Wednesday, February 27, 2019




"வஞ்சத்தில் வீழ்ந்தோம் ,

வஞ்சகன்  கண்ணன் அல்ல ...!!! "



இந்திய ராணுவத்தை அதன் தீரத்தை புகழாதவர்கள் இல்லை . மொத்தம் 21இ நிமிடங்களில் அந்த தீவிர வாதிகளின் கூடாரத்தை துவம்சம் செய்து விட்டு வீர நடை போட்டு வந்த  அந்த விமானிகளில் ஒரு வீர மங்கை  உண்டு என்பது பெருமைக்குரியதாகும்..உலகமே வியக்க தீவிர  வாதிகளின் "ராடர்களை " செயலிழக்க செய்துவிட்டு காரியத்தை முடித்து விட்டார்கள் .பலம் பொருந்திய நாடுகள் கூட இத்தகைய சாகசத்தை எதிர்பார்க்க வில்லை .  

அரசியல் தலைவர்கள்,ஊடகங்கள் என்று அத்துணை பெரும் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை பெருமிதத்தோ டு பாராட்டுகிறார்கள்.

தொலைக்காட்ச்சியில் இதுபற்றி வாதங்கள், நடைபெறத்தான் செய்கின்றன. நடைபெறும். 

இத்தகைய விவாதங்களில் எந்தவிதமான ஆத்திரமுட்டலுக்கும்  மசியாமல் , கச்சித்தமாக வாதங்களை வைப்பவர்களில்  ஒருவர் மார்க்சிஸ்ட் கட்ச்சியை சார்ந்த கனகராஜ் அவர்கள்.அசைக்கமுடியாத தரவுகளோடு நிதானமாக தன வாதத்தை முன் வைப்பார் . அவற்றில் சிலவற்றை இங்கே தருவது சிறப்பாக இருக்கும் என்று கருது கிறேன்.

1.ஜம்மு-காஷ்மீரில் 2000க்கும்மேற்பட்ட துணை ராணுவ வீரர்களை சாலைவழியாக கொண்டுசெல்லும்போது தீவிர வாதிகள் தாக்குதல் நடக்கும் என்று எச்சரிக்கை ஒன்றை உளவு துறை காஷ்மீர் கவர்நர் சதய பால்மாலிக் அவர்களுக்கு அனுப்பியதா? 

2.கவர்னர் என் அதை முடி மறைத்தார்?

3 மத்திய உள் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் தகவல் வந்ததா ?

4.அவர் என் முடிமறைத்தார்?

5.பிரதமருக்கு இது தெரியுமா?

6.துணை ராணுவத்தார் 44 பேர் ரத்தமும் சதையுமாக பிய்த்து எறியப்பட்ட செய்தி வந்தபோது பிரதமர் எங்கிருந்தார்? 

6.தேர்தல் பிரசாரப்பட பிடிப்பில் இருந்தார் என்பது உண்மையா ?

7. செவ்வாய் கிழமை ராணுவ நடவடிக்கை முடிந்ததும் பிரதமர் காலை  10 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் சென்று தேர்தல்பிரச்சாரம்   செய்தாரா?

8. அந்த மேடையின்  பின்புலத்தில் 44 துணை ராணுவ வீரர்கள் படம் வைக்கப்பட்டிருந்ததல்லவா ?

9. துணை ராணுவத்தனர் மரணத்தையும் ,அதற்கான எதிர்வினையையும் தேர்தலுக்காக பயன்படுத்துவதில்  என்ன தவறு என்று ராமசுப்பிரமணியம் அவர்கள் சொன்னதை சரி என்று எடுத்துக்கொள்ளலாமா ? 

10. உங்களை பிரசாரம் செய்யவேண்டாமென்று நாங்கள் தடுக்க வில்லையே என்று கோவை சேகர் சொல்கிறாரே -சரியா ? 

ஒன்று மட்டும் புரிகிறது.

வஞ்சத்தில் வீழ்ந்தோம்.!

வஞ்சகன் கண்ணன் மட்டுமல்ல !!!  

 


Friday, February 15, 2019



"அம்பாசமுத்திரம் கந்தசாமி "
சிறு கதை "அம்பாசமுத்திரம் கந்தசாமி "

"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....

" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.

மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.

அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.

மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .

"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'

. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .

"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.

"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."

பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."


வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .

மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .

"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."

எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது

. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""

கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..

