Wednesday, August 29, 2018








வலைத்தளமும் ,

எகிப்திய எழுச்சியும்....!!!

2011 ஆண்டு. ஹாசினி முபாரக் எகிப்து  நாட்டின் அதிபராக இரு ந்தார். சுமார் முப்பது ஆண்டுகளாக இருக்கிறார் . மக்களிடையே அதிருப்தி. லஞ்சம்  ஊழல்  என்று குற்ற சாட்டு .

கெய்ரோவிலும்அலெக்ஸ்சாண்ட்ரியாவிலும்ஆர்ப்பாட்டங்கள்.மெள்ளமெள்ளநாடுமுழுவதும் பரவுகிறது.

மாணவர்கள் இளைஞர்கள் அரசு ஊழியர்கள்< குடும்ப பெண்கள், ஆசிரியர்களை என்று மக்கள்வெள்ளம் உற்சாகமாக இந்த போராட்டத்தில்பங்கெடுக்கின்றனர்.

முபாரக் திணறுகிறார். ராணுவத்தின் முலம்  அடக்கநினைக்கிறார் .200 க்கும் மேற்பட்டவர் இறந்தனர். போராட்டம் ஓயவில்லை . போராட்டத்திற்கு மோர்சி என்பவர் தலைமை தாங்குகிறார். முபரகவேறு வழியில்லாமல் பதவி விள்குகிறாரா. மோர்சி அதிபர் ஆகிறார்.

islamic brotherhood என்ற இயக்கத்தை சேர்ந்தவர் மோர்சி> சவுதி அரேபிய போல் எகிப்தையும் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக அறிவிக்க அமெரிக்காவும், பிரிட்டனும் செய்த சதியின் பயன் அது> ஆனால் முழுவதும் வலைதளத்தின் மூலம் மக்களை திரட்டியுள்ளார்கள் .

மோர்சி எகிப்தின் அரசியல் சட்டத்தை மாற்றி இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு எடுக்கிறார். மக்கள் அதனை விரும்பவில்லை. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை./ராணுவத்தில் உள்ள இளம் அதிகாரிகள் ஒரு ராணுவப்புரட்ச்சியின் மூலம், மோர்ஸிய பதவியை விட்டு இறக்குகிறார்கள்.எகிப்து காப்பாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம்நடந்தது .இது பற்றி இயக்குனர் லெனின் பாரதி ( ஏற்குதொடரசசி மலை பட இயக்குனர் ) இது ஒரு அனுமதிக்கப்பட்ட போராட்டம் என்று கூறினார் .இது முற்றிலும் உண்மை.பத்து நாள் நடந்த போராட்டம் .11ம்  நாள் என்ன நடந்ததுஎன்பதை நாம்  பார்த்தோம்.காவல் துறையை சேர்ந்த பெண் கடைகளுக்கு தி வைப்பது பார்த்தொம்.   

எகிப்தும் ,மெரீனாவும் வலைத்தளத்தால்மட்டுமே நட த்தப்பட்டது என்பது மிகவும் பாமரத்தனமான புரிதல். அப்படியானால் தூத்துக்குடியில் நூறாவது நாள் துப்பாக்கி சூ டு நடத்தி 13 பெரை  கொல்வானேன்.

வலைத்தளம் என்பது ஒரு safty valve  ஆக பயன்படுத்தப்படுகிறது> மக்களின் ஆதங்கத்தை,கோபத்தை, வேறுப்பை பயன்படுத்த ,சிதறடிக்க உருவாக்கப்பட்ட ஒன்றுதான்.

கருத்துரிமை,என்று சொல்வதெல்லாம்பம்மாத்து.

கட்டுப்பாடு மிகுந்த இடது சரி இளைஞ்ர்களும் தன ஸ்தாபனத்தையே எதிர்க்கும் அளவுக்கு உரிமை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்களே என்று நினைக்கும்  பொது பயமாக இருக்கிறது .

பேசுவோம் ! விவாதிப்போம் !!

Monday, August 27, 2018





கெட்ட வார்த்தைசொல்லி 

திட்டனும் போல இருக்கு ..!!!









சுமார் 9000 கோடி கடன வாங்கிப்போட்டு மல்லையா லண்டன் போய்ட்டான் .அவனை கொண்டுவர மத்திய அரசு லண்டன் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கு. மல்லையா சொல்லுதான் அவன் சனாதன பிராமண குடும்பத்துலபொறந்தவனாம். அதனால அவனை ஆசாரமான சிறையிலதான் அடைக்கணுமாம். அப்படி சிறை இந்தியாவில் இல்லை> அதுனால என்னை இந்தியாவுக்கு அனுப்பிடாதிங்க " ஞான்  கோர்ட்டுல.

