Friday, January 31, 2014

உணவு,உரம், எரிவாயு மானியம் .....?


ஏழை மக்களின் உணவுப்பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியம்,ஏழை விவசாயிகளுக்காக உரத்திற்கு அளிக்கப்பட்டு   வரும்மனியம்,சமையல்  எரிவாயுவுக்கான மானியம் நமது பொருளாதார நிபுனர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்த ஒன்று ! 

பர்மா ஷெல், ஸ்டாண்டர்டு வாக்குவம்,ஈஸ்டர்ன்  ஆயிலென்று  பன்னாட்டுகம்பெனிகளை இந்தியமயமாக்கி இறுதியில் இந்தியன் ஆயில்கம்பெனியை ஒரு பிரும்மாண்டமான நிருவனமாக்கினார்கள்  ! இதற்காக உழைத்தவர் இந்திராகாந்தி அமையாரின் கணவர் ஃ பெரோஸ்  காந்தியாகும் !

பொதுத்துறையில் இருந்ததை தனியாரிடம் கொடுத்தார்கள் ! இதில் முன் நின்று செயல்பட்டது \பா.ஜ.க.. குறிப்பாக அம்பானி குழுமம்! தனியார் எண் ணை  கம்பெனிகளுக்கு  நட்டம்வரக்கூடாது என்பதற்காக எண்ணை விலையை உயர்த்தினார்கள் ! எரிவாயு விலையை உயர்த்தினார்கள் ! 

எளியமக்களின் நலம்காக்க    என்று கூறி எரிவாயுவுக்கு மானியம் கொடுத்தார்கள் !

அரசு செலவினத்தைக் குறைக்க இப்போது  மானியத்தில் கை வைத்துள்ளார்கள் !

வரும் தேர்தல மனதில் கொண்டு இப்போது அதுபற்றி மறு பரிசிலனை செய்து மாற்றங்களை   செய்துள்ளார்கள் !

மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு கொடுப்போம் என்ற பொய் சொல்லி அதனை தடுத்துநிறுத்தும் திட்டத்தை நிறுத்தி  வைத்துள்ளார்கள்  !

இது பொறுக்க முடியாதரிசர்வ்  வங்கி  அம்பி ரகுராமன் கோவிந்தராஜன் குதியாய் குதிக்கிறார் ! 

எரிவாயு ஒரு சிலிண்டர்  1200/- ரூ சொச்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .அவர்களுக்கு ஏன் மானியம் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ! 
இந்த அறிவுக் கொழுந்தை நாடுகடத்தலாம் !

ஆனால் அவர் ஏற்கனவே அமெரிக்க பிரஜையாக தான் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது !

இது எப்படி இருக்கு ??? 

 


 

Tuesday, January 28, 2014

ஆர்.எஸ்.எஸ்.  ராமர் படத்தை தங்கள் அலுவலகத்தில் வைக்க மாட்டார்கள் ....!


பிரிவினையின் பொது அகதிகளுக்கு  நிவாரணப்பனிகளை செய்த தொண்டர்களில் சிலர் ஆர் எஸ் காரர்கள் ! காந்தியடிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களைப் பாராட்டினார் ! அந்த தொண்டர்களின் தலைவர் ஒருவர் காந்தியடிகளை ஆர்,எஸ்,எஸ் அலுவலகம் வந்து பார்வை இடும்படி கரட்டுக் கொண்டார் ! 

காந்தி அடிகளும் ஒரு நாள் சென்று பார்த்தார் ! ஆர்வத்தோடு அவருக்கு அலுவலகத்தைச் சுற்றி காண்பித்தார்கள் ! 

ராணா  பிரதாப் சிங் , ஜான்சி ராணி ,சிவாஜி என்று வண்ண ஓவியங்கள் பிரும்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன ! மகிழ்ச்சியோடு பாராட்டிய அடிகள் விடை பெற்று கொண்டு கிளம்பும் சமயம் தலைவர் ! 
"ஐயா ! எங்கள் அலுவலகத்தைப்  பார்த்திர்கள் ! அது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று சொல்லுங்கள் "என்று கேட்டுக்கொண்டார் !

"நான் ஒரு ராம பக்தன் ! ஒரு சிறிய ராமர் படத்தை எங்கேயாவது ஒரு மூலையிலாவது வைத்திருக்கலாம் " என்றார் காந்தியடிகள் 

"ராணா வும்,ஜான்சி ராணியும் ,சிவாஜியும் முஸ்லிம்களை எதிர்த்து போராடினார்கள் ! ராமர் முஸ்லிம்களை எதிர்த்து போராட வில்லையே " என்றார் அந்த தலைவர் !

காந்தி சொல்லியே வைக்க மறுத்தவர்கள் மற்றவர்கள் 
சொல்லியா வைக்கப் போகிறார்கள் !

( நம்ம ஊர் அபகிர்த்தி வாசங்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ! பதில் தெரியாவிட்டால் ஊசிப் போன தலைவர்களிடம் கேட்டுச்  சொல்லுங்கள் )


Sunday, January 26, 2014

சதிச்கரிலிருந்து வந்த வனகுடியினர் ! இவர்கள் citu சங்க உறுப்பினரும் ஆவர் ! அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க 23 வது மாநாட்டின் பிருமாண்ட ஊர்வலத்தின்  முகப்பில் தங்கள் மரபார்ந்த உடை தரித்து ஆணும் பெண்ணுமாக வாத்தியங்களுடன் ஆதரவு தெரிவித்து கலந்து வந்த கண்கொள்ளாக் காட்சி !  

Saturday, January 25, 2014

கோவேறு கழுதை  நாவலும் ,

எழுத்தாளர் "இமயமும் ".........!!!தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதன் முதலாக இலக்கியத்திற்காக பரிசளிக்கத் துவங்கிய காலம் அது ! மூத்த எழுத்தாளர் கு.சி.பா தன பெற்றோர்களின் பெயரில் சிறந்த நாவலுக்கு பரிசளிக்க முன்வந்தார் ! பரிசு 3000/-ரூ என்றும் முடிவு செய்யப்பட்டது !

அதற்கான நடுவர் குழுவில் நானும் இருந்தேன் ! நான் ஏற்கனவே "கோவேறு கழுதை " நாவலைப் படித்திருந்தேன் ! சலவைத்தொழிலாளர் குடும்பத்தைச் சுற்றி வரும் நாவல் ! நாவலின் வடிவ நேர்த்தி புதுமையாக இருந்தது ! அதுமட்டுமல்லாமல் நாவலாசிரியரின் எழுத்துக்கு   ஊடாக பலகீனமான கோபக்குரல் -மனிதனின் கையாலாகாத - தன்மையைச் சுட்டுகிற ஒலி  நாவல் முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தது ! 

