Monday, October 31, 2016
Saturday, October 29, 2016
"நெருப்புக்கு தெரியுமா "
நேற்று முன் இரவு 8.45 மணிக்கு மதுரையிலிருந்து தொலைபேசி வந்தது.
"ஹலோ ! டாக்டர் செல்வராஜ் பேசறேன்!" பரஸ்ப்பரம் விசாரித்தபிறகு "உங்கள் கதையை படித்தேன்." செம்மலரில் " இப்பதான் வந்தது ,"
"என்கதையா ?"
"ஆமாம் ! "நெருப்புக்கு தெரியுமா " தலைப்பு "
2010 ஆண்டு எழுதியது. நாகபுரியில் நடந்த உண்மை சம்பவம்,இங்குள்ள பத்திரிக்கையில் வந்ததை அப்படியே எழுதி இருந்தேன், கடைசி இரண்டு பத்தி மட்டும் கொஞ்ச்ம கற்பனையோயோடும்முடித்திருந்தேன்..என்னுடைய "பிளாக் " ல் இடுகையாக எழுதி இருந்தேன். பல நண்பர்கள் இதனை பெயர் குறிப்பிட்டு பிரபலமான பத்திரிகைக்கு அனுப்பும்படி கேட்டிருந்தனர் .செம்மலர் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு வேறுபத்திர்கைக்கு அனுப்பாமல் இருப்பதுதான் சரி என்று நினைத்திருந்தால் வேறு பத்திரிகைக்கு இது வரை அனுப்பியதில்லை. ஒய்வு பெற்று விட்டாலும் என்னவோ மனம் ஒப்பவில்லை.பேசாமல் பெட்டிக்குள்போட்டு விட்டேன் .சமீபத்தில் எதோ தேடும் பொது கிடைத்தது. செம்மலருக்கு அனுப்பலாம் என்று தோன்றியது .அனுப்பினேன். ஆசிரியர் sap அவர்கள் நவம்பர் இதழ் முடிந்து விட்டது. டிசம்பரில் பார்க்கலாம் என்று கூறினார்.
ஒருவாரம் கழித்து தோழரசோழ நாகராஜன் நவம்பர் இதழில் வருவதாகவும் என் முகவரியை தரும் படியும் கூறினார் .
செல்வராஜ் பாராட்டியது மனதுக்கு இதமாக இருந்தது.
மதுரை பசசரிக்கார சந்தில் த.மு, எ. ச 80 களில் கவி அரங்கம் நடத்தியது. குண்டாக ,குழந்தை முகத்தோடு அந்த சிறுவன் கவிதை வாசித்த்தான்.
அவர்தான் டாக்டர் செல்வராஜாக மதுரையில் மிளிர்கிறார். அவருடைய காதல் திருமணம் அண்ணா நகரில் நடந்தது .இன்று அவர் மகள் isro வில் ஆராய்சசி மாணவியாக இருக்கிறார். விரைவில் லண்டன் சென்று முனைவர் பட்டம் பெற திட்டமிட்டு இருக்கிறார்.
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது .
செம்மலர் தபாலில் வரும் . கிட்டத்தட்ட 20 நாளாவது ஆகும்.
முடிந்தால் நண்பர்கள் ஒரு பிரதியை சென்னையிலிருந்து அனுப்பினால் மகிழ்வேன் .
(kashyapan ,201,Nirman Envclave , 86-A ,Gajanan Nagar ,Nagpur 440015.)
Friday, October 21, 2016
விவசாயிக்கு விதைக்கத்தான் தெரியும் !
விதைக்கு முளைக்கத்தான் தெரியும் .......!
"Sincere and faithful wishes will never fail " என்று ஒரு சொலவடை உண்டு . என் பேரன்கள் பற்றி நான் இட்டிருந்த நிலைத்தகவலுக்கு கிட்டத்தட்ட ஐநூறுக்கும்மேற்பட்ட வாழ்த்து செய்திகள் குவிந்துள்ளன. மனம் நிரம்பி தளும்புகிறது.