(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)


Thursday, February 14, 2019




கடவுளும்,

காதலும் ...!!!



எனக்கு கடவுள் மீதும் நமபிகை கிடையாது. காதல் மீதும் நம்பிக்கை கிடையாது.

துக்கம்,சோகம்,சிரிப்பு,கோபம் , வலி,போன்று அதுவும் ஒரு உணர்வுதான் என்று  நினைப்பவன் நான் .அதற்கு தேவை இல்லாத புனிதத்தை நாமாக உருவாக்கி அதனை அதீதமாக  நாம் பாவிக்கிறோமோ என்ற நினைப்பும் எனக்கு உண்டு.

அமர காதல் என்று சிலாகிப்பவர்களா உண்டு .என்னைப்பொறுத்தவரை காதலுக்கு - அமரகாதலுக்கு -  ஒரே எடுத்துக்க்காட்டு "ஜென்னி-கார்ல் மார்க்ஸ் " அவர்களைத்தான் சொல்வேன்.

ஜென்னி மார்கிஸ் வசித்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்தவர் .கொள்ளப்பணக்காரி. அழகி. 

மார்க்ஸ் அவ்வளவு வசதியுள்ள குடும்பம் அல்ல .மார்க்ஸ்சின் முத்த சகோதரியோடு ஜென்னி படித்தார் .ஜென்னியின் தம்பியும் மார்க்ஸ்ஸும் கிளாஸ்மேட். இவர் அவரவிட்டிற்கும் அவர் இவர் வீட்டிற்கும் சகஜமாக போய்வருவார்கள். ஜென்னிக்கும்-மார்க்ஸுக்கும் வயது வித்தியாசம் அதிகம். 

மார்க்ஸ் அவ்வளவு அழகு  என்று சொல்ல முடியாது. முண்டு முண்டாக கன்னக்கதுப்பும்,முகம் நிறைய மயிருமாக இருப்பாராம் .அடிக்கடி முகவாசிகரம் செய்து கொள்ள மாட்டாராம்.

ஜென்னி வசதி உள்ள குடும்பத்துக்ககாரி .சுத்தமும், சுகாதாரமும் கொண்ட பேரழகி.

ஜென்னியை அவளுடைய தோழிகள் "இவனை எப்படிடி காதலிக்கிறாய் "என்று கேட்பார்களாம் .

"பைத்தியக்காரிகளே ! அவனை என் கைகளை தொடும் பொது என் ஆத்மாவை தொடுவதாக நினைக்கிறேன்.அவனும் அப்படியே நினைக்கிறான். "என்பாராம் ஜென்னி .

"அழகி நீ .இவனை வீட்டா அழகானவன் உனக்குகாதலனாக வருவான்  அல்லவா"என்று தோழிகள் ஜென்னியை வம்புக்கிழுப்பார்கள்.

" முட்டாள்களே !  இன்னும் ஆயிரம் ஆண்டு ஆனாலும் இப்படி ஒரு அறிவாளியினை  எவளாவது  காதலனாக அடைய முடியுமா ? "என்று  பதிலாளிப்பாராம் ஜென்னி .

ஜென்னியின் முன்னால்  மார்க்ஸ் மிகவும் வெட்கப்படுவாராம்.

"ரொம்ப வெக்கப்படாத மார்க்ஸ். நீ நாலுவயதுல ஜெட்டி கூட போடாம "மணி " ஆட்டிகிட்டு நடக்கும் போதே உன்னை பார்த்திருக்கிறேன்" என்று ஜென்னி கூற  மார்க்ஸ் முகத்தை முடி கொள்வாராம் வெட்கத்தில்.  

வறுமை இந்த காதலர்களை வாட்டியது போல் யாரும் வாடியிருக்க மாட்டார்கள் .பொறுமையாக சமாளித்தவள் ஜென்னி . சம்பாத்தியமென்று எதுவும் கிடையாது. தேவை என்றால் நண்பர் கள் கொடுப்பார்கள் .சமைக்க எதுவும் இல்லை .கேள்விப்பட்ட நண்பர்கோஞ்சம் பணமும் தானியமும் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார்.

அவர் பார்த்த காட்ச்சி  அவரை திகைக்க

 செய்ததாம்.

