Tuesday, December 30, 2014

"ஊடக ரௌடிகள் "போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் ! அதுபற்றி  செய்திகளை அறிய "சன் " தொலைகாட்சியை பார்த்தேன் ! 

பாவம் ! போக்குவரத்து சீர்குலைந்ததால்மக்கள் படும்பாட்டை கல்லும்கரையும்வண்ணம் காட்டினார்கள் !

வாழப்பாடி அருகே ஆளும் கட்சி ரௌடிகள் ஆளும்கட்சி தொழிலாளர்களை தாக்கினார்களாம் !

எப்போதும் 7/- ரூ டிக்கட் தான் வாங்குவார்கள் ! இப்போது 30/- ரூ வாங்குகிறார்கள் என்று ஒருவர் அங்கலாய்த்தார் !

தொழிலாளர் ஸ்ட்ரைக் என்றால்  இவர்களுக்கு மக்கள் நலன் புலப்பட ஆரம்பிக்கும் !

தீபாவளியின்பொது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்து கட்டணம் 1500 /- ரூ தனியார் வாங்கியபோது கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் தான் இவர்கள் !

பெற்றோலுக்கும்,டீசலுக்கும் வரி போட்ட பொது பொத்தி கொண்டிருந்தவர்கள் தான் இவர்கள் !

இவர்களின் மாமனும் மச்சானும் தான் தனியார் பேருந்து உரிமம் உள்ளவர்கள் !ஒரு பண்டிகை,நல்லது வர விடமாட்டார்கள் ! அரசு அனுமதியிலாமலேயெ  அதிக கட்டணம் வசூலிப்பார்கள் ! 

வேல நிறுத்தத்தால் பொது மக்களுக்கு சங்கடம் உருவாகிறது தான் !

ஏல ! "பொதுமக்கள் " ங்கறது யார்ல ? போக்கு வரத்து தொழிலாளி போராடும்போது அரசு,ஊழியன், தனியார் கம்பெனி சிப்பந்திகள் "பொதுமக்கள்"

 அரசு ஊழியன் போராடும்போது தொழிலாளி" பொதுமக்கள் "!

காலம் வரும்ல ! அப்ப போக்குவரத்து தொழிலாளி மட்டுமல்ல ! அரசு ஊழியன், தனியார் கம்பெனி சிப்பந்திகள் , ரிக்ஷா,ஆட்டோ, ஏன் பாடுபட்டு உழைக்கிற மனுசன் அத்துணை பேரும் "செயின்ட் ஜார்ஜ் " கோட்டை வாசல்ல நிப்போம் ! 

அப்பம் வச்சுகிடுதம் !!!Friday, December 26, 2014

"Tyranny of Democracy "

"கொடுங்கோன்மை ஜனநாயகம் "பெரும்பான்மை கருத்தாளர்கள் சிறுபான்மை கருத்துக்களை கேட்டு அதனையும் அணைத்துக் கொண்டு செல்வது தான் ஜனநாயகம் ! 

"என்னிடம் பெரும்பான்மை  உள்ளது ! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை " என்று செயல்படுவது ஜனநாயக மல்ல !

மூ லதன ஜனநாயகத்தில் இத்தகைய மனநிலை ஆட்சியாளர்களுக்கு உருவாவது மிகச்சாதரணமானது  தான் ! அதிகார பலம் ,பணபலம் கொண்டு ஆள் சேர்த்து  அதற்கு ஒருஜனநாயக வடிவம்கொடுப்பார்கள் ! 

இதனைத்தான் "Tyranny of Democracy " (கொடுங்கோன்மை ஜனநாயகம் ) என்று வர்ணிக்கிறார் மாமேதை லெனின் அவர்கள் !

முகர்ஜி என்ற ரப்பர் ஸ்டாம்ப் கையெழுத்திட்ட "அவசரசட்டம்" அதனையே காட்டுகிறது !

இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முடலீட்டினை உயர்த்தவும், நிலக்கரியை எடுக்க தனியாருக்கு தாரை வார்க்கவும் என்ன டா அவசரம் ! அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாமே !

இன்சூரன்ஸ்  மசோதா மாநிலங்கள் அவையில் வந்தது ! அதனை select குழுவின் பரிசீலனக்கு அனுப்பினார்கள் ! மீண்டும் அவையின் பரி சீலனைக்கு வந்தது ! அவையின் பரி சிலனை விவாதம் ஆகியவை இன்னும்முடியவில்லை ! இன்றைய நிலையில் அது மாநிலங்கள் அவையின் சொத்து ! ஜனாதி பத்தி அதில் தலையிடலாமா ?

கேட்டால் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமால் செய்கிறார்கள் என்று ஆளும் பா.ஜ.க சொல்கிறது !

சுக்ராம் நு ஒரு மந்திரி ! தொலை பேசி துறையில் ஊழல் செய்தார் ! அதை விசாரிக்க வேண்டும் என்று பதினைந்து நாட்கள் நாடாளுமன்றத்தை நிலைகுலையச்செய்தாரே goodgovernance  வாஜ்பாய் ! பின்னர் அதே சுக்ராமை தடவி உச்சிமோந்தது வேறு விஷயம் !

நாடாளுமன்ற ஆவணங்களை பரிசீலிக்கலாமா ? நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று பார்ப்போமா ? 

"ஜனநாயகம் ,ஜனநாயகம் " என்று கூச்சலிடுவான் முதலாளி அவன் நலன் காக்கப்படும் வரை !

இல்லை என்றால் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு இது தான்  ஜனநாயகம் என்று கொக்கரிப்பான் !

இதனைத்தான் Tyranny of Democracy என்கிறார் லெனின் !!!

கொடுன்கோன்மை ஜனநாயகம் என்பது இது தான் !!!!!

 

  

  

Thursday, December 25, 2014

"தியேட்டருக்கு " 

போகாதீர்கள் .......!!!


நான் திரை அரங்கிற்கு போனது கடைசியாக "நண்பன் " என்ற திரைப்படம் நாகபுரியில் "ரிலீஸ் " ஆன சமயம் ! நங்கள் குடும்பத்தோடு ஐந்து பேர் போனோம் ! சுமார் 1500 /- ரூ  செலவு ! என்மகனிடம் கேட்ட பொது சொல்ல மறுத்துவிட்டான் ! பின்னர் தெரிந்து கொண்டேன் ! அன்று முடிவு செய்தேன் இனி தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டாம் என்று !

அதன் பிறகு தியேட்டரில் பார்க்கவில்லை ! சென்னையிலிருந்து உறவினர்கள் மூலம் "சிடி" வாங்கி வீட்டிலேயெ பார்ப்பேன் !  மூப்பின் காரணமாக தியேட்டர், படி ஏறி இறங்குவது சிரமமாக இருப்பதும் ஒரு காரணம் தான் !

இப்பொழுதெல்லாம் வீட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு பார்ப்பது கூட  சிரமமாக இருக்கிறது ! மூன்று  மணிநேரம் தொடர்ச்சியாக உட்காருவது முடியவில்லை ! ஒரு படத்தை முன்று sitting  ல் பார்க்க வேண்டியதுள்ளது ! "சதுரங்க வேட்டை " சிடி வந்து ஆறு மாதமாக துங்கிக்கொண்டிருக்கிறது ! 

புதனன்று என் மகன் "Pk " என்ற படம் நன்றாக இருக்கிறது ! நீங்கள்  கண்டிப்பாக பார்க்க வேண்டும் !அமீர்கான் நடித்தபடம் ! சர்சைக்குரிய படமாதலால் தடை செய்ய வாய்ப்பு உண்டு ! நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் ! நான் online ல் டிக்கட் வாங்கிவிட்டு காரை எடுத்து வருகிறேன் !தயாராக இருங்கள்" என்றான்!

'அமிர் கானா ? கண்டிப்பாக தடை வராது ! ஏற்கனவே "மோடியை " பார்த்ததாக செய்தி வந்துள்ளது ! நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ! அரசியல் செல்வாக்கு இருக்கும் "என்றேன் !

மதியம் நான் "கதறகதற " என்னையும் முத்து மினாட்சியயும் தியேட்டருக்குள் தள்ளி விட்டான்  !

ஒரு டிக்கெட் 240 /-ரூ ! இர்ண்டு பேருக்கு 480 /- ரூ ! தண்ணி பாட்டில் கொண்டு போகக்கூடாது ! அது ப்பாட்டில் 40/- ரூ ! காபி 60/-ரூ ! பாப்கார்ன் 80/​ரூ !

விஜய், சூர்யா என்று மக்களை தியேட்டரில் படம் பார்க்கும்படி கேட்கிறார்கள் ! 

"சிடி"யை தடை செய்ய விஷால் முன் நிற்கிறார் !

தீயெட்டர் காரனை பாருங்க சாமிகளா !!

இல்லைனா "தியேட்டருக்கு போகாதிங்க மக்களே!!

இப்பொழுது எல்லாம்  விட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு 


Wednesday, December 24, 2014

        

"pk "   

(இந்தி திரைப்படம் )


2014ம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம் என்று நான் கருதுகிறேன்  அது என்ன "PK " என்ற தலைப்பு ?

கேரளத்திலும் ,இலங்கையிலும் ஆப்பிரகாம் கோவூர் என்ற பகுத்தறிவு வாதி (rationalist ) இந்தியாவையே கலக்கிக் கொண்டிருந்தார் ! அவருடைய வாழ்க்கையின் சில பகுதிகளை ஒரு பாத்திரத்தில் புகுத்தி கோவூர் என்று அழைக்கப்பட்ட அவரின் மாதிரியாக "pk " என்று வைத்தேன் என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி ! (K  for kovoor )


கதை 

வேற்று உலகத்திலிருந்து   பூமியை அறிய வருகிறான் ஒருவன் ! அவன் மிண்டும் தன வாகனத்திற்கு செல்ல அவனி டம் ஒரு REMOTE உள்ளது ! அவன் இறங்கிய இடம் ராஜஸ்தானம் ! அவனுடைய REMOTE ஒரு திருடனால் களவாடப்படுகிறது ! அவனை விரட்டி செல்லும்  பொது திருடனின் டேப்ரி கார்டார் அவன் கையில் சிக்குகிறது ! அந்த வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் தான் "PK "!

மக்களைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ! அவர்களுடைய தோல் பலநிறத்தில்,பச்சை,சிவப்பு,மஞ்சள்என்று பலவண்ணங்களில் உடலிலிருந்து வழிந்து கொண்டு இருக்கிறது !  பின்னர் புரிந்து கொள்கிறான் ! அவர்கள் தங்கள்தோலுக்கு பாதுகாப்பாக ஆடை அணிந்துகொள்கிறார்களென்பதை ! டேப்ரிகார்டரை கொண்டு தன்  மானத்தைமறைத்துக்கொள்கிறான் !  

அவனுக்கு பேச்சு மொழி தெரியாது !ஆனால் ஒருவர் கையைதோட்டால் அவனால் அவர்கள் நினைப்பதைபுரிந்துகொள்ள முடியும் ! அறிந்து கொள்ளமுடியும் ! ஆண் - பெண் என்று வித்தியாசம் பாராமல் தொடுவதால் அவன் அடிவாங்குகிறான் ! அவனை செகாவத் என்பவர் கப்பற்றுகிறார் ! அவனுடைய remote ஐ  டெல்லிபோய் தேடும்படி சொல்கிறார் !

அங்கு அவன் ஜகஜனனி என்ற பெண்ணை சந்திக்கிறான் ! ஜக்கு என்று அழைக்கப்படும் அவள் பெல்ஜியத்தில்  ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில்  பணியாற்றியவள் ! பெல்ஜியத்தில் சப்ஃரோஜ் என்ற இளைஞனைக் காதலிக்கிறாள்! அவனொரு பாகிஸ்தானி ! ஜக்குவின் தந்தை இதனை ஏற்க மறுக்கிறார்! தன குருஆன சாமியாரை கேட்கிறார் ! சாமியார் இந்த திருமாணம் நடக்கக்கூடாது என்று சொல்கிறார் !

மீறி  சர்ச்சில் திருமண  ஏற்பாடுகளை இருவரும் செய்கிறார்கள் ! தகவல் தவறால் இருவரூம்பிரிய நேருகிறது ! ஜக்கு பெல்ஜியத்திலிருந்து புது டெல்லி வருகிறாள் ! அங்குதான் அவள் pk  யை சந்திக்கிறாள் ! தொலை  காட்சி அறிவிப்பாளறான  அவள் pk வை  வைத்து நிகழ்ச்சி நடத்த விரும்புகிறாள் !

மக்கள் எதையும் "பகவான் " செய்வார் என்று வாழ்வது pk வுக்கு ஆச்சரியமளிக்கிறது !

தன்னுடைய remote "பகவான் " மூலம்கிடைக்குமா ?என்று தேடுகிறான் ! அனுமார்,கிருஷணர் ,ஏசு,நபிகள், புத்தர் என்று யாருமே அவனுக்கு உதவவில்லை ! 

அவனுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது ! இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவன் என்கிறீர்களே ! உங்கள்  உடம்பில் அடையாளமிருக்கிறதா ! என்று கேட்கிறான் ! மருத்துவமனைக்குச் சென்று பிறந்த குழந்தயின் உடலில் அடையாளம் இருக்கிறதா என்று சோதிக்கிறான் !

இறுதியில் ஜக்குவின் குடும்பசாமியாரிடம் அவனுடைய ரிமோட் இருப்பது தெரிகிறது ! தொலைக்காட்சி நிகழ்ச்சியில் pk -சாமியார் விவாத மேடையில் சாமியார் தோற்க remote  ஐ பெற்றுக்கொண்டு தன்கிரகத்திற்கு செல்கிறான்  pk  !


நமக்கு ஒரு சங்கடம் வந்தால் நாம் உடனடியாக தீர்வை தேட கடவுளிடம் தான் செல்வோம் ! ஆனால் கடவுளுக்குத்தான் எத்தனை "மானேஜர்கள் " ! இவர்களை சாடுவது தான் இந்தப்படத்தின் ஆதார சுருதி ! அற்புதமான திரைகதை அமைப்பு !

"pk " வாக நடிக்கும் அமீர் கான் சிறப்பு ! குறிப்பாக முதல் பாதியில் பேசாமல்.தன கண்கள்,உடல் மொழிமூலம் தன்னுடைய பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் !

"பகவான் ஹை கஹாங்  ரே தொ" (கடவுள் எங்கே இருக்கிறார்) என்ற பாடலுக்குப்பின் அவர் கணபதி,சரஸ்வதி ,கிருஷ்ணர் சிலைகளுக்கு முன்  நின்று பேசும் போது நம் நெஞ்சமும் கதறுகிறது ! 

ஜாக்ஜ்ஜனனியாக நடிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு இந்த ஆண்டு விருது கிடைக்கவேண்டும் ! மகிழ்ச்சி,துக்கம், பரவசம் என்று கண்சிமிட்டும்னேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் ! anchor ஆக நடிக்கும் அவரின் உடல் மொழி பாவனைகள் பிரபலமான ஒருவரை கண்முன் நிறுத்துகிறது !

முரளிதரனின் காமிரா மிகவும் நேர்த்தி !

வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே ,அழவும், சிந்திக்கவும் ,தெளிவு பெறவும் வைக்கும் படம் 

"PK "

Monday, December 22, 2014

 

N .M .S அவர்களே 

1963ம் ஆண்டு ! காப்பிட்டு ஊழியர்களின் தென்மண்டல கூட்டமைப்பின் அங்கமாக தமிழ் நாடு,கெரளா,ஆந்திரா,கர்நாடகா ,பாண்டிசெரி ஆகிய மாநிலங்கள் இருந்த காலம் !

