Friday, December 29, 2017
"தனக்கு என்று கேட்க தெரியாதவர் "

தி.வரதராஜன் ....!!!
1969 ம் ஆண்டு. மதுரை மேற்கு  வெளி வீதியில் எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதியும்,மூத்த எழுத்தாளர் ப.ரத்தினமும்  என்னை பார்க்க வந்தார்கள்.

"கடசி இலக்கிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்திருகிறது. "செம்மலர் " என்ற அந்த பத்திரிகைக்கு என்னை ஆசிரியராக நியமித்துள்ளது..எனக்கு உதவியாக ஐயா தா.ச.ராசாமணி, ப.ரத்தினம் .காஸ்யபன் ஆகிய மூவரையும்போட்டுள்ளது .இன்று மாலை   ஆசிரியர்கள்கூட்டம்தீக்கதிர்அலுவலகத்தில்.கண்டிப்பாக வரவேண்டும்.."என்று கு.சி.ப. அவர்கள் கூறினார்கள்.

மாலை கே.முத்தையா அவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது . கூடுதலாக திவரதராஜன் என்ற ஓவியரும் கலந்து கொண்டார்.

அல்லி நகரத்தை சேர்ந்தவர் வரதராஜன்.விவசாய குடும்பம். கட்ச்சியோடு தொடர்பு உண்டு.காட்ச்சிக்கான சுவர் விளம்பரங்கள், தட்டிகள் ஆகியவற்றை அவரும் மற்றோரு தோழரான "சின்னையா" வும் எழுதுவர்கள். புகழ் பெற்ற இயக்குனரான "பாரதி ராஜா " அவர்களின் பூர்வாசிரமபெயர்தான் "சின்னையா " என்பதாகும்.

கு.சி.பா சேலம் மாவட்டத்தில்  கடசியில்  .கொல்லிமலை வன குடி மக்களை  ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்தியவர்> கரும்பு விவசாயிகள் சங்கம், ஆலைகளுக்குக்கரும்பின ஏற்றிச்செல்லும் மாட்டுவண்டி  தொழிலாளர்கள் சங்கம் என்று பணி செய்து வந்தார்அதனால் மாதம் பதினைந்து நாள் மதுரையிலும் மீதிநாட்களநாமக்கல்லிலும் இருப்பார்>

தீக்கதிர் அலுவலகத்திலொரு ஜாதிக்காய் பெட்டி கொடுத்தார்கள்.அது தான் செம்மலர் அலுவலகம்> கடிதங்கள்,கதை,கவிதை,கட்டுரை எல்லாம் அதில்தான் போடுவார்கள். நாங்கள் அவற்றை படித்து தேர்வு  செய்வோம். 

மாதம் ஒருமுறை வரும்குசிபா அதனை பார்த்து பிரசுரிக்க தி.வரதராஜனிடம் கொடுப்பர்.தேவையான படங்கள்வரைவது, திருத்துவது<பக்கமாக்குவது ஆகியவற்றை தி,வ  கவனிப்பார்

அதற்காக அவருக்கு மாதம் அலவன்ஸ் 30 ரூ கொடுப்பார்கள். இதுதவிர தினம் படிக்காசு என்று நான்கு அணா கொடுப்பார்கள் .

தி.வ .வின் குடும்பம் அவருடைய   மூன்று மகன்கள்,மனைவி அல்லிநகரத்தில்வசித்தார்கள். 

 ஒரு புரட்ச்சிகர இயக்கத்தின் புட்டசிக்கற ஏட்டில்பணி செய்கிறோம் என்ற திருப்தி உண்டு.

எதையுமே ஆசிரியரிடம்கேட்டு சொல்கிறேன் என்பதை தவிர தி>வ விடமிருந்து வேறு பதில் வராது> அவரை பொறுத்தவரை கு.சி.ப தான் கடசியின் மத்தியகுழு . கே.எம். பொலிட் பீரோ. !

