்தில் நூறு நாவல்கள் எழுத வாய்ப்பு உள்ளது.

படம் முடிந்து, படத்தொகுப்பும் முடிந்து, தணிக்கை முடிந்து,முதல் பிரதியும் வந்தது.நிர்வகத்தால் வேலியிட முடியாமல் போயிற்று. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு முறை போட்டுக்காட்டப்பட்டது.பாடல்களும்,படமும் நன்றாக உள்ளது.ஐம்பதுநாட்கள் ஓடும் என்று சிலர் சொன்னர்கள்

படத்தொகுப்பாளர் நண்பர் மூலம் நான் வரும் ஒரே ஒரு 35எம் எம் பிலிமை வாங்கி போட்டோவாக்கி சுவரில் மாட்டியிருந்தேன்.சாட்சியாக. .

Friday, November 12, 2010

திரைப்படத்தில் நான் நடித்த காதை...

திரைப்படத்தில் நான்  நடித்த காதை


த.மு.எ.ச நண்பர்கள் சிலர் செர்ந்து திரைப்பட்ம் எடுக்கலாம் என்று யோசித்தனர்."யுக சந்தி" என்ற கம்பெனியும் உருவாக்கப்பட்டது.மூத்த எழுத்தார்கள் கு.சி.பா, செந்தில்நாதன்,டி.செல்வராஜ் வேறு சிலர் இயக்குனர்களாக இருக்க சம்மதித்தார்கள். எந்த கதையை எடுப்பது என்ற விவாதத்தில்,தாகம்,தேநீர் என்ற இரண்டும் முன்னுக்கு வந்தன. இறுதியில்" தாகம் "முதலில் எடுப்பது என்று முடிவாகியது.கம்பெனியின் நிதி ஆகியவற்றை குசிபா அவர்களே கவனித்துக்கொண்டார்கள்.

த.மு.எ.ச நாடக நடிகர்களை அதிகமாக பயன் படுத்துவது என்றும் கூறப்பட்டது படத்திற்கு இசை அமைக்க இளைய ராஜா.. பாடல்கள் தணிகையால் எழுதப்பட்டன. "அன்னக்கிளி " ஆர்.செல்வராஜ் இயக்கம். செல்வராஜ் திரைப்படச்செய்திகளை "தீக்கதிர்"பத்திரிகைக்கு எழுதி நிருபராக இருந்தவர்.சுதந்திரப் போராட்டவீரரும் மார்க்சிஸ்ட் கட்சிதலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா அவர்களின் சகொதரரின் மகன் தான் செல்வரஜ்.

விநியோகஸ்தர்கள் விருப்பம், வர்த்தக நுணுக்கம் கருதி நடிக நடிகைகள் தேர்வு இயக்குனரிடம் விடப்பட்டது.வளர்ந்து வரும் நடிகையான இ.வி.எஸ்.விஜயலட்சுமி காதாநாயகி.கன்னடத்தச்சேர்ந்த குமாரராஜா கதாநயகன்.தாகம் நாவலில் வரும் மாரப்பன் பாத்திரத்திற்கு சிலோன் சின்னையா. மதுரை பீப்பிள்ஸ் தியேட்டரைச்சார்ந்த துரைராஜ்,காஸ்யபன், சென்னையைச்சர்ந்த சீதராமன் ஆகியோரும் உண்டு

நாமக்கல்லிலிருந்து செல்லும் கொல்லிமலை அடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்தது.தயாரிப்பு பணியில் தன்னந்தனியாக பணியாற்ற வேண்டியதிருந்ததால் கு.சி.பா வால்கதைவசனத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனையும் இயக்குனரே கவனித்துக்கொண்டார்.கொஞ்சம் கொஞ்சமாக கதை தாகத்திலிருந்து திசைமாரியது தாகம் என்பதற்குப்பதிலாக."புதிய அடிமகள்" என்று பெயரும் மாறியது

நான் அலுவலகத்திற்கு செல்லாமல், சொல்லாமல் வந்திருந்தேன்.துரைராஜ் மில் தொழிலாளி.மிகக் குறந்த.வாழ்வாதரங்களைக் கொண்டவர்கள்.காலையில் படப்பிடிப்பிற்கான உடைகளை அணிந்து கொண்டு தயராக இருப்போம். யாருக்கு, என்று, எங்கே, படப்பிடிப்பு என்பது தெரியாத.நிலமை காமரா முன் அமர்ந்.திருக்கும் போதும் வசனம் எது என்று தெரியாது.எந்த விதமான திட்டமிடலும் இல்லை என்றே தொன்றியது.