மண்டல மாநாடு மதுரையில் நடக்க விருந்தது !

மண்டலதலைவராக அந்த மாபெரும் போராளி மோகன் குமார மங்கலம் இருந்தார் !

செயலாளர்.மற்றும் மண்டல பொறுப்பாளர்களாக தோழர்கள்மேனன்,ராம்ஜி என்று அழகு சேர்த்தனர் !

மாநாடு மதுரை அழகப்பன் அரங்கில் நடந்தது ! 

மொகன் தன் அலுவல்கள் காரணமாக பதவியிலிருந்து விடுப்ட்டு தன்னுடைய நண்பர் இளம் வக்கீல் சங்கரன் அவர்களை கொண்டுவர விருப்பம் தெரிவித்தார் ! 

தென் மண்டல் பொதுச்செயலாளராக புதியவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள் !

மிகவும் இளமையான ,நெடிய ,என்.எம் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

அன்றிலிருந்து ,ஓய்வு பெற்றது வரை ,அதற்குப்பிறகும் இடைவிடாத போராட்டக்களத்தில் நின்று காப்பீட்டுக் கழக ஊழியர்களுக்கு மட்டுமல்லமல் , உழைக்கும் மக்களுக்காக பணியாற்றிய 

N.M.S அவர்களே

காலம் மாறத்தான் செய்யும் ! ஆனாலும் உங்கள் 

கம்பீரம் குறையவில்லை ! குறையாது !!!

Com .N.M.S I love you


நெப்போலியன் - மயோபதி - பா.ஜ.க ...!!!
துரைசாமி-சரஸ்வதி தமபதியரின் மகன் நெப்போலியன் !  திருச்சி கல்லூரி ஒன்றில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்றவர் ! திரைப்பட நடிகர் ! அவருடைய உறவினர் அரசியலில் பெற்ற செல்வாக்கினால் எம்.எல்.எ ஆனவர் !  பின்னர் பெரம்பலூர் எம்.பி ஆனார் ! மத்திய அமைச்சரும் ஆனார் !

அளவான குடும்பம்.மனைவி இரண்டு மகன்கள் ! 

இந்த மனிதரின் வாழ்க்கையில் சூறாவளியாக தாக்குதல் நடந்தது ! 8வயது மித்த மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி வந்தது ! ஆம் ! தசை சிதைவு நோய் !

குழந்தை வளர அவளர எலும்பு வளரும் ! ஆனால் அதே அளவுக்கு எலும்புக்கு பக்க பலமாக இருக்கும் தாசை  வளராது ! பையன் அடிக்கடி கிழே விழந்தான் ! கைகால் அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறந்தது !

அதிர்ந்து போன நெப்போலியனும் அவர் துணைவியாரும் மருத்துவர்களை தேடி  அலைந்தார்கள் ! இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலை தெரிந்தது !

நாட்டு வைத்தியத்திற்கு திரும்பினார் !

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் டாக்டர் ராமசாமி என்பவர் மயோபதி என்ற சிகிச்சை முறைமூலம் இதனை சீர் செய்கிறார் என்று அறிந்து அங்கு என்று தங்கினார் !

இங்கு மருந்து  கொடுப்பதில்லை ! மாறாக கடுமையான பயிற்சிகளின் மூலம் குழைந்தகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறார்கள் ! குறிப்பாக நீச்சல் பயிற்சி சிறப்பு அம்சம் !

நெப்போலியனின் மகன் கொஞ்சம் தெளிவு பெற்றான் ! மேலும் சிகிச்சை பெற வெளி நாடு போகவேண்டும்! குறிப்பாக அமேரிக்கா !

மகனையும் மனைவியையும் அனுப்பி சிகிசை நடக்கிறது ! இதற்கான மருந்து கண்டுபிடிக்கும்  தொடர்பில் !இருக்கிறார்  ! தன மகனை பரிசோதனையில் ஈடுபடுத்த அனுமதிக்கிறார் ! லட்சக்கணக்கான குழந்தகளின் நிலையையும்,தாய் தந்தையாரின் மனக்கஷ்டத்தையும் புரிந்து கொண்ட நெப்போலியன் இந்தியாவிலும் அத்தகைய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் !

இன்றுவீரவனல்லுரி;ல் பிரும்மாண்ட மான ஆராய்ச்சி மையம் எழுந்துள்ளது ! டாக்டர் ராமசாமி தலைமையில் ! தன வாழ்நாள் சம்மபாத்தியம் முழுமையையும் கொட்டி நெப்போலியன் அதனை  எழுப்பி வருகிறார் !

நாகபுரியில் எனது டாக்டர் நண்பர் ஒருவரின் 12 வயது மகன் ! இதே நோயால் பாதிக்கப்பட்டவன் அங்கு சென்று சிகிச்சைபெற்று வந்தான் !

வீரவநல்லூர் சென்று அந்த மருத்துவ மனையையும் பார்த்தேன் ! சேரன் மாதேவி ​ அம்பை ரோட்டில் தினசரி  நோயாளிகள்   வந்து சிகிச்சை பெருகின்றானர் ! உள் நோயாளிகளுக்கு ஊருக்கு உள்ளெ பிரும்மாண்டமான வளாகம் உள்ளது ! நான் சென்றிருந்த போது குறந்தது நூறு குழைந்தகளாவது சிகிச்சையில் இருந்தார்கள் ! "கட்டுச்சிகிச்சை " என்றமுறையில் சிகிச்சை நடக்கிறது !பயிற்சிக்காக மிகப்பெரிய நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள் !!

பீஹார்.ம.பி.ராஜஸ்தான்,மராட்டியம்,என்று வடநாட்டு மக்கள் தான் அதிகம் ! அவர்கள் தங்குவதற்கும்,நோயாளிக்குழந்தைகள்  தங்குவதற்கும்சிறப்பு  ஏற்பாடுகள் உள்ளன ! 

சிகிச்சை,மருந்து இலவசம் !

இந்த மருத்துவமனையை எனக்கு அடையாளம் காட்டிய தோழர் கவிஞர் கிருஷி அவர்களுக்கு  ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ! கிருஷி த.மு எ க .சாவின் மாநிலக்குழு உறுப்பினரும் ஆவார் !

-------------------------------------------------------------------------------------------------------------------------

நெப்போலியன் பா..ஜ.க.வில் சேர்ந்தது சரியல்ல ! நல்ல மனிதர் ! மோசமான கட்சிக்கு போவானேன் ! 

தசை சிதைவு நோயாளிகளுக்கு அவர் ஆற்றும் பணியை மனதில் கொண்டு அவரை முகநூல் நண்பர்கள்  விமரிசிக்கலாமே !!!

Friday, December 19, 2014

இயக்குனர் மகேந்திரன் 

"கருப்பு கருணா" வை தெரிந்திருக்க மாட்டார் ....!!சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது ! கோ ட்டு போட்ட பெரியவர்கள் ,சரத்குமார் ஆகியொர் ஆங்கிலத்தில் பேசினார்கள் !  தமிழக அமைச்சர் பேசும் போது விழாவுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்டார் !

இயக்குனர் மகேந்திரன் பேசினார் !

"உலகத்திரைப்படங்களைப் பற்றி அறிவேன் ! திரைப்பட உலகத்திப் பற்றி அறிந்து கொள்ளவில்லை " என்று ஆரம்பித்தார் !

" நமது கதாநாயகர்களும்,நாயகிகளும் இன்னும் மரத்தைசுற்றி வருகிறார்கள் ! இதை நிறுத்தப்போகிறோமா ? அயல்நாட்டு படங்கள பார்த்து ,அவர்களின் பண்பாட்டு, பழக்கவழக்கங்களை அறிந்து கொள்கிறோம் ! நமது ரசனையை விரிவு படுத்து கிறோம் ! இதற்கு இத்தகைய விழாக்கள் உதவுகின்றன ! "

"சென்னையத்தாண்டி இந்தப்படங்களை கொண்டு போக வேண்டாமா ! அதற்காக என்ன செய்யப்போகிறோம் ! செய்யவேண்டாமா ? "என்று கேட்டார் !

" ஐயா ! இவை நடக்கத்தான் செய்கின்றன ! "என்று கத்தவேண்டும் போல் தோன்றியது !

"சாலையே இல்லாத குக்கிராமத்திற்கு" புரொஜெக்டரை " தோளில் சுமந்து கொண்டு "கருப்பு கருணா "என்ற எங்கள்  எஸ்.கருணா உலக த்தின் மிகச்சிறந்த படங்களை போட்டு காண்பிக்கிறான் ! ரயிலே போகாத "கம்பம் நகரில் " சர்வதேச திரைப்பட விழாவை நடத்து கிறான் ! அவனுக்குத் துணையாக எங்கள் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம்  இருக்கிறது ! "

"மத்திய மாநில அரசுகளிடமிருந்து "மூக்கா துட்டு " பெறாமல் மூச்சு காட்டாமல்    இது நடக்கிறது !"

இயக்குனர் லெனின் போன்ற சில நல்லவர்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் !

வளர்ந்து வருகிறோம் !

மாற்று சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவோம் !!!  

உங்களையும் அழைப்போம் ! 

வாருங்கள் ! பாருங்கள் !

அந்த மக்கள் சர்வதேச திரைப்பட விழாவை !!!

 எல்லாப் புகழும் த.மு.எ.க.சங்கத்திற்கே !!!

  "  


Thursday, December 18, 2014

அம்மன்குடி அய்யங்கார் மக 

"ஆயிஷா "வை மதம் 

மாத்துங்கடா !!!
கிறிஸ்துவர்களையும்,இஸ்லாமியர்களையும் இந்துக்காளாக மாற்றி இந்துமதத்தைகாப்பாத்த "மோடி " அரசு முடிவு பண்ணியிருக்கு !

கேட்டா "நான் இல்ல ! ஆர்.எஸ்.எஸ் சொல்லுது " ம்பான்ங்க !

ஆர்.எஸ் எஸ் கிட்ட கேட்டா விஸ்வ இந்து பரிஷத் சொல்லுதும் பான் !

"ஆர்கனைசர் பத்திரிக்கை " தலையங்கம் தீட்டி   இருக்கு !

அம்புட்டு பயலுவளும் அதுக்கு அடங்கினவுங்க !

பெரிய ஆளு  ஒத்தன் சொல்லியிருக்கான் !" இந்துவா மாறினா உனக்கு எந்த சாதி வேணுமோ அதுக்கு போய்க்கோ "  நு சொல்லிட்டான் !

பிராமணான ஆகிகொயில்ல மணியாட்டணூம்னாலும் சரி  போய்க்கோ ஞான்!

கிறிஸ்துவன் நா இரண்டு லட்சமாம் ! இஸ்லாமியன்னா ஐந்து !

நமக்கு தேவை இல்லாத சந்தேகம் வருது !

"நக்வி " நு ஒரு மந்திரி இருக்காரு ! அவர மாற சொல்லலாமே ! மாட்டாரு ! கட்சிய மாத்திடுவாரு !

நம்ம தஞ்சாவூரு அம்மன்குடி ராமானுஜ  அய்யங்காரு மக கிட்ட பேசிபாருங்களேண் !

அதுதான் அண்ணே ! "கனவுக்கன்னி " ஹேமமாலினி ! பா.ஜ.க  எம் பி !

தர்மேந்திரா பஞ்சாபி ! கலயாணமாகி குழந்தைகுட்டியோட இருந்தாரு ! அவர கட்டிக்க ஆசைபட்டங்க !

" ஏண்ணே ! தப்பா ? "

அவரு வீட்டுக்கார அம்மா  முடியாதுண்ணுட்டங்க !

தர்மேந்திரா முஸ்லிமா மாறி "தில்வார் கான் " ஆயிட்டாரு ! அம்மையார் ஹேமா "ஆயிஷா" வா மாறிட்டாரு ! கட்டிக்கிட்டாங்க !

பா.ஜ.க எம்பி ஆயிட்டாங்க !

"ஆயிஷா"  வை மதம் மாறசொல்லுங்க வே !

"இந்து " மதத்தை காப்பாத்தலாம் !!!Wednesday, December 17, 2014

தோழர் அர்சுணனும் ,

நாடகமும் .......!!!


முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரையில் நாடகபயிற்சி வகுப்பு ! 

பல்வேறு குழுக்கள் நாடகம் நடத்தின ! 

ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் !

வத்தலான ஆசிரியர் தன குழந்தைகளுக்கு தினபதற்காக ஆரஞசுபழம் வாங்கிக்கொண்டு வருவார் ! ஒரு பழம் வாங்கினாலும் நான்கு குழந்தகளும் பங்கிட்டுக் கொள்ளவார்கள் அல்லவா! ஆசிரியர் அவ்வளவுதானே செலவழிக்க முடியும் !

அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வருவார் ! வீட்டு வாசலில் ஆரக்ன்சுப்பழத்தோல் வீசி இருப்பதைப்பார்த்து பதறி விடுவார் !

"என்ன உடம்பு ? யாருக்கு உடம்பு சரியில்லை ? " என்று பதறிக்கொண்டு கேட்பார் !

உடல் நலமில்லை என்றால் தான் ஆரஞசுபழம் திங்க முடியும் என்ற அவல நிலையில் இருக்கும் ஆசிரியர்களைபடம்பிடிக்கும் "பாவனை:நாடகம்" !

ஸ்ரீவில்லைபுத்தூரிலிருந்து வந்த அந்த ஒல்லிப் பையன் ஆரஞ்சு விற்பவனாக நடிப்பார் !ஆரஞசுப்பழத்தை கையில் வைத்து உருட்டி,தூக்கிபிடித்து அசல் வியாபாரியாக அவர் பாவனை செய்து வந்த காட்சி கைதட்டல் பெற்றது !

அவர்தான் இன்று விருதுநகர் மாவட்ட செயலாளராக  வந்திருக்கும் தோழர்.அருச்சுனன் !

வாழ்த்துக்கள் தோழரே !

Monday, December 15, 2014

"அவா " பாடப்போறா ,

"இவா "ளுக்காக ....!!!
சென்ற  வரம் முழுவதும் சென்னையில் இருந்தேன் ! கடுமையான குளிர் பகுதியிலிருந்து வந்தவனுக்கு சென்னையின் மிதமான குளிரும் ,அவ்வப்போது பெய்த மழையும் ரம்மியமாக இருந்தது ! 

நகரத்து "பிளக்ஸ் " போர்டுகளில் நித்யஸ்ரீ அவர்களும்,சௌம்யா அவர்களும் கர்நாடக இசையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் !

ம்யுசிக அகாடமி,நாரதகான சபா என்று பட்டியலிட்டு .ரவா தோசை,அடை அவியல், பூரி கிழங்கு, என்று எந்தெந்த காண்டீனில் எது நன்றாக இருந்தது என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன !

ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் ஆபீசர் நட்ராஜிளிருந்து மாயவரத்தான் வரை விமரிசிக்கப் போகிறார்கள் !

சில நாட்களுக்கு முன்பாக டி .எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரை நினைவு தட்டியது!

"இசைக்கு சாதி உண்டா ? நாதஸ்வரத்தை குறிப்பிட்ட சாதியினரே பாடுகிறார்கள் ? கர்நாடக இசை  "அந்த " சாதிக்கு மட்டுமே உள்ளதா ?"

கிருஷ்ணா தன கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்விகள் இவை !

இன்று காலை கோவை வக்கீல் தோழர் ஞான பாரதியை நலம் விசாரித்தபோது அவர் சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது !

இசையில் ஆரோகணம்,அவாரொகணம் என்பது முறை ! இதனை மீறி  ஆரோகணம் மட்டுமே கொண்ட இசையை நிகழ்த்திக் காட்டியவர்  இளைய ராஜா ! பிஸ்மில்லாகான் "சாஸ்த்ரீய "சங்கிதத்தில் போற்றப்படுபவர் !" என்று அவர் விளைக்கினார் !

