Tuesday, April 24, 2012

பதிவுலக நண்பர்களே! (25-4-12) இன்ரு சென்னை செல்கிறேன்.திருச்சி,தென்காசி,நெல்லை என்று சுற்றிவிட்டு 21-5-12 தீரும்புகிறேன்.(தகவலுக்காக) ---காஸ்யபன்.

Wednesday, April 18, 2012

"கிருஷ்ணா டாவின்ஸி "என்ற "பவர்ஃபுல்" எழுத்தாளரைப் பறிகோடுத்துவிட்டோமே.....

கிருஷ்ணா டவின்சி என்ற பவர்ஃபுல் எழுத்தாளரை பறிகொடுத்துவிட்டோமே..........

விகடன் 18-4-12 இதழில் வெளிவந்த "காலா...அருகே வாடா" என்ற கதையைப் படித்தேன். என்ன பவர்ஃபுல் எழுத்து என்று வியந்து போனேன். கிருஷ்ணா டாவின்சி எழுத்துக்களை விடாமல் படி.த்து வருபவன் நான். பிறகு தான் தலைப்பு பக்கத்தில் ஆசிரியர் குறிப்பில் அவர் மறைந்த செய்தியை கண்டு அதிர்ச்சி யடைந்தேன்.

கிருஷ்ணாவைத்தெரிந்தவர்கள் அவர் எழுத்தின் மூலம் அவரைப் புரிந்து கொண்டவர்கள் ,என் போன்றவர்களின் சோகம் தாங்கமுடியாதது.எந்த அளவுக்கு அவர் விஷய ஞானமூள்ளவர் என்பதற்கு ஒரே ஓரு உதாரணம் "விஜய் டிவி "யில் வரும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய பங்கு பற்றி நான் கேள்விப்பட்டதை குறிப்பிட்டாலே போதும். அந்தநிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அதனை நடத்தவிருக்கும் நடிகர் சூர்யாவிற்கு பயிற்சி அளிக்க விரும்பினார். சரியான நபராக கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்தார். "ஹாட் சீட்டில் "கிருஷ்ணா "அமர சூர்யா ஒரு பாடலை ஒலிபரப்ப அது எந்த படம் என்பதை சோல்லவேண்டும்.பாடல் ஒலித்ததும்" சாய்ஸ்" வேண்டாம் அது "நீழல்கள்" படத்தில் வரும் பாடல் என்றார் கிருஷ்ணா. "மடைதிறந்து பாடும் நதி அலை நான்" என்று வாலி எழுதிய படல் தான் ஒலித்தது..

"டாவின்ஸி" உலகப் புகழ் பெற்ற ஓவியர் மட்டுமல்ல.கணிதமேதை.பொறியியல் மேதை. "பழைய ஏற்பாட்டை" முழுமையாகபுரிந்து கொண்ட மேதை. அதனால் தான் நானும் அந்தப் பெயரை என் பெயரோடு "டாவின்ஸியை" செர்த்துக்கொண்டேன்." என்று தன் பெயருக்குவிளக்கமளித்தவர் கீருஷ்ணா.

திரப்படத்துறையினரோடு மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.இயக்குனர்கள் ராம், லிங்குசாமி ஆகியொர் அவருக்கு வேண்டியவர்கள். குமுதம் பத்திரிகையிலிருந்த போது "அரசு" பதிலகளை எழுதியவர்.

தபால்துறைதொழிற்சங்கதலைவர் தோழர் பஞ்சாபகேசனுக்கு உறவினர்.மார்க்ஸீய சிந்தனை வசப்பட்டவர்.

விகடனில்வந்த அவருடைய கதையின் நாயகன் பெயர் முருகேசன். அது அவர்தான் என்பதை நீனைக்கும் போது தொண்டைஅடைக்க இதயம் விம்முகிறது.'

Wednesday, April 11, 2012

முத்துகிருஷ்ணன் என்ற நெல்லை செல்வன்....

முத்து கிருக்ஷ்னன் என்ற நெல்லைச்செல்வன்....