நடுவர்கள் பிரியப்பட்டால் அவர்கள் சிறந்தது என்று கருதும் நாவலை வாங்கி பரிசுக்கு அனுப்பலாமென்றும் இருந்தது ! நல்லகாலம் பரிசுக்கு வந்த சில நாவல்களில் இமயத்தின் முதல் நாவல் இருந்தது ! அந்த ஆண்டு முதன் முதலாக இமயம் அவர்களுக்கு பரிசு  அளிக்கப்பட்டது !

பரிசளிப்பு விழா மதுரையில்  நடந்ததாக நினைவு ! ஒல்லியான ,கருத்த ஒரு இளைஞரை இவர்தான் இமயம் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் !அப்போது அவரோடு அதிகம் பேசவில்லை !

சமீப காலங்களில்  தொலைக்கட்சிகளில் அவர் அதிகம் தென்படுகிறார் ! தோற்றத்திலும்  பொலிவு கூடியிருக்கிறது ! அவருடைய அர்சியல் மற்றும் தத்துவார்த்த நிலை பற்றி எதுவும் தெரியாது !

இந்த மாத புத்தகம் பேசுது இதழில் மதுசூதன் அவர்களின் ஒரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் அவருடைய சிந்தனைதெளிவை ,துணிச்சலை பறை சாட்டுகிறது !

கேள்வி :  உங்களுடைய கதைகள் "தலித்"களின் வாழ்வை பதிவு செய்வதாகக் கொள்ளலாமா ?

இமயம்:   ஒரு எழுத்தாளன் ,அவன் பிறந்த இனத்தாருடைய கதைகளையே எழுதுவான் என்று நம்புவதும் ,அப்படித்தான் எழுதி இருக்கிறான் என்று சொல்வதும் சாதியை வேறு விதமாக அடையாளப்படுத்திக் காட்டுவதுதான் !சுயசாதி மனிதர்களுடைய கதைகளைத்தான் எழுதுகிறேன் என்பது இன்னும் இழிவானது ! இலக்கியத்தை இலக்கியமாக பார்க்காமல் அதை எழுதிய எழுத்தாளனின் சாதியை வைத்து பார்ப்பதால்  ஏற்படுகிற விளைவுதான் இந்தக் கேள்வி !

நம்முடைய சமுகம் ,ஒரு மனிதனின் செயல்பாடுகளை ,அவன் எந்த விதத்திலும் பொறுபேற்க முடியாத சாதியை வைத்தே மதிப்பிடுகிறது ! சலுகை காட்டுவது மாதிரி அவமானப்படுத்துகிறது ! ஐயோ பாவம் என்பது போல பிச்சை போடுவதை , கௌரவமாக ஏற்பது எவ்வளவு பெரிய அவமானம்  ? நான் "தலித்" எழுத்தாளன் என்று சொல்வது இந்த அவமானத்தை பெருமையாக ஏற்றுக்கொள்வது தான்! திறமையற்றவர்கள் செய்யும் காரியம் இது !

என்னுடைய எழுத்து தலித்துகளின் வாழ்வை சித்தரிக்கிறது என்பதற்குப் பதிலாக மனிதத் துயரத்தை பதிவு செய்கிறது என்று ஏன் சொல்லக்கூடாது !
பிற இனத்தவரின் துயரம் மனிதத் துயரம் ! பிற இனத்தவரின் வாழ்க்கை மனித வாழ்க்கை ! ஆனால் "தலித்" களின் துயரமும் வாழ்க்கையும் மனித துயரமல்ல !மனித வாழ்க்கையல்ல  ! அது தலித்துகளின் துயரம் தலித்துகளின் வாழ்க்கை !இந்த மனோபாவத்திற்கு எதிரானது என் எழுத்து ! இது தான் என் எழுத்திற்கான சவால் !'

இமயம் அவர்களே வாழ்த்துக்கள் !!!
    


எத்ர ,எத்ர ...........தத்ர தத்ர 
..............."எங்கெல்லாம் தர்மம்  அழிந்து , அதர்மம் தலைதூக்குகிற்தோ அங்கு நான் அவதரிப்பேன் "

என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார் !

.............   " அதர்மம் தலை தூக்கும் போது ராமர் வருகிறாரோ இல்லையோ ! சீத்தாராம் (எச்சூரி )வருவார் "..........................

.............. " கிருஷ்ணன் வருகிறாறோ இல்லையோ ! இந்த வரதராஜன் வருவார் ......."

( ஜாதி ஒழிப்பு போராட்டக்குழு நடத்தியசிறப்பு மாநாட்டில் (நாகபுரி ) மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கி.வரதராஜன் )

Wednesday, January 22, 2014

நாகபுரியில் ........!!!......... இலவசக் கல்வி என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை  ! பள்ளி  செல்லும் குழந்தைகளு க்கு பள்ளி புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் ! சீருடை கொடுக்க வேண்டும் ! மதிய உணவு கொடுக்கவேண்டும் ! அத்துனையும் இலவசமாக ! அரசு பணமில்லை என்கிறது ! இதற்கு சுமார் 1,லட்சத்து 75 கோடி ரூ பாய் சிலவாகுமாம் !

2g  அலைக்கற்றை ஊழலில் சிக்கிய பணம் மட்டும் 1லட்சத்து 76 ஆயிரம் கோடியாகும்! இந்த ஒரு ஊழலைத்தவிர்த்திருந்தாலே  நாட்டிலுள்ள குழந்தகளுக்குஇலவச கல்வி அளித்திருக்க முடியும் !

வறுமைக் கோட்டிற்கு கிழே உள்ளவர்களுக்கு உணவுப் பொருள் வழங்க 90லட்சம்  வெண்டுமாம !  நிலக்கரி ஊழலில் மட்டும் 1லட்சத்து எண்பதாயிரம் கோடி என்கிறார்கள் ! அதில் பாதி கிடைத்தாலும் வருமைக்க் கோட்டிற்கு கிழே மேலே உள்ள அத்துணை பேருக்கும்  உணவு அளிக்க முடியும் ! ..........

(20-1-14 அன்று நாகபுரியில் அகில இந்திய இன்சுரன்சு ஊழியர் சங்க 23வது மாநாட்டில் தொழார் சீதாராம் எச்சுரியின் பேச்சிலிருந்து )
Saturday, January 18, 2014

உலகம் அறியாத ஒன்று ....... !!!


உலகம் அறியாத ஒன்று நடந்தது ! 58 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது !

ஆம் ! இந்திய அரசாங்கத்தின் முடிவு ஆயுள்இன்சுரன்சதேசஉடமையாக்கும   முடிவு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது!

இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசர சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது!

திறமையாக , எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல் படுத்த திட்டம் தீட்டப்பட்டது !

அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக் அவர்கள் தன்னுடைய வரலாற்று நுலில் இதனை  குறிப்பிடுகிறார்!

"நான் எச்.எம் படேலை வர்த்தக அமைச்சர் டி டி கிருஷ்ணமாசாரியாரை சந்திக்க அனுப்பினேன் ! அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் முலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல ! என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன் !
அன்று இரவு ஒரு அவசர சட்டம் தயாராக இருந்தது ! அன்று இரவு அது கையெழுத்தாயிற்று !  மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக போறுக்கி  எடுக்கப்பட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இன்சுரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் ! அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த  அதிகார உத்திரவை காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் !
ஆயு்ள்  இன்சுரன்சு தேச உடமையாக்கப்பட்டது !இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ,இனி எப்போதும்   நடத்த முடியாத சம்பவமாகும் !"

ஏன் இவ்வளவு ரகசியம் ? !

முன்னமெயே தெரிந்திருந்தால் கோடிகணக்கான கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்ற பயம் தான் காரணம் !

எச்.எம் படேல்,பி.கே.கவுல்,எ,ராஜ கோபாலன் ஆகியமுவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள்.! அவர்களுக்கு உதவியாக வையாபுரி,எம்.ஜ.ராவ் ஆகியோர் இருந்தனர் ! இந்த நடவடிக்கையை அமைச்சரவைஇன் ஆமொதிப்புக்காக வைக்கவில்லை ! பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !

பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகாளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தெதியெஅனுப்பினார்கள்  ! அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை ! அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன ! அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது !  

இந்த அதிகாரிகளுக்கன பயண ச்செலவுக்கான அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை ! முத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள் !  ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !

19-1-56 அன்று இரவு 8.30 க்கு  நிதி அமைச்சர் வானொலி முலம் இன்சுரன்சு நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி  அறிவித்தார் !

கம்பெனி முதலாளிகள் அவசர சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர் ! 

மறுநாள்  20-1-1956  அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர் ! 

கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர் ! வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது ! 

இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடிய   அகில இந்திய இன்ரன்சு ழியர் சங்கம் தன்னுடைய 23 வது மாநாட்டை  நாகபுரியில் 20-1-14 முதல் நடத்துகிறது !

நாடு முழுவதுமிருந்து 1700க்கும் மேற்பட்டசார்பாளர்களும்,
பார்வையாளர்களும்  வந்து கொண்டிருக்கிறார்கள் !

"long live A I I E A !!!
 
  அகிலைந்திஉஅ ரேடியோவின் டைரக்டர் கெனரலுக்கு என்ன வென்று சொல்லாமல் 

Thursday, January 16, 2014

"தானம் " நாடகமும் , 

பொள்ளாச்சி கவிஞர் வேலுச்சாமி  அவர்களும்...!! 


த .மு.எ.ச. ஆரம்பித்த 1975 ம் ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் கம்பராயனும் பொள்ளாச்சி கவிஞர்  வேலுச்சாமியும் முக்கியமானவர்கள்!

வேலுச்சாமி கவிஞர் மட்டுமல்ல! சிறு கதைகளும் எழுதியுள்ளார் ! சிறந்த ஓவியர் ! பிரும்மாண்டமான விளம்பரங்களை எழுதுவதை தொழிலாகக் கொண்டவர் ! நாடகங்கள எழுதி ,நடித்து இயக்கியும் உள்ளார் ! 

60 ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் "செம்மலர் "குழு என்ற நாடகக்குழுவையும் நடத்தி வந்தார் !

நிஜாம் ஆட்சியை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சியை விவசாயிகள் நடத்தினர்! ஜமிந்தார்களை விரட்டிவிட்டு நிலங்களை பகிர்ந்து விவசாயிகளுக்கு  அளித்து முன்று ஆண்டு  ஆ ட்சியை நடத்தினர் ! இதனைகண்டு கொள்ள முடியாத ராஜாஜியும், படேலும் நயவஞ்சகமாக இந்திய ராணுவத்தை அனுப்பி அந்த புரட்சியை அழித்து ஒழித்தனர் ! இதற்கு அந்த ஜனனாயககாவலன் நேருவும் உடந்தை!

எதிர் புரட்சி வெற்றியடைந்ததொடு நிறுத்தவில்லை ! அதன் தாக்கம் இந்தியாமுழுமையும் வரக்கூடாது என்பதற்காக பிரச்சாரத்திலும்,அரசியல் நடவடிக்கையிலும் டுபட்டனர் !

அதற்காக ஆரம்பித்த இயக்கம் தான் "பூதான இயக்கம் " !இதன் பிதாமகர்  அந்த பவுனார் ஆசிரமத்துச் சாமியார் ஆசார்ய வினோபா பாவே !

கிராமம் கிராமாக சென்று கிராமத்து பணக்கரர்களிடம் நிலத்தை தானமாக பெற்று அதை நிலமற்ற விவசாயிகளுக்கு அளிப்பது என்பது நோக்கம் ! இதற்கு பத்திரிகைகளும்,அரசும் ஆதரவு அளித்தன ! இந்த பூமி தான இயக்கத்தில்மிக அதிக மான கிரமங்களை -சு மார் 170 கிராமங்களில் தமிழ் நாட்டில்  மட்டும்பெ்ற்றார் கள்!  விவசாயி களின் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு தமிழகம் உதவியதும் ஒரு காரணாம் ! மற்றது  அதன் அருகாமை !
இந்த பிரச்சாரத்தை எதிர்த்து அன்றைய இடது சாரி எழுத்தாளர்களும் கலைஞர்களும் எழுந்தனர் ! கிஷன் சந்தர் "தானம் " என்ற கதையை எழுதினார் 

தமிழகத்தில் வினோபா சுற்றுப்பயணம் செய்கிறார் ! கிராமத்துப் பணக்காரர்களிடம் பூமி தானம் செய்யும் படி கேட்கிறார் ! இளகிய மனம் கொண்ட மிட்டா மிராசுகள்  தங்களிடம்  உள்ள நிலங்களைக் கொடுக்கிறார்கள் ! பயிர் செய்யமுடியாத கட்டாந்தரை,பாறைகள் நிரம்பிய நிலங்கள் ஆகியவை தானமாக வரு கின்றன ! இவை சூது வாது தெரியாத நிலமற்ற விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றன !

மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவன் அந்த நிலத்தினை  திருத்தி பயிர்  செய்கிறான் ! கல்லும் மண்ணும்  பாறைகளும் இருந்த நிலத்தி திருத்த பாடு படுகிறான் ! அதற்காக செலவு பண்ண பணக்காரரிடம் கடன் வாங்குகிறான் ! வட்டிக்கு வட்டியாக கடன் ஏறுகிறது ! கிணறு வெட்டி பாசன வசதியையும் பெறுகிறான் ! அவனால்  வட்டி கொடுக்க முடியவில்லை ! எப்படியும் பயிர் விளைந்தால் சாகுபடி நடந்தால் சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறான் !

பயிர் விளைந்து அறுவடை ஆகும் நேரத்தில் கடன் கொடுத்தவர் வந்து கடனுக்காக நிலத்தை எடுத்துக் கொள்கிறார் ! அவன் கொவணாண்டியாய் கூலி  வேலை செய்கிறான் ! 

முன்று ஆண்டுகள் ஆகிவிட்டது !  கேரளாவில் சுற்றுப்பயனம் முடித்து ஆசார்ய வினோபா பாவே மிண்டும் அதே கிராமத்திற்கு வருகிறார் ! கிராமத்து மந்தையில் கூட்டம் நடக்கிறது ! அந்த அத்தக் கூலியும் ஒரு ஓரத்தில் நிற்கிறான் ! 
"பூதான இயக்கம் வெற்றி பெற்று வருகிறது ! நண்பர்களே நீங்கள் இன்னும் நிலங்களைத் தாருங்கள் "  என்று சாமியார் கேட்கிறார் !

கோவனாண்டியான அவன் சோர்வுடன் சாமியார் அருகில் வருகிறான் !
" உனக்கு தானம் தானே வேண்டும் ! இந்தா எடுத்துக் கொள் !" என்று கூறி
கோவணத்தை அவுழ்த்து சாமியாரின் முகத்தில் எறிகிறான் !!

கிஷன் சந்தர் எழுதிய இந்தக்கதயைத்தான் காலம் சென்ற கவிஞர் வேலுச்சாமி கோவை  மாவட்டம்   முழுவதும்  நா டகமாகப் போட்டார் !

எழுத்தாளர்களுக்கும் ,கலைஞர்களுக்கும் கவிஞர் வேலுச்சாமி மிகச்சிறந்த முனோடி ஆவார் !!! 

    

   


Wednesday, January 15, 2014

புத்தகக் கண்காட்சி, பதிப்பாளர்கள் , எழுத்தாளர்கள் ,...!!!


சென்னையில்ன்  நடை பெரும் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு ஆண்டுக்கு      முன்பு சென்றதுண்டு ! இருந்தும் எழுத்தில்  ஆர்வமுள்ளவன் என்ற முறையிலும் பத்திரிக்கை,பதிப்புத்  தொழில் பற்றிய அனுபவம் உண்டு என்பதாலும் இது பற்றிய செய்திகளை  உன்னிப்பாக  கவனித்து வருகிறேன் !

இந்த ஆண்டு 15 கோடிக்குமெல்வ விற் \பனயை எதிர்பார்க்கிறார்கள் ! சுமார் 200 நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன ! இவை 700 கடைகளைப் பிடித்துக் கொண்டுள்ளன !

இங்குள்ள உணவு வசதி பற்றி பதிவர் ஒருவர் எழுதி இருந்தார் ! " அம்மா" உணவகத்தில் 5/-ரூ சாம்பார் சாதம் போடுகிறார்கள் ! அதைப்போல் போடவேண்டாம் ! நந்தனத்திர்கு வெளியே 30/- ரூ போடுகிறார்கள் ! இவர்கள் தயிர் சாதம் 50 /-ருக்கும் சாம்பார் சாதம் 60/-ருக்கும் போடுகிறார்கள் ! இதிவிட் "பப்பாசி " முதலாளிகள் கையில் துப்பாக்கியையோ,கத்தியையோ வைத்து வரும் பார்வையாளர்களை  மிரட்டிப்பணம் சம்பாதிக்கலாம் !

"பாபாசி"க்காரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கு மேல் மிஞ்சுவதாக ஒரு பேச்சு இருக்கிறது ! அதுஆண்டுக்கு ஆண்டு     
  அதிகமாவதாகத் தெரிகிறது ! இல்லையென்றால் ஆண்டுக்கு ஆண்டு இவ்வளவு விமரிசையாக நடத்த முன் வரமாட்டார்கள் ! சோழியன் குடுமிசும்மா ஆடாது !

பதிப்பகங்களின் அமைப்பு தான் பாபாசி ! பதிப்பகங்கள் என்னென்ன செய்கின்றன என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கவாய்ப்பில்லை !

இவற்றை பதிப்பகங்கள் என்பதை வித "printing industry "என்று கூறுவது பொருந்தும் ! காலண்டர்களையும்,விளம்பரபோஸ்டர்களையும் அச்சடிக்கும் சிவகாசி பிரிண்டிங் பிரஸ் களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை  !

பதிப்பகங்களின் கச்சாப் பொருள் "எழுத்தாளர்கள் "!

இந்த எழுத்தாளர்களை "விலையில்லாப்" பண்டங்களாக மாற்றி வருகிறார்கள் இவர்கள் ! இதில்முதலாளி ,முற்போக்கு, கூட்டுறவு  என்று எந்த பேதமுமில்லை !

எழுத்தாளர்களுக்கு கொடுப்பது இருக்கட்டும் ! அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பதிப்பிக்கும் நிறுவனங்கள் உள்ளன ! அதோடு போனால் பரவாயில்லை ! அதற்கான புத்தகங்கள குறைவாக அச்சிட்டு     ஏமாற்றும்   பதிப்பாளர்கள் உண்டு !

சென்ற ஆண்டு ஒரு பத்திரிக்கை நடத்திய சி்று கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதையை முறைப்படி அனுமதி பெற்று இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்துஸ்தான் பத்திரிகை குழுமத்தின்   இந்தி  இலக்கிய  பத்திரிகயான "காதம்பிணி "அனுப்பினார் ஒரு எழுத்தாளர் !
அவருக்கு சன்மானமாக 1600 /-ரூ அனுப்பியது அந்தப்பத்திரிகை ! 

பஞசாபி நாவலொன்றை இந்தி முலம் தமிழில் மொழி பெயர்த்து சாகித்ய அகாதமிக்கு அதே எழுத்தாளர் அனுப்பியிருந்தார் ! 

