Friday, March 29, 2019
கேரளத்தில் ,

பா.ஜ .க தலைவர்களிடையே ,

குழப்பம் ...!!!


கேரளத்தில் 20 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க விருக்கிறது .ஆளும் இடது முன்னணி யின் சார்பில் மார்க்சிஸ்ட்கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டா கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

கல்வி யில்   முதல் இடத்தில் உள்ளகேரள மக்கள் பத்தாம் பசலித்தனமான பா/ஜ.க வை நிசசயமாக ஆதரிக்க மாட்டார்கள்.

கேரளத்தில் மாநில ஆட்ச்சியும் மாறி மாறி இடது சாரிகள் அல்லது காங்கிரஸ் என்று தான் வந்திருக்கிறது .

இடது சாரிகள் பலம் பொருந்திய இந்த மாநிலத்தில் காங்கிரஸ் சுயநலமிக்க சில கிறிஸ்துவ அமைப்பு ,மற்றும் முஸ்லீம் அமைப்புகளை தாஜா பண்ணி வெற்றி பெறுவது வழக்கம் .

இது தவிர பாரதிய ஜனதா கட்சி  வடக்கே கண்ணனுரிலும் தெற்கே திருவனந்தபுரத்திலும் சில பகுதிகளில் இருக்கின்றனர் ."ஓழக்கிற்குள் கிழக்கு மேற்கு பார்க்கிறான் " என்று சொலவடை உண்டு. பாஜக விற்குள் கண்ணனுர் கோஷ்டி, திருவனந்தபுரம் கோஷடி என்று உண்டு. கண்னுர் ஆர் எஸ்.எஸ்.வசம் உள்ளது இவர்களுக்கு க  என்ற எழுத்தே பிடிக்காது. கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையில் க வருவதால் .கேரளம் என்பதற்கு பதிலாக பரசுராமபுரம் என்பார்கள்.

தேர்தலில் தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் கம்யூனிஸ்ட்கள் வரக்கூடாது என்பதில் தீர்மாணமா க இருப் பவர்கள் இவர்கள் .

கம்யூனிஸ்டுகளுக்கு,காங்கிரசுக்கும் நடக்கும் போட்டியில் கம்யூனிஸ்டுகள் 1 சத்தம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது வழக்கம். 

சட்டமன்ற தொகுதிக்கு 100 லிருந்து 200 வாக்குகளை வைத்திருக்கும் பாஜக  காங்கிரசுக்கு போட்டு சில சமயங்களில் ஜெயிக்க வைக்கும்.

நடப்பு நாடாளுமனற தேர்தலில் இடது சாரிகள் நிசசயம் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பேற  இருக்கிறார்கள் . 50லட்சம் பெண்கள் கலந்து கொண்டு உலகையே வியக்க வைத்த "சுவர் "  பாஜக வயிறை கலக்கி வருகிறது.

ஆர் எஸ் எஸ் தலைமை இதனை சமாளிக்க தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு போட தீர்மானித்துள்ளது என்பது பார்வையாளர்களின் யூகம் .இதனை  திருவனந்தபுரத்தில் இருக்கும்பாஜக தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

"வடமாநிலங்களில் நிசசயம் சரிவு ஏற்படும். இந்த சமயத்தில் காங்கிரசுக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைத்தால்  ஆகப்பெரும் கடசியாக வரும் வாய்ப்பிருக்கிறது இது ஆடசி அமைக்க சிக்கலை ஏற்படுத்தலாம்" என்கிறார்கள். 

பாஜக தலைமை இது வரைஇந்த குழப்பத்தில் இருந்து மீளவில்லை.

   

Tuesday, March 26, 2019
நிதியும் ,

நீதியும் ....!!!"ஏல! சுப்ரிம் கோர்ட் போயாவது உன்னை ஒருகை பாத்துருவேன் " என்று நாம் சர்வசாதாரணமாக பேசுவது உண்டு.

சமீபத்தில் டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலையில்படிக்கும் மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

உச்ச  நீதிமன்ற நடைமுறை பற்றி என் சந்தேகங்களை கேட்டேன்.