நிஹால் காஷ்யப்,,அபினவ் H .R இருவருமே கைக்குழைந்தையாக இருந்ததிலிருந்து என்னிடம் வளர்ந்தவர்கள். அதிலும் சின்னவன் அவன் தாயார் படிக்கும் காலத்திலேன்னோடேயே வாரக்கணக்கில் இருந்தவன்.பல சந்தர்ப்பங்களில் அவனை மூத்தவன் வீட்டுக்குக்கொண்டு சென்று அவர்கள் இருவரும் விளையாடும் அழகை ரசித்தவன்.அவர்களின் செல்ல சண்டையும்,விட்டுக்கொடுப்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.
அவர்கள் பள்ளி செல்லும்காலங்களிலும் அவர்களோடு பேசுவேன். விவாதிப்பேன். சாதி,சமயம்,சமநீதி என்று பேசுவோம். எந்த தயக்கமும் இன்றி என்னோடு எதைப்பைப்பற்றியும் பேசுவார்கள். ஒரே ஒரு விகுயத்தில்மட்டும் முரண்படுவார்கள். Reservation இட ஒதுக்கீடு விஷயத்தில் ஏற்கமாட்டார்கள்." தாத்தா ! நான் 90 மார்க் வாங்கி பாஸாகிறேன். இன்னொருத்தன் 40 வாங்கி பசிக்கிறான். ரெண்டு பேர் திறமையும் வித்தியாசம் இல்லாயா ? " என்பார்கள். கொஞ்சம் subjectivisym இருக்கிறது. நான் அதற்கு பதில்சொல்லமாட்டேன்.
"உங்கள் வகுப்பில் ஒதுக்கீடு பெற்ற நண்பர்கள் உண்டா ?"
"உண்டு "
"அவங்க கிட்ட இது பற்றி பேசி இருக்கீர்களா ?'
"இல்ல "
"ஒதுக்கீடு வேண்டாம் கிறது ஒந்தரப்பு நியாயம் "வேணும்ங்கிறவன் நியாயத்தை கேக்கணும் இல்லையா? அப்பதான் முழுமையேயான விவரம் கிடைக்கும் "
ஒன்பதாவது படிக்கும்போது இத சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாக அது பற்றி பேசுவது குறைந்தது .ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கலாம்.
இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்.சின்னவன் 11 th படிக்கும் பொதுபெரியவன் 12 th .இருவருமே cbse stream .
"சீதாராம் எசுரி யார் னு தெரியுமாடா ?"
"தெரியுமே 1 உங்க கடசி தலைவர் " என்றான பெரியவன்.
சின்னவன்" பாட்டி எழுதின சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை எழுதினார்னு நீங்க சொன்னிங்க "என்றான்
அவரவர் தளத்திலிருந்து விஷயங்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் .
"சீத்தரமும் cbse தான் "
"அப்படியா ?"
"எப்படி பாஸ்பண்ணினார் தெரியுமா ?"
"எப்படி ? '
"natinal merit list ல number one " இந்தியாவிலேயேமுதல் மாண வனாக"
"நீங்க இப்படி பாஸ்பண்ணுவிங்களாடா ?"
"வாசிஸ்சுருவோம் "என்றான் மூத்தவன்.சின்னவன் மண்டைய ஆட்டினான் ."செஞ்ச்ருவம் தாத்தா " என்றான்.
"ஜவஹர்லால் பல்கலையில்படித்தார். சக மாணவர்களுக்காக நின்றார். இந்திரா அம்மையார் விட்டு முன்னால் பல்கலைக்கழக கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவருக்கு வயது 21 தான். "
பிரமிப்போடு இருவரும் கேட்டார்கள்..
"மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் தெரியுமா ?"