சாகித்திய அகாதமி 1000 வார்த்தைக்கு 250/- ரூ சன்மானம்கொடுக்கி றது !
அந்த எழுத்தாளருக்கு கிட்டத்தட்ட  33000/- ரூ சன்மானமாகக் கொடுத்தார்கள் ! அந்த நூல்  புத்தகமாக வருகிறதா இல்லையா என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்ல ! மொழிபெயர்ப்பு அங்கிகரிக்கப்பட்டதும் பணம் பட்டுவாடா ஆகிறது !

இதில் இன்னும் விசேசம் என்ன வென்றால் அரசு சார்ந்த நிறுவனமானாலும் "முக்காத்துட்டு" லஞ்சமாக கேட்கப்படவுமில்லை! கொடுக்கப்படவுமில்லை என்பது தான் !

சாகித்ய அகாதமி அலுவலக வாயிலில்  வயதான எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பு வாய்ப்பிற்காக காத்திருக்கும் அவலத்தையும் பார்க்கலாம் !

தமிழகத்தின் சிறந்த (பிரபலமான அல்ல ) எழுத்தாளர் ஒருவர் ஒரு பதிப்பகத்தை நாடி சிறுகதைத்தொகுப்பை போடும் படி கேட்டுக் கொண்டார் !
சிறு கதை  இப்பொதெல்லம மார்க்கெட்டில் போவதில்லை என்று அந்தபதிப்பகம் நிராகரித்து விட்டது !

கடந்த பத்துப்  பதினைந்து ஆண்டுகளாக சிறுகதையே எழுதாத பிரபலமான (!) எழுத்தாளரின் தொகுப்பை அடுத்த மாதம் அதே பதிப்பகம் வெளியிட்டது ! 

எழுத்தை மட்டும் நம்பி தன வாழ்க்கையை அமைத்து வெற்றிகரமாக வாழ்ந்தவர் எனக்குத் தெரிந்து தோழர் ஜெயகாந்தன் மட்டுமே ! 

"பாப்பாசி"   உறுப்பினராக இருக்கும் பாரதி புத்தகாலயம்,கிழக்கு பதிப்பகம்போனற நி்றுவனங்களைச் சேர்ந்தவர்கள் எழுத்தாளர்களின் நலனையும் கணக்கில்கொண்டு செயலாற்ற பாப்பாசியை வற்புறுத்த வேண்டும் !!!

 
 

 
Sunday, January 12, 2014" உன்னைப் போல் ஒருவன் " 


திரைப்படம் பற்றி .......!!!


"ஒரு புதன் " கிழமை என்று இந்தியில் ஒரு திரை ப்ப்டம் வந்தது ! அதைக் "கசாமுசா " என்று காப்பியடித்து செய்யப்ப்ட்டாதாக சொன்ன படம் கமல ஹாசனின் "உன்னைப் பொல்  ஒருவன் " ! நான் அதைப்பற்றி எழுதவில்லை !


60 களில் ஜே,கே எழுதிய குறுநாவல் ,அவரால் திரைப்பட மாக்கப்பட்டது ! அந்த ஆண்டு சிறந்த பிராந்திய திரைப்படமாக அகில இந்திய அளவில் விருது அளிக்கப்பட்ட படம் அது !


லாகர்னே விழாவிலும் விருது அளிக்கப்பட்டது !


அன்றைய தமிழ்நாட்டு திரைப்பட விசுவாசிகள் அது திரை  அரங்குகளில் ஓடாமல் பார்த்துக் கொண்டார்கள் ! ஏனென்றால் ஜெயகாந்தன் என்ற கம்யுனிஸ்ட் இயக்கிய படம் !


அப்போது நான் மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்! மதுரை எல் .ஐ.சி.ஊழியர்கள் அதன மதுரையில் ஒருகாட்சி,ஒரே ஒரு அரங்கிலாவது திரையிட வேண்டும் என்று முடிவு செய்தனர் !


அவர் களுடைய மன மகிழ மன்றத்தின் மூலம்  திரையிட ஏற்பாடாகி யது ! 

அந்த மன்றத்தின் பொருளாளராக அப்போது நான் இருந்தேன் !


மதுரை சென்றல் தியேட்டரில் திரையிட ஏற்பாடகி  டிக்கெட்டுகளை  விற்றோம் !

தியட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த பொது விற்பனை வரி  இலாகாவிலிருந்து சோதனை செய்ய வந்து விட்டார்கள் !


எங்களைப் பிடிக்காத" திராவிடக் குஞ்சுகள்" மொட்டை எழுதி சதி செய்துள்ளனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டோம் !


அப்போது ரெவின்யு போர்டு மெம்பராக சபா நாயகம் என்பவர் இருந்தார் ! அவருடைய சகோதரர் எல்.ஐ.சி.யில் முக்கிய அதிகாரியாக இருந்தார் !


எங்களுக்கு கேளிக்கை  வரி ,கம்பவுண்டிங்க் வரி என்று கிட்டதட்ட  3000 /-ரூ கட்டச் சொன்னர்கள் ! நாயாய் அலைந்து நடுத்தெருவில் நின்று முறையீடு செய்தபின் அதனை 1190 /- ரூ  யாக  ஆக் கினார்கள் !    


எங்கள் மனமகிழ் மன்ற விரிவாக்கத் திட்டத்திற்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் 1292 /-ரூ லாபம் கிடைக்கும் என்று நம்பினோம் ! மிச்சம் 102 /- ரூ யோடு தப்பினோம் ! 


"உன்னைப் போல் ஒருவன் "மிக அற்புத மான படம் ! 


வாழைப்பழ காமிக்க புகழ் வீரப்பன் அதில் நடித்தார் ! அவர் கம்யூணிஸ் கட்சி உறுப்பினர் எப்பதால் அந்த மகாகலைஞனை ஒதுக்கி வைத்தார்கள் ! 


மற்றொரு நடிகர் பிராபாகரன்  ! குருவி ஜோசிக்காரனாக வந்து சிறப்பாக நடித்தவர் ! 


இந்தப் படத்திற்கு  இசை  அமைத்தவர் வீணை பாலசந்தர் அவர்கள் !


கதா நாயகியாக நடித்தவர் காந்திமதி !ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகை !

வேறொரு பிரபல நகைச்சுவை நடிகையின் ஆதரவாளர்கள் அவரை வளர விடாமல் தடுத்தார்கள் !


அன்று இடது சாரி நடிகர் களுக்கு ஆதரவாக இருந்தவர் காலம் சென்ற S ,V .சஹஸ்ரநாமம் அவர்களும் அவருடைய சேவா ஸ்டெஜும் தான் ! 


இந்த மூன்று  கலைஞர்களும் அந்த குழுவை அடைந்தனர் ! 