இந்த மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு மாதம் Internship இருக்க வேண்டும் அதாவது சீனியர் வக்கீலிடம் அவர் அலுவலகம் சென்று நடை முறையை  பழக்க வேண்டும். இவர்கள் உசச நீதிமன்றத்தில் பணியாற்றும் சீனியர் வக்கீல்களிடம்  செயல் முறையில் பாடம் கற்றுக்கொள்வார்கள் .உச்ச்சநீதிமன்றம் சென்று அங்கு நடை பெரும் விவாதங்களை கேட்பார்கள் .உச்ச்சநீதிமனற நடைமுறைகளை அறிந்து கொள்வார்கள்  

கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வந்ததும் மாவட்ட கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்.அதன் பிறகு உயர் நிதிமன்றம் போவோம்.அதுவும் முடிந்த பிறகு உச்ச நிதி மன்றம் போவோம் .இது தான் நமக்கு தெரிந்த நடைமுறை.

உசச நிதி மன்றம் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் பணி புரிகிறது

இதில் திங்களும் வெள்ளியும் admission டே என்கிறார்கள் .எந்த ஒரு வாழ்க்கையும் நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ளாது .அதில் ஏதாவது சட்டப்பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பார்கள்> இல்லை என்றால் அட்மிஷன் சமயத்திலேயே தள்ளுபடி செய்வார்கள்.

இல்லை ?இந்த வழக்கில்  சட்ட பிரசினை இருக்கிறது அதனால் கன ம் கோர்ட்டார் இதனை விசாரிக்க வேண்டும் என்று உச்ச்சநீதிமன்ற வக்கீல் வாதிட்டு நிதிபதிகளை ஏற்றுக்கொள்ளசெய்ய வேண்டும்,. இதற்கென்றே admission எஸ்பிர்ட் வக்கீல்கள் இருக்கிறார்கள் .ஒரு அட்மிஷனுக்கு ஒருலட்சம் ரூ வாங்குவார்கள். AG  ஆகி இருந்து ஒய்வு பெற்ற வக்கீ ல் ஒருவர் இதில் எஸ்பேர்ட்..ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 அட்மிஷன் வாங்கி விடுவார் . வாரம் இரண்டு நாள் என்றால் எவ்வளவு என்று  கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

இது தவிர செவாய் புதன் வியாழனில்  வழக்கு விசாரணை நடை பெரும். இதில் ஒரு ஈரங்கிக்கு (hearing ) 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வக்கீல் பீசு கொடுக்க வேண்டும் .

அரசியல் செல்வாக்குள்ள தமிழக வக்கீல் 20லட்சம் வாங்குவதாக கேள்வி .ஒரேநாளில் இரண்டு வழக்கு என்றால் இரண்டு  பீ.சு.

மாதம் கோடிக்கணக்கில் சம்பாத்தியம் பண்ணும் வக்கீல்களிருக்கிறார்கள்.

இவர்களிடம் ஜூனியர் நிறைய இருப்பார்கள்> அவர்களுக்குமாதம்  குறைந்த பட்சம் ஒருலட்சமாவது ஊதியம் கொடுக்கவேண்டும். ஜூனியர்களின் திறமைக்கு ஏற்ப இது ஐந்து லட்சம்  என்று கூடும்.

உயர் நீதி மனற தீர்ப்புக்குப்பிறகு மாநில வக்கீல்கள் உச்ச்சநீதிமன்ற மேல் முறையிடுபற்றி  சிபாரிசு செய்வார்கள். இவர்களுக்கும் உச்ச்சநீதிமன்ற வக்கீல்களுக்கும்  tieup இருக்கும். இந்த மாநில வக்கீல்களுக்கு உச்ச்சநீதிமன்ற வக்கீல்கள் கேசு  கொடுத்ததற்காக பீ சு கொடுப்பது வழக்கம் . 

பொதுவாக வக்கீல் தொழிலும்,டாக்டர்களும் தங்கள் வருமானத்தை சரியான கணக்கு வைத்து சொல்வதில்லை  என்று ஒரு குற்றசாட்டு உண்டு.

உச்ச  நீதிமன்றம் போய் வழக்காடி வெற்றி பெறுவது என்பது நம் வங்கி இருப்பை பொறுத்தது .
.

Monday, March 25, 2019


சின்னப்பயலுவ 

தெளிவாத்தான் 

இருக்கானுவ 

"மதத்தை அடிப்படையாக கொண்ட சர்க்கார் வேண்டாம் தானே ? "

"என்ன செய்ய ! மத்தில அப்படித்தானே அரசு  னு வாய்சசிருக்கு ?"