"பாட்டி சொல்லியிருக்காங்க "
"அவங்க அமெரிக்காவில் படி சங்க . அமெரிக்காவுல "குயூபா " னு சொன்னாலே உள்ள போட்டுருவான் அவ்வளவு கெடுபிடி . மைதிலி அம்மா சர்க்காருக்கு தெரியாம சரக்கு விமானத்துல சரக்கோடு சரக்கா "குயூபா " போய் பத்துநாள் தங்கி பத்திரிகைல எழுதினங்க ."
பேரன் பேத்திகளோடு ஊடாடுவது ஓர் அருமையான அனுபவம்.
நீங்களும் உங்கள் மகன் மகள் பேரன் பேத்தி களோடு பேசுங்கள்..
விவசாயிக்கு விதைக்கத்தான் தெரியும்.!
விதைக்கு முளைக்கத்தான் தெரியும் !!
சரிதானே !!!
Saturday, October 15, 2016
தமிழகத்திற்கு ,
"பெரியார் " கொடுத்த
"கொடை ".......!!!
தமிழ் ,தேசியம் என்று கூறிக்கொண்டு சில குழுக்கள் முக நூலில் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல்போய்க்கொண்டு இருக்கிறது. இவர்கள் பெரியார் அவர்களை திட்டுவது என்பது நாகரிக எல்லையை தாண்டி அருவறுப்படைய செய்கிறது.பெரியார் அவர்கள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் இவர்களின் எழுத்து விமரிசனமல்ல. அவதூறு.
நூற்ண்டுறாண்டுகளாக பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த தமிழ் சமூகம் கொஞ்சம் நிமிர்ந்தது என்றால் அது பெரியாரால் தான். மராட்டிய நண்பர் ஒருவர் கூறினார்" ஜோதிபா புலாவும்,அம்பேத்காரும் செய்ய முடியாததை பெரியார் செய்தார். பார்ப்பன ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து விட்டது என்பதல்ல. அது மட்டுப்படுத்தப்பட்டது. அதற்காக அவர் செய்த ராஜ தந்திரம் வெற்றி பெற்றது. பிராமணரல்லாதவர்களை ஒன்று படுத்தி, அவர்களை போராட செய்வது என்பது சாதாரணமான காரியமல்ல . நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள் "என்கிறார்.
இதன் காரணமாக பார்ப்பனர்கள் பெற்று வந்த சலுகைகள் தமிழகத்தில் மட்டுப்படுத்தப்பட்டது. பார்ப்பனரல்லாத மக்கள் சில சலுகைகளையும், உரிமைகளையும் பெறறார்கள். நம் கண்முன்னால்நடந்தசமூக மாற்றங்கள் இவை .
இதன் அரசியல் லாபத்தை தன தாக்கி கொண்டவர்அறிஞர் அண்ணா ஆவர்கள். அதனை ரொக்கமாக்கிக்கொண்டவர் கருணாநிதி அவர்கள்.
இதில்வெடிக்கை என்ன வென்றால் பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து விட்டு தி.மு.க என்ற கட்ச்சியை ஆரம்பித்து நட்த்தினார்கள் .
"கடவுள் இல்லை ! இல்லவே இல்லை! " என்று தெருத்தெருவாக, கிராமம் கிராமமாக,ஊர் ஊராக பிராசாராம் செய்தவர் பெரியார். இது திமுகவின் அரசியலை பாதிக்கும் என்பதால் " ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் " என்று கூறினார் அண்ணாதுரை ,பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கொடூரத்தை சித்தரிக்க "பாம்பையும் ,பார்ப்பனனையும் கண்டால் பாம்பை விடு ! பார்ப்பானை அடி " என்கிறார் பெரியார். நாங்கள் பார்ப்பானரை எதிர்க்கவில்லை பார்ப்பணியத்தை தான் எதிர்க்கிறோம் என்று சமரசம் செய்து கொண்டார் அண்ணாதுரை அவர்கள்.