காலையில் சிற்றுண்டி. கோழிக்கறியோடு அருமையான இரவு உணவு. ஒரு வாரம் வரை என்னைப் பயன்படுத்தவில்லை. வெட்டியாக அமர்ந்திருப்பதும் சரியில்லை என்று தோன்றியது அவ்வப்போது கு.சி.பா சில வேலைகளைக் கொடுப்பார்.அதனைச்செய்வேன்.ஒருநாள் பரபரப்பாக இருந்தது.உடையலங்கார காசி எனக்கு படப்பிடிப்பு இருப்பத்தகக் கூறினார். ஒருவீட்டில் படப்பிடிப்பு. நான் என் மகனின் மனைவியை கற்பழிக்கும் காட்சி படமாக விருந்தது. காலையிலிருந்தே மனம் பதைபதைத்தது.என் மனை மக்கள் நினவாகவே இருந்த்து.

காமிரா முன் நான் பலியாடு மாதிரி நிண்றேன்.நான் கற்பழிக்கப்பட வேண்டிய நடிகை தாயாராக இருந்தார்.நான் காமத்தொடு அவரப்பார்க்கவெண்டும். அவருடைய மாரப்பு சேலையை உருவ வேண்டும். துணை இயக்குனர் லட்சுமி நாராயணன் சொல்லிக்கொடுத்தார். நான் நடிகையைப் பார்த்தேன்."சார்! உங்க மகளை பார்ப்பது போல் பார்க்காதீர்கள்."என்றார் இயக்குனர் செல்வராஜ். சுற்றிமுற்றும் பார்த்தேன்.வெளியிலிருந்து ஜன்னல் வழியாக.

படப்பிடிப்பை பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.அதில் தெரிந்த அந்த முகம்.....என் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிவிட்டது

(தொடரும்)

Tuesday, November 09, 2010

காற்றழுத்தக் குக்கருக்கு "வடிகால்" போல-----

காற்றழுத்த "குக்கருக்கு " வடிகால் போல.....


புனே திரைப்படக் கல்லூரி அவ்வப்போது பல்வெறு ஊர்களில் திரைப்பட ரசனை பயிற்சி முகாம்களை நடத்தும். அப்படியோருமுகாமுக்கு சென்றிருந்தேன். பெராசிரியர் சதீஷ் பகதூர் தான் நடத்துவார்.மார்க்சீயத்தின் பால் ஆர்வமுள்ளவர்.இதுதவிர,பி.கெ.நாயர்,டாக்டர்.சியாமளாவனரசே ஆகியோரும் வகுப்புகள் நடத்துவார்கள்.பெராசிரியை சியாமளா "வெகுஜன உளவியல்" பாடத்தை நடத்துவார்.பின்னர் மதுரை வந்துவிட்டேன்.

என் நண்பர் ஒருவரின் மகள் சிறந்த படிப்பாளி. உயர் கல்வியில்"உயிரியல்" அப்போதுதான் மெட்டவிழ் கின்ற நேரம். அந்தப்பெண்ணிற்கு பாரிஸ் பல்கழகத்தில் உயர்கல்வி படிக்க இடம் கிடத்தது.வெளிநாட்டில் படிக்க பெண்களை அனுப்புவது பரவலாகாத காலம். பெற்றோர்கள் தயங்கினார்கள்நான் தலையிட்டு அனுப்பச்சொன்னேன் ஆறு ஆண்டுகள் அங்கே படித்தார்.

திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர். அப்போது"சிவந்தமண்" என்ற படத்தைப் பார்க்க துடியாய்துடித்தார்

"ஈவில்டவர்" காட்சி" வரும்போது கைதட்டி ரசித்தார்."ஏன்மா! டவர நேர்ல பா த்தவ.நிழல பாத்து குதிக்கிறயே" என்றேன். "போங்கமாமா!புறநகர் பகுதில நலுபேரா தங்கியிருந்தோம்.பொங்கிசாப்பிட்டு மெட்றோவில காலேஜ் போய்வரவே உதவிப்பணம் பத்தாது.இதுல எங்க ஊர்சுத்த"என்றார்.ஈவில்டவரை பார்க்காத அவருடைய ஆதங்கம் திரைப்படத்தால் நிறைவேறியது.