"அத மாத்திரணும்டா ?"

"மாத்திட்டு "

"மொதல்ல மாத்துவம் "

"யாரு வருவா ?"

"மோடி "ய வேண்டாம்  னு சொல்றவங்க "

"அது தாண்ட சிக்கலு ?"

"ஒரு ஆள் இந்தியா பூராவிலும்  லீடர் னு யாரும் கண்ணுல படலையே "

"மொதல்ல கீழ இறக்குவம்டா  !"

"ஆழம் தெரியாம கால விட்ட கதை  ஆகிடும் "

"மோடி ஆட்கள் இத சொல்லித்தான் ஜனங்கள்ட்ட பிரச்சாரம் பண்ணறா ங்க !" 

"நிசசயமா ஆள் வரும் !"

"எப்படி சொல்ற ?" 

 "தேவ கவுடா வருவார் னு நீ நினைச்சையா ?"

"இல்ல .அப்பம் சுர்ஜித் இருந்தாரு !

"குஜ்ரால் வந்தாரு " "வி.பி சிங் சிங் வந்தாரு " சக்கை போடு போட்டாரு."

"அதுமாதிரி வரனும்ல "கண்ணுல படலையே "

"எல்லாரும் மோடி வேண்டாம் கம் "

"ஒண்ணா நிக்க மாட்டாய்ங்காங்களே "

"அகிலேஷும் மாயாவதியும் தனி " சந்திர பாபு தனி " தெலுங்கானா ராவ் தனி "ராகுலும்,ஸ்டாலினும் தனி "

"தனி இல்லை "

"எப்படி சொல்ற ?"

"மோடியை எதுக்கறதுல ஒண்ணா இருக்காங்கல்லா "

"முதல்ல  மோடியை கீழ இறக்குவம் ?அப்புறம் மத்தத பாத்துக்குவம் "

"இதைத்தானே சீத்தாராம் எச்சூரி  சோல்றாரு " 

"எச்சூரி சுர்ஜித் தோடே பிரதம  சிஷ்யன் தான் "

எங்க வீட்ல ரெண்டு பேரன்களும் பேசிக்கிட்டு இருந்தாங்க .ஒருத்தனுக்கு 23 வயது.இன்னொருத்தனுக்கு 22 வயது. சின்ன பயலுகளா இருந்தாலும் தெளிவா இருக்கானுவ .

இரவு கவலைய மறந்து தூங்கினேன் !!!

Saturday, March 23, 2019

"அவர் 

ஒரு

மார்க்சிஸ்ட் ..." 
1969 ம் ஆண்டு மதுரையில் "தீக்கதிர் "ஆபிசோடு எனக்கு நேரடி தொடர்பு . 2002 வரை தொடர்ந்தது பின்னர் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் கல்விக்குழுவுக்கு வந்தேன் . 

மாவட்ட செயலாளர் தோழர் சுந்தரம் அவர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு சென்னை மாவட்டக்குழுவில் இணைய புறப்பட்டேன். சைதாப்பேட்டையில் அடையார் பாலம்  தாண்டி சென்னிமலை பஸ்டாப்பில் இருக்கும் மாவட்ட ஆபிஸ் சென்றேன். மாவட்ட செயலாளராக நந்தகோபால்  இருந்தார் .கல்விக்குழுவில் செயல்படுங்கள் என்று  அனுமதித்தார்; என்னை சிறப்பு உறுப்பினர்களுக்கான யூனிட்டில்  சேர்த்தார் எங்கள் யூனிட்டின் செயலாளர் வந்ததும் என்னை அறிமுகப்படுத்தினார் .

கம்பிரமான உருவம் . கன்னங்கரேல் என்ற நிறம்..களையான செதுக்கிவைத்த சிற்பம் போன்ற  முக அமைப்பு. மென்மையான பேச்சு.உறுதியான செயல்பாடு.. காக்கி சட்டைதான் அவர் உடுப்பு. "தோழர் ராமு "  என்று அறிமுகப்படுத்தினார்கள்.

