Thursday, December 30, 2010

தெய்வீக அற்புதமும்-சமூக அற்புதமும்

(Divine Mirracle and SOcial Mirracle)


தெய்வீக அற்புதமும், சமூக அற்புதமும்

இரண்டு நாட்களுக்கு முன்பு டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர் குடும்பத்தொடு என்வீட்டிற்கு வந்திருந்தார் சிறந்த காந்தீயயவாதி..இந்திய அமைதி மையத்தின் இயக்குனர்.பல்வேறு தத்துவார்த்த பொக்குகள் பற்றி அவருடன் விவாதிப்பேன். அப்ப.டித்தான் தெய்விக அற்புதம் பற்றீயும் விவாதம் வந்தது.

ஏசுவானவர் மலைப்பிரசங்கம் பற்றி பெசினோம். மூன்று நாள் மக்கள் அவர் பேச்சை மெய்மறந்து கேட்கிறார்கள்.அவரிடம் அவர்கள் பசியார உணவுப்பொருள் இல்லை.இருந்தது ஐந்துரொட்டித்துண்டுகளும் மூன்று மீன் துண்டுகளுமே வந்திருந்த சுமர் 5000 பெரும் பசி ஆறு கிறார்கள்.இது தெய்வீக அற்புதம். எசுவுக்கு முன்பு மொசஸ், அதற்குமுன்பு ஆப்ரகாம் இப்படி ஒவ்வொருவர் காலத்திலும் ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்கிறது. .ஆப்ரகமின் பெரன்கள் தங்கள் சகொதரிக்காக் நாற்பத்தாறு பேரைக்கொன்று விடுகிறார்கள். அதாவது கொலை பழிவாங்குதல் என்பது சர்வ சாதாரனம். மோசஸ் தன் காலத்தில் இதனை மாற்றுகிறார்..புதிதாக முறைமையை மாற்றுகிறார். கட்டளையிடுகிறார்.ஒன்றுக்கு ஒன்று.ஒரூயிருக்கு ஒரூயிர். ஒரு பல்லுக்கு ஒரு பல். ஒரு கண்ணுக்கு ஒருகண் என்று தண்டனை முறைமையை மாற்றுகிற.ர்.இதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏசு வருகிறார்.அன்பை வழிமொழிகிறார்.அன்பின் மூலம் தான் வாழமுடியும் என்று போதிக்கிறார்.ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்கிறார்.

காட்சி மாறுகிறது. நாம் வீட்டில் இருக்கிறோம். எனக்கும் என்மனைவிக்கும் மட்டுமே உண்வு இருக்கிறது.இரண்டு நண்பர்கள்வருகிறார்கள் அவர்களையும் உணவருந்தச் சொல்கிறோம் அவர்கள் இப்போதுதான் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் அது உண்மையில்லை என்பது நமக்கு தெரியும்.எங்களுக்கும் பசியில்லை வருங்கள் சாப்பிடுவோம் என்கிறொம்.இது உண்மையில்லை என்பது வந்தவர்களுக்கும் தெரியும்.உண்கிறொம்.ஒரு ரொட்டி மிஞ்சுகிறது.அது.அன்பின் மிகுதி.வந்தவர்கள் பசியாரட்டும் என்று நாங்கள் விட்டுவைக்க,இருப்பவர்கள் பசியாரட்டும் என்று வந்தவர்கள் விட்டுவைத்த அன்பின் மிகுதி.

மலைப் பிரசங்கம் கெட்க வந்தவர்கள் மூன்று நாள் சாப்பிடாமலா இருந்தர்கள்? அழகர் ஆற்றிலிரங்கும் திரு.விழாவுக்கு கட்டுச்சொறொடுதானே போகிறோம். மலைபிரசங்கத்திற்கும் அப்படித்தானே வந்திருப்பார்கள்.? ஏசு போதித்த அன்பு , உணவு இருப்பவன் கொண்டுவந்த உணாவு தீர்ந்து விட்டவனுக்கு பகிர்ந்தளிக்கத் தூண்டியிருக்காதா?அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பசியாற்றிக்கொண்டிருக்க மாட்டார்களா?

இந்த மனிதர்கள்மனத்தில் இந்த சமுகத்தின் மனத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்காதா?

பின்னாளில் இந்த சமூக அற்புதம் தெய்வீக அற்புதமாகியிருக்க முடியாதா?

(என் அன்புத் தோழர்களுக்கும்,பதிவுலக அன்பர்களுக்கும் ஏசு சகாப்தத்தின் 2011 ஆன்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறென்.இந்த அற்புதத்தை விளக்கிய டாக்டர் ஜாண் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்)

Saturday, December 25, 2010

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"


சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரின் படைபுகள் எதையும் நான் படித்ததில்லை.நண்பர்கள், இலக்கிய அன்பர்கள் மூலமாக அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன் எல்லோருமே எதிர்மறையான கருத்துக்களையே சொன்னார்கள் சமீப காலங்களில் அவருடைய கட்டுரைகளைப் படித்து வ.ருகிறேன.. வெறுப்பை உமிழ்வார். "விஜய் டி.வி" யில் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டார்கள் என்று கூறியிருந்தார். அதன் பிறகு "நீயா?நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப்பார்த்தேன்.

"மனம் கொத்திப் பறவை" என்று ஒரு தொடர் விகடனில் எழுதி வருகிறார். அதில் சில வாரம் முன்பு மதுரையில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் மதுரையில் நாடகம் போட்டபொது சிலா தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.என்ன நாடகம்? ஏன் தாக்கினார்கள்?யார் யார் தாக்கினார்கள்.?