சென்ற சட்டமன்ற தேர்தலின் பொது கொங்கு வேளாளர் கடசி யிலிருந்து, மண்பாண்ட கலைஞ்ர்கள் வரை ஸ்டாலினுக்கும் , கலைஞருக்கும் துண்டு போட்டு ஆதரவு கூறியதை நாம் பட காடசியாகப்பார்த்தோம். பிராமண ரல்லாதோரின் ஒன்றுபட்ட தன்மையை அழித்தவர்கள் இவர்கள்.
பெரியார் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லைபிராமணரல்லாதோருக்கு கிடைத்த பங்கில் நூறில் ஓருபங்கு தலித்துகளுக்கு போகவில்லையே " ஏன் ?
இன்று "போலி பெரியாரிஸ்டுகளின் " பேய் நடனம் தாங்கமுடியவில்லை. எல்லா இயக்கங்களிலும் முற்போக்கு ,பிற்போக்கு, வலதுசாரி,இடது சாரி என்று ஊடுருவி குழப்பி வருகிறார்கள்.இவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் "பார்ப்பன ஆதிக்கம் " என்கிறார்கள்.
கவர்னர்கள் எத்தனைபேர் பார்ப்பனர்கள்,? நீதிபதிகள் எத்தனை பேர் பார்ப்பனர்கள்? துறை வாரியாக மத்திய மாநிலரசுபதவிகளில் உயரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் ?என்று கணக்கு கேட்கிறார்கள்.
தமிழக அரசு ஊழியதில் 40000 காலி இடங்கள் உள்ளன, நியமனம் செய்ய அரசுமறுக்கிறது. கருப்பையா என்ற ஊழியர் வழக்கு போட்டார் தலித்துகளுக்கு பதவி உயர்வு கொடுக்க கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பை அரசு காட்டு கிறது. நியமனம் வேறு. பதவி உயர்வு வேறு. இதில் 24000 இடங்களில் தலித்துகளுக்கானது. அதனை போடுங்கள் என்று நிதி மன்றம் திர்பளித்தது . அரசு இதுவரை போடவில்லை.
தலித் தலைவர்கள் வாய் முடி மவுனம் சாதிக்கிறார்கள். ஓட்டப்பிடாரம் தொகுதியில் நான் எம்.எல்ஏ ஆனால் தலித்துகள் சுகவாழ்வு காண்பார்கள் என்கிறார் தலைவர். காலையிலும் மாலையிலும் சான் தொலைக்காகாட்ச்சியில் நான் வந்தால் பொதும் என்கிறார் இளம் தலித் தலைவர்.
பாவம் ! தோல் திருமாவளவன் தனிக்கட்டையாக போராடி வருகிறார் .முடியவில்லை .
தீண்டாமை ஒழிப்பு முன்னணி நணபர்கள் சிலரை தொடர்பு கொண்டேன்.
தலித்துகளுக்காக அவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக வகுப்புகளை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.கள் "நாங்களும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகிறோம்.75 பேர் வருவார்கள். அடிதடி,கொலை என்றால் 120 பேர் வருவார்கள். 90சதம் பேர் தலித்தல்லாதவர்கள் .தலித் கள் நம்மை நம்ப மறுக்கிறார்களோ என்று தோன்றிகிறது. உங்களுக்கென்ன ! ஆர்ப்பாட்டம் முடிந்து நாங்கள் எங்கள்கிராமத்திற்கு செல்லவேண்டும்.அங்கு தமிழக "ஜாட் "களும் ,பிள்ளை,முதலி என்று ஆதிக்க சாதிகளின் தயவில்லாமல் நாங்கள் வாழ முடியாது "என்கிறார்கள்.
சமூக நீதி என்பதை social engineering என்கிறர்கள்.
உள்ளே புகுந்து படிக்கும் பொது ஆசசரியங்கள் தான் மிஞ்சுகின்றன !!!
Sunday, October 09, 2016
மீண்டும் தஞ்சையில் ,
நாடக விழா .....!!!
"வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் தஞ்சையில் தென்மண்டல நாடக விழா நடத்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்முடிவு செய்துள்ளது. அதற்கான 105 பேர்கொண்ட வரவேற்புக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது "என்று தலைவர் தமிழ்செல்வன் அறிவித்ததாக திண்டுக்கல் மணி இரவு 10மணிக்கு மேல்நேற்று பதிவிட்டிருந்தார்.