ஒரே படுக்கைல நாலு  பொம்பள  பிள்ளைல பாக்கற பய இந்தநாயி சொல்லுது.

முமபைல ஆர்த்தர்  ரோட்டுல சிறைசாலை தனியாக ஒரு அறை  ஒதுக்கி இருக்காங்க அதுல rest room  கூட எ/சி பண்ணியிருக்கோம். அவனுக்கு என்ன சௌகரியம் வேணுமோ அத செய்யரோம் னு நம்ம மோடி அரசு லண்டன் கோர்ட்ல சிறைச்சாலை படத்தை அனுப்பி வேண்டி இருக்காங்க .

மல்லையா,நீரவ் மோடி,இன்னொரு மோடி னு ஓட்டிப்பாணவனாஅதிகமா > உள்ளூர்ல திரியறவங்க அதைவிட அதிகம். அவங்க பேரை சொல்லுங்கடா நூ கேட்ட சொல்லமாட்டிங்க> 

ஏல அவனை சிரசேதம்ண்ணு னா கேக்கோம். - அவம பெரா சொல்லுன்னு தான கேக்கோம். பேரை சொல்லிட்டா எ ன்ன செய்ய போற  உன்னால ஒன்னும் முடியாது னு  பதில் சொல்லாரானுவ .

பெயர் தெரிஞ்ச்சதுன்னா "அதோ கார்ல வப்பாட்டியோட போராம்பாரு "தாயொளி" அவன் தான்  ஸ்டேட்பாங்குல 9000 கோடி கடன் வாங்கின  பய  இதோ  இந்த "வெக்காளி" பஞ்சாப் வாங்கில 12000 கோடி  கடன் வாங்கிட்டு ஏசி கார்ல  போராம்பாரு "னு திட்டிகிட்டு ஆறுதலாவது கிடைக்குமே னு தான் கேக்கோம்,

இந்த ஆசையையாவது நிறைவேத்துங்க "மோடி சார் "





(மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).







கெட்ட வார்த்தைசொல்லி 

திட்டனும் போல இருக்கு ..!!!





சுமார் 9000 கோடி கடன வாங்கிப்போட்டு மல்லையா லண்டன் போய்ட்டான் .அவனை கொண்டுவர மத்திய அரசு லண்டன் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கு. மல்லையா சொல்லுதான் அவன் சனாதன பிராமண குடும்பத்துலபொறந்தவனாம். அதனால அவனை ஆசாரமான சிறையிலதான் அடைக்கணுமாம். அப்படி சிறை இந்தியாவில் இல்லை> அதுனால என்னை இந்தியாவுக்கு அனுப்பிடாதிங்க " ஞான்  கோர்ட்டுல.

ஒரே படுக்கைல நாலு  பொம்பள  பிள்ளைல பாக்கற பய இந்தநாயி சொல்லுது.

முமபைல ஆர்த்தர்  ரோட்டுல சிறைசாலை தனியாக ஒரு அறை  ஒதுக்கி இருக்காங்க அதுல rest room  கூட எ/சி பண்ணியிருக்கோம். அவனுக்கு என்ன சௌகரியம் வேணுமோ அத செய்யரோம் னு நம்ம மோடி அரசு லண்டன் கோர்ட்ல சிறைச்சாலை படத்தை அனுப்பி வேண்டி இருக்காங்க .

மல்லையா,நீரவ் மோடி,இன்னொரு மோடி னு ஓட்டிப்பாணவனாஅதிகமா > உள்ளூர்ல திரியறவங்க அதைவிட அதிகம். அவங்க பேரை சொல்லுங்கடா நூ கேட்ட சொல்லமாட்டிங்க> 

ஏல அவனை சிரசேதம்ண்ணு னா கேக்கோம். - அவம பெரா சொல்லுன்னு தான கேக்கோம். பேரை சொல்லிட்டா எ ன்ன செய்ய போற  உன்னால ஒன்னும் முடியாது னு  பதில் சொல்லாரானுவ .

பெயர் தெரிஞ்ச்சதுன்னா "அதோ கார்ல வப்பாட்டியோட போராம்பாரு "தாயொளி" அவன் தான்  ஸ்டேட்பாங்குல 9000 கோடி கடன் வாங்கின  பய  இதோ  இந்த "வெக்காளி" பஞ்சாப் வாங்கில 12000 கோடி  கடன் வாங்கிட்டு ஏசி கார்ல  போராம்பாரு "னு திட்டிகிட்டு ஆறுதலாவது கிடைக்குமே னு தான் கேக்கோம்,

இந்த ஆசையையாவது நிறைவேத்துங்க "மோடி சார் "



(மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).







Friday, August 24, 2018








ஆடிட்டர் பேசியதில் ,

பாதிதான் உண்மை  !

மீதி .................................!!!