30 ரூபாய் அவர் எப்படி வாழ்க்கையை,குடும்பத்தை ஓட்டினார் என்பது அந்த மார்க்ஸ் மட்டுமே அறிவார். 1977 ம் ஆண்டு தீக்கதிர்  பைபாஸ் சாலை வரும் வரை அவர் குடும்பம் அல்லி நகரத்தில் தான் இருந்தது.

"ஏங்க !  கடசி க்கு தெரியாத நம்மை பத்தி ! வச்சிக்கிட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க " என்று சொல்லி நம் வாய அடக்கி விடுவார்.

48 ஆண்டுகள் ! கிட்டத்தட்ட அரை நூற்ராண்டு.!  "செம்மலரை " தன கண்ணின் மணி போல் காத்து வந்தவர் தி.வ.!

அவர் 31-12-17  ஒய்வு பெறுகிறார் !

Glory to you  Comrade varatharaajan !!!


எல்லாப்புகழும் மார்க்சியத்திற்கே !!!

Tuesday, December 19, 2017


சம்ஸ்கிருத இலக்கியத்தில் 

"அனிதா " ...!!!மருத்துவம் படிக்க விரும்பிய மாணவி அனிதா பற்றி எழுதாத ஏடுகள் இல்லை . வடநாட்டில் உள்ள பத்திரிகைகள் கூட அந்தமாணவியின்    மரணம் பற்றி  எழுதி இருந்தார்கள்.

சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவை நன வாக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இமாலயம் போன்றது. ஏழ்மையும் குடும்பத்தின் இயலாமையும் அவரை கட்டிப்போட வில்லை . விடாத அவருடைய முயற்சி தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் கிட்டத்தட்ட மருத்துவ கல்லூரியின் கதவை தட்டும்   நிலைக்கு கொண்டுவந்தன .

அவருடைய பாடுகளைப்பற்றி தமிழ் இலக்கியத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

சம்ஸ்கிருத இலக்கியத்தில் அவர் கவிதையாக மலர்ந்திருக்கிறார்.

"அனிதாவா அநித்யாவா "

என்ற கவிதை கோழிக்கோட்டிலிருந்து வரும் "ரசனா " என்ற சம்ஸ்கிருத மொழி பத்திரிகையில் வந்துள்ளது.

கதைகளை கவிதை  வடிவிலும், கவிதை  களை  கதை வடிவிலும் எழுதும் மரபு சம்ஸ்கிருத இலக்கியத்தில் உண்டு.

அனிதாவின் மரணத்திற்கு பிறகு அனிதாவின் தாயும் தந்தையும் படும்வலியையும் வேதனையையும் சித்தரிப்பதாக அந்த கவிதை  உள்ளது. 

"சில வினாடிகள் "வலி "த்ததும் நீ மரணித்துவிட்டாய் மகளே "

நாங்கள் சாகும் வரை வலிக்குமே அம்மா "என்ற கவிதை  வரிகள் அந்த எளிய பெற்றோர்களின் வலி யை மட்டுமல்லாமல்  இந்த சமூகத்தின் வலியையும் கூறுவதாக அமைந்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்ச்சி இந்த சம்ஸ்கிருத கவிதையை எழுதியுள்ளார் .

.

Sunday, December 17, 2017


"கீழ் வெண்மணி "

50 ஆண்டுகளுக்கு முன் ...!!!
" எங்க ஆண்டை நல்லவர் . தினம் அடிக்கமாட்டார் "

பண்ணையில்  வேலை செய்யும் ஒருவர் 60 து  70 ஆண்டுகளுக்கு முன் சொன்னது .

நித்தம் நித்தம் சவுக்கடியும் சாணிப்பாலும் குடித்த பண்ணையம் செய்ப்பவனுக்கு நிலைமை அப்படித்தானே புரியும். இந்தநிலைமையை மாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கி இருந்த அவனுக்கு செங்கொடியை ஏந்திக்கொண்டு கன்னடத்து பாப்பான்  பி.சீனிவாசராவ் என்ற உருவில் வந்து சேர்ந்தார்.