1962ம் ஆண்டுவாக்கில் மதுரையில் பொது நிகழ்ச்சி "அழகப்பன் ஹாலி"ல் தான் நடக்கும். மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு சொந்தமானகட்டிடம், மெற்கு வெளிவீதியும் வடக்கு வெளிவீதியும் சந்திக்கும் குட்ஷெட்டுக்கு எதிர்த்த கட்டிடம் தன் "அழகப்பன் ஹால்".

கலை இலக்கிய பெருமன்றத்தின் நடவடிக்கைகளில் தயங்கியபடியே பங்கெடுத்து வந்தோம். அதெசமயம் "வாசகர் வட்டம்" என்ற அமைப்பும் இருந்தது.குன்றக்குடி அடிகளார் அறக்கட்டளை,தீபம் நா.பா அறக்கட்டளை என்று நிகழ்ச்சிகள் நடக்கும். பெராசிரியர்.எஸ்,ராமகிருஷ்ணன், கனக சபாபதி,தி .க.சி,க.நா.சு, என்று கருத்தரங்கங்கள் நடக்கும்.அந்த ஆண்டு நாவல் போட்டி நடந்தது. வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யப்படும். அபோது, சுந்தர ராமசாமியின் "புளியமரத்தின் கதை "போட்டியிலிருந்தது. நான் மதிய நேரத்தில் "சு.ரா" வுக்கு வாக்களிக பிரச்சாரம் செய்தேன்.மற்றொரு இளைஞரும் பிரச்சாரம் செய்தர்.அவர்தான் முத்து கிருஷ்ணன்.செக்கச்சிவந்த மெனி.கட்டுக்குட்டான உடல்வாகு. சொடா பாட்டில் கண்ணாடி. வெத்திலை போட்டு சிவந்த வாய்.அப்போது அவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் டியூடர் ஆகவும் விடுதிகாப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

மிகச்சிறந்த பேச்சாளர்.கடுமையான தத்துவார்த்த விஷயங்களைகூட எளிமையாக சொல்லும் ஆற்றல் படைத்தவர்.நெருக்கமான நண்பர்கள் ஆனோம் .நெல்லையைச்சேர்ந்த அவர் நெல்லை செல்வன் என்ற பெயரில் எழுதிவருகிறார். நெல்லை மாவட்டத்தில் பின்னளில் ஜனநாயக மாதர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல்மாவட்டத்தலைவராக செயல் பட்டவர் அவருடைய தாயர் கிருஷ்ணம்மாள் அவர்கள்.

டவுண் ஹால் ரோடில் இருந்த "பாரதி புக் ஹவுஸ்" தான் எங்கள் சந்திப்புக்கான இடம்.நிறைய பேசுவோம் .தத்துவார்த்த விஷ்யங்களை எளிமையாய் எழுத வேண்டும் என்பார்.பிரபஞ்சத்தில் எற்பட்ட மாற்றங்களையும் பூமி உருவானதையும் எழுத ஆரம்பித்தார்.

"விண்ணும் மண்ணும்" என்ற அவருடைய தொடர் "செம்மலரி"ல் வந்தது. மிகப்பெர்ய வரவேற்பும் அறிவு ஜீவிகளின் பாராட்டையும் பெற்றது..அது முடிந்ததும் "மண்ணூம் மனிதர்களும்" என்ற தொடர எழுதினார்..

சேலத்தில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சென்றார். திருமணமாகி அங்கேயே குடும்பத்தோடு வாழ்ந்தார்.

உடல் நலம் பாதிக்கப்ப்ட்டது. புற்று நோய் என்றார்கள். காப்பாற்ற முடியவில்லை.

இளம் வயதில் ஒரு அற்புதமான அறிவு ஜீவியை இழந்தோம்.

ஒரு முறை நெல்லை யிலிருந்து மதுரைக்கு அ.சவுந்தர் ராசன் அவர்களொடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது..நெ ல்லை செல்வனின் மைத்துனர் அவர்".விண்ணூம் மண்ணூம்" நூலையும் "மண்ணூம் மனிதர்களும்" நூலையும் பதிப்பிகலாமே என்று கூறினேன்.

Friday, April 06, 2012

மின் சார இலாகாவும் மின்சார வாரியமும்.......