நாடகவியல் (Dramaatics) படித்தவன் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். நவீன நாடக ஆசிரியர்களில் அமெரிக்க நாடக ஆசிரியர் டேன்னசி வில்லியம்ஸ் எனக்குப்பிடித்தவர்களில் ஒருவர்.அவருடைய நாடகமான Cat on a Hot tin Roof அமெரிக்காவின் பிராட்வேயில் சக்கைபோடு போட்ட நாடகம். பின்னர் திரைப்படமாக வந்தது.எலிசபத் டெய்லரும்,மாண்ட்கோமரி கிளிஃப்ட் ம் நடித்தது. மிகசிறந்த கால்பந்தாட வீரன். அவனுக்கு "ஓரினச்சேர்க்கை" பழக்கம் உண்டு.அவன் திருமனமாகி தாம்பத்திய வாழ்வில் ஈடுபட இந்தப்பழக்கத்திலிருந்து விடுபட அவன் படும் பாடுகள் தான் கதை. இந்தியாவிலும் பரவலாக வவேற்கப்பட்ட படம்.

மதுரையில் மகாத்மா மாண்டிசெரி பள்ளி யிருக்கிறது.3000 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி. அதன் வளாகத்தில் தான் சாரு நிவேதிதா "இரண்டாம் ஆட்டம்" என்று நாடகம் போட்டார்.நாடகத்தின் கரு "ஓரினச்சேர்க்கை." அந்தக் கருவுக்கு வெஞ்சனமாக "சுய இன்பம்" வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாதது என்ன இருக்கும் என்று பார்க்க விரும்பினேன். வேறுபணியின் கரணமாக முடியவில்லை

போன இளஞ்ர்கள் வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாத்தைப் பார்த்தார்கள்." ஓரினச்சேர்க்கை "யும்,சுய இன்பமும்" காட்சிபடுத்தப்பட்டிருந்தது.மேடை யேறி நாடகத்தை நிறுத்தச் சொன்னார்கள். தகராறு நடந்தது. அப்போது தடுத்தவர்கள், இப்போது மதுரைபல்கலையில் பெராசிரியராக இருக்கும் டாக்டர்ரவிகுமார் என்ற ஸ்ரீரசா,தீயாணைப்பு அதிகாரியக இருக்கும் ஆருமுகம்.தோழர் ராகவன், ஆசிர்யர் ஷாஜகான் ஆகியோர்.நாடகத்தை போடவேண்டும், அது மனித உரிமை என்று சாரு நிவேதிதாவை ஆதரித்து வந்தவர்கள் டாகர் கே.ஏ. குணசெகரன்,பொதியவெற்பன் ஆகியோர்.

சாரு நிவேதிதா பாதி உண்மையைச் சொல்லும் பழக்கமுள்ளவர் என்று தான் படுகிறது.

Thursday, December 23, 2010

"ஈருள்ளியும்" இன்சூரன்ஸும்

"ஈருள்ளியும்" இன்சூரன்ஸும்


தமிழகத்தின் தென்பகுதியில் "ஈருள்ளி" என்றால் வெங்காயம். அதுவும் சின்னவெங்காயம். சோற்றுக்கு வெஞ்சனம் வேண்டாம்.வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு பொதும்.பழைய சோற்றுக்கு இவை இருந்தால் ஒரு வெட்டு வெட்டிடலாம்.

சிலோன்,சிங்கப்பூர், மலேசியா என்று அனுப்புவார்கள்.பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு இதுதான் "மைய" உணவு.சிலொனுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக போகும். தெயிலைத் தோட்ட தோழிலாளர்களுக்காக அனுப்புவர்கள். யாழ்ப்பாணத்திற்கும் பொகும். யாழ்பாணத்தில் அப்போதெல்லாம் பனங்காடுகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனங்குடலில் பாடுபடும் மக்களுக்கு பனம்பழம் ஒருவெளைஉணவு.அதோடு,பனங்கிழங்கு, நுங்கு,பதனீர், கள்ளூ விளைவிப்பார்கள். பனம்பழம் மிகவும் ருசியாக இருக்கும்.வாசனை தூக்கி அடிக்கும். சிறு வயதில் அனுபவித்து உண்டிருக்கிறேன்.தாழ்த்தப்பட்ட இவர்களை "பனஞ்சூம்பிகள்" என்று மேல் வகுப்பினர் அழைப்பார்கள். ஒரு வேளை அரிசி சோறு உண்டு அதற்கு வெஞ்சனம்தான் "ஈருள்ளீ'"

சின்னவெங்காயத்தை சிலோனுக்கு அனுப்பும் பொது அதற்கான ஆவணங்களொடு இன்சூரன்ஸ் சான்றுகளையும் இணைக்க வெண்டும்.இல்லை யென்றால்.கப்பலில் ஏற்றமுடியாது.தூத்துக் குடி நகரத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கும்.கொழும்பு துறைமுகம் போக ஆறு மணி நேரம் ஆகலாம்.இந்த ஆறுமணிநெரத்திற்காக இன்ஸுரன்ஸ் கட்டணம் தேவையா என்று கருதும் வியாபாரிகள் உண்டு.

பொது இன்சூரன்ஸ்( GeneraL) துறையில் முதலில் பாலிசி கொடுப்பதில்லை. Cover note என்று ஒரு காகிதத்தைக் கொடுப்பார்கள். தவிர பொது இன்சூரன்ஸ் மாலை 4மணிக்கு ஆரம்பித்து மறுநாள் மாலை 4மணிக்கு முடியும். வெங்காய வியாபரி யிடம் கம்பெனி கட்டணத்தை வசூலிக்கும்.கணக்கில் காட்டாது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு போய்ச்செர்ந்ததும் அங்கிருந்து தந்தி வரும்.வியாபாரி,கம்பெனி, கப்பல் ஏஜெண்டு கட்டணத்தை பங்கு போட்டுக் கோள்வார்கள்.சிக்கல் வந்தால்,கணக்கில் காட்டி நட்டஈடு பெற்று விடுவார்கள்.