என் உறவுக்காரப்பெண் மாநில அரசு ஊழியர்.ஞாயிறு அன்றும் காலையில் எழுந்து ஆறு ஏழு படவைகளை தோய்த்து,மடித்து வைப்பார்.அப்போதுதான் தினம் ஒரு புடவையை "மணம்"மாக கட்டிக்கொண்டு போகமுடியும். தினம் ஒரு புடவை வாங்கமுடியாதே! திரைப்படத தில் கமலும் ரேவதியும் பாடல் காட்சியில் நிமிடத்திற்கு ஒரு ஆடையில் ரேவதிவருவதை ரசிப்பதின் மூலம் அவருடைய அந்தவார ஆசை,நிராசை எல்லாம் வடிந்துவிடும்.

அநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டா?திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும்,அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது

."Ángry young man" அமிதாப் வெற்றி பெற்றதின் சூட்சுமம் இதுதான்.

சோறு வடிக்கும் குக்கரில் அழுத்தம் காரணமாக அரிசி வேகிறது.அழுத்தம் அதிகமானால் வெடித்துச்சிதறி விடும்.அதற்கு வடிகாலாக உள்ளே இருக்கும் ஆவி வெளியெற ஏற்படுகள் உள்ளன.

. சமூகத்திற்கும் பக்தி,ஆன்மீகம்,கடவுள் என்று பலவடிகால்கள் உண்டு.

இன்று திரைப்படம் அத்தகைய வடிகாலாக பயன்படுகிறது.

Tuesday, November 02, 2010

ஆந்திர மாநிலமும் தெலுங்கானாவும்

ஆந்திர மாநிலமும் தெலுங்கானாவும்


ஆந்திரா ஒன்றாக இருக்கவேண்டும் - இல்லை அதனைபிரித்து தெலுங்கானா உருவாகவேண்டும் என்று இரண்டுகருத்துகளின் மோதல் தான் பிரச்சினை என்கிறார்கள். இந்த இடுகையின் மூலம் சில உண்மைகளைச் சொல்லாம் என்று கருதுகிறென்.

" ஒக்க ஆந்திரா"காரர்கள் புராணகாலத்திலிருந்து எப்படியிருந்தது என்று மகாபாரதம்,ராமாயணம் என்று ஆதாரங்களை வைக்கிறார்கள அப்படியானால் .எப்போது பிரிந்தது,எப்போது செர்ந்தது, இப்போது ஏன் பிரியவெண்டும் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

அசாஃப்சாஹி வம்சம் ஆண்டபொது குண்டூர், கிருஷ்ணா,கோதாவர்,ராயலசீமா, மற்றும் தற்போதய தெலுங்கானா எல்லாமே ஒன்றாகத்தன் இருந்தது.கிழக்கிந்தியக் கம்பெனி வந்தபிறகு தான் சிக்கல் ஆரம்பமாகியது. 1776ம் ஆண்டு அசஃப்சாஹி அரசர் குண்டூர், கிருஷ்ணா,கோதாவரி மாவட்டங்களை கம்பெனிக்கு கொடுத்தார். அதே ஆண்டு ராயலசீமா மாவட்டங்களையும் கம்பெனிக்கு கொடுத்தார்.ஏன் கொடுத்தார்? அவர் அரசர்? இவர்கள் முதலாளிமார்கள்.கொடுப்பார்கள். வாங்குவார்கள். நாம் கேட்க முடியாது.1857 க்குப்பிறகு கம்பெனி சர்யாக ஆட்சி செய்யவல்லை என்று கூறி ஆங்கிளேய அரசு ஆட்சியை எடுத்துக் கொண்டது. அப்பொது கம்பெனியிடமிருந்து மதறாஸ் மாகாணத்திற்கு தெலுங்கு பேசும் மக்கள் சென்றது.கிருஷ்னா நதியும்,கோதாவரியும் பாய்ந்தாலும் வெள்ளமும்,வறட்சியும் மாறிமாறி அந்தப்பகுதியைச்சீரழித்தன. ஆங்கிலேயரசு கிருஷ்ணாவிலும்,கோதாவரியுலும் தடுப்பணைகளைக் கட்டியது.செழிப்பான வயல்களில் புகை இலையைப் போட்டால்-- பணப்பயிரென்று விவசாயியும், பிரிட்டிஷ் முதலாளிக்கு அபரிமிதமான லாபமும் கிடைக்குமே! பணக்கார விவசாயிகள் அரசியலிலும் பங்கெடுக்க வந்தனர்.