--------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கிறது "உரூர்-ஒல்காத் குப்பம் "!

முழுவதும் மீனவ சமூகத்தைச் செர்ந்தவர்கள் வாழும் பகுதி ! இங்கு மார்கழி விழா கொண்டாட விருக்கிறார்கள் !

செவ்விசையை கார்போரெட் நிருவனங்கள் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக உருவான அமைப்பு "வெட்டிவேர் கூட்டமைப்பு "என்பதாகும் !இந்த அமைப்பைச் சேர்ந்த திவ்யா நாராயணன் !"செவ்விசை மேட்டிமைத்தனமாகிவிட்டது ! இதனை பலதளங்களை சார்ந்த மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ! நாட்டுப்புற இசையோடு இவற்றையும் உழைக்கும்  மக்களூக்கு கொடுக்க வேண்டும் !"என்கிறார் !

குப்பத்தில் உள்ள கோவில் வாயிலில் இந்த விழா நடை பெறவிருக்கிறது !டிசம்பர் 29,30 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது !

குப்பத்து குழந்தைகளின் வில்லுப்பாட்டோடு  29ம் தேதி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன !

அன்று மாலை 6.30 க்கு பி உன்னிகிரு ஷ்ணன் செவ்விசை நிகழ்ச்சி அளிக்கிறார் ! அதன் பிறகு :"கட்டைகூத்து " நிகழ்ச்சி நடக்கிறது !

மறுனாள் ஆர்.குமரேஷ் (வயலின்) ஜெயந்தி (வீணை ) சங்கரநாராயணன் (மிருதங்கம்) அருண்குமார் (மோர்சிங் ) நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது ! பின்னர் கலாக்ஷேத்ரா குழுவினரின் நடன  நிகழ்ச்சி உள்ளது ! 

"செவ்விசை மக்களை சென்றடைய வேண்டும் -இசைக்கு சாதி,மத மாச்சரியங்கள் கிடையாது "என்று செயல்படும் கிருஷ்ணா  இதன் பின்னணியில் உள்ளார் என்பது சொல்லாமலேயே விளங்கும் செய்தியாகும் !


Saturday, December 06, 2014

சம பந்தி போஜனமும் ,

சாதிமறுப்பு திருமணமும் ,

சாதியை ஒழிக்குமா ....?


"சம்பந்தி போஜனமும்,சாதி மறுப்பு திருமணமும் சாதியை ஒழிக்காது " என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்  ! 

தீண்டாமையை ஒழிக்க ராஜா ராம்மோகன் ராயும் காந்தியும் பாடுபட்டார்கள் ! ஆனால் இருவரும் அதற்கு அடிபடை சாதி என்பதையும் ,அதன் சல்லி வேரை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறிவிட்டார்கள் ! 

பாரதி போற்றிய தலைவர்களுள் ராம்மோகனும் ஒருவர் ! அவர்பற்றிய கட்டுரை ஒன்றில் " எப்பேர்பட்ட சீர்திருத்தவாதி நீ ! சாகும்போது கூட உன் மார்பில் புரளும் "முப்புரி நூலை " எடுக்க மறந்து விட்டாயே  " என்று கதறு கிறான் !

தாழ்த்தப்பட்டவன் அவன் ! வசதி உள்ளவன் ! தீர்த்த யாத்திரை செல்கிறான்  1 வந்ததும் வழக்கப்படி தன சாதியினருக்கு விருந்து வைக்கிறான் ! விருந்தில் "நெய் " விட ஏற்பாடு செய்கிறான் ! 

புனித நூல் படி தாழ்த்தப்பட்டவர்கள் "நெய்" உண்ணக்கூடாது ! நெய் பரிமாறுவதால் மேல்சாதி இந்துக்களை அவமானப்படுத்திவிட்டான் ! அவர்கள் ஆத்திரம் கொண்டு பரிமாற வைத்திருந்த பதார்த்தங்களை தூக்கி வீசுகிறார்கள் ! உண்ண  வந்தவர்களை அடித்து விரட்டு கிறார்கள் ! அண்ணல் அம்பேத்கர் இதனைகுறிப்பிடுகிறார் ! உயிருக்குப் பயந்து அவர்கள் ஓடிவிடுகிறார்கள் !

1936 ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்தது ! இன்றும் கார்ப்ரெட் காலத்தில் நடக்கத்தானே செய்கிறது ! 

கர்மவினை , ஆன்மீகம்,சாத்வீகம்,புலால் மறுப்பு என்றாலும் இவற்றிர்க்குபின்னால் ஒளிந்திருக்கும் சாதீயம் புலப்படத்தானே செய்கிறது!

 மனிதர்களிடையே ,தன்மையில்,திறமையில்,செயல்பாட்டில் வேற்றுமை இருக்கிறது என்பது உண்மைதான் ! அனைவரும் இந்தவிஷயத்தில் சமம் இல்லைதான் ! அதற்காக சமமானவர்கள் இல்லை என்பதாக நடத்தப்பட வேண்டுமா என்று கேட்கிறார் அம்பேத்கர் ! 

அரசியல் மேடையில் பல கொடுமைகள்  நடக்கின்றன ! அதனை விட சமுக தளத்தில் நடக்கும் கொடுமைகள்படு பயங்கரமானவை ! அரசியல் கொடுமையை எதிர்ப்பவனை விட சமூக கொடுமையை எதிர்ப்பவன்  தீரமிக்கவன் என்கிறார் அண்ணல் ! 

இந்துக்களுக்கு சாதி மாற  முடியாது ! ஒரு சாதியில் செரவேண்டும்  என்றால் அதில் நீ பிறந்திருக்க வேண்டும்   கிறிஸ்துவனோ ,இஸ்லாமியனோ இந்து வாக முடியாது ! அப்படி வந்தால் அவனை எந்த சாதியில்  புகுத்துவாய்  ! அந்த சாதி ஏற்றுக்கொள்ளவேண்டுமே ! அதனால் தான் மதமாற்றம் அனுமதிக்கப் படுவதில்லை  ! இந்துத்வா காரர்கள் மதமாற்றத்தினை இதனால் தான் எதிர்க்கிறார்கள்!

பிள்ளை மகன் ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை காதலித்து மணந்தான் ! ஆண்டுகள் ஓடின ! அவன் மகளுக்கு திருமண  வயது வந்தது !  தாய் தன சகோதரன் மகனை தேர்ந்தெடுத்தாள் ! தந்தை தன சகோதரி மகனை தேர்ந்தெடுத்தான் ! இது சாதீயம் என்பது ஒருமனநிலை என்பதை காட்டவில்லையா ?

சமபந்திபொஜனமும்,சாதிமறுப்பு திருமணமும் மட்டும் சாதியை ஒழிக்காது ! 

சாதியை ஒழிக்க என்னதான் செய்ய வேண்டும் ?

சாதியை கட்டிக்காக்கும் சாத்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை நொறுக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர் !!!

கட்டுரையில் பாரதி கூர்ய்கிறான் !

எல்லாப் பார்பனர்களையும் ஒழித்து விட்டால் 

சாதி அழிந்து விடுமா ....?


"தி இந்து " பத்திரிகையில் பணியாற்றிவரும் "சமஸ் " அவர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் !

உடைக்கமுடியாத அடித்தளத்தை உருவாக்கி சாதிய கட்டுமானத்தை "மனுதர்ம " விதிகளும் ,பார்ப்பனர்களும் தன்னந்தனியாக அழியாமல் காத்து வரமுடியுமா ? என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார் !

பார்ப்பனீயம் "காலத்திற்கு" தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு வாழ்கிறது என்று இதற்கான பதிலாகச் சொல்லப்படுகிறது !

எனக்கு தனிப்பட்ட முறையில் அருமையான நண்பர்களுண்டு ! தத்துவார்த்த நிலையில் என்னோடு உடன் படுகிறவர்களும் உண்டு ! உடன் படாவிட்டாலும் என்னை நேசிப்பவர்கள் அதிகம் ! 

"சாதி ஒழிய வேண்டும்" என்று நினைப்பவர்கள் அவர்கள் !அதன் மூலம் பார்ப்பனியம் என்றும் அதனை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்றும்கருதுபவர்கள் அவர்கள் ! 

வெவ்வேரு "சாதி"(?)  யைச்சர்ந்த எங்களிடையே விவாதம் வந்தது ! சாதீய முறைமையை கடைப்பிடிபதில்  அவரவர் சாதியைப்பற்றி விமரிசிக்க ஒப்புக்கொண்டாம் ! இறுதியில் அது தேவையற்றதாக வெறும் வார்த்தை ஜாலமாக ,இறுதியில் அத்தனைக்கும் மூலகாரணம் "பார்ப்பனியம் "என்றுமுடிந்தது !

அமேரிக்கா  ஹிரோஷிமாவிலும் ,நாகசாகியிலும் குண்டு போட்டதற்குக் காரணம் தமிழ்நாட்டிலுள்ள  "பாப்பான் " தான் என்று திராவிட கழகம் சொல்லலாம் ! 

அது போன்று எங்கள் விவாதம் விதண்டாவாதமாக முடிந்தது !

மகாராஷ்ட்ராவில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு "கயர்லாஞ்சி " ஒருபாடமாக அமைநதது !

பையாலால்போட்மாங்கேயின் குடும்பம் கஷ்டப்பட்டு உழைத்து ஒட்டு வீடு கட்டினார்கள் ! இதைப்பொறுக்காத மேல்சாதியினர் அவர்களை வம்புக்கு இழுத்தார்கள் ! பையாலாலின் மனைவி,மருமகள்,மகள் ஆகியோரை நிர்வாணமாக்கி ஊர்வலம் விட்டர்கள் ! பையாலாலின் ,மகனையும், அவன் தாயை ,சகோதரியை புணர வற்புறுத்தினார்கள் ! அவன் மறுத்தபோது அவன் குறியை வெட்டி எறிந்தார்கள் ! அந்தப் பெண்களினுறுப்புகளில் கட்டைகளைச் சொறுகி  கொன்றார்கள் !

இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் எந்தச்   "சாதி " ?

இருபது பெண்கள்,பத்தொன்பது குழந்தைகள். ஐந்து ஆண்களை துடிக்க துடிக்க  தீயிலிட்டு பொசுக்கிய  கோபால கிருஷ்ணன் ஐயரா ? ஐயங்காரா?

பேகம்பூரில் தோல்பதனிடும் தொழிலாளர்களோடு உண்டு உறங்கி  அவர்களை மனிதர்களாக நடமாட வைத்த எ.பாலசுப்பிரமணியம் மறைந்தபோது "ஒரு செம்மலர் உதிர்ந்தது " என்றவர்கள்  "அமிர்தலிங்கம் ஐயர் மகன் தனே "என்று ஏகடியம் பேசியதையும் நாம்கேட்கத்தானே செய்தோம். ! 

தான் ,,தனக்கு,என்று இல்லாமல், குடும்பம் கொள்ளமல் ,துப்புரவுத் தோழிலாளர்களுக்காக  வாழ்ந்து "தீக்கதிர்" அலுவலக மாடிப்படிகளையே தன உலகமாக வாழ்ந்த  "விருத்த கிரி " ஐயர் தானே !

சுய சாதியை, சாதீய கட்டுமானத்தை உடைதெறிய வந்த "பார்பனர்கள் "

அதிகமா ! இல்லை மற்றவர்களா ?

மக்கள் கலை இலக்கிய வாதிகளின் கொள்கையினை ஏற்றுக்கொண்டவன் இல்லை நான் ! ஆனால்  அந்த இயக்கத்தின் மாதையனையும்,வீராச்சாமியும் பார்பனர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்கிறேன் !

தியாகராஜன் என்ற சின்னகுத்தூசியை மதிக்கிறேன் !

வேம்பு ஐயர் மகன் சங்கரன்  என்றாலும் "ஞாநி "   யை  மதிக்கிறேன் ! !

சாதியை  ஓழிக்கும் வேள்வியில் பார்ப்பனர்களை ஒழிக்கும் பொது இந்த நல்லவர்களையும் ஒழித்து விடுவோமோ என்றும் பயப்படுகிறேன் !!!  

தத்துவார்த்த நிலையிலென்ணொடு உடன் படுகிறவர்களும் உண்டு   

Thursday, December 04, 2014

Film Music and V.R . krishna Iyer 


Film Music and "VRk "

’ஆக்கபூர்வமான கலை வெளிப்பாடு என்பது பற்றி பரிசீலிக்கும் போது அதன் ஆத்மாவைக் கண்டறிதல் வேண்டும்.

இசைப்பணியில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் அந்த இசையை அனுபவிப்பதை அவனுடைய உரிமையாகக் காண்கிறான். திரப்பட தயாரிப்பாளர் அவனுடைய எஜமானன் என்ற முறையில் அதனைப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டவர். இரு உரிமையாளர்களும் ஒரே நேரத்தில் உரிமைகளைத் தொடர முடியாதா? என்ற கேள்வியை நீதிபதி வி ஆர் க்ருஷ்னய்யர் எழுப்புகிறார்.

ஒரு திரப்படத் தயாரிப்பாளரோ திரைப்படத்தில் திரைப்படப் படிமங்களையும் இசையையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறார். அவரால் இசையை மட்டும் பிய்த்து தனியான பொது நிகழ்ச்சியாகக் கொடுக்க முடியாது.

இதனை ஒரு இசை அமைப்பாளரால் ஒரு இசைக் கலைஞரால் கொடுக்க முடியும் அந்த கலைஞனும் பொது மக்களும் பரவசமடைய முடியும் இந்த உரிமையைத் தயாரிப்பாளர் பறிக்கலாமா? எனும் கேள்வியை எழுப்புகிறார்.

அதன் பிறகே இன்று இசையமைப்பாளருக்கான உரிமையும், அதன்பின்னான இசைக்கலைஞர்களான பாடகர்களுக்கும் பாடலுக்கான ராயல்டி உரிமையும் (1913 அக்டோபர் 5 முதல்) கிடைத்தது.

Syamalam Kashyapan திருமதி ஹன்ஸா அவர்கள் திருச்சியில் வழக்குறைஞராக பனியாற்றுகிறார் ! Legal aspects of Musicology என்ற தலைப்பில் பட்ட மேற்படிபுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டர் ! இதற்கு வி ஆர்.கே அவர்களின் தீர்ப்பு மிகவும் பயன்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் ! அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிலைத்தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளதை தந்துள்ளேன் !

11 mins · Like

Wednesday, December 03, 2014

அந்த விளம்பரம் பற்றி ......!!!அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கலாம் ! புதுதாக திருமணம் ஆனவர் ! 

"நான்  நினைத்தபடி எனக்கு அமைந்தது ! இவ்வளவு சீக்கிரம் இது நடக்குமென்று நான் நினைக்கவில்லை  !"

சோபாவிலமர்ந்திருந்த அவள் கணவன் வெட்கம் கலந்த பெருமிதத்தோடு பார்த்தவிட்டு குனிந்துகொண்டான் !

"அழகா எனக்கு பிடித்தமாதிரி " அந்தப்பெண் தொடர்கிறாள் ! 

அவள் கணவன் அவளைப் பார்த்துவிட்டு தலையை குனிந்து  கொண்டு "இப்படி எல்லாம் பேசுகிறாளே ! வெட்கமில்லாமல் " என்று நினைத்துக் கொண்டு லேசாக தன தலையில் செல்லாமாக அடித்துக்கொள்கிறான் !

"அழகா, சின்னதா , குட்டியா " அவள் தொடருகிறாள் !