"உன்னை அடித்தால் திருப்பி அடி "

"வாடா என்றால் போடா என்று சொல் "

என்ற மந்திர வார்த்தையை அந்த அடிமைகளுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களிடையே மின்சாரத்தை பாய்ச்சினார். செங்கொடி சங்கத்தின் பால் அந்த ஏழை எளிய அப்பாவி தொழிலாளிகள் சங்கமித்தனர்  . சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு சிலம்பம் போனற வீர பயிற்சிகளை மணலி கந்த சாமி போன்றவர்கள் சொல்லிக்கொடுத்தனர்.

தஞ்சசையில் குறிப்பாக  கீழைத்தஞ்சையில் செங்கொடி சங்கம் பலம் பொருந்தியதாக மாறியது.

இது பற்றி பத்திரிக்கை குறிப்பில் மைதிலி சிவராமன் " எங்கள் வீட்டின் புழக்கடையில் நின்று "சாமி ! சாமி !" கூப்பிடும் அடிமை இப்போதெல்லாம் காலில்சேருப்பும் மேலே சட்டையும் போட்டுக்கொண்டு எங்கல்வெட்டு வாசலில் நின்ற் ஐயா இன்று எங்கள் தலைவர் பேசுகிறார். நான் ஐந்து மணிக்கு போகணும் "என்கிறான் என்று ஆதங்கப்பட்டதை "விவரிக்கிறார் .

"அரைப்படி நெல் கொடுப்பது பெரிசில்லை ! இவர்கள் உத்திரவு போட்டு நாங்கள் கொடுப்பதா? " என்ற எஜமானத்திமிர் எதிர் வினா ஆற்றியது .

5000 லிருந்து 6000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குன்னியூர் சாம்பசிவ அய்யர்,வலிவலம் தேசிகர்,பூண்டி வாண்டையார்கபிஸ்தலம் மூப்பனார் ஆகியோர் காங்கிரஸ்காரர்கள். வடபாதி மங்களம்,நெடும்பலம் ஆகிய பகுதி பண்ணையார்கள் திராவிடஇயக்கத்தினர் , அரசியல் வேறுதான்ஆனால் எல்லோரும் நிலவடைமையாளர்கள் தானே.  செங்கொடி இயக்கத்தின் வளர்சசி தங்கள் அஸ்திவாரத்தையே குலை த்துவிடும் என்று புரிந்து கொண்டனர். கூடிப்பேசி மாற்று யோசனையை கொண்டுவந்தனர் .

"நாங்கள் உங்கள் விரோதிகள் அல்ல.காலம் காலமாய் ஒரேதண்ணிய  குடித்து வாழ்பவர்கள். நமக்குள் தகராறு எதற்கு. சமாதான மாக்வாழ்வோம் நாங்களும் நெல் தான் பயிரிடுகிறோம்.நீங்களும் நெல் தான் பயிரிடுகிறீர்கள். " நெல் பயிரிடுவோர் சங்கம் ஆரம்பிப்போம். நீங்களும் நாங்களுமாக  சேர்ந்து எதுவானாலும் சங்கத்திற்குள் பேசி முடித்துகொள்வோம் ' என்று பசப்பினார்கள்.

அவர்கள் செங்கொடி சங்கத்தை பலவீனமாக்க இதனை சொன்னார்கள். பல கிராமங்களில் நெல் பயிரிடுவர் சங்கம் வளர்ந்தது .இதன் தலைவராக கோபாலகிருஷ்ண நாயுடு வந்தார் சாம தான பேத ,தண்டம் பயன்படுத்தப்பட்டது .வெண்மணியை சுற்றி உள்ள கிராமங்களில் நெல் பயிரிடும் சங்கம் வளர்ந்தது ஆனால் கீழ்வெண்மணியில் முடியவில்லை..