மின்சார இலாகாவும் , மின்சார வாரியமும்..........
.
1954-55 ம் ஆண்டு மெட்றாஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷ்ன் பரீட்சை எழுதி மின்சார இலாகாவில் வேலையில் சேர்ந்தேன். மெட்டுர் லொயர் காம்பில் அலுவலகம். எஃப் எம்.ஃப்ரேசர் என்ற ஆங்கிலெயர் தான் சூப்பிரண்டு இஞ்சினீயர். அடிபடைச்சம்பளம். 45/ரூ. பஞ்சப்படி 22/ரூ. அதில் ரெவின்யூ ஸ்டாம்பிக்காக ஒரு அணா பிடித்துக்கொண்டு 66/ரூ 15 அணா கையில்வரும்.

லோயர் காம்பில் இரண்டே ஹோட்டல்கள் தான்.ஒன்று கிருஷ்ணா கபே.மற்றொன்று திருவல்லிக்கேணி லாட்ஜ். மதியம் சாப்பாடு 8அணா.மாதச்சாப்பாடு என்றால் 12/ரூ 8அணா.அதுவே எடுப்பு சாப்பாடு என்றால் 13/ரூ.நானும் என்நண்பர் பிரணதார்த்தி ஹரணும் எடுப்பு சாப்பாடுதான்.6/ ரூ8அணாவில் மதியச்சாப்பாடு 30 நாளுக்கும் முடிந்துவிடும்.

ஒரு அணாவுக்கு நான்கு இட்லி. அல்லது இரண்டு இட்லி ஒருவடை காபி சாப்பிடலாம். சாதா தோசை அரையணா. வெண்ணை ஊத்தப்பம் முக்கால் அணா.(ஒரு அணா என்பது இன்றய கணக்கிற்கு 6பைசா.) என் சம்பளத்தில் மாதம் 20/ரூ வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்.

மெட்றாஸ் மாகாணத்தில் மின் உற்பத்திக்காக மெட்டுர் சிஸ்டம்,பாபநாசம் சிஸ்டம் என்று இருந்தது. பாபநாசம்சிஸ்டம் மதுரையில் இருந்தது. இது தவிர பைகாரா, எண்ணூர் இருந்தன. ஈரோட்டில் விநியோகப்பிரிவு இருந்தது. பாவநாசத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக தனி கம்பெனிகள் இருந்தன. திருநெல்வேலி-தூத்துக்குடி எலக்டிரிக் சப்ளை கார்ப்பரெஷன் என்ற கம்பெனி ஈனக்கிரயத்திற்கு வாங்கி லாபத்திற்கு விநியோகிக்கும். புதுக்கோட்டை,வடஆற்காடு,தென் ஆற்காடு என்று கம்பெனிகள் இருந்தன . டாடாவுக்குச்சொந்தமானவை.

காமராஜர்தான் முதலமைச்சர். பி.ராமமூர்த்தி, போன்றோர் எதிர்க்கட்சி வரிசையில்".தனியார்முக்காதுட்டு போடாமல் லாபம் சம்பாதிக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கோடியில் அணைகட்டுவது அரசாங்கம். பலனை அனுபவிப்பது தனியார்" இதன மாற்றவேண்டும் என்று அவர்கள்கோஷம்வைத்தார்கள்."ஜனநாயகம் என்பதுபெரும்பான்மையின் ஆட்சி. அதேசமயம் சிறுபான்மை கருத்து பொதுநன்மை பயக்கும் என்றால் அதனையும் அரவணத்து செல்லவதும் ஜனநாயகத்தின் பண்பில் ஒன்று" என்று அன்றய தலைவர்கள் கருதினார்கள். காமராஜர் முடுக்கிவிட்டார். திட்டங்கள் வகுக்கப்பட்டன.

தனியார் வசமிருந்த விநியோக உரிமை பறிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் நிர் வகிக்க தனி வாரியம்" மின்சார வாரியம்" அமைக்கப்பட்டது.

மின் வாரியத்தின் முதல் தலைவராக எஸ்.கே .செட்டுர் என்ற இஞ்சினியர் வந்தார்.