கணவன் அவளை  நிமிர்ந்து   பார்க்க  மேலும் என்ன சொல்லப்போகிறாள் என்பதை  கேட்க ஆசையோடு பார்க்கிறான் !

"இப்படி ஒரு ப்ஃளாட்  கிடைக்கும் என்று " அவள் தொடறுகிறாள் !

தன்  புது மனைவி தன்னை சொல்கிறாள் என்று நினைத்த கணவன் ஒரு சிறு புன்னகையோடு தன்  ஏமாற்றத்தை மறைத்துக்கொள்கிறான் !

"அருண் பில்டேர்ஸ் " விளமபர  படம் இது !

concept ,takings ,நடிப்பு எல்லாமே அருமை !

குறிப்பாக புது மணத்தம்பதியாக  Anchor "dd"  யும்  அவருடைய கணவர்  ஸ்ரீகாந்தும்  அருமையாக நடித்தனர்!

ஸ்ரீ காந்தின் நடிப்பு  சபாஷ் போட வைக்கிறது !

( சென்னையில் உள்ள பிரபலமான கல்லுரி ஒன்றில் பேராசிரியராக இருக்கிறாராமே anchor "dd" )  


 

Friday, November 28, 2014

ஏழை மக்களின் 

ஈரலை வறுத்து .....!!!!


ரூ பாய்க்கு முனு படி அரிசின்னு சொல்லி ஆட்சிக்கு வந்தது தி.மு.க ! போடலன்னா முச்சந்தில வச்சு சவுக்கால அடின்னாறு அண்ணா அவர்கள் 

-போடலை !

தெருவிளக்குகம்பத்துல சாவுக்க கட்டிவைத்து "சவுக்கு இங்கே  ! மூணூபடி எங்கே ?" என்று கேட்டார்கள் காங்கிரசார் !

கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு வருடம் ஆகிவிட்டது ! 

அரைப்படி (ஒரூ கிலோ ) புழுத்த அரிசி கடைல 30/- ரூ ! அதையே கொஞ்சம் தீட்டி பாலிஷ் பண்ணினான்னா 50/-ரூ !

"ஏல !ஏழை எளிய ஜனங்க என்னடா செய்வாங்க ? "

" அதுக்குதான் உணவு பாது காப்பு சட்டம் கொண்டாந்து இருக்கோம்"ஞான் ! 

"சர்க்கார் கிட்டங்கில அரிசியும் கோதுமையும் புளுத்துபோகுதே டேய் ?" நு  உச்ச நிதிமன்றம் சொல்லிச்சு  ! "அத ஜனங்களுக்கு கொடுக்கலாம்லா ?" நு நீதிமன்றம் கேட்டுது !" அது அரசாங்கத்தின் கொள்கை ! அதுல தலையிடாத " நு டாக்டர் மன மோகன சிங் சொல்லிட்டாரு ! இவருக்கு டாகடர் பட்டம் கொடுத்தவன செருப்பால அடிக்கணும்னு தோணுது ! முடியலயே !!

அதுக்குப்பதிலா ஒட்டால அடிச்சு கீழ இறக்கிபுட்டாங்க ! 

அடுத்து வந்தவன் "வஜ்ரா சும்பன் " ! உணவாவது பாதுகாப்பாவது " அதெல்லாம் அமெரிக்க ஒத்துக்காது ! பொது வினியோகம் லாம் கூடாதுன்னுட்டன் " !

"இந்தியா வளரணும் ! அத தடுக்குது இந்த மான்யம் ,சலுகை, எல்லாம்  தான் ! அத எடுத்துட்டா வளந்துருன் கான் " ஒரு மூதி ! இவன்தான் நிதி அமைச்சர் ! பொதுத்தேர்தல்ல தோத்த பய !

இப்பமே கண்ணா கட்டுதே ! 

இன்னும் கேளுங்கவே !

"சகதில இற்ங்கி விவசாயம் பண்ணுதான் ! அவனுக்கு உரம் கொடுக்கணும் ! உணவு கொடுக்கணும் ! எரிபொருள் வேணும் ! இதெல்லாம் அவன் வாங்கற விலைக்கு கொடுத்தாதான் அவன் பொளைக்க முடியும் !' அதுக்கு மான்னியம் கொடுத்தாங்க !

அதுல கையவக்கான் !

அவன் சொல்லுதான் "இந்த மானியம் மட்டும் 2லட்சத்து நாற்பயிரம் கோடி ! இந்திய ஏழை நாடு ! அப்பம் எப்படி வளரும் ? மானியத்தை கொஞ்சம் கொஞ்சமா எடுக்கணும் !'' நு சோலிய பாத்துட்டான் !

பத்து பேருக்கு நல்லது நடக்கும் நா அறைபட்டினி கிடப்பம் நு மக்கள் சரிங்காங்க !

"நாட்ட  வளக்க முதலாளிகள் கஷ்டப்படறாங்க ! தொழில் வளர்ந்தாதான் நாடு வளரும் ! அதுக்கு அவங்களுக்கு ஆதரவா இருக்கணும் ! நு நைசா பேசறான் !

"அநியாயத்துக்கு வரி போட்டிருக்கு ! அத எடுக்கணும் !இறக்கு மதிக்கு வரி! மறைமுக வரி ! எக்சைஸ் வரி,! தனி நபர் வரி,கம்பெனி லாபத்துக்கு வரி ! இப்படி  அவன போட்டு கசக்கினா !"

"பாவம் ! அத கொறைகப்போறென் !" ஞான் 

"அது எம்பிட்டு நு? " கேட்டா 

சொல்லுதான் "கொஞ்சம் தான் ஒரு ஆறுலட்சம் கோடிங்கான் "!!

விளங்காத பயலுக !!!

Wednesday, November 26, 2014

ATM பற்றியது அல்ல ....!!!
Automatic teller mechine  என்றால் என்ன என்று கட்டுரைஎழுதப்போவதில்லை ! 

ATM என்பதை தமிழில் எப்படி சொல்லுவீர்கள் என்று வங்கியில்பணிபுரியும் மூத்த ஊழியரிடம் கேட்டேன் ! ATM  நு தான் சொல்றாங்க என்றார் !

இதில் பணம் எடுக்கும் போது நடக்கும் வழிப்பறி பற்றி செய்திகள் வந்துள்ளன ! அந்த இயந்திரத்திலிருந்து மற்றவர் பணத்தை "அபேஸ் " செய்வது பற்றியும்செய்திகள் வந்ததுண்டு !

சமீபத்தில் அந்த இயந்திரத்தையும் அதனை கண்காணிக்க வைத்திருந்த காமிராவையும் துக்கிச்சென்ற  செய்தியைப் பார்த்தோம் !

மிக அதிகமாக அதில் 20லட்சம் ரூ வைத்திருப்பார்கள் என்கிறார்கள் !

இதனை பிடிக்க போலீஸ் சிறப்பு விசாரணை ,கமிஷன் என்று போடுவார்கள் !

சில ஆண்டுகளுக்குமுன்னால் "கிங் ப்ஃஷர் கம்பெனி தள்ளாடியது !அதன் தலைவர் மல்லையா தெருத்தெருவாக அலைந்தார் ! கடனுக்காக !ஒருபய கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான் !

அப்பம் நம்ம நிதி அமைச்சர் ரொம்ப வருத்தப்பட்டார் ! ஸ்டேடவங்கிய கூ ப்பிட்டு அவருக்கு கொஞ்சம் கடன் கொடுத்து (5000 கோடி ) உதவுங்கள் என்று சிபாரிசு செய்தார் !

சின்ன அதிகாரி இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க விரும்பினார் ! அவருக்கு தெரியும் கடன் திருப்பி வராது என்பது !"இவ்வளவு பெரிய தொகையை என்னால் அனுமதிக்க முடியாது ! இதனை வங்கி தலைவர்தான் முடிவு செய்யணும் " என்று தப்பித்து கொண்டார்  !

தலைவர் இதனை மோப்பம் பிடித்தவர் ! "படக் " என்று வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போய்விட்டார் ! மல்லையா கையை பிசைந்து கொண்டிருப்பதை பார்க்க சகிக்காமல் நிதி அமைச்சர் கண்ணிர் வீட்டர் !

அதிகாரிகளை கலந்து ஆலோசித்தார் ! ஸ்டேட் வங்கி அதிகாரிகளை கடன் கொடுக்கும் ஆவணத்தை தயார் செய்ய்ச் சொன்னார் ! ஒரு அதிகாரியை விமானத்தில் அனுப்பி  தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரசெய்தார் ! சோத்துக்கு லாட்டரீ அடித்த மல்லையாவுக்கு கடன் கிடைத்தது !

இது ஐக்கிய முன்னணி U P A காரன் செஞ்சது!

NDA காரன் அப்படி எல்லாம் செய்யவில்லை !

அதனியை பிரதமர் தன்னோட விமானத்திலேயே அழைத்துசென்றுவிட்டர் !

6000 சொச்சம் கோடி கடனை ஸ்டேட்வங்கி கொடுக்கும் நு செய்திகள் சொல்கின்றன !

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடிவருகிறார்கள் !

"எப்படிங்க கொடுக்க முடியும் ! லட்சக்கணக்கில கடன் பாக்கி இருக்கு ! நட்டம் ! ஊதியம் எப்படி கூட கொடுக்க முடியும்"நுநிதி அமைச்சகம் சொல்லுது !

வங்கி ஊழியர்கள் மல்லையா,அதானி வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்யாமலிருக்க வேண்டும் !

நம்ம பத்திரிகைகள் ATM கொள்ளைபற்றி  பத்தி பத்தியா எழுதும் !

படிச்சுக்கிட்டு இருப்போம் !!!


Tuesday, November 25, 2014

நினைக்க நினைக்க 

இனிக்கும் செய்தி...!!!

தாழையுத்து என்ற சங்கர் நகர் அருகில் இருக்கும் கங்கை கொண்டானில் "கொலா" தொழிற்சாலையை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் ! அரசு உட்பட எவரும்கண்டுக்கல ! சிவகங்கைமாத்தூரில் கம்யுனிஸ்டுகள்  "கோலா" கம்பெனியை எதிர்த்து பொராடினார்கள் ! கண்டுக்கல ! ஜார்கண்டில் ஒரு ஆற்றையே 60 மைல் நீளத்திற்கு "கொலா" கம்பெனிக்கு விற்று விட்டர்கள் !கண்டுக்கல ! இந்த போரட்டங்களில் பங்கு கொண்ட மனிதனுக்கு இது பற்றிய செய்தி வந்தால் மனம் நிறைவையாவது தரும் ! அதே மன நிலைதான் "கத்தி" படத்தை பார்த்த கம்யுனிஸ்டுகளூக்கும் !

 ஒரு இலக்கிய படைப்போ,கலைப்படைப்போ ,புரட்சியை நடத்தி விடாது ! ஆனால் பிரும்மாண்டமாக நடக்க விருக்கும் அந்த புனிதப் போரின் முன்னணிப்படையாக அவை sappers and miners ஆக செயல்படும் ! அப்படிப்பட்ட advance guard ஆக செயல் பட கலை இலக்கிய வாதிகளை தூண்டும் செயல்தான் கம்யூணீஸ்டுகள் "கத்தி "பற்றி விமரிசிப்பது ! 

புரட்சி நடந்த பிறகும் கூட சோவியத்தில் நிலத்தில் இறங்க விவசாயிகள் பயப்பட்டர்கள் ! "குலக்குகள்" மீண்டும் வந்து விடுவார்களோ என்று பயந்தார்கள் ! அவர்களுக்கு புரட்சி என்றால் என்ன என்று தெரியாது ! அவர்களுக்கு  புரட்சி பற்றி கற்றுத்தர லெனின் அவர்கள்  கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்தார் ! அப்பொது உருவானது தான் "Battle ship...." , "October ...", Blue mountain" போனற படங்கள் ! இவை புரட்சி நடக்கும் போது காமிரவும் கையுமாக எடுக்கப்பட்டது அல்ல !

எங்கள்தலவர் "சுனில்மைத்ரா " அவர்கள்குறிப்பிடுவார்கள் !" சோவியத் புரட்சி பற்றி ஐம்பது அறுபது புத்தகங்களாவது வந்திருக்கும் ! நான் சுமார் முப்பது புத்தகங்களைத்தான் படித்துள்ளேன் மீதமுள்ளதை படிக்க முடியவில்லை " என்று குறிப்பிடுவார் !

புரட்சிப்படை வரும் பொது எதிரிகள் ஒளிந்திருந்து தாக்குவார்கள் ! எதிரிகளிடமிருந்து வீரர்களை பாதுகாக்க முண்ணனிபடை செல்லும் ! அது வீரர்கள்செல்ல விருக்கும் பாதையை செப்பனிடும் ! அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் ! ஒளிந்திருக்கும்  எதிரிகளின் முதல் தாக்குதலை சந்திக்கும் ! எதிரிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்களென்பதை பின்னல் வரும் வீரர்களுக்கு அடையாளம் காட்டும்!எதிரிகள் பகுதிக்குள் சென்று அந்த மக்களை நம் பக்கம் இழுக்க கலை இலக்கியத்தை பயன்படுத்தி கருத்து விதைகளைத் தூவும் !மிகுந்த   சேதத்தை சந்திக்கும் ! இந்த முண்ணணிபடை போரில் மிகவும் முக்கியமான பணியை தன்னலம்கருதாது செய்யும்! 

இதனை செய்யும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் தான் முற்போக்கு எழுத்தாளர்கள் ! புரட்சி கலைஞர்கள் ! 

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 20.,21,22 ம்தேதிகளில் திருப்பூர் என்ற திரு நகரத்தில் கூடப்போகிறார்கள் !

நினைக்க நினைக்க இனிக்கும் செய்தி !

Saturday, November 22, 2014

முகவரிதான் உங்களுக்கு தெரியுமே !

ஒரு அஞசல் அட்டை போடுங்களேன் ...!!!


அந்தககுழந்தை பிறந்த உடனேயே அவர்கள் குலவழக்கப்படி அவளுக்கு மாப்பிளளையை தீர்மானித்து விட்டர்கள் ! குழந்தைத் திருமணம் ! பதினைந்து வயதில் சடங்கு ! நாள் குறித்து கணவன் வீட்டிற்கு போனாள் !

மூன்று  மாதம்கணவரோடு வாழ்ந்தாள் ! 

பின்னர் தாய்வீடு வந்தாள் ! 

கணவர் அழைத்து செல்வார் என்று காத்திருந்தார் ! வரவில்லை !

வேலைக்கு செல்ல விரும்பினார் ! கணவரால் கைவிடப்பட்டவருக்கு கலக்டர் வேலையா கிடைக்கும் ! பள்ளிப் படிப்பு  தொடர்ந்தது! ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியரானார் !

என்றாவது ஒரு நாள் கணவர் வருவார் ! என்ற நினைப்பிலேயே வாழ்ந்தார் !

கணவரப்பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் மனம் முகிழ்ந்து போவர் ! அவர் நன்றாக வாழ கடவுளை வேண்டுவார் ! காலம் ஓடிக்கொண்டிருந்தது !

ஊரில், அண்டை அசலில் என்ன பேசுவார்கள் என்று அவர் சிந்திக்க வில்லை ! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதவில்லை ! பெண் என்பதால் பாதுகாப்பிற்கு சகோதரன் குடும்பத்தோடு வாழ்ந்தார் ! 

ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார் ! 

Zee Media Bereu என்ற நிறுவனத்திடம் " வோ லேனே ஆயோந்தோ மை தயார்ஹூம் " ( அவர் என்னை அழைத்தால் நான் தயாராகஇருக்கிறேன் ) என்று அந்த அம்மையார் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன!

திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆகிவிட்டன ! 

கடைசிகாலத்தில் கணவனோடு வாழ விரும்பும் அந்த மூதாட்டியின் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் ! 