" சாட்டை அடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவுகட்டியது செங்கொடி.! பண்ணையடிமை ஒழிந்தது செங்கொடியால் !செருப்பு போடும் உரிமையை தந்தது செங்கொடி.எங்கள் பெண்கள் முழங்கால் சேலையை கணுக்கால்வரை இறக்கியது செங்கொடி !உயிரே போனாலும் செங்கொடியை விட்டு உங்கள் மஞ்சள் கொடிய தொடமாட்டோம்!" என்றார்கள் வெண்மணிமக்கள். 

இது தான் வெண்மணியின் மையபுள்ளி யாக மாறியது. கோ பாலகிருஷ்ணா நாயுடுவின் சேல்வாக்கில்போலீஸார்  செங்கொடி சங்கத்தை  சேர்ந்த சின்னையன் மற்றுமொருவரை பிடித்து பண்ணையாரிடம் ஒப்படைத்தனர்.இதனை அறிந்த   மக்களொன்று திரண்டு பண்ணையார் வீட்டை முற்றுகை இட்டு அவர்களை விடுவித்தனர்.

அன்று இரவு நாயுடு நுறு அடியாட்கள் ஆயுதங்கள் துப்பாக்கிகைகளோடு அந்த சின்னஞ்சிறுகிராமத்தைமுற்றுகை இட்டான் .

அங்குள்ள குடிசைகள் பண்ணைகளுக்கு சொந்தம். ஆகையால் பெண்களும் குழந்தைகளும் மற்றவர்களும் ராமையாவின் சொந்த குடிசையில் புகுந்து தப்பிக்க முற்பட்டனர் . 

ராமையாவின் குடிசைக்கு தீ   வைத்தான்நாயுடு .

மருத்துவ மனையில் இருந்த இ .வெ .ரா வுக்கு சொல்லப்பட்டது .

"இந்தியர்கள் ஆடசியில் மனுநீதிதான் நடக்கும்" என்று பெரியார் கட்டுரை எழுதினார்.  

Wednesday, December 13, 2017

சாதி காதலுக்கு தடையா ?

அல்லது 

காதல் சாதிக்கு தடையா ?காதல் ஊற்றெடுக்கும்   பொது அது சாதியை உடைத்தெறிகிறது . சாதியை காதல் நிச்சயமாக  மறுதளிக்கிறது . ஆகவே காதல் சாதியை தடை செய்கிறது என்பது தான் உண்மை .

இந்த உண்மையை புரிந்து கொண்டு சாதியை தக்கவைக்க முயல்பவர்கள் கொடூரமான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் எனக்கு தனிப்பட்ட முறையில் "காதல் " என்பதைப்பற்றி பெரியாரின் சீடனாகவே இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்ச்சி ,துக்கம், வலி போன்ற உணர்வு தான் காதலும். தேவை இல்லாமல்  புனிதமான முக்கியத்துவம் கொடுத்து  அதனை வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றாக கருத்தும்படி  செய்து விட்டோம்.இதற்க்கு காரணம் கலை இலக்கியக்காரார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .

அதேசமயம் சில நன்மைகளும் அதனால் ஏற்படுகிறது என்றால் அது ஒரு மூலையில் இருந்துவிட்டு போகட்டும் .

உடுமலை சங்கர் ஆணவக்கொலை   வழக்கின் தீர்ப்பு வந்த  பின் விளைவாக விவாதங்கள் நடை பெறுகின்றன . 

கவுசல்யா என்ற அந்த சின்னஞ்சிறு பெண் கண்ணெதிரே சங்கர் வெட்டி கொலைசெய்ப்பட்டதை பார்த்தவர். அந்த அதிர்சசியில் இருந்து அவரை மீட்டெடுத்து அவரை ஒரு தீரமிக்க பெண்ணாக ஆக்கியவர்கள்  வணக்கத்திற்கு உரியவர்கள். இத்தகைய கொடூரமான நிகழ்வுகள் நடை பெறாமல் தடுக்க இந்த வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஊட்டியவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். 