ஒன்றரையணா வெங்காய வியாபரத்தில் இவ்வளவு தில்லு முள்ளு பண்ணமுடிகிறது என்றால் கோடிக்கணக்கில் வியாபாரம் பண்ணு பவர் என்ன இளிச்ச வாயரா?

Tuesday, December 21, 2010

எல்.ஐ.சி.யில் இட ஒடுக்கீடு......

எல்.ஐ.சி யில் இட ஒதுக்கீடு.....


1956ம் ஆண்டு ஆயுள் காப்பிட்டுத்துறை தேசீயமயமாக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சலுகைகள் 1972ம் ஆண்டுதான் வழங்கப்பட்டதுஅந்த ஊழியர்கள். கேட்ட போதெல்லம் எல்.ஐ.சி ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட.து. அதில் தலையிட முடியாது என்று அரசு கூறியது

1980 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு போராட்டம் நடந்தது.அங்கு மருத்துவக்கலூரியில்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான மேற்பட்ட படிப்பில் கொடுக்கப்பட்ட சலுகையை ரத்து செய்யவேண்டும். நோயாளிகளின் உயிரோடு விளையாடக்கூடாது. தகுதி அடிப்படையில் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று போராடினார்கள் பா.ஜ.க தன்னைத்தூக்கி.நிறுத்த கிடத்த சந்தர்ப்பமாக இதனக் கருதி.யது மெலும் நடுத்தரவர்க்கமும் இதில் முனைப்பாக நின்றது குஜராத்.மாநிலத்தில் ஒரூ விசேஷ நிலைமயும் அப்போது நிலவியது.

1950-60ம் ஆண்டுகளில் தாழ்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் மிகவும் கராராக அமல்படுத்தப்பட்ட மாநிலமாகும் அது.அதன் காரணமாக பழங்குடிகள் படித்து பட்டம் பெற்று பணியிலும் பதவியிலும் இடம் பெற்றார்கள்.தொழில்வளம் வளர்ந்து அதன் காரணமாக புதிய மத்தியதரவர்க்கம் . உருவாகியது அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்பு இல்லை. இவர்களின் அதிருப்தியை விசிறி விட்டு குளிர்காய ப.ஜ.க விரும்பியது."உங்கள் துயரத்திற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களுக்கானா சலுகை தான்.பாருங்கள்.எப்படியிருந்த பழங்குடியினர் எப்படி உயர்ந்துள்ளார்கள்.உங்கள் வேலை வாய்ப்பை பறித்தவர்கள் இவர்கள் தான்" என்று பிரச்சாரம் செய்தார்கள்.பொராட்டம் நடந்தது.ஏமாந்த மத்தியதர வர்க்கம் மூர்க்கமாகப் பொராடியது.

பந்த் அறிவிக்கப்பட்டது அகமதாபாத்,சூரத்,பரொடாஎன்று மாநிலம் முழுவதும் பரவியது.மத்திய மாநில அரசுஊழியர்கள் ஆசிரியர்கள்,வங்கி உழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். ஆனால் எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டும் பங்கெடுக்க மறுத்துவிட்டனர்."சமுக நீதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆடிமைபட்டிருந்தவர்களுக்கு,நியாயம் கிடைத்துள்ளது.இது பாரபட்சமானது அல்ல. இது நியாயத்தின் பாரபட்சம் ஆகவே இந்த.போராட்டத்தில்

கலந்து கொள்ளமாட்டோம்" என்று அறிவித்தனர்

பலம் பொருந்திய இந்த சங்கத்தை உடைக்க நிர்வாகம் சமயம்பார்த்துக்கொண்டிருந்தது. ப.ஜ.க ஆதரவாளர்கள் கருங்காலிகள் என்று குரலெழுப்பி தடுக்க எல்.ஐ.சி ஊழியர்கள் A.I.I.E.A LONG LIVE என்று கொஷம் போட்டுக்கொண்டு அலுவலகம் சென்றனர். அரசு ஊரடங்கு உத்திரவினப்போட்டது.ஊழியர் அசரவில்லை. கல்கத்தாவில் உள்ளதலமையை அணுகினர். "நிர்வாகத்திடம் வேலைக்கான 'பாசை" வாங்கிக்கோண்டு உள்ளே நுழையுங்கள்" என்றது அந்த தீரமிக்க தலைமை.காத்திருந்த நிர்வாகம் வழங்க மறுத்தது.ஊழியர்கல் அசரவில்லை".காப்பீட்டு ஊழியர் சங்கம் வாழ்க' என்று குரலெழுப்பியவாரே உள்ளே சென்று சமூக நீதியைக் காத்தனர்.

நான் ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. வங்கியில் என் ஓய்வூதியத்தை எடுக்கும் போதெல்லாம் என்மனம் A.I.I.E.A என்று குரலேழுப்பும். சுற்றுமுற்றும் .பார்த்துவிட்டு என் வாய் LONG LIVE என்று முணுமுணுக்கும்.

Thursday, December 16, 2010

ஊழல் தெய்வீகமானது.....

ஊழல் தெய்வீகமானது.....