இனிக்கும்நினைவுகளோடு 40 ஆண்டுகளுக்குமுன்னால் இதே தஞ்சையில் 1977ம் ஆண்டு த.மு.ஏ.ச நடத்திய நாடகவிழா இரவு முழு வதும் கண்முன் விரிய மகிழ்ந்திருந்தேன்.
கோமல் சுவாமிநாதனின் மக்கள் தாரிணி அவர்கள் எங்களுக்கும்பங்கு உண்டா என்று விசாரித்ததும் தெரிந்தது.
அன்று எஸ்.வி .சகஸ்ரநாமம், கர்நாடக குழு சமுதாயா வின் தலைவர் பிரசன்னா ,கேரளத்து பணிக்கர் ஆகியோர் வந்து சிறப்பு செய்தனர்.
தமிழகம் முழுவதிலிமிருந்து எழுத்தாளர்களும்.கலைஞர்களும் வந்திருந்தனர். சென்னைக்கலைக்குழு வாடகை வீ டு எனவிதி நாடகம் போட்டதாக நினைவு."இசை சிற்பம் " என்ற புதிய வடிவத்தை தந்தவர்கள் அவர்கள். அவர்களுடைய "ஏகலைவன் பெருவிரல் " மிக முக்கியமான ஒன்று.
தணிக்கை செல்வன் "கம்சவதம் "என்ற நாடகத்தை தந்தார். புராணத்திலிருந்து ஒரு துளியை எடுத்துக்கொண்டு தற்கால அரசியலை விமரிசிக்கும் architypal form அது.
பரம்பை செல்வன் , நடித்து இயக்கிய நாடகத்தில் ஜேம்சன்,கந்தர்வன் ஆகியோர் நடித்தனர்.40நிமிடங்கள் நடக்கும்நாடகம் வசனமே இல்லாமல்ல் முழுவதும் mime முறையிலரங்கேற்றப்பட்டது.விழாவில் பாராட்டப்பட்ட நாடகங்களில் இதுவுமொன்று.
"மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸ்'குழுவினர் ஜெயந்தனின் "நினைக்கப்படும் "என்ற முழு நீள நாடகத்தை அரங்கேற்றினர். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர் ராஜ குண சேகர் இதில் நடித்து இயக்கியிருந்தார். சிறப்பான வரவேற்பை பெற்ற நாடகம் இது.
கையூர் தியாகிகளின் போராட்டத்தை,கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா "சிராஸ் ஸ்மரனே " நாவலாக எழுதியிருந்தார் அதனை பி ஆர் பரமேஸ்வரன் அவர்கள் "நினைவுகள் அழிவதில்லை " என்ற ஒப்பற்ற நாவலாக மொழிபெயர்த்து இருந்தார்.வெல்லூரிலிருந்து வந்த நாடகக் குழுவினர் இதனை நாடகமாக்கி அரங்கேற்றினர் .இதில் நடித்த இளம் வாலிபர்கள் பின்னாளில் பலம் பொருந்திய அரசு ஊழியர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்களாவர். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர்கள் ஜெகதீசனும், செல்வராஜும் இந்த குழுவின் பின் பலமாக நின்றனர். விழாவின் சிறப்பான நாடகமாக இது பாராட்டுப்பெற்றது.
மாசுகோ ஆர்ட் தியேட்டரையும், மாற்ற நாட்டு நாடக மேடைகளைப்பற்றியும் எஸ்.வி சகஸ்ரநாமம் தன பேசில் குறிப்பிட்டார்
அபத்த நாடகத்திலிருந்து நாடகங்களின் பல்வறு வடிவங்கள்பற்றி சமுதாயாவின் பிரசன்ன விளக்கினார்.