சமீபத்தில் மதுரையில் ஆடிட்டர்கள் கூட்டம் ஒன்று நடந்தது.அதில் வட மாநிலத்திலிருந்து வந்த ஆடிட்டர் ராஜிவ் குமார் என்பவர் பேசினார் .கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய ஆட் சி செய்த நடவடிக்கைகள் பற்றி வானளாவ புகழ்ந்து தள்ளினார்.இது போல் இந்தியாவில் எந்த ஒரு ஆட்ச்சியும் செயல்பட்டதில்லை என்று பேசினார் . அவர் ஆங்கிலத்தில் பேசினதை தமிழில் ஒருவர் மொழிபெயர்த்தார்.

அந்த மொழி பெயர்ப்பை வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

" 2004ம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுவரை வங்கிகள் 38 லட் சம் கோடி கடன் கொடுத்துள்ளது. மன்மோகன் சிங்  மற்றவர்கள் வாய் வார்த்தையாக  சொன்னதின் பேரில் இந்த கடன் கொடுக்கப்பட்டுள்ளது>ஒருநாட்டி ன் பொருளாதாரத்திற்கு வங்கிகள்   எவ்வ்ளவு முக்கியமானவை என்பது நமக்கு தெரியும் .அந்தக்கடன் வசூலாகவில்லை> அதனை வசூலிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது."  என்று அடித்தார்.

வங்கிகள் நாட்டுடமையானது 1969ல். ஏழைஎளியவர்களுக்கான "லொன்மேளா "நினைவிருக்கலாம் .முதலிலேயே முதலாளிகளுக்கு கடன் கொடுத்தால்  சிக்கல் வரும் என்று எளியவர்களுக்கு "கிள்ளி"கொடுத்தார்கள்.பின்னர் முதலாளி மார்களுக்கு அள்ளிகொடுக்க ஆரம்பித்தார்கள் .

இதில் காங்கிரஸ்,பாஜாக என்று பேதம் பார்க்க முடியாது. மோடியின் விமானப்பயணத்தில் முதல் சிட்டு அதா ணிகளுக்கும் அம்பாணி களுக்கும் தான் .அதாணிக்கு ஆஸ்திரேலிய சுரங்கத்திற்காக ஸ்டேட்வங்கி 6000 கோடி கொடுக்க பிரதமர் உத்திர விட்டார்> வங்கி சேர்மன் முடியாது என்றார். அவர் வெளிநாட்டு சென்றிருக்கும் பொது ஒரு குட்டி ஆபிசர் முலம் கடனை அளித்தார் நமது நிதி அமைசசர் !

ராஜிவ் குமார்ப்பேசும் பொது சேவை மற்றும் சரக்கு வரி பற்றி குறிப்பிட்டார். அத்தனையும் half truth ! 2019ம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்தில் இந்த படித்த தொழில் வல்லுநர்களை பயன் படுத்த போகிறார்கள் . அதற்கான பிரம்மாண்டமான தயாரிப்பு வேலைகள் ஆரம்ப மாகிவிட்டன.



Monday, August 20, 2018


Glory 

 T O 

 A  I  I E A !!!




மதுரையிலிருந்து அந்த லாரி புறப்படுகிறது. 1 1/2 டன் அரிசி ,காய்கறி,பலசரக்கு சாமான்கள்.,பாய்விரிப்புகள்,போர்வைகள் பிஸ்கட் பாக்கட்டுகள்  என்று மூன்று லடசம் ரூ பெறுமானமுள்ள நிவாரணப்பொருள்களுடன் புறப்பட விருக்கிறது தஞ்சை பகுதி இன்சுரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி கொடி அசை த்ததும் புறப்படலாம். லாரியில்  பொது இன்சூரன்ஸ்ஊழியர் சங்க தலைவர் பாலா, மாதர் சங்க தலைவர் பொன்னுத்தாய் ,எழுத்தாளர் சங்க தலைவர் பருவத வரத்தினி  ஆகியோர் உள்ளனர். அப்பபோதுஅழுக்கு வெட்டியும் காக்கைச்சட்டையும் அணிந்த இருவரை ஓடிவருகின்றனர்> அவர்களை கையில் சீல்  உடைக்கப்படாத 10லிட்டர் சமையல்எண்ணை  கென் இரண்டு இருக்கிறது.ஐயா எங்கள் சார்பில் இதனை கேரள சகோதரர்களுக்கு கொடுக்க முடியுமா? என்று கூ றி நீட்டுகிறார்கள. கொண்டுவந்தவர்கள் ஆட்டோ தொழிலாளர்கள்  அதனை இன்சூரன்சுழியர் சங்க செயல்பாட்டாளர் லாரியில் ஏற்றுகிறார்.அவர் கண்கள் கலங்கி இருக்கிறது.