"நகர்வாலா ஊழல்" பற்றி எழுதீயிருந்தேன்.பதிவர் ஒருவர் இது தான் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் என்ரு கருதிவிட்டார்.மத்தாய் ஊழல்,பிஜு ஊழல், முந்திரா உழல் என்ரு நேரு காலத்து ஊழல்கள் பற்றி எழுத ஆரம்பித்தால், எழுதி மாளாது.

மகாயோக்கியர்கள் என்று கருதப்படும் பிரிட்டிஷ் ஆண்டகாலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தான் இதற்கான சுழியை பொட்டவர். அப்போது வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை நடந்து கொண்டிருந்தது.ஹூக்ளியின் கவர்னராக ராஜா நந்த குமார் இருந்தார்.அவர் நவாபால் நியமிக்கப்பட்டவர்.சிலபகுதிகளில் நவாபு ஆட்சியும் சில பகுதிகளில் ஆங்கிலெயர் ஆட்சியும்நடந்துகொண்டிருந்த காலம் அது.நவாபுக்கு வாரிசு இல்லை.அவர் மனைவி தத்து எடுத்துக் கொண்டார் கவர்னர் ஜெனரல் அதனை அங்கீகரிக்க வேண்டும் இல்லை யென்றால் நாடு நவாபுக்குப் பிறகு பிரிட்டிஷார் வசம் போய்விடும்.கவர்னர் ராஜா நந்தகுமார்.ராணியின் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருலட்சம் வாரன்ஹேஸ்டிங்க்ஸ் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அங்கீகாரமளித்தார்.நாணயமான மனிதர்.வாங்கிய லஞ்சத்திற்கு ரசீது கொடுத்திருந்தார்.ப்ரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுந்தது. பாராலுமன்ற உறுப்பினர் எட்மண்ட் பர்க் வாதிட்டார் Impeachment of Warren Hestings என்ற பர்க் கின் உரை ஆங்கில இலக்கியத்தில் ஒரு மைல்கல்.நான் படிக்கும் காலத்தில் .B.A. இலக்கியமானவ்ர்களுக்கு அந்த உரை பாடமாக இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க முதன் முதலாக இந்தியாவில் உச்சநீதிமன்றம் உருவாக்க பட்டது.முதல் நீதிபதியாக வாரன் தன் ஆப்த நண்பரை நியமித்தார்.

இதுதான் முதல் ஊழலா? இல்லை.வரலாற்றில் கொஞ்சம் பின்னால் செல்லவெண்டும்

தக்காண பீட பூமியில் நவாபுகள் ஆட்சி.ராமன் என்பவர் வரிவசூல் செய்து,கஜானாவில் கட்டவேண்டியவர்.வசூலித்து அவர் விருப்பம் போல் செலவு செய்துவிட்டார்.நவாபு அவரப்பிடித்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார். ராமனின் துன்பத்தைக் காணமுடியாத இரண்டு பெரியமனிதர்கள் ராமோஜி, லஷ்மணோஜி என்பவர்கள் ராமன் கட்டவெண்டிய வரிப்பணத்தைக்கட்டி அவரை விடுவித்தார்கள்.ராமன் கட்டிய கொவில் தான் பத்திராசலத்தில் உள்ளது. அந்தக் கொவீல் மூர்த்திகள் தான் ராமொஜியும்,லஷ்மணொஜியும். ராமன் தான் பக்த ராமதாஸ

இதுதான் முதலா? இல்லை. அதற்கு தாய் தமிழகத்திற்கு போகவேண்டும்.

மதுரையை பாண்டிய மன்னர் ஆண்டகாலம்.தன் படை பலத்தை அதிகரிக்க குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்தார். தன் மந்திரி யிடம் பொற்காசுகளைக்கொடுத்து அனுப்பினார் மந்திரி அதனை தனதாக்கிக்கொண்டார். மன்னர் கேட்டபோது திரு திருவென்று விழித்தார்..அப்போது தென்னாடுடைய சிவன் நரிகளைப் பர்களாக்கி அவரைக்காப்பாற்றினார்.மதுர அருகில் உள்ள திருமொகூர் ஆலயம் தான் மந்திரி கட்டியது." நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்த" பாடலுக்கு பத்மினி ஆட நாம் ரசித்துக்கோண்டிருப்போம்.

ஊழல் செய்த அதிகார்களையும் அரசியல் வாதிகளையும் தெய்வாம்சம் பொருந்திய பக்த ராமதாசாகவும் மாணிக்க வாசகராகவும் கொண்டாடும் பண்பாடு கோண்டவர்கள்நாம்

Scam is divine

ஊழல் தெய்வீகமானது

Tuesday, December 14, 2010

நகர்வாலா ஊழல்.....

நகர்வாலா ஊழல்.....


டில்லிப்பட்டண வங்கியிலே,

கொள்ளைபோன அறுபதுலட்சம்,

கள்ளப்பணமா வெள்ளைப்பணமா?

காங்கிரஸ்காரன் கருப்புப்பணமா?

டில்லிராணியே இந்திராவே!

அல்லிராணியே என்ன பதில்?

என்ற தணிகைச்செல்வனின் கவிதைவரிகளைக் குரலெழுப்பி மதுரையின் நான்கு மாசிவீதிகளிலும் ஊர்வலம் வந்த ஆயிர்க்கணக்கானவர்களில் நானுமொருவன்.நகர்வாலா ஊழல் என்று பத்திரிகைகள் வர்ணித்தாலும் நகர்வாலா என்பவன் அம்பு.

பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி.பெரிய படிப்பாளி என்று சொல்லமுடியாது.கார்களை ரிப்பெர் பார்க்கத்தெரியும். இந்தியமக்களுக்கு 40000ரூ கார்கொடுக்க அரசு ஒருதிட்டம் பொட்டது.சஞ்சய் மாருதி கார் தாயாரிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.அரசு அதற்கான அனுமதியைக் கொடுத்தது. சஞ்சய் இன்ஞ்சின் தயாரிக்கும் பொறுப்பை எற்றுக்கொண்டார்.

இதற்கிடையே டெல்லி சர்வதேச விமானநிலயத்தில் ஒரு சம்பவம் நடந்தது.சந்தெகப்படும்படி இருந்த ஒருவனை போலீஸ் பிடித்தது. அவனைபொட்டு உலுக்கியதில் உண்மையைக்கக்கிவிட்டான். அவனுடைய பெட்டியில் அறுபது லட்சம் ரூ இருந்தது.விமானத்தில் மொரிஷியஸ் செல்லும் பயணி ஒருவரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளான்.

உள்குட்டு வேறு. அந்த விமானத்தில் சஞ்சய் மொரிஷியஸ் பொவதாக டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது அவர் கடைசினிமிடத்தில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.மொரிஷியஸ்,பெய்ரூட்,போன்ற இடங்களில் கள்ளப் பண பரிவர்த்தனை சர்வசாதாரணம்.பிரச்சினை பெரிதாகியது.

முக்கியமான கேள்வி அறுபதுலட்சம் யாருடையது? எங்கிருந்து வந்தது?

டெல்லி நாடளுமன்ற விதியில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் எடுக்கப் பட்டுள்ளது. வங்கியில் குரலை மாற்றிபேசி பணத்தை மொசடியாக எடுத்தவன் இவந்தான் என்று நகர்வாலா என்பவனைக் காட்டினார்கள். மாருதி கம்பெனிக்காக சஞ்சயிடம் கொடுக்க விமானனிலயம் வந்த பணம் இது. கொடுக்க வந்தவனை போலீஸ் பிடித்துவிட்டது. அதன மறைப்பதற்காக பிடிபட்டவனை மறைத்து அப்பாவி நகர்வாலாவைக் காட்டுகிறார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.நகர்வாலாவுக்கு "திக்குவாய்". அவன் குரலை மாற்றி பெசியிருக்க முடியாது.

வழக்கு நடந்தது. வழக்கு நடக்கும் பொதே நகர்வாலா இறந்தான் இந்த வழக்கை புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் காஷ்யப் விபத்தில் இறந்தார்.காஷ்யப் மரணத்தை விசாரிக ராமநாதன் வந்தார். விசாரணை சம்பந்தமாக டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் பொது லாரி மோதி இறந்தார். இந்த ஊழலை நாடளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜோதிர்மயி பாசு அவசரநிலைக்காலத்தில் அவரக் கைது செய்து.சித்திரவதை செய்தார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக வெலியே வந்து இறந்தார்.

பின்னாளில் மாருதி கம்பெனி "மாருதி உத்யோக் " ஆனது. நாடளுமன்ரவீதி ஸ்டேட் வங்கியில் அறுபதுலட்சம் ரூ தூக்கிக் கொடுத்த அதிகாரி மாருதி உத்யொக் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரானான்.

Sunday, December 12, 2010

ஜரிகைப் பட்டு...

ஜரிகைப் பட்டு...


தங்கம்,வெள்ளி,பட்டுநூல் ஆகியவற்றின் விலை குலைநடுங்க வைக்கும் நிலையில் ஜரிகைப் பட்டு பற்றி எழுதுவது அராஜகம்தான்.காஞ்சியிலோ,காசியிலோ பட்டு நெய்பவர்கள் ஜரிகையை "கண்டு " கணக்கில் வாங்கி பயன் படுத்துகிறார்கள்.ஒரு "கண்டு" என்பதுசுமார் 250கிராம் இருக்கும்.ஒரு 20000 மீட்டருக்கு குறைவாக நீளமிருக்கும்.ஜரிகை நூலின் கனம் .3 மில்லிமீட்டர் இருக்கும்.

2005ம் ஆண்டு கிராம் 640 ரூ ஆக இருந்த தங்கம் இன்று 1500 ரூ தாண்டியிருக்கிறது.வெள்ளி கிராம் 10ரூ யாக இருந்தது இன்று 40ரூ யாக இருக்கிறது.பட்டுநூல் கிலோ 600ரூ யாக இருந்தது இன்று 2000ரூ ஆகீவிட்டது.ஒருகண்டு ஜரிகை3150ரூயாக இருந்ததுஇன்று7000ரூ ஐ நெருங்குகிறது.

தரமான தங்க ஜரிகை என்றால் 55% வெள்ளி,24% பட்டுநூல்,22% செம்பு, .60 % தங்கமிருக்கவேண்டும்.

சந்தையிலொ பொலிஜரிகை தான் ஆக்கிரமித்துள்ளது.நாம் வங்கும் ஜரிகைப் பட்டு எந்த அளவுய தரமானது? ஒரு ஆய்வின்படி சென்னையில் 80% ,ஹைதிராபாத்தில் 70%, மைசூரில் 50% போலி ..

இந்தியாவில் ஜரிகை சூரத்தில் 55%சதம்,மீதமுள்ளவை வாரணாசி,ஆக்ரா,ஜெய்பூர்,ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. சூரத்தில் கி.பி. 16ம் நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது.வெள்ளிக்கட்டியிலிருந்து நூலைத்தயாரிக்கும் பணி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.சூரத்தில் உள்ள ஐந்து ஆறு குடும்பங்களுக்கு மட்டுமே அது தெரியும்.