"திரவமாக இருக்கும் வரைதான் கோழி முட்டை வடிவம் கொள்ளும். திடமாகி விட்டால் ஓட்டை உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளியே வந்து விடும் " என்று தர்க்கவியலோடு இணைத்து தொழார் கே.ரமணி "உள்ளடக்கம் தான் வடிவத்தை தீர்மானிக்கும் "என்று கருத்தரங்கில் பேசியது இன்றும்காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தென் மண்டல நாடக விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!.
Friday, October 07, 2016
"சொல்லுங்கண்ணே
சொல்லுங்க ".......!!!
அந்த பையன் மதுரை மாவட்டம் கமபம் நகரை சேர்ந்தவன் .பள்ளிப்பருவ காலத்திலேயே மாணவர் இயக்கம் னு அலைந்தவன். படிப்புமுடிந்ததம் ,கடசி கம்பு னு போக ஆரம்பமானான் .
நல்ல வசதியான குடும்பம். டீ எஸ்டேட் உண்டுதோட்டமதுரவு னு ஏகப்பட்ட வசதி.வீட்ல கட்டுப்பாடு அதிகமாசுசு .பையன் திமிறினான். வீடு கேக்கல .ஒருநா பையன் கம்பியை நீட்டிட்டான். தேட ஆரம்பிசாங்க .
இரெண்டாம் உலகயுத்தம் நடந்து கிட்டு இருக்கிற நேரம் . royal air force க்கு பிரிட்டிஷ் காரன் ஆள் செத்துக்கிட்டு இருந்தான். பங்களூருவுல இருந்தது முகாம்.பையன் அங்க போய் சேந்துட்டான்.
அப்பம் எல்லாம் ஒருமாதம் சொல்லி கொடுப்பாங்க .மாசக் கடைசில பரிதிசை வைப்பாங்க.பாசாகிட்ட இன்னு ஆறுமாத "கவாத்து "சொல்லி கொடுத்து "War " க்கு அனுப்புவாங்க . பரிட்சையில பெயில் ஆயிட்டா அடுத்தமாதம் எழுதி பாஸாகலாம். பிரிட்டிஷ் காரனுக்கு ஆள் வேணுமில்லா !
நம்ம பையனும் பரிசசை எழுதினான் . பெயிலாகிட்டான்.திருப்பியும் எழுதினான திரும்பவும் பெயில் . ஆறுமாதமா பெயிலாகிட்டு இருக்கான்.பிரிட்டிஷ் அதிகாரி யோசிசான் . விசாரிக்கும் பொது இவன் வேலை தெரிஞ்துசு . royal air force க்கு உள்ள கடசி கிளையை உருவாக்கிட்டு இருக்கான் னு .
ஒரே அமுக்கா அமுக்கிட்டான் .' "எப்பா ! நான் யுத்தம் பண்ண வரல ! கடசிய வளக்க வந்தேன்கான் " பையன் . வீட்டுக்கு தெரிஞ்சு எப்படியோ வெளில வந்தான்.
மார்க்சிஸ்க்காட்ச்சியின்,செயற்குழு உறுப்பினரும் , "தீக்கதிர் " தலைமை நிர்வாகியும், நாங்கள் "அத்தா " என்று அழைத்து காலடியில் அமர்ந்து பாடம் கற்ற அப்துல் வஹாப் அவர்கள் தான் அந்த பையன் .
95 வயதான "அத்தா' கம்பம் நகரில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். முப்பது வருடத்திற்கு முன்னாள் அவருடைய நேர்முக பேசசை வண்ணக்கதிரில் எழுதி இருந்தேன் . இப்ப எதுக்கு திருப்பி எழுதி வக்கிய ? கேக்கலாம்.
தூத்துக்குடில புத்தகம் வாங்கப்போன இடத்துல "ராணுவ அதிகாரி ச.தமிழ் செல்வன் "னு நாறும்பூநாதன் எழுதி இருந்தார் ல. தமிழ் செல்வன் ராணுவத்துல இருந்தாரு உண்மை.