நீங்களும் விரும்புவீர்கள் என்று எனக்கு தெரியும் !

அவர் கணவருக்கு ஒரு அஞசல் போடுங்களேன் !

அவருடைய முகவரி  ........

உங்களுக்குத்தான் தெரியுமே !!!     
  

Wednesday, November 19, 2014

"பறை" இசையும்,

மசாலா.எப்ஃஎம் அலை வரிசையும்..!!!இருபத்து நான்கு மணிநேரமும் நிகழ்ச்சிகளை நடத்தும் அலைவரிசை மசாலா.எப்ஃ எம் ! வெளிநாட்டிலிருந்து ஒலி பரப்பப்படும் இந்த அலை இரவும் பகலும் கணினியில் பணிபுரிபவர்களுக்காக திரைப்பட மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது ! மூளை அயர்ந்து விடாமல் இருக்க இசையை பயன்படுத்தும் நோக்கம் கொண்டது ! 

இந்த நிகழ்ச்சியில் இசைக்கருவிகளைப் பற்றி ஒலிபரப்பினார்கள் !

பறை, நாதஸ்வரம்,தவில்,வீணை ஆகியவை பற்றியும், அவற்றின் தோற்றம்,வளர்ச்சி இன்றைய நிலை  ஆகியவை பற்றி விளக்கம்  அளித்தார்கள்! 

"குழுக்களாக இருந்த மனித சமூகம் தங்களுக்குள் ஒன்றுகூடி தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது ! ஒலிபெருக்கி, போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் மிகவும் அதிகமானவர்களை சென்றடைய ,அவர்களை  அழைக்க ,ஒன்றுபடுத்த, ஒரு கருவியை உருவாக்கினார்கள் !" 

"மரத்தாலான ஒரு வட்டில் உருவாக்கி அதனை மாட்டுத்தோலால் மூடி அதன்மீது குச்சியால்தட்டி ஒலி  எழுப்பினர் "!காத்திரமானதும்,விசேஷமானதுமான இந்த  ஒலி யின் தனித்தன்மை அவர்களுக்கு செய்தியின் அவசரத்தையும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது பற்றியும் அறிவுறுத்தியது!

"கால வர்த்தமானத்தில் அது தாளக்கருவியாகவும்,இசைக்கு ஏற்ப ஆட துணைகருவியாகவும் பயன்படலாயிற்று "

இதே போன்று தவில்,நாதஸ்வரம்,வீணை என்று பல்வேறு இசைக்கருவிகள் பற்றி விளக்கம் அளித்தார்கள் !

இந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் இசைத்துறையில் பட்ட மேற்படிப்பு (M . A ) படித்தவர் !

இசை கலைஞர்களின் அறிவுசார் உரிமைகள் பற்றி ஆராய்ந்து M .Phil பட்டமும் பெற்றவர!

இதற்காக சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டமேற்படிப்பு (M .L ) பட்டம் பெற்றவர் !

ஹன்ஸா காஷ்யப் என்ற இவர் தற்போது திருச்சியில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார் ! 

(கொசுறு : எழுத்தாளர் காஸ்யபனின் செல்ல மகளுமாவார் !)  

  

 

Friday, November 14, 2014

இந்து மத சீர்திருத்த சட்டமும் 

வலது சாரிகளின் சதியும் .......!!!

"சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக இன்றி அமையாதது சமூகபண்பாட்டுத்துறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் ! அப்போதுதான் ஒரு சமத்துவமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் " என்று அன்றய தலைவர்கள் கணித்தார்கள் !

முக்கியமாக இந்து மதத்தில்முக்கியமான சீர்திருத்தங்களை  கொண்டுவர நேரு விரும்பினார் ! அவருக்கு ஆதரவாக அம்பேத்கர் இருந்தார் ! சட்டத்திருத்த மசோதாவை உரூவாக்க அம்பேத்கர் முற்பட்டர் ! 

இதில் மிக முக்கியமான அம்சங்களாக 

1) கணவனை இழந்த பெண் ,மற்றும்பெண்வாரிசுகளுக்கு சொத்துரிமை !

2) மனைவியைத் துன்புறுத்தும் கணவனிடமிருந்து விவாக ரத்து பெரும் உரிமை !

3) மனைவி உயிரோடு இருக்கும் பொது கணவன் மறுமணம் செய்து கொள்வதை தடுப்பது !

4) சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதை சட்டபூர்வ மாக்குவது !

5) சாதிவிட்டு சாதி தத்து எடுத்துக் கொள்வதை  சட்டபூர்வமாக்குவது !

இந்த ஐந்தும் முக்கியமானவைகளாகும் ! இதனை வலது சாரிகள் எதிர்த்தனர் ! அவ்ர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பாபு ராஜேந்திர பிரசாத், ,வல்லபாய் படேல்,ஷ்யாமா பிரசாத்முகர்ஜி ஆகியொர் ! 

இந்தமசோதாவை நாடாளுமனறத்தில் நிறைவேற்றி சட்டமாக்க நேருவும்,அம்பேத்கரும் முனைப்பாக இருந்தனர் !

இதில் மிகவும்  முக்கியமாக இருந்தது சவர்க்கர் இந்த சீர்திர்த்த மசோதாவை ஆதரித்து தான் !" இது காங்கிரஸ் காரர்களின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தால் என் ஆதரவு இல்லை ! ஆனால் நாட்டின் வளர்சிக்கு இது தேவை என்பதால் ஆதரிக்கிறேன் "என்று சவர்க்கர் அறிவித்தார் !

நாடாளுமன்றத்தில் நிறைவேறும் நிலை  உண்டானது !

அப்போது ராஜேந்திர பிரசாத் பிரதமர் நேருவுக்கு மிகமிக ரகசியமாக ஒரு கடிதம் எழுதினார் ! அதில் "நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் ஜனாதிபதி என்ற முறையில் நான் ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது "என்று குறிப்பிட்டிருந்தார் ! இந்த கடிதம் நேருவின் கைகளுக்கு போகும் முன்பே வலது சரிகள் பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர் !

ஒரு பக்கம் நடாளுமன்றம் ! மறுபக்கம் ஜனாதிபதி ! இரண்டும்முட்டி மோதுவது அன்றைய இளம் குடியரசுக்கு நல்லதா ! நேரு இதனை எதிர்பார்க்கவில்லை ! மேலும் காங்கிரஸ் கட்சி  தேர்தலை சந்திக்க வேண்டும் ! இந்த சந்தர்பத்தில் இந்த பலப்பரிட்சை தேவையா என்று நேரு சிந்திக்க ஆரம்பித்தார் !

அம்பேத்கர் நொறுங்கிப் போனார் ! நேரு தன் உறுதி மொழியக் காப்பாற்றாமல் தன்னை  கை கழுவி விட்டதாக மனதார நம்பினார் !

பின்னர் நடந்தெதெல்லாம் வரலாறாயிற்று !!! 

   

Thursday, November 13, 2014

ஜவகர்லால் .........!!!அந்தச் சிறுவன் பள்ளிக்கு சென்றிருந்தான் ! பள்ளி வாசலில் அவனை அழை த்துச் செல்ல கார் நிற்கும் ! அதில் ஏறி வீட்டிற்கு செல்வான் ! ஓர்நாள் அவன் தன கூட படிக்கும் சிறுவர்களோடுபேசிக்கொண்டே வெளியெ வந்த பொது காரைக் காணவில்லை! 

அந்த பள்ளிக்கு  நான்கு வாயில்கள் ! எப்போதும் வரும் வாயில் வழியாக வராமல் வெறு வாயில் வழியாக வந்து விட்டான்  ! விடு செல்ல நேரமாயிற்று ! செல்லப்பிள்ளை ! 

அவன் தந்தை நான்கு கார்களை வாங்கினார் ! நான்கு ஓட்டுனர்களை நியமித்தார் ! நான்கு வாயிகளிலும் கார்களை நிறுத்தி தன செல்ல மகன் இஷ்டம்போல் வர ஏற்பாடு செய்தார் !

அந்த செல் மகன் பெயர் ஜவகர் !அவன் தந்தை பெயர் மோதிலால் !--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜவகர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டுமொத்தம்  3000நாட்கள் சிறையில் இருந்ததாக சொல்வார்கள் !

ஜவகரின் செல்லமகள் பிரியதர்சினி !சிறு வயதில்  அவர் தன மகளோடு கொஞ்சி விளையாடியதில்லை !

மகளுக்கு சிறையிலிருந்து கடிதம் எழுதியே உலக சரித்திரத்தை போதித்த தந்தை உலகத்திலேயே அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் !

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஜவகரின் மகள் இந்திரா பிரியதர்சனி ! திருமணமாகி பேரன் பிறந்திருக்கிறான் ! ஜவகர் அப்போது சிறையில் இருந்தார் ! பேரனைப் பார்க்க வேண்டுமானால் ஜாமீனில் போங்கள்  என்று பிரிட்டிஷ் அரசு சொன்னது !

ஜாமீனில் செல்ல மறுத்து விட்டார் ! 

 போலிஸ் வானில் அவரை அழைத்துச் சென்றார்கள் 1 இந்திரா அந்த சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் தன மகனை தூக்கி காட்டினார் ! ஜவகர் பேரனைப் பார்த்துகையசைத்தார் !  

ஜவகர் ,இந்திரா, குட்டி பேரன் ராஜீவ் ஆகியோர் இந்தியாவின் பிரதமராக இருந்தது பின்னாளைய சரித்திரம் ! 

--------------------------------------------------------------------------------------------------------------------------

 ஜவகரின் மனைவி பெயர் கமலா ! அலகாபாத்தில் ஒரு பள்ளி முன்பு சத்தியாகிருக்த்தில் ஈடுபட்டர் ! வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தார் ! கூட அவருடைய சின்னஞ்சிறு மகள் இந்திரா ! பள்ளிச் சிறுவன் ஒருவன் ஓடிவந்து கமலாவைத் தூக்கி வைத்து முதலுதவி செய்து வீட்டில் கொண்டு விட்டான் ! 

அந்த சிறுவன் பெயர் பெஃரோஸ் ஜஹாங்கீர் காந்தி ! பின்னாளில் இந்திராவை மணந்தவர் !

ஜவகருக்கு இந்த திருமணத்தில் விரு ப்பமில்லை !மகாத்மா  காந்தியின் மூலமாக பெஃரோஸை மாற்ற முயன்றார் ! காந்தி இந்திராவை கூப்பிட்டு அனுப்பினார் ! "புகழ் பெற்ற தலவர்கள் நீங்கள்  இருவரும் ! நான் பெஃரோசை மணப்பதை உங்களால் தடுக்க முடியாது ! உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் " என்று கூறிவிட்டார் இந்திரா !

--------------------------------------------------------------------------------------------------------------------------ஜவகரின் மனைவி கமலாவுக்கு உடல்நலம் மோசமாகியது ! அவர் சுவ்ட்சர் லாந்தில் ஓய்வெடுக்க மருத்துவர் அனுப்ப விரும்பினார் ! பாரிசில் இறங்கி மூன்று  ரயில்களில் மாறி செல்ல வேண்டும் ! மருமகள் சிரமப்படுவார் என்று கருதிய மோதிலால் பாரிசிலிருந்து சுவிஸ் வரை தனியாக  ஒரு ரயிலை ஏற்பாடு செய்தார் ! அதில் கமலா,ஜவகர் ,இந்திரா,மற்றும் பெஃரோஸ் மட்டும் பயணம் செய்தனர் !(30 ம் ஆண்டுகளில் )

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஜவகர் ஒரு நாத்திகர் !கோவில் குளத்திற்கு சென்று சாமியார் காலில் விழாதவர் ! காந்தி  தான் ஒரு "இந்து "என்று பெருமைப்படுபவர் ! ராம பக்தரும் கூட !

வல்லபாய் படே லா -ஜவகரா  என்று கேள்வி எழுந்த போது  ஜவகர் தான் என்று நின்றவர் காந்தி !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, November 12, 2014

அபுல் கலாம் முகையுத்தீன் என்ற 

ஆசாத் .......!!!1962ம் அண்டு ஹைதிரபாத்திளிருந்து மாற்றல் பெற்று மதுரை வந்தேன் ! அது சமயம் குஜராத்தி நண்பர் "தோர்சி மேத்தா" என்ற நண்பர் India Wins Freedom என்ற நூலை நினைவுப்பரிசாக கொடுத்தார் !

ஆசாத் அவர்களின் சுய சரிதம் அது !

ஆசாத்அவர்கள்சொல்லச்சொல்ல   அவர்களின் சீடர் பேராசிரியர் ஹுமாயூன் கபிர் அவ்ர்கள் எழுதியது ! 

இந்திய சுதந்திரபோராட்டத்தின் மிக வும்முக்கியமான கட்டத்தில் ஆசாத் அவ்ர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ! அதிகார பரவல் பற்றியும்,நிர்வாகம் பற்றியும் மவுண்ட் பாட்டனுடன் பேசிமுடிவு செய்தவர் அவர் ! மிகவும் இக்கட்டான அந்த காலகட்டத்திலவ்ருடைய பணி மகத்தான ஒன்றாகும் ! 

சுதந்திர மடந்த இந்தியா ஒரு சோசலிச நாடாக இருக்கவேண்டும் என்று கனவுகண்டவர் அவர் ! லக்னௌ காங்கிரசில் இது பற்றி விவாதம் வந்த பொது ராஜேந்திர பிரசாத்,வல்லபாய் படேல்,ராஜகோபாலாச்சாரி ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர் ! ஆசாத்,நேரு,சுபாஷ் ஆகியோர் இதனை ஆதரித்தனர் ! 

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் ரங்கூன் வழியாக இந்தியாவை நெருங்கிவிட்டது ! அஸ்ஸாமை பிடித்து கலகத்தாவையும் பிடித்துவிடும் அபாயம் ! பிரிட்டீஷ் அரசு மேற்கு வங்கத்தில் உள்ள தொழிற்சாலைகளை எதிர்கள் கையில் சிக்காமலிருக்க வெடிவைத்து தகர்க்க முடிவு செய்தது ! கம்யுனிஸ்டுகள் இதனை எதிர்த்தனர் !  ஆலைகளையும் தொழிற் சாலைகளையும் பாது காக்க தோழர்களை  நிறுத்தினார்கள் ! ஆஸாத் ,காங்கிரஸ் தொண்டர்களு ம் கம்யூணீஸ்டுகளொடு சேர்ந்து கொள்ளுமாறு உத்திரவிட்டார் ! காங்கிரசில் பலர் இதனை எதிர்த்தனர் ! நேருவும் ஆசாத்   அவர்களும் காங்கிரஸ் காரியக்கமிட்டியிளிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தனர் ! பின்னர் சமரசம் நடந்தது ! 

இந்து--முஸ்லீம் ஒற்றுமைக்காக நின்றவர் அவர் ! அவருடைய சீடர் ஹுமாயூன் கபிர் ஒரு இந்து பெண்ணை காதலித்து மணந்தார்! அவரை ஆதரித்து நின்றவர் அசாத் ! 

காந்தி ,நேரு வரிசையில் வைத்துபோற்றப்பட வேண்டியவர் அவர் ! எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் பணியாற்றியவர் அவர் !

புனித தலமான மெக்காவில் பிறந்த அவருடைய குடும்பம் கலகத்தாவில் குடியேறியது ! அரபிய மொழியிலும்,உருது மொழியிலும் மிகச்சிறந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் !

அபுல் கலாம் முகையுத்தீன் என்ற அவர் "ஆசாத் " என்ற புனை பெயரிலேயே எழுதினார் ! 

"ஆசாத் "என்றெ அழைக்கப்பட்டார் !