சேவா ஸ்டேஜ் குழு நடத்திய "வடிவேல் வாத்தியார் " நாடகத்தில் அந்த மூவரும் நடித்தது இன்னமும் கண்முன்னால்  நிற்கிறது !


இன்று தமிழ் திரை  உலகை மாற்ற இளைஞர்கள் படை ஒன்று வளர்ந்து வருகிறது !


அவர்களின் முன்னோடிகளை அறிமுகப்படுத்தவே இந்த இடுகை !!!

\


Friday, January 10, 2014

விலை உயர்வுக்கு அடித்தளம் போட்டவர் 

வாஜ்பாயும், பா.ஜ.க வும் தான் ............!!!


வாஜ்பாய் தலைமையில் ஆட்சி உருவான பின்னர் தான் விலைவாசி 18% சதமாகி இரட்டை இலக்கத்திற்கு வந்தது !

காய்கறி விலை 110 சதம் உயர்ந்தது !
வெங்காயம் 700 சதம் உயர்ந்தது !

2000 ம் ஆண்டு சமையல் எரிவாயு 146 /-ரூ யாக இருந்தது ! ஒரே ஆண்டில்  இரண்டு முறை விலையை உயர்த்தி 232/-ரூ யாக்கினவர் புண்ணியவான் வாஜ்பாய் தான் ! 

1991ம் ஆண்டு தாராளமயம் வருவதற்கு முன் 3300 பொருட்களுக்கு இறக்குமதி செய்ய தடை இருந்தது !

மதுரையில்கட்சிகளின் ஊர்வலம்னடக்கும்! தொழிற்சங்க ஊர்வலம் ,இடது சாரிகள் ஊர்வலம் நடக்கும் ! நாங்களும் கலந்து கொள்வோம் ! 

வடக்கு மாசிவீதி  முடிந்து கீழ மாசிவீதி திரும்பினால்  எங்களுக்கு "சாமி"
பிடித்துவிடும் !" பதுக்கல்காரர்களைகைது செய் ! பதுக்காதே பதுக்காதே  உணவுப் பொருட்களை பதுகாதே "என்று தொண்டை நரம்புகள் புடைக்க கோஷமிடுவோம் !

( கீழ மாசி வீதியில்தான் பலசரக்கு மொத்தவியாபார கடைகளிருந்தன )

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சட்ட திருத்தம்கொண்டுவந்தார்கள் !  50000 டன் வரை சரக்குகளைகிட்டங்கியில்வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினார்கள் !

விளக்கெண்ணை 40/- ரூ யாக இருந்தது 80/-ரூ ஆயிற்று !
உளுந்து 30/- ரூ 70/- ஆயிற்று !
4/-ரூ  யாக இருந்த வெங்காயம் 60 /-ரூ ஆயிற்று ! 

இறக்குமதிக்கு தடை இருந்தது ! 

1-4-2000  அன்று 714 பொருட்களுக்கான தடையை  நீக்கினார்கள் !
1-4-2001 அன்று 715 பொருட்களுக்கான தடையை நிக்கினார்கள் ! 

ஏப்ரல்  ஒண்ணம் தேதி தான் முட்டாள் கள் (all fools day )
 வாஜ்பாயும், பா.ஜ.க வும் இந்திய மக்களை முட்டாளாக்கிய தினம் !
 
மதத்தைக் காட்டி மக்கள்    ஓற்றுமையை குலைக்க முயற்சிப்பது ஒருபக்கம் !

ஏழை எளிய மக்களின் உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்துவது மறுபக்கம் !
 
வெட்கமில்லாமல் வாக்குக் கேட்டு வருவார்கள் !

வடநாட்டு அரசியல் வாதி ஒருவர் கூறினார் !
"என்னால்தான் அவசரநிலை வந்தது ! என்னை ஜோட்டால் அடியுங்கள் ! இல்லையென்றால் ஓட்டால் அடியுங்கள் !"என்றார் ! அவர் வெற்றி பெற்றார் !

தயவு செய்து பா.ஜ.க.வை ஓட்டால் அடித்துவிடாதீர்கள் !!!!
 

Thursday, January 09, 2014

பெட்றோல் விலை ஏற்றத்திற்கு 

வாஜ்பாயும்,பா.ஜ.க வுமே காரணம் .....!!!
1904 ம் ஆண்டு என்வீட்டிலிருந்து முன்று கிமி தூரத்தில் இருக்கும் பஜார் போக ஷார் ஆட்டோவிற்கு 4/- ரூபாய் கொடுப்பேன் ! இப்போது 15/- ரூ கொடுக்க வேண்டியதுள்ளது ! 

"என்னசார் செய்ய ? பதினைந்து நாளுக்கு ஒருதரம் விலையை ஏத்தறான் ! " என்கிறார் ஆட்டோகரர் !

1989ம் ஆண்டு லிட்டர் 8 /-ரூ இருந்த பெட்ரோல் இன்று 74/- ரூ !

பெட்ரோல் விலையை அரசு தான் நிர்ணயித்து வந்தது ! சர்வதேச சந்தைல கச்சா எண்ணைய பத்தி கவலைபடாமல் விலையை நிர்ணயித்து வந்தது !

எண்ணை கம்பெனிகள் பொதுத்துறையில் இருந்தது ! கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு கொடுத்தாங்க !

பெட்றோல்  பங்குல பைப்ப புடிச்சு பெட்ரோல் ஊத்திகிட்டு இருந்தவர் தான் தீரு பாய் அம்பானி! 

இன்னிக்கி அவரு மகன்களுக்கு சுனாகத்துல 15000 கோடில எண்ணை சுத்தீஅரிப்பு ஆலை   இருக்கு ! 

அம்பானிகள் வாஜ்பாய்க்கு ரொம்ப வேண்டியவர்கள். ! பா.ஜ.க வுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர்கள் ! 
சர்வதேச கச்சா எண்ண விக்கற விலைக்கும் இங்க அரசு நிர்ணயிக்கிற விலைக்கும் வித்தியாசம் அதிகமாயிருக்கு ! அரசு ஏன் நிர்ணயிக்கணும் ! நாங்க எண்ணைக்கம்பேணி ஆளுக சேரந்து விலையை நிர்ணயம் பண்ணீக்கரோம்னு அண்ணன் வாஜ்பாய் கிட்ட சொன்னங்க ! யாரு? அம்பானி போன்ற தனியார் கம்பெனிங்க !