டார்ஜிலிங் ல இருந்தாரு. சிக்கிம்ல இருந்தாரு இந்திய சின எல்லைல இருந்தாரு.பருப்பாரில இருந்தாரு. நக்சிலபாரில இருந்தாரு .
அங்கெல்லாம் இருந்த பொது பெரிய தலவர்கள் கூட பழகி இருக்காரு. அவர்பெயர் ....ஆத்தாடி நான் சொல்ல மாட்டேன் ....அதெல்லாத்தையும் எழுத சொல்லுங்க னு பின்னுட்டம் போட்டிருந்தேன் மணியும் நாதனும் அதுக்கு "like " போட்டிருந்தாங்க .!
உங்க "like " யாருக்கு வேணும் .!
எழுத சொல்லுங்க அண்ணே !
சொல்லுங்க !
Wednesday, October 05, 2016
ராஜாஜியும் ,பெரியாரும் ,
ஆழமான நட்பின் ,
சின்னங்கள் .....!!!
ராஜாஜி ஆத்திகர் .நம்பிக்கைக்கையாளர். பெரியார் நாத்திகர். நம்பிக்கையற்றவர்.
இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடியவர் ராஜாஜி. பிரிட்டிஷார் ஆளட்டும் என்றவர் பெரியார்.
இருவருமே சாதி சமய சழக்கை ஒதுக்கியவர்கள்.இருவரின் நட்பும் இதிகாசத்தன்மை வாய்ந்ததாகும். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை
வயதின் காரணமாக இயலாமையின் காரணமாக பெரியார் சோர்வு ற்றிருந்தார். தான் கொண்ட கொள்கை தனக்கு பின்னும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி வைத்திருந்தார். அவை தனக்கு பின்பு தன இயக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு வாரிசு இல்லாததால் அவை அவருடைய சகோதரர்களுக்கு செல்லும்.இது தான் சட்டம். உறவினர்கள் இயக்கத்திற்கு போவதை விரும்பவில்லை . அன்றே அது கோடிக்கணக்கில் இருக்கும். யார்தான் விரும்புவார்கள்..?
பெரியார் சட்ட ஆலோசகர்களை கலந்து கொண்டார்.இதற்கான தீர்வாக அவர்கள் பெரியார் திருமணம் செய்து கொள்வது தான் ஒரே வழி என்று கூறினார். 70 வயது நெருங்கும் அவரை யார் திருமணம் செய்து கொள்வார்கள்.
நோய் நொடியில் அன்றாடம் சிரமப்படும் பெரியாரை கவனித்துக் கொள்ள மணியம்மை என்ற அம்மையார் இருந்தார்."இந்த திருமணம் என்பது சட்டத்திற்கான ஒன்றுதான்நான் அவரை தீர்மானம் செய்து கொள்கிறேன்,வழக்கம் போல் அவருக்கான பணிகளை செய்கிறேன்." என்று அவர் அறிவித்தார். அவருடைய ஆப்த நண்பர் ராஜாஜியையம் பெரியார் கலந்து கொண்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நேரம். மவுண்ட்பாட்டன் பிரபு போய்விட்டார் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்தார். மிகவும் உ யர்ந்த பதவி . அதன் மாண்பும், மரபுகளும் காக்கப்படவேண்டும்.தனிநபர் விருப்பு வெறுப்புக்கு உட்படாதநிலை எடுக்க வேண்டும் .
ராஜாஜி தன நண்பனுக்காக நின்றார். "நாயக்கர் அவர்களே ! இந்த திருமணம் வேண்டாம்.இது உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும்.உங்கள் இயக்கத்தையும் சிதறடித்து விடும் "என்று ஆலோசனை கூறி கடிதம் எழுதினார் தன் பதவியின்மாண்பை கருதி கடிதத்தின் மேல் "confidential" என்று குறித்து அனுப்பினார் .
1949ம் ஆண்டு ஏப்ரல்மாதம் பெரியார்-மணியம்மை திருமணம் நடந்தது.