மதுரைப்பகுதி இன்சூரன்சுழியர்கள் அனுப்பும் லாரி கேரள த்திற்கு நிவாரணப்பொருள்களோடு கிளம்புகிறது. மழைக்கு அந்த பெண்கள்  தாற்பலினால் முடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்>அவர்கள் பீர்மேடு செல்ல வேண்டும் சாலை சேதமடைந்துள்ளது. அரைமணி நேரத்தில்செல்லும் இடத்திற்கு ஐந்து மணிநேரம் சுற்றி போகவேண்டியதாகிறது.

பீர்மேட்டில் சாந்தியின் வீ டு முழுவதும் சகதி. கதவை திறக்க முடியவில்லை> அவர் வந்த நிவாரணப்பொருள்களை பள்ளிகூடம்மற்றும் தேவையான இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாரா.அவர்தான் பஞ்சாயத்து தலைவர் பள்ளியிலும்பாட சாலைகளிலும் தங்கி இருப்பவர்கள் இவர்களை தங்கள் உறவினர்களாக பாவிக்கிறார்கள் .வயதான பாட்டி ஒருவர் இந்த மழையிலும் வெள்ளத்திலும் எங்களை  பார்க்க வந்ததே சந்தோசம் மகளே என்று வர்த்தினியின்  கையை பிடித்துக்கொள்கிறாள்.வர்த்தினியின் தொண்டை அடைக்கிறது. பேச முடியாமல்கண்கலங்கி நிற்கிறார். 

துப்புரவு தொழிலாளி, ஆசிரியர்,அரசு ஊழியர், சுகாதாரத்துறை ,தீயணைப்பு,காவல் துறை என்று அத்துணை பெருமை காண துஞ்சாது மெய்வருத்தம் பாராதுமக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்>அவர்களிடையே எந்த பேதமும் இல்லை>

மதுரை மாவட்டம் திருபத்துரில் மதுரை சங்கத்தின்  62வதுமாநாடு  நடக்கிறது மேடையில் அகிலஇந்தியாய் சங்கத்தலைவர் தோழர் கிரிஜா பேசுகிறார் .

அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஊழியர்கள் தங்களொருநாள் ஊதியத்தை நிவாரணப்பணிக்கு தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.அதனை பிடித்தம் செயது அனுப்பும் பணியை நிர் வாகம் ஏற்றுக்கொள்கிறது என்று அறிவிக்கிறார்.

கரவொலியோடு சார்பாளர்களும் மற்றவர்களும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கிட்டத்தட்ட 10கோடி வசூலாகும் என்பது என்போன்றவர்களின் நம்பிக்கை

நான் எல் ஐ சி யிலிருந்து ஒய்வு பெற்று 22 வருட ம் ஆகிறது. தோழர்கள் நாராயணனும்,தண்டபாணியும்,பாஸ்கரனும்,"எல்லாம் சங்கத்திற்கே" "என்று சொல்வார்கள்> நாங்கள் அவர்கள்   பின்னால் ஓடினோம் .இன்று சாமிநாதனும்,ஜிஎம்ஸ் சம்,புண்ணியமூர்த்தியும் "சங்கம் எல்லாருக்கும் " என்கிறார்கள் .

ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறேன் !

glory to aiiea !!!

Thursday, August 16, 2018





தண்ணீர் விட்டு 

வளர்க்கவில்லை ....!!!





சுதந்திர போராட்டத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களைப்போல் சித்திரவதையை தாங்கி \யவர்கள்  எவரும் இல்லை என்பார்கள். ஒரு பெரிய பனிக்கட்டி பாளத்தின் மீது அ வரை படுக்க வைத்து கட்டி இருந்தார்கள் . காங்கிரஸ் சோஷலிசகடசியின் செயலாளராக இருந்த அவரிடமிருந்து சில தகவல்களை பெற பிரிட்டிஷார் முயன்றார்கள் பனி பாளம்  உருகியது உறுதியான  நெஞ்ச்ம கொண்ட ஜெ.பி யை பணியவைக்க முடியவில்லை .

அவருடைய மனைவியின் பெயர் பிரபாவதி தேவி.சுதந்திர போரில் ஈடுபட்டுள்ள நாம் குடும்பம் பிள்ளை குட்டி என்று வாழ வேண்டாம் . நம்மக்குள் தாமபத்திய உறவு வேண்டாம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்தனர் அப்படியே வாழ்ந்தனர் 

சுதந்திர போரில் ஈடுபட்ட பல தலைவர்கள் சுதந்திரம் கிடைத்தால் தான் திருமண வாழ்க்கை ? அதுவரை குடும்பம் என்ற பந்தத்தில் ஈடுபாக்கூடாது என்று முடிவு செய்தனர்.அப்படி முடிவு செய்த தலைவர்கள் ஏராளம்> அவர்களில் ஒருவர்தான் அந்தபாட்டாளிமக்கள் தலைவன் பி>ராமமூர்த்தி. பெரியார் தலைமையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார் சுதந்திரம் அடைந்த பிறகு.

தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியைநடத்தினர்  அதற்கு தலைமை தாங்கியவர் பி.சுந்தரய்யா.தன இஸ்லாமிய காதலி லைலாவை மணந்தார்> ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம் குடும்ப  உறவை புறக்கணிக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள் அப்படியே வாழ்ந்தார்கள். 

ஜவஹர்லால் பல்கலையில்படிக்கும்போதே அவர்கள் காதலர்கள் புரட்ச்சிகர வாழ்க்கையை இருவரும் தேர்ந்தெடுத்தார்கள் . தங்களுக்கு வாரிசு என்றுவந்தால் கவனம் சிதறிவிடுமென்றி நினைத்தார்கள் .அப்படியே வாழ்ந்தும் வருகிறார்கள் அந்த தமபதியினர் தான் பிரகாஷ்-பிருந்தா காரத் .

என்ன செய்ய.?

தாலிகட்டி மணந்து மூன்று மாதம்  கூடி வாழ்ந்து விட்டு நடுத்தெருவில் மனைவியை விட்டவர்கள் நாட்டாமை செய்யும் காலமாகி விட்டதே !!!

  

Monday, August 13, 2018


"அஞ்சலி"




சொத்துரிமையும் 



சோம்நாத் சட்டர்ஜியும் ...!!!




அவசரநிலைக்காலம் அது .சகலஉரிமைகளும் பறிக்கப்பட்ட நிலை. பேசசுரிமை எழுத்துரிமை, கருத்துரிமை என்று எல்லா  உரிமைகளும் பறி க்கப்பட்டிருந்தன. இந்த கூத்தில் எல் ஐ சி ஊழியர்களின் போனஸும் பறிக்கப்பட்டது .

அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதனை ஏற்கமறுத்தது . போராட்டமுறை இதற்கு சரியாக இருக்குமா என்று ஆலோசித்தது .தோழர் கள் சுநில் மைத்ராவும், சரோஜ் சவுத்திரியும் பலரை கண்டு ஆலோனை நடத்தினர். அவர்களில் ஒரேஒருவர்  மட்டும் இதற்கு சட்டரீதியாக நிவாரணம் பெற முடியும் என்று தெரிவித்தார்>அவர்தான் சட்டமேதை சோம்நாத் சட்டர்ஜி ஆவார் .

அவசர நிலைக்களத்தில் எழுத்துரிமை பேசசுரிமை,கருத்துரிமை ,ஏன் உயிர் வாழும்  உரிமை யம் பறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முதலாளிகளுக்கு தேவையான சொத்துரிமை மட்டும் பறிக்கப்படவில்லை . போனஸ் என்பது கொடுப்படாத ஊதியம் .(unpaid wage ) ஊதியம் என்பது தொழிலாளியின் சொத்து. ஆகவே அதனபறி க்கமுடியாது என்று விளக்கமளித்தார் சோம்நாத் அவர்கள். வழக்கு போடப்பட்டது> இரண்டு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. போனஸ் என்பதும் சொத்துரிமைக்கு உட்பட்டது தான்.அதனால் அதனிப்பறித்தது செல்லாது உடனே கொடுக்கப்படவேண்டும் என்று உச்சநீ \திமன்றம் தீர்ப்பளித்தது .

ஆனாலும் நிர்வாகம்  அதன் கொடுக்க மறுத்தது .

ஊழியர்சங்க தலைமை யோசித்தது. சோம்நாத் அவர்களின் யோசனையின் பேரில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை  அமல்படுத்த கோரி காலவரையறை யற்ற  வேலைநிறுத்தத்தை அறிவித்தது. 14 நாட் கள் வேலை நிறுத்தம் நடந்தது .நிர்வாகம் 14 நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்தது. 

சட்ட பூர்வமாக ஊழியர்கள்வேலை நிறுத்தம் செய்துள்ளனர். நிர்வாகம் சட்டவிரோதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை> இதனை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமல்ல .ஆகவே நிர்வாகம் பிடித்தம் செய்தது தவறு என்று ஊதியத்தினை 12% வட்டியோடு கொடுக்கவேண்டும் என்று சோம்நாத் வாதிட்டார் உச்ச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு வட்டியோடு உதியத்தை அளிக்கும்படியுத்திரவிட்டது.(அடியேனுக்கு 1400 ரூ ஊதியவெட்டு வட்டி யோடு 2800 ரூ கொடுத்தார்கள்)

சோம்நாத் சட்டர்ஜி ஒரு மார்க்சிஸ்ட். பத்துமுறை நாடாளுமன்றம் சென்றவர்  மக்களவை சபாநாயகராக இருந்தவர் ,சட்ட நிபுணர் .