ஹைதிராபாத்தில் வெள்ளியை கம்பியாக திரிக்கும் ஆரய்ச்சி நடபெருகிறது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் ஜரிகை தயாரிக்க தானியங்கி தொழிற்சாலை ஒன்று இருக்கிறதுஇந்தியாவில் தமிழ்நாட்டில் "நல்லி" ஒன்ருதான் 60% வெள்ளீ ஜரிகையைப் பயன் படுத்துகிறது.மற்றவை...?

ஜரிகையின் தரத்தை பரிசோதிக்க .இயந்திரம் உள்ளது. ஆனால்ஜவுளிக் கடைகரர்கள் பரிசோதிப்பது அவர்களை அவமதிப்பதற்குச்சமம் என்று கூறி மறுக்கிறார்கள்.

பதிவர்கள் யாராவது நுகர்வோர் நீதிமன்றம் போனாலாவது விடியுமா?

Monday, December 06, 2010

"ஆஷ்" கொலை வழக்கும் பாரதிதாசனும்.......

"ஆஷ்"கொலைவழக்கும், பாரதி தாசனும்.....


மணியாச்சி சந்திப்பில் கலக்டர் ஆஷ் இருந்த பெட்டிக்குள் வாஞ்சி ஐயர் நுழைந்தபோது வெளியே சற்று தள்ளி வெள்ளை வெட்டி சட்டையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் என்று சென்ற இடுகையில்குறிப்பிட்டிருந்தேன். ஒரு வேளை வாஞ்சி யின் குறி தப்பிவிட்டல்,அசந்தர்ப்பமாக ஆஷ் கொல்லப்படவில்லையென்றால்,காரியத்தைக் கச்சிதமாக முடிக்க உதவிக்கு அனுப்பப் பட்டவந்தான் தள்ளி நின்றவன். ஆஷ்துரைசெத்தான் என்று தெரிந்ததும் அவன் தப்பிவிட்டான் தப்பிபயவன். பெயர் மாடசாமி.

இதெல்லாம் பிரிட்டிஷ் பொலீசுக்கு தெரிய ஒருமாதமாகியது. மூன்று பெரைப்பிடித்ததில் . சோமசுந்தரம் பிள்ளை அப்ரூவராக மாறி தகவல் கிடைத்தது. ஆஷை கொல்ல ஒருவர் அல்ல இருவர் அனுப்பப் பட்டிருந்தனர் என்பதே அதன் பிறகு தான் போலீசுக்குத்தெரியும். அதற்குள் மாடசாமி பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரஞ்சு இந்தியாவுக்கு போய்விட்டான்.

அங்கு ஏற்கனவே பாரதி,வ.வெ.சு.ஐயர்,பி.பி.ஆசார்யா ஆகியொர் இருந்தனர்.ஆசார்யா கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ம்பித்த போதே உறுப்பினரானவர். வாஞ்சிகுழுவினருக்கு துப்பாக்கி வந்ததே இவர்கள் மூலம் தான் என்று ஒரு செய்தி உண்டு.கொல்லப்பட்டவன் பிரிட்டிஷ் கலக்டர். அரசுக்கு சவால். ஆகவே ஆங்கிலேயரின் நிர்ப்பந்தம் பிர்ஞ்சு அரசாங்கத்திற்கு இருந்த்தது. ஆங்கில பிரஞ்சு போலீசார் பாண்டிசேரி முழுவதும் மாடசமியைத்தேடி அலைந்தனர். பாரதி, வ.வே.சு ஐயர் ஆகியொர் கண்காணிக்கப்பட்டனர். மாடசாமி வந்தால் அடைகலம் கொடுக்கவும் மாற்று ஏற்பாடுகள் இருந்தன.

மாடசாமி பாண்டிச்சேரி வந்ததும் உடனடியாக அவனை வெளிநாடு அனுப்பவேண்டும்.பாண்டியில் இருப்பது ஆபத்து. ஐரோப்பாவுக்கு தமிழ் மட்டுமே தெரிந்த மாடசாமியை அனுப்புவது ஆபத்து. ஆகவே பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமின் தலைநகரமான சைகோன் அனுப்புவது என்று முடிவாகியது. மாடசாமியை சைகோன் அனுப்பும் ஏற்பாட்டைக் கவனிக்கும் பொறுப்பு பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்டது

பாண்டிச்செரியில் பெரியகப்பல் கள் வராது. நடுக்கடலில் நிற்கும். கரையிலிருந்து தோணிகள் மூலம் பயணிகள், சரக்குகள் எடுத்துச்செல்லப்பட்டு கப்பலில் எற்றப்படும். மாடசாமியை ஒரு இருட்டான நட்ட நடுநிசியில் தோணியில் கொண்டுசென்று ஏற்ற முடிவாகியது.தோணியில் பாரதிதாசனும் மற்றவர்களும் ஏறிக்கொண்டனர். கூடவே ஒரு மீன் படகும் சென்றது.

கப்பலை நெறுங்குக்போது போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர். உள்ளே பாரதிதாசன் இருந்தார்.ஆனால் மாடசாமி யில்லை .தோணியை போலீசார் விட்டுவிட்டனர். இதனை எதிர்பார்த்த பாரதிதாசன் மாடசாமியை தோணியில் ஏற்றாமல் மீன்படகில் ஏறச்சொல்லியிருந்தார். போலீசாரைப் பார்த்த மீன் படகு கப்பலருகில்செல்லாமல் நடுக்கடலை நோக்கிசென்றது மாடசாமி என்ன ஆனார்?