1950 ஆண்டு ஜனவரி 26 இந்தியா குடியரசாகி ராஜேந்திர பிரசாத் குடியரசுத்தலைவராகும் வரை ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தார்
பெரியாரின் திருமணத்தை எதிர்த்தவர்கள் திமு.கவை உருவாக்கினர். முன்னணி தலைவர்களில் சிலர் இந்த திருமணம் ராஜாஜி செய்த சதி என்று மனதார நம்பினார்கள்.சரமாரியாக ராஜாஜி விமரிசிக்கப்பட்டார். குல்லுக பட்டர், குலக்கல்வி நாயகன் , என்று வசை பாட தொடங்கினர் .
இதில் ராஜாஜியின் ஆதரவாளர்கழும் கலந்து கொண்டனர்.பிராமண விசுவாசிகளான இவர்கள், "பெரியாரை ஏமாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த சாணக்கியன்.பெரியாரையும்.நாத்திக இயக்கத்தையும் சிதறடித்தவர் " என்று முட்டாள் தனமாக புகழ்ந்தனர் .
இந்த திருமணத்தை எதிர்த்தவர் ராஜாஜி என்பது பெரியாருக்கும் ராஜாஜிக்கும்மட்டுமே தெரியும். இருவரும் மாண்பினை காத்தனர்.
ரேஷன் காலம் அது ராஜாஜி மக்கள் படும் துயரம் தீர இறைவன் புகழ் பாடுவோம் என்கிறார் .
"பஜனை செய்வோம் கண்ணன் நாமம் ! - பட்டினி கிடந்து
பஜனை செய்வோம் கான்னன்நாமம் "
என்று பராசக்தியில் கருணாநிதி வசனம் எழுதினார்.
மழை இன்றி தவித்தபோது
"வருணபகவானுக்கு கட்டுக்கட தனது அனுப்பி இருக்கிறோம் மகாராஜா "
என்று பராசக்தியின் சிவாஜியை பேசுசெய்தார்.
கருணாநிதி நமபிக்கையாளர் இல்லை. சாதி சழக்கை விட்டொழித்தவர்தான். ஆனாலும் அவர் தன் மகளை தன உறவினரான மருமகனுக்கு கட்டி கொடுத்தார்.
ராஜாஜி நம்பிக்கையாளர் . அவர் மகளை பஞ்ச்கசம் , உத்தரீயம் போட்டு குடுமி வைத்த தர்ப்பை புல்லோடு வரும் பாப்பானுக்கு கொடுக்கவில்லை. பூணுல் போடாத பணியாவான காந்தியின்மகனுக்கு தான் கொடுத்தார்.
இந்த ஆத்திர முட்டல்கள் பெரியாரையும் சரி ராஜாஜியையும் சரி பாதிக்கவே இல்லை.
இந்த ஒருவருக்குமட்டும்தெரிந்த ரகசியம் வேறு ஒருவருக்கும் தெரிந்திருந்தது . ராஜாஜியின் நண்பரான ரசிகமணி டி .கே சிதம்பர நாத முதலியார் தான் அது.ராஜாஜி அவரை "வாயை திறக்கக்கூடாது" என்று அடக்கி விட்டார்.
முதலியார் பெரியாரை சந்தித்தார். என் நண்பர் . "ரகசியம் என்று சொன்னதை நான் வெளிப்பிப்படுத்த மாட்டேன் " என்று கூறிவிட்டார்.
1973ம் ஆண்டு டிசம்பர் 26ம் திதி ராஜாஜி மறைந்தார் ! அவருடைய இறுதி நிழசசியில் அந்த 93 வயது பெரியார் என்ற கிழட்டுசிங்கம் அடக்கமுடியாமளவிம்மி விம்மி அழுததை பார்த்தவர்கள் வியந்தனர்.
அது அழுகை அல்ல !
நட்பின் ஆழம் !!!
Monday, October 03, 2016
(விமரிசனமல்ல )
"பிங்க் "
( இந்தி திரைப்படம் )