அவருக்கு அஞ்சலிகள் !!!

Friday, August 10, 2018








அரசு ஊழியர் ஊதியமும் ,

ஆட்ச்சியாளர்களின் 

அறியாமையும்...!!!



பள்ளி ஆசிரியருக்கு மாதம் 82000 சம்பளமா? என்று பொருமி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.!

பட்டறிவும் கிடையாது ! படிப்பறிவும் கிடையாது ! என்ன செய்ய ?

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் வாழ்வதற்கான ஊதியம் (livingwage) கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.

இன்று livingwage  கொடுக்கப்படவில்லை. சரி ! நியாயமான  ஊதியமாவது (fairwage )கொடுக்கப்படுகிறதா ? இல்லை.அதுவும் சரி. குறைந்த பட்ச ஊதி யமாவது (minimumwage )கொடுக்கப்படுகிறதா ? இல்லை.


(போலி) தொழிற்சங்க தலைவர்களுக்கே இது என்ன என்று தெரியாது .

இந்தியா சுதந்திரம் அடைந்த பொது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது பற்றி விவாதம் நடந்தது .தொழிலாளர்கள் முதலாளிமார்,மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் இது பற்றி விவாதித்ததும்> 1957ம் ஆண்டு இந்த கமிஷன் முடிவு செய்தது. இதனை முத்தரப்பு மாநாட்டு முடிவு என்பார்கள்.

ஒரு தொழிலாளி நாள் முழுவதும் வேலை செய்கிறான் மறுநாள் அவன் வந்து வேலை செய்ய அவன் முதல நாள் உழத்த சக்தியை  மீண்டும் பெற்றால் தான் முடியும். அந்த சக்தியை கலோரி என்பார்கள்> ஒருமனிதனுக்கு 2400கலோரி ஒவ்வொருநாளும் வேண்டும்.இந்த எரிசக்தியை கொடுக்க அவர் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்று கணக்கிட்டார்கள்> அதற்கான பணமதிப்பீட்டை சொன்னார்கள்> இது தவிர தொழிலாளிக்கு சமூக பொறுப்பு இருக்கிறது.அதன்படி அவன் அவன் மனைவி தாய் தந்தை  ஆகியோரையும் கவனிக்க வேண்டும் இது தவிர அவன் குழந்தை  !

இவர்களுக்கான உணவு உடை,தங்குமிடம் என்று சகலமும் கணக்கிடப்பட்டதுஇதன்படி  அவனுக்கு ஊதியம் நிணயிக்கப்பட்டது. இதைத்தான் டாக்டர் அக்ராய்டு பார்முலா என்பார்கள்.இந்த livingwage ஐ எங்களால் கொடுக்க முடியாது என்று முதலாளிமார் சண்டித்தனம் செய்தார்கள் 

முதலாளி மார்களால் கொடுக்க எவ்வளவு முடியும் என்ற பொது நியாயமான ஊதியம் (fairwage )என்ற கருத்து தோன்றியது. முதலாளிமார் இத்தனையும் கொடுக்க முடியாது என்கிறார்கள் .

அதன்பிறகுதான் minimumwage என்று வந்தது . இந்த மினிமம் wage கூட இன்றும் எந்த  தோழிலாளிக்கும் கொடுக்கப்படவில்லை 

முத்தரப்பட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அரசு மட்டுமாவது அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் ஏனென்றால் அரசு ஒரு modelemployar ஆக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

kighwage islanders என்று அழை க்கப்படும் வங்கி எல் ஐ சி ஊழியர்களுக்கும் கூ ட இன்றும் குறைந்த பட்டாசு ஊதியம் அளிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

கிராமத்து வாத்தியாருக்கு எம்பிட்டு சம்பளம் என்று படித்த   நாமே வாய பிளக்கும் பொது எடப்பாடி சொல்வது ஆ ச்சாரியமில்லை.

நாம் நமக்கு கற்றுக்கொள்ளவே ஏராளம் இருக்கிறது> தோழர்களே !!!


Saturday, August 04, 2018






சுவாமி அக்நிவேஷுக்கும் ,

குன்றக்குடி அடிகளாருக்கும் ,

காவிதான் நிறம் !!!











கடவுள் வேண்டாம் , வேதங்கள் வேண்டாம் , சாதியையும் வேண்டாம் என்றான் சித்தார்த்தன் . புத்தனான அவன் "காவி"நிறம். 

இந்த உலகம் பொருட்களால் ஆனது . ஸ்கந்தங்களால் (molecule ) ஆனதுதான் உலகம் .என்றான் சமண மதத்தை உருவாக்கிய வர்த்தமானர் .அவரது நிறமும் "காவி" யே !

"எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொளகிறதோ , எந்தஒரு பொருள் தனக்கு வேண்டாததை தன்னிலிருந்து வெளியேற்றுகிறதோ (catabolism and metabOlism  ) அது உயி ருள்ள பொருள் என்கிறது அறிவியல். 

"உயிர் என்பது உணவுதான் .அது அளவிற்குட்டபட்டது .உணவை வெறுக்காதே ! உணவுதான் உயிர் " என்கிறார்கள் சித்தர்கள்> அவர்களின் நிறம் "காவி"தான்  .

1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி சப் த்தார் ஹஷ் மி மறை ந்த முதல் பிறந்த தினம் .இந்தியா பூராவும் வும் இருந்து நாடக சமூக செயல்பாட்டாளர்கள் ,கலைஞர்கள் டெல்லியில் கூடினர்>உள்துறை அமைச்சர் பூட்டா சிங் விட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் .தமிழகத்திலிருந்து அடியேன் சென்றிருந்தேன். மண்டி ஹவுசுலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கயிறு காளா ல் வளைத்து பூட்டாசிங்   விட்டு வாசலில் போலீசார் நிறுத்தினர்>அந்திடத்திலேயே அமர்ந்து "ஹல்லா போல்நாடகம் போடப்பட்டது  மாலா ஸ்ரீ அவர்களால் 1 பார்வையாளர்களாக எம்.எஸ் சத்யு,விவான் சுந்தரம், ஹபீபிதன் விர் , சாப்நா அஜ்மி , ஜாவேத் அக்தார் அவர்களோடு அடியேனும் அமர்ந்திருந்தேன். எனக்கு வலப்பக்கம் சுவாமி அக்நிவேஷ அமர்ந்திருந்தார் "காவி " உடையில்.     

அறிவுலக மேதை மார்க்ஸ் . அவருடைய "தாஸ் கேபிடல் "  மிகஉன்னதமான நூல்.  அதில் commodity ,money  இரண்டையும் பற்றி அவர் நிறைய எழுதியுள்ளார் அந்த நூலின் கடினமான பகுதி அது. எழுத்தாளர் சங்கம் மூலதனம்பற்றி மக்கள்மத்தியிலேறிமுகவிழா ஒன்றை  மதுரை ஸ்காட் ரோட்டில் நடத்தியது அவர் பேசினார் .

"பண் டத்தை மாற்றினோம். .பண் ட த்திற்கு பண்டம் .என்கிறோம். செயல் முறையில் எளிதாக்க பண்டம் பணம் பண்டம் என்று ஆக்கினோம். பின்னர் பணம் பண்டம் பணம் என்று வர்த்தகம் செய்தொம். இன்று பணம்(1)-பணம் - பணம் (2)  என்று மாறிவிட்டொம். "

என்று அவர் கூறியபோது ஆயிரக்கணக்கில் குடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர்

அவர்தான் காவியாடைதரித்த மறைந்த குன்றக்குடி  அடிகளார்.

நமது தேசியக்கொடியை நம் முன்னோர்கள் காவி உள்ளடக்கி மூவர்ணமாக்கினார் காவி அறிவியலையும், ஆன்மிகத்தையும் இணைப்பதால்.

 இந்தியா spiritualy intelectual and intelectualy spiritual என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். 

8ம் நூற்ரான்டில் ஆதி சங்கரர் வரும் வரை இது தொடர்ந்து.பிராமணமதத்தை அவர் ஸ்தாபன மயமாக்கினார் . சடங்குகளும் சம்பிறதாயங்களுமாக மாறி அறிவியல் ஒதுக்கப்பட்டது. 

இன்று அறிவியலா ஆன்மிகமா என்ற கேள்வி தேவை இல்லாமல் எழுப்பப்படுகிறது .

அறிவியல் இல்லாத ஆன்மிகம் தேவையில்லை .  அறிவியலும் ஆன்மிகமு ம் இரண்டற கலந்ததுதான் இந்த மண்ணின் தத்துவ ஞானம்..


அதன் சின்னம் தான் காவி !!! 


Wednesday, August 01, 2018



MINDSET



இப்படியானது 




எதனால் ? 






"பாரதிய ஜனதா கடசி தமிழகத்தில் தல எடுக்க முடியாது " என்று எனது நண்பர் சொன்னார் .பத்தாம் பசலித்தனமான கொள்கைகள், கொண்ட எந்த ஒரு இயக்கமும் தமிழகத்தில் நிலைக்காது . இந்த மண்ணின் ஆணிவேர் அதன் சமூக சீர்திருத்த கருத்துக்களில் அதனை மக்கள் மனதில் பதிவேற்றிய அந்த மாமனிதர்களின் செயல்பட்டால் விளைந்தது. அதில் முக்கியமானவராக திகழ்கிறார் பெரியார் அவர்கள்> என் நண்பர் ஒரு பெரியாரிஸ்ட். "இந்த மண் பெரியார் மண் இங்கு வேறு பாச்சா பலிக்காது " என்று முடித்தார் .