எந்த அளவுக்கு அந்த பெண் தெளிவூட்டப்பட்டிருந்தால் விடுதலை செய்யப்பட்ட தன தாயையும்,மாமனையும் மேல்  முறையிட்டு  தண்டனை வாங்கித்தருவேன் என்று அறிவிக்க முடியும் .

கவுசல்யாவுக்கு அறிவார்ந்த சிந்தனையை ஊட்டிய மாதர் சங்க தோழர்களின் பாடுகள் இதில் மிகவும் முக்கியமானதாகவே எனக்கு படுகிறது.

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !!! 


Friday, December 08, 2017

ஜலகண்ட புரம் .ர.சுந்தரெசன1952 ம் ஆண்டு வாக்கில் குமுதம் பத்திரிகை மாதம் ஒன்றாகவந்து கொண்டிருந்தது. அப்பொதே ஜலகண்டபுரம் ர.சுந்தரெசன் குமுதத்தில் எழுதி வந்தார் .பின்னர் குமுதம் மாதம் இரண்டாக வந்தது> அதன் பின்னர் மாதம் மூன்றாக வந்தது .இறுதிய்ல் வாரம் தோரும் வியாழக்கிழமை வர ஆரம்பித்தது குமுதத்தை பிரும்மாண்டமாக வளத்தவர்கள் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ,ரா.கி.ரங்கராஜன்.,ஜ.ரா சுந்தரேசன் ஆகியோர் ஆகும். மூவரும் எழுதி வந்த "அரசு" பதில்கள் பிரபலம் .

வேசி ஒருவளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறான் இளைஞன் ஒருவன் அதனால்   அவன் படும்துன்பத்தையும்,அவமானத்தையும் சகிக்காமல் அந்தபெண் அவனை விட்டு தலமறைவாகி விடுகிறாள்.  .அந்த இளைஞன் ,அந்த பெண் ஆகியோர் பார்வையில் இந்த கதைய சுந்தரெசன் 50 களில் எழுதி இருந்தார் .மிகவும் அதிகமாக பாராட்டப்பட்ட ,விமரிசிகப்பட்ட கதையாகும் இது.

மிகவும் அழுத்த்மான கதைகளை எழுதியவர் "அப்புசாமி -சீதாபாட்டீ " கதையையும் எழுதியது அவ்ருடைய craft manship எவ்வளவு உயர்ந்த தரத்தில் இருந்தது என்பத்ற்கான சான்றாகும் .


ஆரம்ப காலத்தில் குமுதம் பத்திரிகையை எக்மோர் ரயில் நிலயத்தில் பார்சலில் ஏற்ற அவ்ரும் ரங்கராஜனும் வருவதை பார்த்த நினைவு வருகிறது .அப்பொது குடுமி வைத்திருந்ததாக நினவு தட்டுகிறது. 

கற்பனை வளம்,எழுத்து வன்மை, நிர்வாகம் மூன்றிலும் சிறந்து விளங்கியவர் ஜ .ர.சு !

அன்னாருக்கு அஞ்சலிகள் 


Monday, December 04, 2017


"com . N .S "

"com N S  ! வாழ்த்துக்கள்  !"

"வாங்க ! comrade ! 12 th இல்லையா இந்தவருடம் ! எப்படி தயாரிப்பு இருக்கு"

வாழ்த்து சொன்னவர்  மாணவர் அமைப்பை சேர்ந்த  12th மாணவர் .18 வயது இருக்கலாம். 