அன்றய தலைவர்கள் பற்றிய மிகவும் அந்தரங்கமான விஷயங்களையும் தன சுய சரிதையில் எழுதினார் ! அது பற்றிய மூன்று  அத்தியாயங்களை 58ல் புத்தகம் வெளியிடும் பொது அதை செர்க்கவேண்டாமென்று தவிர்த்து விட்டார் !

1985ம் ஆண்டுக்குப் பிறகு அதனை வெளியிடலாம் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டிருந்தார் ! 

வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த  முன்று அத்தியாயங்களும் பின்னர் வெளியிடப்பட்டன !

ஆசாத் மிகவும் முற்போக்கான சிந்தனையாளர் 

Monday, November 10, 2014

ஜோசப்ஃ  ஸ்டாலின் -

என்ற கட்சி ஊழியன் .....!!!!


உலக சரித்திரத்தில் மிக முக்கியமாக  பெயர் ஜோசப்ஃ  ஸ்டாலின் என்பதாகும் ! அந்த மாமனிதனைப்பற்றி உள்ளதும் இல்லாததுமாக எழுதித்தள்ளி இ ருக்கிறார்கள் !

புரட்சினடந்த ஐந்தாவது வருடம் கட்சியின் செயலாராக வந்தவர் 1953ம் ஆண்டு மறையும் வரை புரட்சியையும்,சொவியத்தையும் காப்பற்றுவது தவுரவேறு   சிந்தனை இல்லாமல் பணியாற்றினார் !

இளம் சோவியத் நாட்டை சீர்குலைக்க வெண்செனையை அனுப்பி ஏகாதிபத்தியம் குழப்பம் விளவித்தபோது அதனை அடக்கி காப்பாற்றினார் !

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் பாசிசத்தை அடக்க அதே ஏகாதிபத்தியத்தோடு ஒத்துழைக்க அவர் தயங்க வில்லை !

ஆனாலும் ஏகாதிபத்தியம்  அவரை கொடுங்கோலன் என்று வர்ணிக்க தயங்கவில்லை ! 

"ச ர்வாதிகாரி ஸ்டாலின் "என்று வர்ணித்தன !

கிரெம்ளின் மாளிகை தான் அரசு அலுவலகம் செய்ல்படும் இடம் !

அவர் வாசித்ததோ அங்கிருந்து 15 மெயில் தள்ளி இருந்த தன வீட்டில் !ஒரு ஹால் ,இர்ண்டு படுக்கை அறை, ஒரு சமையலறை இவை தான்!அந்த வீடு! படிக்கை அறையில் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் கிடையாது ! ஹாலில் ஆணியில் அவருடைய ராணுவ உடையும் தொப்பியும் மாட்டியிருக்கும் ! அவர் மூத்தமகன்"யுகோவ்"சமையல் அறையில் உள்ள சோபாவில் தான் படுப்பான் ! இரண்டாவது மகன் "வசலோவ்"ஒரு படுக்கை அறையில் படுப்பான் ! மற்றொரு அறையில் ஸ்டாலின் படுப்பார்!

 சோவியத் நாட்டில் கட்சி ஊழியர்களுக்கு மாத"அலவன்ஸ் " தருவார்கள் ! எந்த பதவியில் இருந்தாலும் அதற்குள் தான் குடும்பம் நடத்த வேண்டும் !

அந்த"சர்வாதிகாரி"ஸ்டாலினுக்கு மாதம் 500 ரூபிள் தான் அலவன்ஸ் ஆக கட்சி கொடுக்கும் ! அதற்குள் தானே அவர் குடும்பம் நடத்த வேண்டும் !

ஜோசப்ஃ ஸ்டாலினாக இருந்தாலும் அவரும் கட்சி ஊழியன் தான் !

என்று வர்ணித்தன !

Saturday, November 08, 2014

செவ்விசையும் . இசை உலக போராளி 

T. M .கிருஷ்ணாவும் ....!!!கர்நாடக இசை வானில் இளம் நட்சத்திரங்கள் புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ! சமீப காலங்களில் பலருடைய கவனத்தை கவர்ந்தவர்களில் திரு T.M .கிருஷ்ணா முக்கியமானவர் !

 நோபல் பரிசு பெற்ற அமார்த்திய சென் அவர்கள் , கோபாலகிருஷ்ண காந்தி அவ்ர்கள் தலைமையில் கிருணாவின் "தி சதெர்ன் மியூசிக் " என்ற புத்தகத்தை 2013ம்  ஆண்டு வெளியிட்டார் ! அந்த புத்தகம் பற்றி ஆங்கில மொழி அலைவரிசை ஒன்றில் கிருஷ்ணாவின் காணொளி நேர்காணலை பார்க்க கிடைத்தது !

--------------------------------------------------------------------------------------------------------------------------

அது பற்றி எழுது முன் கிருஷ்ணாவை  பற்றி சில வார்த்தைகள் ! 

கிருஷ்ணா வின் தந்தை தொழில் முதலாளி ! அவருடைய தாயார் சங்கிதம் பயின்றவர் ! சிறு வயதிலேயே தாயின் குருவிடம் இசை பயின்றார் ! ஜே.கிருஷ்ண் மூர்த்தியின் தத்துவ பள்ளியில்(ரிஷிவந்தியம்) பயின்றார் !விவேகானந்த கல்லூரியில் பட்டம் பெற்ற்வர் !

மறைந்த இந்திய நிதி அமைச்சர் TT  கிருஷ்ணமாச்சாரி  அவருடைய தாய்வழி பாட்டனார் !  

--------------------------------------------------------------------------------------------------------------------------

"கர்நாடக இசை குறிப்பிட்ட சாதியினுடையதாக மாறிவிட்டது ! ஆம் ! நான் பிராமணர்களைத்தான் குறி ப்பிடுகிறேன் ! இசைக்கு அவ்ர்கள் ஆற்றிய  பணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை !அவர்களில் இசைமேதைகள் பலர் தோன்றியுள்ளார்கள்! ஆனாலும் இசை ஏன் பரவலாகவில்லை ? "

"பள்ளிகளில் ஏன் இசை கற்றுக் கொடுக்கப்படுவதில்லை ! ஓவியத்திற்கு   வகுப்பு இருக்கிறது ! இன்னுமெதற்கு குருகுல பயிற்சி ! மற்ற வகுப்பைச் சேர்ந்தவனும் கற்க வசதி ஏற்பட்டால் இசை தங்கள் கையைவிட்டு போய்விடுமென்பதாலா !"

"நாதஸ்வரமும்,தவிலும் இசையின் அற்புதமான வாத்தியங்கள் ! அதனை ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் வாசிக்க வேண்டுமா ? திருவாவடு துறை ராஜரத்தினமும்,காருகுறிச்சி அருணாசலமும் மட்டும் தானா ! அதன் பிறகு ஏன் வரவில்லை ?"

"இதை விட படு பாதகமான நிகழ்ச்சி என்ன தெரியுமா ? மிகச்சிறந்த மிருதங்க வித்வான், வயலின் வித்வான் ஆகியொர் "குறிப்பிட்ட பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வாசிக்க மாட்டேன் "என்று அறிவித்தார்கள் ! அவர்கள் அறிவித்தபாடகர்களின் திறமைக்  குறை விற்காக என்றால் கூட சரி என்று கொள்ளலாம் ! ஆனால் அவ்ர்கள் "பெண் "  என்பதால் மறுத்தார்கள் !"

" இதை விட சோகம் என்ன வென்றால் மேடை ஏறும்  ஒரு பாகவதர் கூட இதனை எதிர்க்கவில்லை  ! பெண்பாடகர்களும் வாய் திறக்கவில்லை !"

"சங்கீத மும்மூர்த்திகள் கச்சேரி செய்து பிழைக்கவில்லை ! கச்சேரிக்காக விதி முறை எதையும் வைத்துவிட்டு போகவில்ல ! ஒரு வர்ணம் , ஒரு சிறு கீர்த்தனை, ஒரு பல்லவி, தானம், கனராகம், துக்கடா என்று எந்தபந்தாவும் இல்லை ! சில தலைகட்டுகள் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள் ! நான் ஒரு இசைக் கலைஞன் ! என் மனம் மகிழ  பாடவிரும்புகிறேன் ! இதில் எதற்கு விதிமுறைகளோ ! மேடை பந்தாவோ !"

செவ்விசைத்துறையில்  அசுத்தம் (dirt in music ) சேர்ந்து விட்டது அதனை களைய வேண்டிய தருணம் வந்து விட்டது ! 

போராளிகிருஷ்ணாவின் கைகளை பலப்படுத்துவோம் !!!!

 

  

Monday, November 03, 2014

வென்னீரும் -காபி வாசனையும் ...!!!இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்  மறைந்த தோழர் எம்.ஆர் .வெங்கடராமன் அவர்களின் சகோதரரின் மகன் !

இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் ! கட்சியின் மத்திய தலைமை அவ்ரை மாணவர் இயக்கத்தை கட்டி வளர்க்க தமிழகத்திற்கு அனுப்பியது!மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் கட்சி அலுவலகத்தில்தங்கி  பணியாற்றி வந்தார் ! அங்கு இவரைப்ப்போன்ற இளைஞர்களை  கட்டி மேய்க்க குருசாமி நாயனா இருந்தார் ! 

முழுநேர ஊழியர்களுக்கு கட்சி அலவன்சு கொடுக்கும் ! மாதம் 10 /-ரூ லிருந்து 15 /- ரூ  கொடுப்பார்கள் ! அது கொடுப்பதற்குள்"தாவு"தீர்ந்துவிடும் !  20தேதிக்குமெல்தான் அது பற்றியே பேசுவார்கள் !

எம்.பி எஸ் அவ்ர்களுக்கு அப்படி இல்லை ! அவர் மத்தியகமிட்டி ஊழியர் ! டெல்லியிலிருந்து மாதம் 20/- ரூ 8ம் தேதி மணியார்டர் வந்து விடும் ! அது பற்றி அவரே விவரிக்கிறார் :

" என் சேக்காளி தோழர்கள் அன்று காலையிலேயே குளித்து விடுவார்கள் ! கட்சி ஆபிசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்போம் ! இருப்பே கொள்ளாது ! வாசல எட்டி எட்டி பார்ப்போம் ! 12 மணிக்குபொஸ்ட்மான் வருவார் ! மணியார்டர் வந்து வாங்கியதும் நாங்கள் காணாமல் போய்விடுவோம் ! மண்டையன் ஆசார சந்திலிருந்து போனால் டவுன்ஹால் ரோடு ! அங்கு தேப்பக்குளத்தில்  கம்பி வேலி  போட்டிருப்பார்கள்அதையும்தாண்டிமேற்கேபோனால் சுல்தானியாஹோட்டல்! பிரியாணி ஒரு பிளேட் 12 அணா ! ஆளுக்கு அரைபிளேட்! சுக்கா வறுவல் 2 அணா ! சாப்பிட்டுவிட்டு சிகரெட்டு ! திருமலை  நாயக்கர் பேரன்கள் மாதிரி கம்பீர நடைபோடுவோம் "  

"இரவுகையேந்துபவன் ! ஒரு அணாவுக்கு இரண்டு இட்லி ! ஆளுக்கு எட்டு இட்லி விளாசுவோம் ! அன்று எல்லோருக்குமாக நாலு ரூ ஆகும் ! ஒரு நாலைந்து நாள் ஓடும் !"

"அப்புறம் !கிடைச்சா சாப்பாடு!

"இல்லைனா ?" 

"பைத்தியமே ! அது தாண்ட கட்சி  வாழ்க்கை ! " 

( 80 களின் பிற்பகுதியில் கோவையில் த\.மு.எ.ச.இசை பயிற்சிமுகாம் நடத்தியது ! அதை நடத்தி தந்தவர் எம்.பி எஸ் ! அப்போது அவரோடு நெருங்கி  பழகும் வாய்ப்பு கிடைத்தது )

இ ரவில் அரை பட்டினியோடுதன் படுப்போம் ! காலையில் எழவே மனசு வராது ! அழுக்குப்பாயில் புரளுவோம் ! காலையில் டீகாபி குடிக்க காசு கிடைக்காது !

"டேய் ! என்திங்கடா !"என்றுகுருசாமி நாயனா சத்தம் போடுவார் ! அவர் அடுப்பு பத்தவச்சு வென்நீர் போடும் சலனம் கேட்கும் ! அடி ச்சுப்பிடிச்சு எந்திரிச்சு முகம் கால் கழுவுவோம் ! மண்டையன் ஆசாரி சந்து வாசலில் நிற்போம் !" 

"உள்ளெ எட்டி எட்டி பாப்போம் !"

"நாயன ஒரு தட்டில் ஐந்து அலுமினிய டம்ளரோடு வருவார் !"

"கிருஷ்ணா காப்பில காபி பொடி அரைக்கான ? "

"வாசன தூள் பறக்குது நாயனா "

"அத மோப்பம் பிடிச்சுக்கிட்டே இந்த வென்னிய குடிங்கடா "

"நாங்களும் அதை குடிப்போமே "

( எம்.பி எஸ் அவர்களின் நேர்காணல் செம்மலரில் அப்போது வெளிவந்தது ! மிக விரிவாக அவர் சொன்னத எல்லாம் எழுதியிருக்கிறேன் )


  

Thursday, October 30, 2014

விருந்தாளி வீட்டைக்  

கொளுத்தினால் .......!!!


மராட்டிய மாநிலதேர்தல்முடிந்தது ! நாளை பா.ஜ.க."மைனாரிட்டி " அரசு பதவி ஏற்கிறது !

எங்கள் ஊர்க்காரர் (நாகபுரி ) தேவேந்திர ப்ஃட்னாவிஸ் பதவி ஏற்கிறார் ! பத்திரிகைகள் (பா.ஜ.க ) ஒரு பிராமணர் முதல்வராகிறார் என்று வர்ணிக்கின்றனர் ! இதற்கு முன்னால்  மனோகர் ஜோஷி முதலவராயிருந்த பிராமணர் ! பா.ஜ.க ஆதரவோடு வந்த சிவசேனைக்காரார் !

வெள்ளிக்கிழமை பதவி ஏற்பு விழா ! "வாங்காடே " கிரிக்கேட்  மைதானத்தில்  ஏற்பாடு பிரும்மாண்டமாய் நடக்கிறது ! 

அண்ணன் "மோடி "  வருகிறார் !  மைதானம் சர்வதேச தரத்தில் உள்ளது ! மராட்டிய மாநிலத்தின் அற்புதமான கிரிகெட் வீரர்களில்" வினு மன்கட் " ,"போலி உம்ரிகர் "  ஆகியோர் பெயரில் இர்ண்டு வாசல்களுள்ளன !        

விழாவுக்கு அத்வானி ,எம்.எம்.ஜோஷி., ஆகியோர் வருவதைப்பற்றி செய்தி இல்லை ! 

"என்கொவுண்டர்" புகழ் அமித் ஷா வருகிறார் ! இவர்கள் வரும் வாயில்களில் "உம்ரிகர்,மன்காட்" பெயர் இருந்தால்      பொருத்தமாக இருக்காது ! அதனால் அதனை சியாமபிரசாத் முகர்ஜி என்றும் .தீனதயாள் உபாத்யாயா என்றும் மாற்றப்போகிறார்கள்!

இது பற்றிமனகாட் அவர்களின் மகன் ராகுல் மன்காட் " என்ன செய்யமுடியும். விருந்துக்கு வந்தவர் வீட்டை எடுத்துக்கொண்டால் !" என்று கூறினார் ! 

எனக்கு மகிழ்ச்சி தான் !

மராட்டிய மாவீரன் "நாதுராம் கோட்சே " என்றும் "வீர் சாவர்கர் " என்றும் மாற்றாமல் விட்டார்களே என்பதால் !