ஷேக்ஸ்பியரின்  நாடகத்தில் வருமரோமியோ  -ஜூலியட்  காடசியை மார்க்ஸ் ரோமியவாகவும் ஜென்னி ஜூலியாட்டாகவும் அற்புதமாக நடித்துக்கொண்டிருந்தார்களாம் .குழந்தை பசி மயக்கத்துல பார்த்துக் கொண்டிருந்ததாம் .

எனக்கு  காதல் மீது நம்பிக்கை இல்லைதான் .

ஆனால் ஜென்னியையும் மார்க்ஸையும் நம்புகின்றேனே !!!

  

Thursday, February 07, 2019




"திரைப்பட விமரிசனமல்ல "










"பேரன்பு " திரைப்படமும் ,



ஆசீர்வதிக்கப்பட்டவர்களும்...!!!





என் சகோதரிக்கு நான்கு . ஆண் குழந்தைகள். நான்கு பெண் கு ழந் தைகள் . கடைக்குட்டி கொள்ளை  அழகான பெண்குழநதை.. அந்த குடுமபத்தின் அன்பும்,பாசமும்,நேசமும், கருணையும் ,கவனிப்பும் அவ தான்.அவளும் குறும்புக்காரி. 

அந்த குழந்தை "டாடா" காட்டாமல் யாரும் வெளியே செல்லமாட்டாட்கள்.அப்படி ஒரு sentiment .  முகத்தை உர்  என்று வைத்து க்கொண்  டு டாடா காட்டாமல்  இருப்பாள். பள்ளிக்கு,கல்லூரிக்கு, அலுவலகத்திற்கு         நேரமாகிவிடும். அவளுடைய அண்ணண்கள்  அக்காமார் படும்பாடு சொல்லி முடியாதுபின்னர் வேண்டாவெறுப்பாக டாடா காட்டுவாள்.

அவள் இன்று இருந்தால் 60 வயது ஆகி இருக்கும் . தன 18 வது வயதில்இறந்து விட்டாள் .

என் சகோதரியின் குடும்பம் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் வசித்து வந்த தெருமனிதர்கள் "சீ  த்தபர்டி "  என்ற பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

காரணம் "லதா "என்ற பெயரிட்ட அந்த குழந்தை "மூளை 

முடக்கு வாதத்தால் "பாதிக்கப்பட்ட ஒரு SPASTIC CHILD .

கன்னியாகுமரி அம்மன் போன்ற கள்ளம் கபடமாற்ற பேரழகி அவள்.பதிமூன்று வயதில் அவளுக்கு மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஒரு அறுவை சிகிக்சை  செய்து அவள் கர்ப்பப்பை அகற்ப்பட்டது> பெண் என்ற வகையில் அவளுக்கு மாதாந்திர தொந்திரவு இல்லை  என்றானது.

இன்று அந்த குடுமபத்தின்குலதெய்வமாகஅவளை    கொண்டாடுகிறார்கள் . எந்த நல்லது கேட்டது நடந்தாலும் முதல் படையல் அவளுக்கு தான் .

---------------------------------------------------------------------------------------------------------


"பேரன்பு " என்று ஒருபடம் தி ரைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. எங்கள் "லதா"வின் உறவினர்கள் கலிபோர்னியாவிலிருந்து -கன்பராவரை,லண்டனிலிருந்து கென்யாவரை   இருக்கிறார்கள்.அவர்கள் இந்த  படத்தை பார்த்தார்களாதெ  ரியாதுசென்னையில் இருக்கும் , அவள்  அக்காமார் அண்ணன்மார் பார்த்தார்களாதெ  ரியாது .அந்தப்படத்தில்-லதாவாக - இல்லை  பாப்பாவாக நடிக்கும் சாதனா என்ற சிறுமிக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகை விருது கிடைக்கும்   >என்கிறார்கள் .தந்தையாக நடிக்கும் மம்மட்டி க்கு ஆஸ்கார் கிடைக்கும் என்கிறார்கள்.

அந்த படத்தை நான்பார்ப்பேனா !தெ ரியாது.?


சபிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொம்மையை  வைத் து ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு  பொழுதுபோக காட்டப்பட்ட பொம்மலாட்டம் தான்  

 " பேரன்பு"

வேறென்ன சொல்ல !!!



Wednesday, February 06, 2019



"சமஸ் "அவர்களின் 

கட்டுரையை 

முன்னிறுத்தி ...!!!













