Tuesday, October 15, 2019

(அவர் நினைவில் )ப.ரத்தினம் எழுதிய ,

சிறந்த நாடகம், 


"ஒரு கல் கனி கிறது " ...!!!
1977ம் ஆண்டு வாக்கில் தேசிய நாடக பள்ளி காந்திகிராம பல்கலையில் நாடக பயிற்சி முகாமை நடத்தியது. தமுஎச விலிருந்து  பரத்தினம் அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

ஜெயந்தன்,அன்றைய மாணவர் மு.ராமசாமி,வேசங்கரன் ,என்ற ஞனி ,கலைஇயக்குனர் கிருஷ்ண  மூர்த்தி என்று பலர் கலந்து கொண்டனர்.

ஆத்யம் ரங்காச்சாரி, சிவராம கரந்த்  , பிரசன்னா, பி.வி கரந்த்,பிரேமா கர ந்த ஆகியோர் வகுப்பு எடுத்தனர்.பேராசிரியர் ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் நடத்தினர்.

ஸ்தானிஸ்லாஸ்க்கி யிலிருந்து,டென்னஸி வில்லியம் வரை, உத் பல்தத்,பதால்  சர்க்கார், பாசி, விஜய் டெண்டுல்கர் என்று நாடக ஆளுமையாக்களின் பரிசியம்முதன் முதலாக கிடைத்தது.

 குழந்தையின் ஆச்சிரியத்தோடு   ரத்தினம் அவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

டெண்டுல்கரில் ஒப்பற்றநாடகம் "சகாராம் பைண்டர் ." மரத்தியநாடகத்தி ன் உச்சம் அந்த நாடகம்.

சகாராம் ஒரு லும்பன். சகல கேட்ட பழக்கங்களும் உள்ளவன்.நகரத்தின் கேடுகெட்ட ரவுடி. அவன்வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம் அவனை புரட்டிப்போடுகிறது. மிகசிறந்த மனிதனாக அவனை மாற்றுகிறது. இதுதான் நாடகம்.

பிரத்தினம் மனதை பாதித்தஇந்தநாடகத்தை "ஒரு கல் கனிகிறது "என்ற அற்புதமான நாடகமாக எழுதினர்.

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் அரங்கேற்றினார்கள். 

எல்.ஐ.சி  ஊழியரான நீல கண்ட ஜோஷி இதனை இயக்கினார்.

இந்த குழு அரங்கேற்றிய முக்கியமான நாடகங்களில் இதுவும் ஒன்றாகும்.

 Monday, October 14, 2019

என் முன்னோடி 

ப.ரத்தினம் 

மறைந்தார் ...!அஞ்சலிகள் !!!1962ம் ஆண்டு வாக்கில் "தாமரை " இதழில் என் முதல்சிறுகதை வெளிவந்ததிலிருந்து  ரத்தினம் அவர்கள் பரிச்சியம். கட்சி ஒன்றாயிருந்த காலம்.

நவபாரதி ,முப்பால் மணி , காஸ்யபன், ப.இரத்தினம் என்று  ஒரு ஜமா சேர்ந்திருப்போம். கலை ,இலக்கிய பெறு மன்றம் தான் எங்கள் புகலிடம்.

காலம் மாறியது. 1969ம் ஆண்டு செம்மலர் பத்திரிகையை கு.சின்னப்ப பாரதி ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக உள்ள ஆசிரியர் குழுவில் என்னை சேர்த்துவிட்டார் தோழர் ப.ரத்தினம்.

நெருக்கம் அதிகமானது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டிற்காக அவர் எழுதிய நாடகம் "நெஞ்சில் ஒரு கனல் "பீப்பிள்ஸ் தியேட்டரின் சார்பாக அரங்கேற்றப்பட்டது. வையை செழியன் என்ற பெயரில் எழுதி இருந்தார்.  இயக்கியவர் காஸ்யபன், 

செம்மலரில் ப.ரத்தினம்  என்ற பெயரில் எழுதிவந்தார். சில சமயங்களில் மதிச்சியம் கணேசன் என்ற பெயரிலும் எழுதி  உள்ளார். 

1974ம் ஆண்டு செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் மதுரை பெரியார்  நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் சந்தித்தோம்.தமிழகம் பூராவிலும் இருந்து வந்திருந்தவர்கள் 16 பேர்.

நமக்கு என்று ஒரு எழுத்தாளர்சங்கம் ஆரம்பிக்க முடிவாகியது. 1975ம் ஆண்டு சங்கம் உதயமாகியது. மதுர மாவட்ட செயலாளராக ரத்தினம் அவர்கள்பணியாற்றினார்கள். என்னையும்மாவட்ட செயலாளராக ஆக்  கி  அழகு பார்த்தார்கள்.

அப்போது மார்க்சிஸ்க்காட்ச்சியின் மாநிலக்குழு மதுரையில்செயல்பட்டு வந்தது. கடசியின் முது கெலும்பாக பணியாற்றினார். தன்னை எப்போதுமே முன் நிறுத்திக்கொள்ளாத மனம் கொண்டவர்.இளைஞர்களை  ஆதரித்தது செயல்படுவார்.

அற்புதமான அந்த தோழரின் மறைவு கட்சிக்கும்   தனிப்பட்டமுறையில் எனக்கும்  பெரும் இழப்பாகும். 

அவருக்கு என் அஞ்சலிகள்!!!