96 வயது ! கல்லூரியில் படிக்கும் பொது பிரிட்டிஷ் பொலிஸாரால் கைது செய்யப்பட சுதந்திர போராட்ட வீரர் . பல ஆண்டுகள் சிறை வாசம்> பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை ! மாவட்ட செயலாளர் 1 மாநில செயலாளர் ! மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் . ஓய்வாக இருக்கிறார். அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து  சொல்கிறான் அந்த சிறுவன் ! அல்லது மாணவன் ! அதனை ஏற்று அவனோடு பரிவான விசாரிப்புகளை தருகிறார் தோழர் சங்கரய்யா !


ஒரு கம்யூனிஸ்டு கடசி உறுப்பினர்களிடையே தவிர வேறு எங்கும் இத்தகைய விசாரிப்புகள் கேட்கவோ காணாவோ  முடியாது.  


மதுரைக்கு வரும் போதெல்லாம் தீக்கதிர் அலுவலக மாடியில் தான் தங்குவார். அவரோடு பல சந்தர்ப்பங்களில் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது . கூட்டம் முடிந்ததும் "எப்படி இருந்தது ? சரியாக பேசினேனா ?" என்று  என்போன்றவர்களிடம் கூட அபிப்பிராயம் கேட்பார் 


மிகசிறந்த ரசிகர்> கலை இலக்கியத்துறையில் கரைகண்டவர் .பலசந்தர்ப்பங்களில் இலக்கியம் பற்றி அவர் ஆசிரியர் குழுவில் பேசி இருக்கிறார் .

செம்மலர் கதைகளை பற்றி விமரிசிபார் . "செம்மலருக்கு மற்ற வெகுஜன பத்திரிகைகளுக்கு எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை அனுப்புவது பற்றியும் விமரிசிப்பார். அவர்கள் குமுதத்திற்கும் எழுதுவார்கள். கல்கி கும் எழுதுவார்கள் செம்மலரு க்கும் எழுதுவார்கள். அந்ததந்த பத்திரிகையின் எடிட்டோரியல் பாலிசிக்கு தகுந்த மாதிரி தங்கள் எழுத்தை சரிசெய்து கொள்வார்கள்."

".நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் . தொழிலாளர்கள்,சாதாரண மக்கள், உழைப்பாளிகள் ஆகியோரை சித்தரித்து அவர்கள் பாடுகளை விவரிக்கிறோம் ! ஏழை எளிய மக்களின் சிரமத்தை,கஷ்டங்களை எழுது  கிறோம். அந்த மக்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்ச்சி , கொண்டாட்டம் இருக்கும் என்பதை சொல்ல மறுக்கிறோம். தை  மாதம் மினாடசி அம்மன் கோவிலில் நடக்கும் திருமணத்தை பார்த்திருக்க்ற்றீர்களா ?  சாதாரண மக்கள், அத்தக்கூலிகள் . ரிக்ஷ தொழிலாளிகள்  திருமணம் நடக்கும்> மலிவான பட்டு வேட்டி சட்டை அணிந்து மணமகனாகவும், பட்டு சேலையில் அவளும் முகம் மலர வருவார்களே ! அதனை ஏன் சித்தரிக்க மறுக்கிறீர்கள்,, ! அவர்களை சைக்கிளில் வைத்து அவன் சேக்காளிகள் இழுத்து வருவார்களே ! அவன் நண்பர்களின் கிண்டலையும்,கேலீயையும் தலையை  குனிந்து கொண்டு நமட்டு சிரிப்போடு அந்த மணமகள் ரசிப்பாள் ! அதனை எழுதுங்களேன் !   "

விருந்துக்காக கோவில் எதிரிலிருக்கும் ஷண்முக விலாசம் சாப்பாட்டு  டிக்கெட்டுக்காக உறவினர்கள் மொய்ப்பார்களே ? எவ்வளவு சுவாரசியமான நிகழ்வு ! அதனை சித்தரியுங்களேன் !"

N S  வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல !


எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்தவரும் கூட !!!