( திருநெல்வேலியில் அந்தக்காலத்தில் T.M.B.S என்றொரு பஸ் கம்பெனி இருந்தது. அவர்களுக் லாரியும் உண்டு. அதற்காக சென்னையில் ஒரு .கிட்டங்கி வைத்திருந்தனர். சைகோன் பொகமுடியாத மடசாமி மீன் படகுமூலம் சிலோன் சென்றதாக ஒருபேச்சு உண்டு 1950 வாக்கில் வயதான மாடசாமி தன் குடும்பத்தைத்தேடி நெல்லை வந்ததாகவும்

அவர்களைப் பர்ர்க்கமுடியாமல் சென்னை சென்றதாகவும் கூறுகிறார்கள். சென்னயில் TMBS கம்பெனி கிட்டங்கியில்

காவலாளியாக பணியாற்றுவதாக தெரிந்து கொண்டு அவருடைய உறவினர்கள் விசாரித்துள்ளனர். அ.வர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கம்பனி அவர்களிடம் கூறியிருக்கிற்து.இவை உறுதி செய்யப்படவில்லை.)

Saturday, December 04, 2010

"ஞான்... அ..மரிக்கான் பொகுன்னு..."

"ஞான்... அ...மரிகான்  பொகுன்னு".......


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது 1905லிருந்து 1908 வரை தென் தமிழகத்தில் புரட்சிகரமான சுதந்திர இயக்கங்கள் அதிகமாகவும் ரகசியமாகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தன.கலேக்டர் வின்ச்துரை அனுப்பிய ரகசிய குறிப்பில் திருநெல்வெலி மாவட்டத்தில் குறப்பாக தூத்துக்குடியில் கூடுதலாக இருப்பத்தாக தெ.ரிவித்தது.அதற்குக் காரனமுமிருந்த்தது.

வங்க மக்களிடயே தேசீய தாகம் கூடுதலாக இருந்தது.1905ம் ஆண்டு கர்சான் பிரபு வங்கத்தை இரண்டாகப்பிரித்தான்.இதனை எதிர்த்து.இளைஞர்கள் வீருகொண்டு எழுந்தனர்.ஆங்காங்கே புரட்சிகரக் குழுக்க.ளாக செயல்பட்டு வெள்ளையர்களை ஆயுத்மேந்தி விரட்ட முடிவு செய்தனர்.இந்த இயக்கம் கசிந்து வங்கக்கடலோரம் பரவி தூத்துக்குடி வரை பற்றியது

அதே சமயம் பரொடா கங்கிரஸ் பொய்விட்டு வந்த வ .உ.சிதீவிரமாக செயல்பட்டார்.தினம் ஒரு பொதுக் கூட்டம்,என்று நெல்லை மாவட்டம் முழுவதும் சுற்றிவந்தார்.தூத்துக்குடி மில்லில் தொழிற்சங்கம் தோன்றியது.கப்பல் கம்பெனி உருவானது.தூத்துக்குடிக்கு என்று தனியாக ஆஷ் என்பவன் சப்கலெக்டராக நியமிக்கப்பட்டான். பிரிட்டிஷாரின் பிடி இறுகி கொடூரமாகியது.

1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தெதி. ஆஷ் துரை நெல்லை வந்து கலெக்டரைப் பர்த்துவிட்டு தூத்து க்குடி செல்ல ரயிலேருகிறான். சிலோன் பொட் மெயிலுக்காக மணியாச்சி சந்திப்பில் ரயில் காத்திருக்கிறது.ஆஷ் இருந்த பெட்டி முன் வெள்ளை வேட்டி.கோட்டு, உச்சிக்குடுமியோடு ஒருவன் நிற்கிறான். அவனுடன் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தவன் சற்று தள்ளி நிற்கிறான்.உச்சிக்குடுமி ரயில் பெட்டிக்குள் ஏறுகிறான். துப்பாக்கி வெடிக்கும்சத்தம் கெட்கிறது.ஆஷ் மனைவி மேரியின் மடியில் செத்துவிழுகிறான்.பெட்டிக்கு வெளியே நின்றவன் ஓடிவிடுகிறான்.உச்சிக் குடுமி பெட்டியிலிருந்து வெளியேறி கழிவரைக்குள் செல்கிறான்.துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

போலீசார் கழிவரையில் பார்க்கும்போது உச்சிக்குடுமி பிணமாக கிடக்கிறான் அவன் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருக்கிறது.அதில்"எங்கள் ராஜா வெள்ளைக்காரர்கள் அல்ல. 5ம் ஜார்ஜ் எங்கள் அரசன் அல்ல. அவன் இந்தியாவந்தால் சுட்டுத்தள்ளப்படுவான்.வெள்ளையர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள மதறாஸ் மாகாணத்தில் 3000 பெர் ரத்தக்கயெழுத்திட்டு காளி மேல் சத்தியம் செய்திருக்கிறோம்.---R.வாஞ்சி ஐயர்

போலிசார் விசாரணையில் தெரியவந்தது.செங்கோட்டையில் வசிப்பவர் ரகுபதி ஐயர். தெவஸ்வம் பொர்டில் காரியம் செய்துவந்து ஓய்வு பெற்றவர்.அவர் மகன் வாஞ்சி நாதன்.புனலூரில் ஃபாரஸ்ட் வாச்சராக இருக்கிறான்.மனைவி பெயர் பொன்னம்மாள். சமிபத்தில் தான் பெண் குழந்தை இறந்துள்ளது. அடிக்கடி பரோடா,மற்றும் வடமாநிலங்களுக்கு செல்வான்.அவனுக்கும் தந்தைக்கும் இதனால் சுமுக உறவு கிடையாது

சம்பவம் நடந்த முன் தினம் மனைவி பொன்னம்மாளிடம் பேசியிருக்கிறான். அவன் சார்ந்த இயக்கத்தில் பொய் சொல்லக்கூடாது. அதனால் தான் ஆஷ் துரையைக் கொன்றுவிட்டு கழிவரைக்குள் ஓடி வாயில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுட்டு மரணமடந்திருக்கிறான்.