Sunday, October 26, 2014

நியா ? நானா? வும்  .

Dramatic finish ம் .....!!! 


ஞாயிற்றுக் கிழமை (26-10-14) அன்றூ "நீயா ?நானா ? " ஆரம்பமாகும் பொது கொஞ்சம் சிரத்தையில்லாமல்தான் பார்த்தேன் !

கோபி-அந்தோனி combination  அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் ! கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி இறுதியில் முத்தாய்ப்ப்பக சில விஷயங்களை சொருகுவார்கள் !

நேற்றும் அது தான் நடந்தது ! ஒருபுறம் நவீன காலத்து யுவதிகள் ! எதிர் புறம் அவர்களை நேசிக்கும் ,பெருமிதம் கொள்ளும்,அதேசமயம் உலகம் தெரியாத பிள்ளையோ என்று பயம்கொள்ளும் தந்தைகள் ! 

துணிச்சலும் ,பாய்ச்சலும்மட்டும்கொண்ட பதின் வயது பெண்கள் ! அவர்களின் துணிச்சலை, பாய்ச்சலை, சேட்டைகளை மனதிற்குள் ரசிக்கும் தந்தைகள் - அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கவலையோடு இருக்கும் தகப்பன்கள் !

தந்தை கவலையோடு தெரிவிக்கும்கருத்துக்கள ​ புரிந்து கொண்டு ​ தங்களுக்குள் கண் சிமிட்டிக்கொண்டு  -"அப்பா! நான் சின்னபிள்ளை இல்லைப்பா " என்று கூறும் அந்த சின்னஞ்சிறு "பூ "க்குவியல்கள்   -மிகவும்ரம்மியமான கண்கொள்ளாக் காட்சிகள் !

தங்கள் மகள் காதல்கத்திரிக்காய் என்று எமாறாமலிருக்க வேண்டுமே என்று தவிக்கும் தந்தைகளிடம் "எங்களுக்கு எங்கள் limit தெரியுமப்பா "என்று ஓங்கியடிக்கும் செல்லமகள்கள் ! எங்களிடமpropose செய்பவன் தகுதி அறிந்து அவன அவன் மூஞ்சிக்கு நேரreject  செய்யும் தைரியம் எங்களுக்கு உண்டுப்பா " எனும்போது நான் என்னை அறியாமல் கைதட்டினேன் !

பல சின்னஞ்சிறு சிட்டுகள் -பெரும்பான்மையானவர்கள் காதல் திருமணத்தை ஆதரித்தனர் !

"எந்த சாதியாக இருந்தாலும் காதலிப்பிர்களா ?"

"நிச்சயமாக "

"உங்களைக் காதலிப்பவர் ...தாழ்ததப்பட்டவராக, தலித்தாக இருந்தாலும்   ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனைபேர் ?கையைத்தூக்குங்கள் ?

கண்கள் பனிக்க அத்துணை பெரும் கையைத்துக்கியத்தை நெஞ்சம் விம்ம கண்டேன்!

கோபி தந்தைகள் பக்கம் திரும்பினார் !

"உங்களில் எத்துணை பேர் உங்கள்மகள் ஒரு தலித்தைகாதலிப்பதை  ஏற்றுக்கொள்வீர்கள்  ? "

ஒன்று இரண்டு பேரைத்தவிர மாற்றவர்கள் அத்துணை பெரும் கையைத்தூக்கினார்கள் !

மனம் நிறைந்த நிகழ்ச்சி !!!


Thursday, October 23, 2014

பாம்பும் -நல்ல பாம்பும் .....!!!


காட்டிலாகாவில் பணியாற்றும் நணபர் அவர் ! அடிக்கடி சந்திப்போம் ! வனகுடிமக்களின் பாடுகள் பற்றி , பீடி இலையை சேகரிப்பது பற்றி, அதனை வாங்கும் கான்டிராக்டர் கள் பற்றி, நகசலைட்டுகள் செயல்பாடுகள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வேன்! 

வனவிலங்குகள்,பறைவைகள் பற்றி புதிய புதிய செய்திகள் அவரிடம் கிடைக்கும் ! வந்தால் அரைநாளாவது பேசிக்கொண்டிருப்போம் ! 

வனவிலங்குகளைப் பற்றி பேசும் போது பாம்புகளைப் பற்றி பேச்சு வந்தது நான் எனக்குத்தேரிந்ததை சொல்வேன்  !

"உயிரினங்களில் இன விருத்தியில் ஈடுபடும்போது முகத்திற்கு முகம்பார்த்து செயல்படுபவை இரண்டே இரண்டு உயிரினம் தான் ! ஒன்று பாம்புகள் ! இரண்டாவது மனிதன் ! " என்றேன் !

"அதனால் தான் குழந்தைப் பேறு வேண்டி நாகர் சிலை அடித்து பூசை செய்வதும், வழிபடுவதும் நடக்கிறது !" 

"பாம்புகள் பல இருக்கின்றன ! எல்லப்பம்புகளும் விஷமுள்ளவை அல்ல !நாலைந்து வகை பாம்புகள்தான்விஷ முள்ளவை ! "என்றார் நண்பர் !

அவர் தொடர்ந்தார் ! "விஷமுள்ள பாம்புகள் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட பரப்பை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன ! அதற்குள் யாரும் வந்தால்மட்டுமே தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றன ! சுருட்டை,கட்டுவிரியன் ஆகியவை விஷ்முள்ளவை ! அவை  தங்கள் ஆளுமைக்குள் சிறு பரப்பையே வைத்துக் கொள்ளும் ! வெளியே சென்று இறை தேடிய பிறகு தங்கள்  பரப்பில் வந்திருக்கும் ! வெளியிலிருந்து யார் வந்தாலும் கொத்திவிடும் ! "என்று விளக்கினார் !

"கருநாகம் அப்படி அல்ல " என்று தொடர்ந்தார் ! ' அவை தங்கள் வசம் மிக அதிகமான இடத்தை வைத்துக்கொள்ளும்  ! அதற்குள் யார் வந்தாலும் விரட்டிவிட பார்க்கும் ! அதிர்வின் மூலம் வெளியார் வருவது புலப்பட்டால் "உஸ்-உஸ் " என்று சீரும் !  மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகள் தீடீரென்று பாய்ந்து ஒடுவதப்பர்த்திருக்கலாம் ! சீரும் சத்தம்கேட்டு அவை ஓடுகின்றன ! இதற்குப்பிறகும் நெருங்கினால் நாகம் தலையை பூமியிலிருந்து தூக்கி தன இருப்பை உணர்த்தும் ! தன உடலை balance செய்து கொள்ள தன முகத்தை  குடை போன்று விரித்து  காற்றில்தொங்க வைத்துக் கொள்ளும்  ! நாம் பாம்பு படம் எடுக்கிறது என்பது இதைத்தான் ! அப்படியும் எதிரி நகரவில்லை என்றால் நாகம் தன விஷமில்லாத பல்லால்கடிக்கும் ! அதையும் தாண்டி எதிரி நெருங்கினால் வேறு வழியில்லாமல் விஷப்பல்லை பயன்படுத்தும்" என்றார் !

தன்னை தாக்க வரும் எதிரியைக்கூட " எச்சரிக்கை செய்துவிட்டு" தாக்குவதால் தான் அதனை 

"நல்ல பாம்பு " 

என்று  சொல்கிறோம் என்றார்  !  

Monday, October 20, 2014

பெரியார் பூமியும் ,

பாரதீய ஜனதா கட்சியும் .....!!!தமிழகத்தில் மதவாத சக்திகளின் தலைமையை கொண்டுள்ள பாரதிய ஜனதாகட்சி  நுழைய சகல வேலைகளையும் செய்து வருகிறது !  

ஆனால்  ஆகப்பெரிய மனிதர் ரஜனி முன்னாள் முதலவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி தான்  ஊடகங்களின் கவலையாக இருக்கிறது !

டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிட மிருந்து அம்பானிகள் கைகளுக்கு மாற்றியாகி விட்டது ! அது பற்றி கவலைப்பட ஆளில்லை !

அறிவார்ந்த தமிழ் தொலைக்காட்சிகள் தமிசகத்தில் பாஜக வின்  எதிர்காலம் பற்றி விவாதங்களை நடத்துகிறது !

வேறு அரசியல் இயக்கம் எதுவும் மக்கள்மனதில் புலப்படக்கூடாது என்ற நோக்கம் அதில்   அடங்கியுள்ளது !

இதில் பங்கு பேரும் அரசியல் நோக்கர்கள் பெரும்பாலானவர்கள் தமிசகத்தில் பா.ஜ.க  வலுவாக கால்பதிக்க முடியாது என்றே கருத்துக் கூறுகிறார்கள் !பாஜக தலைவர்களும் பங்கு பெரும் நிகழ்சிகளிவை !  

"இந்த மண் பெரியாரின் மண் ! சுய மரியாதையை  ,சமுக சீர்திருத்தத்தை ,"சனாதன வாழ்க்கை முறையையைஎதிர்க்கும் மனம்"  கொண்ட மண் !  " என்று மார்தட்டி பேசும்போது நமக்கு புல்லரிக்கிறது ! 

பத்தாம்பசலித்தனமான "இந்துத்வா" இங்கு கடைவிரிக்கமுடியாது என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது !

அதேசமயம் இந்த விவாதங்களில் பங்கு பெறும் பா.ஜ.க பிரமுகர்களின் இதழோரத்தில் தெரியும் இகழ்ச்சிப் புன்னகை பயம் கொள்ள வைக்கிறது ! 

அவர்களுடைய mind voice கேட்கவே செய்கிறது !

"விடுங்கப்பா ! பெரியார் -பெரியார் நு ! பெரியார் தான் அண்ணாமலைல படிக்க வச்சார் ! அந்த முரசொலி மாறன் எங்க வாஜ்பாய் கீழ அமைச்சரா இருந்தார் ! அ .தி.மு.க தம்பித்துரை வாஜ்பாய் கீழ சட்ட அமைச்சரு ! அப்பத்தான் சொத்து குவிப்பு வழக்க கர்நாடகாவுக்கு மாத்தினம்! பெரியார் படத்தையும் பொட்டு தான் கட்சி நடத்தறாரு  ராமதாஸ் ! இப்ப எங்க கூட இருக்காரு ! வைகோ ! பாவம் நல்ல மனுஷன் ! ஏதாவது சொன்ன அழுதுடுவாறு  !  அவர் என்ன பெரியாரை மறந்தவரா ? விடுங்கப்பா ! "

பெரியார் என்ற  "பூச்சாண்டியை " காட்டி பா.ஜ.க. வைத்தடுத்துவிட முடியாது !

அது வெறும் பொம்மை என்று அவருடைய சீடர்களே நிரூபித்து விட்டர்கள் !!!

 
Sunday, October 19, 2014

சுப்பா ராவ் -வேணுகோபால் ஆகியோர் 

தகவலுக்காக ..........!!!


 நாவல்கள் திரைப்படமாவது பற்றி சுப்பாராவின் கட்டுரையை படித்தேன் !(தீக்கதிர் -இலக்கிய சோலை) ! The irresistable  s .v . தன்  பங்கிற்கு ஒரு மின் அஞ்சலை அனுப்பியிருந்தார் !  அதன் தாக்கத்தினால் இந்த தகவல்களை கொடுத்திருக்கிறேன் !

இற்று விழும் இந்து மத கோட்பாடுகள் பற்றி 20ம்னூற்றாண்டின் முற்பகுதியிலேயே அற்புதமான நாவலை எழுதியவர்  விபூதி பூஷன் பந்தோபாத்யாயா ! 

சத்யஜித் ரெயின் புகழ்பெற்ற triology  என்று வர்ணிக்கப்படும் பதேர் பாஞ்சாலி ,அபராஜிதா,அபூர்  சன்சார் , அந்த நாவலின் திரை வடிவம் !

முன்ஷி பிரேம்சந்தின் சிறுகதை "கப்ஃன் " ! மிருணாள்சென் இதனை தெலுங்கு மொழியில் "ஒக்க ஊரு கதா " என்று கொடுத்தார் ! சாதுமெஹர் ,வாச்தேவராவ் நடித்த அற்புதமான படம் அது !

பீஷ்ம சஹானி ஆங்கில பேராசிரியர் ! பால்ராஜ் சஹானியின் இளைய சகோதரர் ! பிரிவினையின் போது ஆர.எஸ் .எஸ் ,கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை செய்லாற்றியதை சித்தரிக்கும்  "தமஸ்" என்ற நாவலை எழுதினார் ! 

கோவிந்த் நிகிலானி அதனை டெலிபிலிமாக தயாரிக்க ஆறுமணி நேரப்படம்  ஆறுவாரம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது ! ஓம் பூரி,சாக்சேனா, பாதக்,சிக்ரி  என்று இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்கள் நடித்தது !

U . R .அன்ந்தமூர்த்தியின் சிறு கதை "கடஸ்ரார்த்தா " ! திரைப்படமாக கன்னடத்தில்வந்தது ! "நானாபடேகரின்"நடிப்புஇன்றும் கண் முன்னால நிற்கிறது !

கன்னடத்தில் வந்த "சம்ஸ்காரா" வை மறக்க முடியுமா ! கன்னட திரை உலகை அகில உலகத்திற்கும் அறிமுகப்படுத்தியபடம்  அது !

முன்ஷி பிரேம் சந்தின் "சேவாசதனம் " 39 களில் தமிழில் வந்தபடம் ! S .D. சுப்புலட்சுமி நடித்தார் ! பாப நாசம் சிவம் ஆகியோரும் உண்டு ! கே.சுப்பிரமானீயம் இயக்கினார் !

கல்கி எழுதிய "தியாக பூமி "  எம்.எஸ் சுப்புலட்சுமி அறிமுகமான படம் ! பாபநாசம் சிவன் ஆகியோர் நடித்த படம் ! கே.சுப்பிரஂமணியம் தான் இயக்கினார் !

ஸ்டூடியோசிஸ்டம் முடிந்து ஸ்டார் சிஸ்டம் ஆரம்பமான பிறகு தமிழ் திரை உலகம் சீரழிய ஆரம்பித்தது !

உமாசந்திரனின் நாவலை ரஜனிக்காக சிதைத்தனர் ! பாலு மகேந்திரா இருந்ததால் முழுவதுமாக சிதைய வில்லை ! 

"சித்தி "சிறுகதையை எழுதிய புதுமை பித்தன் அவர்  மறைந்த பிறகு தான் வந்தது ! நல்லதாகப் போயிற்று !

தமிழ் திரை உலகம் பற்றி நிறைய நல்லதும் பொல்லாததுமாக எழுத இருக்கிறது ! பார்க்கலாம் .......!!!


   படம் அது !

Friday, October 17, 2014

அஸ்வகோஷும் -பிரபாவும் .....!!!அவர் ஒரு இடது சாரி சிந்தனையாளர் ! கோவையில் பிராலமான வழக்குரைஞர் ! அடிக்கடி தொலைபேசியில் பேசுவோம் !

பேச்சு ராகுல சாங்கிருத்யாயன் பற்றி வந்தது ! "ஆம்மாம் தோழர் ! அவரைப் படிசுட்டுதான் கிறுக்கு பிடிச்சு அலைஞ்சு கடசில மார்க்சிசத்துல வந்து சேர்ந்தேன் " என்றார் !

உண்மைதான் ! மூத்த தோழர்கள் அந்தக்காலத்தில் இரண்டு நூலைக் கொடுத்து படிக்கச்சொல்வார்கள் ! ஒன்று கார்க்கியின் "தாய் " நாவல் ! மற்றொன்று ராகுல்ஜியின்" வால்காவிலிருந்து கங்கை வரை " ! மனிதனை புரட்டிப்போடும் நூல்கள் !