தமிழ் மக்களின் பாடுகளுக்கு விடிவு காலம் அவர்களின் மூடநம்பிக்கையை அதன் ஊற்றுக்கண்ணாக இருக்கிற மத நம்பிக்கையை களைவதில் இருக்கிறது என்று மனதார நமபியவர்களில் ஒருவர் பெரியார் . மதத்தின் மூல வேறாக பிராமணியம் இருக்கிறது. அதிகாரம் முழவதும்   அதன் கையில் இருக்கிறது. அதிகாரத்திலிருந்து பிராமணர்களை அப்புறப்படுத்துவத்தின் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று  கணித்தர. பிராமணர்களைத்தவிர மற்ற சாதியினரை ஒன்றுபடு த்தியதில் அவருடைய சாதனை மகத்தாகினது .

இந்த ஒற்றுமையை உருவாக்க அவர் பட்ட பாடு  கொஞ்சமல்ல.  இறுதியில் வெற்றியும் பெற்றார். அதிகாரத்திலிருந்து பிராமணர்களை விரட்டினார் . தமிழகம் மூச்சு வீட்டுக் கொண்டது.

இந்த வெற்றியை பலப்படுத்துவதில் பெரியாரிஸ்டுகள்  பலவீனமாக இரு ந்துவிட்டனர் 

"பாப்பானை விரட்டியாகி விட்டது .அந்த இடத்தில் வெள்ளாளன், முதலி தேவ ன் வர போட்டி போட்டான் . தனக்கு மேலே இருந்த வனை நீக்கினான்> அதேசமயம் தனக்கு கீழே இருக்கும் தலித்துகளை மறந்தான். .  எல்லாருமாக சேர்ந்து பெற்ற வெற்றியை தன்னோடு போராடிய 30 சதம்  மக்களை மறந்த பாவம் இன்று ஆட்டிப்படைக்கிறது.

இதனை "காலந்தோரும் பார்ப்பனியம் "  என்று கூறி சமாளிப்பவர்கள் உண்டு .

கடந்த ஐமபத்து ஆண்டு காலமாக பெரியாரிஸ்டுகள்  தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டுவந்தனர்.

உயர்நிதிமன்ற நீதிபதிகளில் எத்தனைபேர் பார்ப்பனர் உச்ச நிதிமன்றத்தில் எத்தனை பேர். மாநிலங்களிலும், மத்தியிலும் உயர்பதவியில் இருப்பவர்களால் எத்தனை பேர் என்று வக்கணை  பேசும் இவர்கள் எத்தனை தலித்துகளை உயர்பதவியில் இருத்தி அழகு பார்த்தார்கள் .பாவம் ! ஒரு கர்ணன் பட்ட பாட்டு போதுமே!

மாநில அரசு தன ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு  கொடுக்கவில்லையே ஏன் ? 

1972ம் ஆண்டுவரை எல்.ஐ.சி யில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது> அங்கு உள்ள இடது சாரி தொழிற்சங்கம்  இடைவிடாது போராடி பதவிஉயர்விலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது>இன்று எல்.ஐ.சியில் எடுபிடியாக சேரும் தலித்  ஒய்வு பெரும் பொது அதிகாரியாகி செல்வான்.  அங்குள்ள சங்கம் இதனை அமுல்படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக செயல்படுகிறது . மெரிட் ,திறமை என்று எந்த பாதிப்பும் இல்லை> இதேதான் வங்கியிலும். தபால் தந்தி, ரயிலேதுறை என்று சிறப்பாக செயல்படுகிறது .

 மாநில அரசு ஊழியர்களிடையே மட்டும்பதவு உயர்வில் இட  ஒதுக்கீடு ஏன் இல்லை?

ஒரு பறையன் R I  இருக்க கூடாதா? ஒரு தாசித்தராக பள்ளன் இருக்கக்கூடாதா ? சக்கிலியன் இன்ஸ்பெக்ட்டாக இருக்கக்கூடாதா ? அப்படி இருந்தால் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தமுடியுமா ?

என்ன செய்ய !பறையன் விட்டு வாசலில் வேளாளன் நிற்கலாமா? பள்ளன் விட்டு வாசலில் தேவர் நிற்கலாமா? நம் mindset இப்படி ஆனது எதனால்.?

பெரியாரிஸத்தின் போதாமையா ? இல்லை போலி பெரியாரிஸமா ?

பண்பாட்டுத்தளத்தில் செயல்படும் இயக்கங்கள் தீவிரமாக முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.!!!