நிஜாம் ஆட்சியில் ஜமீந்தாரிமுறை அமலில் இருந்தது .மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் நடந்தது. வளர்ச்சிப்பணி என்று எதுவும் கிடயாது.கொத்தடிமைகளாக வாழ்ந்தார்கள். கல்வி ,சுகாதாரம்,பொக்குவரத்து என்று எதுவுமே இல்லை.நீராதரங்கள் பூராவும் பிரிட்டிஷ் இந்தியாவின் கையில். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வி கற்ற விவசாயிகள் அரசியல் உணர்வு பெற்றவர்களாக வளர்ந்தனர்.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் இயகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இவர்களின் துணையோடு தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்தது.ராஜாஜியும், நேருவும் இதனச்சாதகமாக்கி நிஜாமை வசக்கினர். நிஜாம் வளைந்தார்

புதிய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தெலுங்கு பேசும் மக்கள் ஒன்றிணைய வெண்டும் என்பது நியாயம்தானே! ஆனால் நிஜாம் ஆட்சியில் ஏத.மற்றவர்களாக ஆகியமக்கள் எப்படி கல்வியிலும்,வசதியிலும் சிறந்த டெல்டா மக்களோடு போட்டி பொடமுடியும். ஆகவே சில சலுகைகளை அவர்கள் கெட்டனர்.ஒப்பந்தம் உருவாகியது.தெலிங்கானா பகுதியில் மற்ற பகுதியினர் நிலம் வாங்கக்கூடாது.வேலை வாய்ப்பில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும்.(இதனை முல்கி விதி என்பார்கள்) இந்த ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படவில்லை.(மூன்று ஆண்டுகள் தெலுங்கானாவில் வாழ்ந்தாக சான்று இருந்தால் முன்னுரிமை.ஏராளமான ராமசாமிகளும்,சுபிரமாணியங்களும் அரசு போலீஸ் பணிகளில் சேர்ந்தனர்.கேட்க ஆளிள்லை)

சென்னாரெட்டி கெட்டார். முதலமைச்சராக்கினர்கள்.கெட்பதை ந்றுத்திக் கொண்டார்.தெலுங்குதேசம், காங்கிரஸ் என்று அந்த மக்களை மாறி மாறி வஞ்சித்தனர்.சந்திர சேகரராவ் கெட்டார்.கங்கிரஸ் கூட்டணியில் மந்திரியானர். நிறுத்திக் கொண்டார்.

ஜார்கண்டு பிரிந்தது. சதீஸ்கர் பிரிந்தது. உத்திராஞ்சல் பிரிந்தது.அந்த மக்களூக்கென்னகிடைத்தது? அதேதான் தெலுங்கானாவுக்குமா?

மூலதனம் தனக்கு வேண்டுமென்றால் பிரிக்கும். சேர்ந்த்தால் லாபம் என்றால் சேர்க்கும்.இந்த விளையாட்டில் அப்பாவி மானவர்கள், இளஞர்கள்,உழப்பாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.

ஹைதிராபாத் இன்று ஒருகெந்திரமான தொழில் நகரமாக மாறிவிட்டது. D.B.R. மில்லும்,பிஸ்கட் கம்பெனியும், செங்கல் சூளையும் மட்டுமே இருந்தநகரம் இன்று பிரும்மாண்டமான தொழில் நகரமாகியுள்ளது. இதன் சொந்தக்காரர்களுக்கு ஹைதிராபாத்தை விட மனதில்லை. அவர்கள் வெளியிலிருந்து வந்த முதலாளிகள்.

அவர்கள் எதை விரும்புகிறார்களோ அது தான் நடக்கும்.