திரிபுரா தேர்தலும்
"தீக்கதிர்" நாராயணன் அவர்களும்...!
திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி 60 இடங்களில் 52 இடங்களைப் பெற்று வெற்றி யடைந்துள்ளது !
மாணிக் சர்க்கார் அவர்களை நேரடியாக தெரியாது ! அவரின் வெற்றிச்செய்திக்காக லட்சக்கணக்கான தோழர்கள் காத்திருக்கிறார்கள் ! அவர்களில் முக்கியமானவர் ஒருவருக்கு தொலை பேசிமூலம் வாழ்த்த விரும்பினேன் !
"ஹலோ ! "
"ஜி! மாணிக் சர்க்கார் வெற்றி ! வாழ்த்துக்கள் "என்றார் தோழர் "தீக்கதிர்" நாராயணன் !மதுரை "தைகால் " தெருவில் சின்னஞ்சிறு வீட்டிலிருந்து பேசினார்!
என் நினைவு 1970ம் ஆண்டை நோக்கி ஓடியது !
மாணவர் இயக்கத்தை புதிப்பித்து செயல் படுத்த முடிவாகியது ! அப்போது தியாகராசர் கல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் நாராயணன்!பரம்பரையான கம்யூனிஸ்டு குடும்பம்! அகில இந்திய அளவில் மாணவர்களை திரட்டி ஒரூ அமைப்பை உருவாக்க முடிவுசெய்யப்பட்டது !
இந்தியா பூராவிலுமிருந்து 40 மாணவர்களை அழைத்து பூர்வாங்கமாக பேச கல்கத்தா வந்தனர் ! அதில் நாராயணனும் ஒருவர் ! இது மே மாதம் நடந்தது 1
14 பேர் கொண்ட அமைப்புக்குழு உருவானது!
பிமன் பாசு, ஸ்யாமள் நந்தி ,சுபாஷ் சக்ரவர்த்தி ,மற்று ம் ஒருவர் மே.வங்கத்திலிருந்து ! தமிழ் நாட்டிலிருந்து தோழர் நாராயணன்! திரிபுராவிளிருந்து தோழர் மாணிக் சர்க்கார் ஆந்திரா, உ.பி, என்று அமைப்புக்குழு உருவானது ! இது 1970ம் ஆண்டு ஜூலை மாதம்!
நாராயணன் சொல்கிறார் "மாணிக் சர்கார் ஒல்லியான உருவம்!கிட்டத்தட்ட நிருபன் சக்ரவர்த்தி மாதிரியான உருவமும் சுபாவமும் உண்டு ! 5 நாள் கூட்டம்! தினம் மாலை நானும் மாணிக் பாபுவும் கல்கத்தா கடை வீதிகளில் ஒரு கைலியை சுற்றிக்கொண்டு நடப்போம் ! அவர் வேற்றிலை போடுவார் ! நான் சிகரெட்டு கூட குடிக்க மாட்டேன்! அவர் நிறைய படிப்பார்! தத்துவார்த்த விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுப்பார்! மக்களொடு தொடர்பு கொள்வ வது பற்றி போதிப்பார்! "
இந்திய மாணவர் சங்கம் 1970 டிசம்பரில் திருவனந்தபுரத்தில்தாகூர் நுற்றாண்டு மண்டபத்தில் உதயமாகியது !அகில இந்திய துணைத்தலைவராக மாணிக் பாபு தேர்ந்தேடுக்கப்பாட்டார் !
தமிழ்நாட்டிலிருந்து ஒருவரை துணைதலைவராக்க விரும்பினார்கள் ! அப்போது தலைவர் தோழர் எ.பாலசுப்பிரமணியம் என்னை தீக்கதிருக்கு மு
ழு நேர ஊழியர் வேண்டும் ! நீ அகில இந்தியாவுக்குபோகவேண்டாம்! என்றார்
தமிழ்நாட்டிலிருந்து தோழர். என்.ராம் அவர்களை இந்திய மாணவர் இயக்கத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் ! ,
தொலைக்காட்சியில் தலைவர்கள் திரிபுரா வெற்றி பற்றி பேசினார்கள்! தோழர் பிருந்தாகாரத் அவர்களிடம் "மாணிக் சர்காரின் எளிமைஇந்த வெற்றி க்கு காரணம் தானே! ?" என்று நிருபர் கேட்டார் !
"மணிக் பாபுவிடம் இதனை கேட்காதீர்கள்! அவர் நிரம்ப சங்கடப்படுவார் ! கட்சியும் அதன் கூட்டுத்தலைமையும் தான் இந்த வெற்றிக்கு கரணம் என்று நினைப்பவர் அவர் !"என்றார் பிருந்தா!