பாவம் ! சின்ன அமபானி ங்க.தாத்தா அம்பானி ஆகியவங்க சோத்துக்கு சங்கடப்படறாங்க ! அப்ப நீங்க உங்களுக்கு கட்டுபடியாகிற் விலைய நீங்களே முடிவு செஞ்சுக்குங்க ! அப்படின்னி வாஜ்பாய் சொன்னாரு ! 

அதுக்கான உத்திரவை பா.ஜ.க  அரசு போட்டது !


இப்ப எண்ணை விலையை அரசு நிர்ணயிக்கலை! இந்த முதலாளிகள்தான் முடிவு செய்யறாங்க ! 

இத வாஜ்பாய்தான் செய்தாரு !

திருடன் ஓடும்போது "திருடன்-திருடன் ' நு கத்திக்கிட்டே போவானாம் !

பா.ஜ.க வும் பெற்றோல் விலையைகுறை ன்னுகூட்டத்தோட கூட்டமா கத்துது 
 
இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் ! 

காரைக்குடி ராஜா வுக்கு தெரியும் !

ஊசிப்போன கணேசனுக்கு தெரியும் !

வாயைத் திறக்கமாட்டங்க !

பொருளாதார மேதை ஆடிட்டர் குருமூர்த்தியாவது வாயை தீறக்காரா பாப்பம்? 


Tuesday, January 07, 2014

"குதா ஹஃபிஸ் "

(ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் )

("குதா ஹஃ பிஸ் " என்பது உருது ,அரேபிய, ஆஃப்கானிய ,மொழியில் பேசப்படும்வர்த்தை . ஒருவர் விடை பெறும்போது "ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் " என்று கூறு வார்கள் இந்தியாவில்,ஹைதிராபாத்,லக்னௌ ,டெல்லி, கான்பூர் ,ஆக்ரா,ஆகிய நகரங்களில் சகஜமாக மத வித்தியாசமின்றி பரஸ்பரம் கூறிக்கொள்ளுவர்கள் )


(80-90 ஆண்டுகளில் தொலைக்காட்சியில் குல்ஜார் ஒரு தொடர் நிகழ்ச்சியை இயக்கி ஒளி பரப்பினார் ! "கிர்தார்"  தொடர் வாரம்   ஒரு சிறுகதையைக்  கொண்டதாக இருக்கும் ! அதில் ஒன்று தான் "குதா ஹ ஃ பிஸ் " என்பதாகும் ! சொமரேந்திர பாசு என்ற எழுத்தாளர் எழுதியது !25 ஐந்து நிமிடம்  நடக்கும் அந்த சிரியலில் இரண்டே இரண்டு நடிகர்கள் தான் நடிப்பார்கள் ! ஒருவர் ஓம் பூரி ! மற்றொருவர் இர்ஃபான் கான் ! நெஞ்சத்தை கிழித்து ரத்தம் வரும் நடிப்பு ! பார்க்காதவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகச்சிறந்ததை இழந்தவர்கள் ஆவார்கள் !)

அது ஒரு சிறு நகரம் ! மதக்கலவரத்தால் ஊரடங்கு  உத்திரவுநடைமுறையில் இருக்கிறது ! திடேரென்று பஸ்  போக்குவரத்தும் ஒடி நிறுத்தப்பட்டு விட்டது ! ஒரு இளைஞன் தெருவில் மாட்டிக் கொள்கிறான் ! துப்பாக்கி ஏந்திய வீரார்கள் அவனை விரட்டுகிறார்கள் ! ஓடிவரும் இளைஞன் ஒரு குப்பத்தொட்டியின் பின்னல் ஒளிந்து கொள்கிறான் ! வீரர்கள்  போய் விடுகிறார்கள் ! செய்வதறியாது திகைக்கிறான் இளைஞன் !
" யார் நீ ?" மெல்லிய குரல்கேட்கிறது ! திடுக்கிட்ட இளைஞன் "நீ யார் ?" என்று கேட்கிறான் !
"நீ இந்துவா ? முசல்மானா ?" 
இளைஞன் பதில் சொல்ல வில்லை !
"உன் பெயரென்ன ?"
"குலாப் "
"குலாப் முகமதா ?"
காவல் வண்டி வரும் விசில் சத்தம் கேட்கிறது !இளைஞன் குப்பைத்தொட்டிக்குள் பாய்ந்து ஒளிகிறான் ! அங்கெ ஏற்கனவே ஒருவன் -முஸ்லிம் - இருக்கிறான் ! 

உயிர் பயத்தில் இருவரும் முச்சு காற்று படும் அளவுக்கு நெருக்கமாக கட்டிப்பிடித்து ஒளிந்து கொண்டு  இருக்கிறார்கள் ! இருவருமாக தப்பிக்க  முயற்ச்சிக்கிறார்கள்!

முஸ்லீமுக்கு அவசரம் ! விடிந்தால் ஈத்! நகரத்தில் வாங்கிய துணிமணிகளை குழ்ந்தகளுக்குகொடுக்க வேண்டும் ! இளைஞன் அவனை த்தடுக்கிறான் ! ஆபத்து ! காவல்காரர்கள் சுட்டு கொன்றுவிடும் ஆபத்துஉள்ளதுஎன்றுஎச்சரிக்கிறான் !   இருவரும் தப்பி ஒரு பாழடைந்த மாண்டபத்தின் இடிந்த சுவரருகில் ஒளிந்து கொள்கிறார்கள் ! முஸ்லீம்பீடிபத்த வைக்கிறான் ! வ்யர்வையில் நனைந்த அவனால் முடியவில்லை ! இளைஞன் அவனுக்கு உதவுகிறான் ! மண்டபத்தை தாண்டினால் ஒரு தோட்டம், அதற்கு அப்பால் சாலை ! அங்கிருந்து கிராமத்திற்கு சென்றுவிடுவேன் என்கிறான் !" நான் சென்று பார்க்கிறேன் ஆபத்தில்ல என்றால் போ "என்கிறான் இளைஞன் ! 

தெருக்கோடியில் காவலர்கள் இரண்டு நாற்காலிகளில்தான் உட்கார்ந்து இருப்பார்கள் ! அவர்கள் எழுந்து அடுத்த தெருவுக்குப் போயிருப்பார்கள் என்பதால் காலியாக இருக்கிறது ! இளைஞன் முஸ்லிமை ஒடி விடும்படி சொல்கிறான் ! 

இளைஞனை அணைத்துக்கொண்டு "குதா  ஹஃபிஸ் " என்று கூறிவிட்டு ஓடிவிடுகிறான் !

கனத்த இதயத்தோடு இளைஞன் காத்திருக்கிறான் !

"ருக்கோ- ருக்கோ  " கௌன் ஹை " என்று காவலர்கள் கத்தும் சத்தம் கேட்கிறது ! 