ஒன்று உணர்வு பூர்வமாகவும் ,மற்றொன்று அறிவு பூர்வமாகவும் மனதை அலைக்கழிப்பவை ! மேலும் மேலும் அறீந்துகொள்ள தூண்டுபவை !

மூன்று  முறை ராகுல்ஜியை படித்துள்ளேன்! நவீன தத்துவ விசாரணை மேலும் முன் சென்றுள்ளது ! உண்மைதான் !

சமீபத்தில் மொழிபெயர்ப்பு பணி காரணமாக"வால்காவிலிருந்து கங்கை வரை" நூலை   மீண்டும் படிக்கும்வாய்ப்பு கிடைத்தது !

பொதுவாக "காதல்" கத்தரிக்காய் என்ற நம்பிக்கை கிடையாது ! இந்த பணப்பட்டுவாடா சமூகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைப்பவன் நான் !

ரோமியோவும்ஜூலியட்டும்,அந்தோனியும்கிளியோபாத்திராவும்,அம்பிகாபதி  அமராவதியும் ,லைலாவும்,மஜ்னுவும் ஒரு romaantic charector என்றெ கருதுகிறேன் ! அவ்ர்களை எழுத்தில்கொண்டுவந்த எழுத்தாளனின் வெற்றி என்பதைத்தவிர வேறில்லை  என்று கருதுபவன் நான்  ! 

இந்த நூல் இருபது பகுதிகளைக் கொண்டது!பதினொன்றாவது பகுதி "பிரபா" !ராகுல்ஜியின் இலக்கிய நயம்,தத்துவ நேர்த்தி ஆகியவற்றை ,அதன் மேன்மையை சொல்வதாக எனக்குப் படுகிறது !

ஆன்மீக தாகம் கொண்டவருக்கு குழப்பமான மன நிலை ஏற்படுவது உண்டுதான் ! அப்போது அவருக்கு கைகொடுப்பது "மதம் "!

நம்பாதையில் குறுக்கிடும் ஆற்றை கடந்து செல்ல "ஓடம் " வேண்டும் !மறு கரையை அடைந்ததும் ஓடத்திலிருந்து கரை ஏறி நம்பாதையை தொடருகிறோம் !

ஓட்டத்தை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு குதித்துக் கொண்டாடுவதில்லை ! கொண்டாடினால் நம் பயணம் தொடராது !

மதமும்   அப்படித்தான் ! 

அஸ்வகொஷும் ,அவன் காதலி பிரபாவும் இதனை விவாதிப்பார்கள் !அஸ்கொஷின் தத்துவ,கலை இலக்கிய ஞானத்தில் உருகிப் போனவள்  பிரபா ! உயிராய் காதலித்த அவனை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அவன் இந்த சமூகத்திற்கு தேவை என்பதை உணருகிறாள் ! சரயு நதியில் இறங்கி தன காதலிலிருந்து அவனை விடுவிக்கிறாள் !

ராகுல்ஜியின் உன்னதம் இந்தப்பகுதியில் ஜோலிக்கத்தான் செய்கிறது !!!
Thursday, October 16, 2014

(மீள் பதிவு )
HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, December 24, 2012


ஒரு  ஊறுகாய் தாத்தா .....!!!"தீக்கதிர் " பத்திரிகைக்கு மதுரையில் கட்டிடம் கட்ட முடிவாகியது  . "ஜனசக்தி"  பத்திரிகைக்காக வாங்கிய இடம் கைவந்துவிட்டது. மதுரை பை-பாஸ் சாலைக்கும்,கொன்னவாயன் சாலைக்கும் இடையே அரைகுறையாக கட்டப்பட்டிருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வேலை  ஆரம்பமாகியது. இந்த கட்டிட வேலையை கண்காணிக்க "ஆர்.ஆர் " என்று அன்போடு அழைக்கப்பட்டமுது பெரும் தோழர் ராமராஜ்  பொறுபளிக்கப்பட்டார்


விவசாயிகளின் தலைவர் ராமராஜ் .கட்சி பிரிநதபோது பலதலைவர்கள்  ,மற்றும் தொண்டர்கள் சிறையிலிருந்தனர்.. மேலும் பலர் தலைமறைவாக செயல்பட்டனர். தன்னந்தனியாக கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்த மகத்தான பணியைச் செய்தவர் ராமராஜ்.. அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தார்.


மதுரை  1ம் நம்பர் சந்தில் அப்போது தீக்கதிர் பத்திரிக்கை செயல்பட்டு வந்தது. ஆர்.ஆர் அங்க் அடிக்கடி வருவார் என் வீடும் கொன்னவாயன் சாலைக்கு அருகிலிருந்தது வெறும் சோறும் தயிரும் சாப்பிடும் அவருக்கு வெஞசனமாக பள்ளியில் படிக்கும் என்  மகன் அல்லது மகள்மூலமாக  ஊறு காய் கொடுத்து அனுப்புவேன்.அவர்களைப் பொருத்தவரை அந்த மாபெரும் தலைவர் "ஊறுகாய் தத்தா".


இந்த  சமயத்தில் தான் அவசர் நிலை வந்தது. தலைமறைவு தலைவர்களுக்கும், வெளியில் செயல் படும் தலைவர்களுக்கும் தொடர்பாக ஆர்.ஆர் செயல் பட்டு வந்தார்.


நான் வசித்த பகுதியில் "சூரிய போஸ் " என்று ஒரு தோழர் இருந்தார் . அவருடைய தந்தை நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர். இது தவிர என்னோடு பணியாற்றிய தோழர் இப்ராகிம் அவர்களுக்கு "போஸ் " நெருக்கமானவர் .அவர் அடிக்கடி விளாங்குடி பெரிய கருப்பன் கொடுத்தார் 

என்று கூறி   ஒரு கவரை கொடுப்பார். போஸ் கொடுப்பதை .ஆர் ஆர்  இடம் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு..ஒரு சிறிய எவர்சில்வர் டப்பாவில் அந்த பிளாஸ்டிக் கவரை வைத்து அதன் மீது வாழையிலையினை வைத்து அதில் ஊறுகாயை போட்டு என் குழ்ந்தைகள் மூலம் கொடுத்தனுப்பி விடுவேன்.


என் மகன் MA  மற்றும் IRPM  முடித்து BL படித்து மத்திய உள் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறான்.


என் மகள் MA , Mphil , ML முடித்து வக்கில் தொழில் செய்கிறாள்.  
வேடிக்கை என்ன வென்றால்  அவர்கள் இருவருக்குமே நான் அவர்களை இப்படி use ( misuse ) பண்ணினேன் என்பது தெரியாது.
இந்த இடுகையை பார்த்து

தெரிந்து கொண்டால் தான் உண்டு.Monday, October 13, 2014

(மீள் பதிவு )

 

HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, October 21, 2013


அலாவுதீன் பாய் அவர்களும் ,

காந்தியைக்  கொன்றவரகாளூம் ...!!!

அலாவுதீன் பாய் அவர்களை 1969ம் ஆண்டு முதன்முதலாக சந்தித்தேன் ! தீக்கதிர் ஆபிசில் page  maker ஆக பணியாற்றிக்கொண்டிருந்தார் !


மொட்டை என்றோ வழுக்கை என்றோ சொல்லமுடியாத தலை முடி ! நீண்ட கைவைத்த வெள்ளை சட்டை,வேட்டி தோளில் துண்டு என்று பார்ப்பதற்கு கம்பிரமான உயரத்தில் இருப்பார் ! பேசுவது குறைவு! ஆனால் " நறுக்" என்று இருக்கும் ! என்னை "சாமா,சாமா " என்று  கூ ப்பிடுவார் ! மதிய சாப்பட்டிற்கு பின் அவரோடு பேசுவேன் ! பழைய விஷயங்களை சொல்வார் ! 


அலாவுதீன் பாய் சொந்தமாக அச்சகம் வைத்திருந்தார் ! தமிழ் நாட்டில் அப்போது "உருது " மொழியில் அச்சுக் கோக்க தெரிந்த வேகு சிலரில் அவரும் ஒருவர் ! பின்னாளில் அச்சகமுதலாளிஅச்சக தொழிலாளியாக மாறினார் !


மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்தார் ! 4வது வார்டு என்று நினைவு ! பட்டரக்கார தெரு,முனிச்சாலை பகுதியில்பிரபலமானவர் !


அவரோடு கவுன்சிலராக இருந்தவர்கள் பூச்சி அண்ணன்,வேம்புலு ,தயிர்கடை சுப்பிரமணியம் ஆகியொர் உண்டு!


மதுரை வைத்திய நாத அய்யர் ,,ஹிரா பாய், என்று பலர் பற்றி  பேசிக்கொண்டிருப்பார்  !


48ல் காந்தி சுடப்பட்டு இறந்தது பற்றி சொன்னார் !


"சாமா !கா ந்தியைக்    கொன்ற பொது  ஂமுஸ்லீம்க   தான்  கொன்றிருப்பார்கள் என்ற வதந்தியை கிளப்பி விட்டர்கள் ! முனிச்சாலை, பட்டரைக்காரதெரு,

தாசில்தார் பள்ளிவாசல்,இஸ்மாயி புறம் நு பதட்டமாயிருன்தது !கம்யூனிஸ் கட்சிதான் அவங்களுக்கு பாது கொடுக்க தீர்மானித்தது !ஏன்னா  அப்போ அவங்கத்தான் மதுரைல சக்தியோட இருந்தாங்க ! ஒருமணி நேரத்தில 20000 பேர திரட்டிருவாங்க ! வெறும் தண்டோரா போட்டே ஆளா சேத்துருவாங்க !

தைக்கால்   தெரு,மணி நகரம்,பூந்தோட்டம் ,செல்லுருன்னு ஆளுககுவிஞசுருவாங்க ! பூச்சி அண்ணன்னை தான் இதுக்கு அனுப்புவாங்க ! அவரு குதிரவண்டி தொழிலாளர் சங்க தலைவரு !வண்டியோட ஆளுகளை கொண்டுவந்து நீருத்திட்டரூ.குதிரை வாண்டிக்குள்ள சாமான்களை வச்சுப்புட்டாரூ !" 

"வாங்க பாய் டீ  சாப்பிடுவோம் "

"சரி சாமா "

பாய் தொடர்ந்தார் ! "அப்பந்தான் அய்யர் அனுப்பின ஆள் வந்தாரு ! காஜிமார் தெருவுக்கு ஆளனனுப்பச் சொன்னாருன்னு சொன்னான் !"

"யாரு சொன்னா?"

"அய்யரு!"

"யாரு பாய் அய்யரூ  "

"வைத்தியநாத அய்யரு ! பூச்சி அண்ணனுக்கு சொல்லிவிட்டறு "

அண்ணனும் எற்பாடு பண்ணிப்புட்டறு "

அப்புறம் ?"

"அப்புறம் என்ன அப்புறம் ! ஒரு பய வல்லை !"

"அதெப்படி வைத்திய நாதய்யருக்கு பூச்சி அண்ணன் பழக்கம் "

"அதுபெரியகதை ! "வைக்கல் "படப்புகதை ! "

"சொல்லும் பாய் "

"வாங்க சாமா ?"

பாய் எழுந்து நடக்க ஆரம்பித்தார் !


அலாவுதீன் பாய்,பூச்சி அண்ணன்,வேம்புலு  --


தோழர்களே! நீங்கள் எங்களுக்கு இன்று எவ்வளவு தேவைப்படுகிறீர்கள் தெரியுமா ? !!!!!


Friday, October 10, 2014

சிக்மண்ட் ப்ராய்ட்  அவர்களும் ,

அவரும் ........!!!சிக்மண்ட் ப்ராய்ட் மிகச்சிறந்த நரம்பியல் நிபுணர் ! 1856 மாண்டு ஆஸ்திரிய நாட்டில்பிறந்த அவர் 1938ம் ஆண்டு லண்டனில் இறந்தார் !

உளவியல் துறையிலும்,மனநல மருத்ததுவத்திலும்  அவருடைய  "வரையறை "கள்  மிக முக்கியமான வைகளாகும் ! அவை இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம் ஆகிய துறைகளிலும் தன செல்வாக்கை செலுத்தின !

கொஞ்சம் கூடுதலாகவே அவை போற்றப்பட்டன் !

உயிரினத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அடிப்படை பாலுணர்வு தான் என்று அவர் கூறினார் !

"freudism "  என்ற தத்துவ போக்காகவே அது உருப்பெற்றது !

வளர்ந்து வரும் மார்சியத்தின் செல்வாக்கை நீர்த்துப் போகச்செய்ய "பிராய்டிசத்தை " தூக்கிப்பிடித்தவர்களும் உண்டு !

உலகம் புறாவும் அக்டோபர் 10 ம் தேதியை "உலக மனநல  "தினமாக கொண்டாடுகிறார்கள் ! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அந்த தினத்தை இந்திய "மனநல "தினமாக கொண்டாட வேண்டும் என்கிறார் ! இந்தியாவில் வரும் பத்து ஆண்டுகளில் 24 கோடிப்பேர் எதாவது ஒருவகையில் மனநல  பாதிப்பு உள்ளவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ! அதனால் ஏழை எளிய மககளுக்கு மனநல மருத்துவம் போய்ச் சேரவேண்டும் என்றும் அறிவித்துள்ளார் !

நம்மில் பலர் மறதி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் ! இதனை மனனலமருத்துவர்கள் memory  lapse என்கிறார்கள் ! 

சிலர் பேசும் போது தவறான பெயர்களை தகவல்களை கூறுவார்கள் ! இதனை slip of the tong  என்பார்கள் !

சிலர் ஒரே விஷயத்தை அடிக்கடி பலமூறை  தவறாகச் சொல்பவர் கள் உண்டு !

உதாரணத்திற்கு பிரதமர்  மோடி அவர்களை எடுத்துக் கொள்ளலாம் ! மடிசன் சதுக்க தோட்டத்தில் பிரமுகர்கள் முன்னால்பேசும் பொது 

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்பதற்கு பதிலாக" மோகன்லால் "
என்று குறிப்பிட்டார் ! சென்ற  ஆண்டு ஒருகூட்டத்திலபெசும் போதும் "மோகன்லால் "என்றே கூறி யுள்ளார் ! 

பல தோலைக்காய்சிகளிலும்,முக நூலிலும் இதனை பலமுறை ஒளிபரப்பினர் ! மனசுக்கு கஷ்டமாக இருந்தது !

இது மறதியா மனநோயா ! ? 

"நமக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றி  கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய பொது இப்படிப்பட்ட மனநிலை ஏற்படும் "  என்று சிக்மண்ட் பிராய்ட் குறிப்பிடுகிறார் ! 

திருச்சியில் பிரதமர் பேசும் பொது வெதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றி தவறாக குறிப்பிட்டார் !

அசாம் சென்றிருந்தபோது கிருஷ்ண பரமாத்வாவின் மனைவி "ருக்மணி" பிறந்த ஊர் என்றூ கூற பத்திரிகைகள் அது "விதர்பா" என்று கிண்டலடித்தன !  

ஐக்கிய நாடுகள் சபையில் "காஷ்மீர் " என்று குறிப்பிட வேண்டிய தருணங்களில் "பாகிஸ்தான் ,பாகிஸ்தான் " என்று  குறிப்பிட வெளி உறவுத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சமாளிக்க வேண்டியதயிற்று !

இதனை Freudian slip of the tong என்று மனநல மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள் !

எது எப்படியிருந்தாலும் இந்திய மக்களுக்குமனநலம் பற்றிய  மருத்துவம் என்பதை சுகாதாரத்துறை புரிந்து கொண்டு செயல்படுவது மன நிறைவைத்தருகிறது !