"நாளை எங்கே பொகிறீர்கள்? என்று பொன்னம்மாள் கேட்டாள். வாஞ்சி யோசித்தான்.கொஞ்சம் இழுத்தான். "அ..மரிக்கான் பொகுன்னு".(சாகப்பொகிறேன்)மலையாளத்தில் உண்மையைச் சொல்லிவிட்டான். பேதை பொன்னம்மாள் கணவன் அமேரிக்கா செல்வதாக மகிழ்ந்தாள்.

( ஃப்ரண்ட் லைன் பத்திரிகையில் ஏ.ஆர். வெங்கடாசலபதி கட்டுரை,தினமணி காதிரில் ரகமி எழுதியது.ஆகியவற்றை ஆதரமாகக் கொண்டது,அடுத்த ஆன்டு வாஞ்சியின் நூற்றாண்டு நினவு .தினம்.ஆஷ் துரையின் மகன் ராபர்ட் என்பவர் வருவதாகக் சொன்னதாக வெங்கடாசலபதி கூறிருக்கிறார்.நல்லது..நமக்கு நினைவிருக்குமா?)

Thursday, December 02, 2010

"வழிப்பாடல்" நாவலும் நெடுஞ்சாலைத்துறையும்

"வழிப்பாடல்" நாவலும் நெடுஞ்சாலைத்துறையும்


விபூதி பூஷன் பந்தோபாத்யாயா "வழிப்பாடல்" என்ற நாவலை எழுதினார். வங்காள பிராமணக்குடும்பம் எப்படி தன் அடையாளமிழந்து தன்னை நவீனப் படுத்திக்கொண்டு வாழ்க்கயை மீட்டெடுக்கிறது என்பதுதான் நாவலின் சாரம்.20ம் ஆண்டுகளின் துவங்கி அன்றய வாழ்க்கையைலிருந்து இன்றுவரைசித்தரிக்கும் இந்த நாவலை திரைப்படமாக எடுக்க சத்தியஜித் ரே விரும்பினார்.ஒரே படமாக எடுக்காமல் மூன்று படங்களாக எடுக்க திட்டமிட்டார.Apu Trialogy என்று உலகம் போற்றும் "பதேர் பஞ்சாலி"(வழிப்பாடல்) அபு சன்சார்(அபுவின் உலகம்) அபராஜிதோ(அபராஜிதன்) ஆகிய மூன்றும் தான் அவை.

பதேர் பஞ்சாலி படம் எடுக்க ஆரம்பித்தார். அதுவரை தான் சேமித்து வத்திருந்த பணத்தில் படப்பிடிப்பு தவங்கியது.பனப்பற்றாக்குறை. மனைவியின் நகை,விற்கப்பட்டது. நண்பர்கள் மூலமாக பணம் வந்தது.ஆனாலும படம் முடியவில்லை. படப்பிடிப்பு நின்றுவிட்டது. ஓராண்டாக ரே செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.இதற்கிடையில் நடிகர் ஒருவர் மரணமடைந்தார்.வேரு வழியின்றி மாநில அரசின் உதவியை நாடினார்.

அப்போதெல்லாம் திரைப்படத்துறை அங்கீகரிகப்படாத ஒன்று.முதலமைச்சராக பி.சி.ராய் இருந்தார். அவர் உதவ விரும்பினாலும் செயல்பட முடியவில்லை.முக்கிய அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனை செய்வதாகக் கூறி ரே ஐ அனுப்பினார்.

அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஒவ்வொரு துறை அதிகாரியும்" நான் ஆட்டைக்கு வரவில்லை" என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி வரவில்லை. அவர் தனக்குப் பதிலாக இளம் அதிகாரி ஒருவரை அனுப்பியிருந்தார்.இளம் கன்று."ஐயா! நான் குறிப்பு ஒன்றை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறென். நீங்கள் எற்றுக்கொண்டால் உதவமுடியும்" என்றார். முதல்வரும் "குறிப்பை அனுப்பிவையுங்கள்" என்றார்.

முதல்வர் பார்வைக்கு: நெடுஞ்சாலை துறையின் விளம்பரத்திற்காக இந்த் ஆண்டு 3 லட்சம் ஒதுக்கப்பட்டது செலவழிக்கப் படவில்லை.மூன்ருமாதங்களுக்குள் செலவழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனை திருப்பி அனுப்பிவிட வேண்டும தயாரிக்கப்படும் படத்தின் பெயர் "வழிப் பாடல்".நெடுஞ்சாலையின் விளம்பரத்திற்காக இந்தப்படத்திற்கு 3 லட்சம் அளிக்க அனுமதி அளிக்கவும்.என்று அந்த இளம் அதிகாரி எழுதிவத்தார். முதல்வர் அனுமதிதார்.

உலகத்தில் இதுவரை எடுத்த படங்களில் பத்தை தேர்ந்தெடுத்தால் அதில் "பதேர் பாஞ்சாலி"யும் ஒன்று. பத்து இயக்குனர்களை எடுத்தால் அதில் சத்யஜித் ரே ஒருவர்.

அவரை உலகுக்கு தெரியவைக்க குறிப்பு எழுதிய அந்த இளம் அதிகாரியின் பெயர் சுப்பிரமணியன்.

தமிழ் நாட்டச்செர்ந்தவர்.