பின்னர் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது !

இளைஞன் அழுகிறான் ! சத்தம் வந்தால் தன உயிர் போய்விடுமே !அதனால் வாயப்பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுகிறான் ! 

முஸ்லீமாக ஓம் புரி நடிக்கிறார் ! இந்து இளைஞனாக இர் ஃபான் கான்  நடிக்கிறார் ! 


( gulzar.kirdaar.kudha haphis  என்று யு டியுபில் தயவு செய்து பாருங்கள் நண்பர்களே ) 

(மதுரை பிப்பிள்ஸ் த்யெட்டர்ஸ் தோழர்கள் கலை  இரவு ஒன்றில் குட்டி நாடகமாக போட்டார்கள் )Sunday, January 05, 2014

"எங்கே அவர்கள் " நாடகமும் ,

வேல . ராமமூர்த்தியும் ...........!!!


சுமார் முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரை மாவட்டம் நாடகப்பட்டறை ஒன்றை திருப்பரங்குன்றத்தில் நடத்தியது !வங்கி ,இன்சூரன்சு ,மத்திய மாநில அரசுகள்,தனியார் நிறுவனங்கள் என்று மாநிலம் முழுவதும் இருந்து ஊழியர்கள் வந்திருந்தனர் !
 பட்டறையை நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்ட குழுவில் நானும் ஒருவன் !மூன்று  நாள் பட்டறை ! குழுக்கள் பிரிக்கப்பட்டது 1 அவர்களுக்குள்ளேயே விவாதித்து .கதை தேர்ந்த்தெடுத்து ,எழுதி,நாடகம் தாயாரிக்க வேண்டும்!

என்னுடைய குழுவில் தபால்தந்தி இலாகாவில் பணியாற்றும் ராமமுர்த்தி இருந்தார் ! குழு உறுப்பினர்கள் கதைகளைச்சொன்னார்கள்! என்பங்கிர்க்கு   நானும் சொன்னேன் ! அதனை நாடகமாக உருவாக்க முடிவாகியது !

திரைப்பட நடிகர் மனோஜ் குமார் அப்போது தூர்தர்ஷனில் சுதந்தி போராட்டகால நிகழ்ச்சிகளை தொடர் நிகழ்ச்சியாக  நடத்தி வந்தார் ! ஒவ்வொரு நாளும் ஒரு கதை !அந்தக் கதைகளில் ஒன்றைத்தான் சொன்னேன் !
குஜராத்தில் உள்ள அகமாதாபாத்தான் களம் ! மில் தொழிலாளிகள் அதிகம் உள்ள  நகரம் ! சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்  ! போராட்டக்காரர்கள் ரகசியமாக சில பணிகளைச் செய்து கொண்டு 
இருந்தனர் ! ரமாகாந்த் தலைவர் ! போலீஸ் மோப்பம் பிடித்து விட்டது ! போலீஸ் வளையத்திளிருந்து அவரை தொழிலாளி ஒருவன் தப்பிக்க வைக்கிறான் ! அவரை கடற்கரை பகுதிக்கு அனுப்பிவிடுகிறான் ! இஸ்லாமிய மீனவர்கள் நிரம்பிய கிராமம் ! சுதந்திர போராட்டத்திலீடுபாடு கோண்ட முஸ்லிம் மீனவர் வீட்டில் அவர் தங்க  ஏற்பாடாகியுள்ளது !

போலிஸ் மோப்பம் பிடித்து விடுகிறது ! வீடு வீடாக கிராமத்தை சொதானை செய்கிறது ! முஸ்லீம் மீனவர் தன மனைவியிடம் அவரை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்கிறார் ! அவரை பின் வாசல் வழியாக படகுத்துறைக்கு அனுப்பி விட்டு முன் கதை சாத்தி வைக்கிற்றர் ! போலிஸ் அவர்கள் தெருவுக்கு வரும் அரவம் கேட்கிறது ! கணவனும் மனைவியும் அடித்தாலும்,கொன்றாலும் எதையும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்கிறார்கள் !அப்போது தான் அந்ததாய்க்கு ஐந்து வயது மகள்  நினைவு வருகிறது ! குழந்தை  அவள்! பயந்து சொல்லிவிட்டால் !

அவர்கள் வீட்டில் பெரிய மரப் பெட்டி உள்ளது ! பாத்திரம் பண்ண்டங்களை வைக்க உதவும் !அதற்குள் சிறுமியை உட்காரச் சொல்லி மூடிவிடுகிறார்கள் ! சந்தேகம் வரமலிருக்க மேலே ஒரு சாக்கு மூட்டையையும் வைத்த விடுகிறார்கள் !

போலீசாரை சமாளித்து விடுகிறார்கள் ! மீனவர் தலைவர  ரமாகாந்தை   படகுத்துறையிலிருந்து அழைத்து வருகிறார் ! அவர் தன ஜோல்னா 
பையிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து" இந்தா இஸ்மாயில் ! உன் மகள் சாயிராவிடன் ம் கோடு "என் கிறார் !

நினவு தட்டிய கணவனும்மனைவியும் அவசர அவசரமாக மரப் பெட்டியை திறக்கிறார்கள். அதற்குள் சைரா தூங்கிக் கொண்டிருக்கிறாள் நிரந்தரமாக மூச்சுத்திணறி !

ரமாகாந்த்!  ,இஸ்மாயில் !சாயிரா !

எங்கே அவ்ர்கள் ?

என்ற கேள்வியோடு முடிகிறது !

இதனை நாடகமாக எழுதி இயக்கம் பொறுப்பு ராமமூர்த்திக்கு கொடுக்கப் 
படுகிறது !
 
இரவோடு இரவாக நாடகம் எழுதப்பட்டது ! மறுநாள் நாடகத்தை இயக்கும் பொறுப்பும் அவரூக்குத்தான் ! இதில் இஸ்மாயிலாக பழநியைச்ச்செர்ந்த
சோ.முத்து மாணிக்கம் நடித்தார் !

பட்டறையில் வந்த மிகச்சிறந்த நாடகமாக ராமமூர்த்தி இயக்கிய" எங்கே அவர்கள் "நாடகம் சிறப்பிக்கப் பட்டது ! 

ராமமூர்த்தான்  பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளரான வேல.ராமமூர்த்தி ஆனார் !

"மதயானை கூட்டம் " என்ற திரைப்படத்தின் மூலம் பத்திரிகைகள் பாராட்டும் நடிகரானார் !

அவருக்கு என் பாராட்டுகள் !!! 

 


 
போலீசாரை சம்மளித்து அனுப்பிவிடுகிறார்கள் !