டாக்டர். ஜான் செல்லத்துரை சனிக்கிழமை (2-2-19) அன்று குடும்பத்தோடு.வந்திருந்தார். .குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மனித மோதல்களும்  தீர்வுகளும் என்பது பற்றி CONFLICT  தலைப்பில் ஆராய்சசி செய்து முனைவர் பட்டம்  பெற்றவர் .உலகம்பூராவும் சென்று  காந்திய சிந்தனைகளை பரப்பி வருபவர்  ஜான் .



 நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்காரரான ஜான் ம.தி.,தா இந்து கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்தவர் .நாகபுரியிலி வசித்தவர் கடந்த சில ஆண்டுகளாக ஜல்கானில்  காந்தி  சிந்தனை மையத்தில் டீனா க  பணியாற்றுகிறார்.

காந்தி பற்றியும், மார்க்ஸ் பற்றியும் நாங்கள்   இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். 

இந்து  தமிழ் இதழில் "சமஸ்" எழுதி காந்தி நினைவு நாளில் வந்திருந்த கட்டுரைப்பற்றி பேசினோம். . சம்ஸ் அவர்கள் ஒரு சிறந்த "காந்தியர்/".

காந்தி அடிகளுக்கு மூன்று இலக்குகள் உண்டு .

!.இந்து -முஸ்லீம் ஒற்றுமை

2.தீண்டாமை ஒழிப்பு,

3.சுதேசி இயக்கம்.

இந்த மூன்றும்  நிறைவேறினால் பிரிட்டிஷாருக்கு இங்கு வேலை இல்லை என்று அமெரிக்க பத்திரிகையாளரும் காந்தி கொடுத்த பெட்டியை சம்ஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

ஜானும் நானும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.காந்தி வன்முறையை எதிர்த்தார் . அரசு வன்முறையை எதிர்த்தார்> அவரைப்பொறுத்தவரை அரசு என்பதும் கூட  வன்முறை இயந்திரம் என்ற வகையில் நாங்கள் பேசினோம்.

"மனித குலா வளர்ச்சியில் அடிமை சமுதாயம் வந்தது> அதுவே நிலப்பரப்புத்துவ சமூகமாக மாறியது> நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவின் மாக வளந்தது. முதலாளித்துவம் கம்யூனிசத்தை வளர்த்தது 'என்று நான் குறிப்பிட்டேன்.

" வளர்ச்சி தொடரும் ஏன்  அரசு என்ற அமைப்பும் உதிர்ந்து விடும்." என்றேன்.

அப்படியானால் என் நிலப்பிரபுத்துவ காலத்திலேயே அரசு உதிர்ந்தியிருக்கலாமே "என்றார்  டாக்டர் ஜான் .

 இருவரும் பேசிக்கொண்டே  இருப்பீர்கள் 5 மணிக்கு ரயில்.கிளம்புங்கள் ஜான் என்றார் அவர் மனைவி ராஜி..

எங்கள் விவாதம் நின்றது> நான் பதில் தெரியாமல் இருக்கிறேன் .!!!  


Sunday, February 03, 2019




மக்கள் துயரம் தீர














"சத்ரபதி சிவாஜியை 

வாளோடு அனுப்பு "



பவானி மாதாவுக்கு  வேண்டுகோள்.!




மீரா நிருத்ய நிகேதன் என்ற அமைப்பு பாரத நாட்டியம் ,கதக் ஆகிய கலைகளை நாகபுரியில்  கற்றுத்தருகிறது. அந்த அமைப்பின் 45 வது ஆண்டுவிழா 3-2-19 அன்று நடந்தது .பெண்குழந்தைகள் இந்த விழாவில் நாட்டிய நாடகங்களை நடத்தினர்.  

இதில் தான் சிவாஜி பற்றிய நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பவானி மாதா கோவிலில் மக்கள் பிரார்த்திக்கிறார்கள். 

"நாங்கள் படும் துயரை தீர்க்க வேண்டும் தாயே ! மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ! பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! எங்களைக்காக்க சத்ரபதி சிவாஜி மகாராஜை அனுப்பி வை அம்மா ! அவரிடம் மறக்காமல் அந்த வாளையும் கொடுத்தனுப்பு !" 

மக்கள் வேண்டுவதாக ஒரு காட்சி !

மீரா நிருத்ய நிகேதன் என்ற அமைப்பினை நடத்துபவர் தமிழ்நாட்டை சேர்ந்த மீரா  சந்திரசேகரன்.

மீராவின் தாய் மாமன் தான்  எழுத்தாளர் காஸ்யபன் !!!.