ஒரு மார்க்சு மாதம் 15 ம் தேதி சிறை  நிரப்பும் போராட்டம் .  கைதாகி சைதை ஆசிரியர் பயிற்சி மைதானத்தி வைக்கப்பட்டோம்.கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருக்கும் .அதில் ராமுவுமொருவர் .என்னை செல்லமாக கடிந்து கொண்டார் . யூநிட் செயலாளரிடம் சொல்ல வேண்டாமா ? என்று கேட்டார் . சமாளித்தேன் . 

நாகபுரி வந்தபிறகும் தொலைபேசி மூலம் கிளை விவகாரங்களை அவ்வப்போது தெரிவிப்பார் . எங்கள் யூனிட்டில் இருந்தவர்கள் பலர் - ஒருவர் ஆறுமாதவாது லண்டனில் இருப்பார்-நான் வருடத்தில் ஆறுமாதமாவது வடநாட்டில் இருப்பேன், 

எங்களை கட்டி மேய்த்தவர் தோழர் ராமு..

இன்று உலகம் அறிந்த "பூ " ராமு - மடியில் பெனாவை  வைத்துக்கொண்டு மாட்டு வண்டி ஓட்டும் வண்டிக்காரராக  திரைப்படத்தில் தோன்றிய :பூ ராமு. 

பிரியன் படத்தில் கல்லூரி முதல்வராக வந்து அதன் கம்பிரத்தை நிலை நாட்டினார். 

என்  பேரன்கள் ஒருவன் புது டில்லியில் சட்டப்பல்கலையில்படிக்கிறான் .மற்றோருவன்  புனேயில் பணி புரிகிறான் . ஹோலி பண்டிகைக்காக வந்திருந்தான் . பிரியன் படத்தை அன்றுதான் பார்த்தேன்.

கல்லூரி முதல்வராக வந்த ராமு வை பார்த்ததும் " ஏல இங்கவாங்கடா .இவர்தாண்டா என்னுடைய யூனிட் செயலாளராக இருந்தவர் "..என்று கத்தி  விட்டேன்.

"ஏன் தாத்தா கத்தறீங்க ! அதுதான் பூ  ராமு "என்றான் பேரன்.

"இல்லைல ! அவர்  ஒரு மார்க்சிஸ்ட்" என்றேன் கம்பிரமாக.


 

  

Saturday, March 09, 2019

"சீத்தாராம் எச்சூரி  சொன்ன 

குட்டிக்கதை ...""ஆந்திராவில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு பயணிகள் பேருந்தில் ஒரு தொழிலாளி பயணம் செய்கிறார் . அவர் ஊதியமாக பெற்ற 10000 ரூபாயை சட்டைப்பையில் வைத்திருக்கிறார். "

"கண்டக்டர் வரிசையாக பயண சீட்டைகொடுத்துக்கொண்டு வருகிறார். அந்த தொழிலாளியிடம் வந்து "டிக்கட் டிக்கெட் " என்று கேட்கிறார்> தொழிலாளி பயில் கையை விட்டால் பணத்தை யாரோ "பிக் பாக்கட் அடித்து இருக்கிறார்கள்  என்பது தெரிகிறது. திடுக்கிட்ட தொழிலாளி "ஐயா !நான்கண்டிப்பாக வீ டு போய் சேரவேண்டும். என்னை பயணம் செய்ய அனுமதியுங்கள் வீட்டிலிருந்து பணத்தை கொண்டுவந்து தந்துவிடுகிறேன் "என்று கெஞ்சி கேட்கிறார். "

"கண்டக்டர்  மறுக்க தகராறு வலுக்கிறது ."நீ இறங்கு! இல்லை என்றால் பேருந்து நகராது என்று கூ றி கண்டக்டர் வண்டியை நிறுத்தி விடுகிறார். பயணிகளுக்கிடையே  வாக்குவாதம் உருவாகி சண்டை ஏற்படுகிறது."

"அப்போது பயனின்களில் ஒருவர் "விடுங்கள் ஐயா >நான் அந்த தொ ழிலாளியின்  கட்டணத்தை தந்துவிடுகிறேன் " என்று கூறி பத்து ரூபாய் தாளை நீட்டுகிறார். "


"சக பயணிகள் ஆச்சரியத்தோடுஅந்த பயணிகள் பார்க்கிறார்கள் அந்தமகானுபாவர் வேறு யாருமல்ல. அந்த தொழிலாளியின் பணத்தை "பிக்பாக்கேட்" செய்தவர் தான் அவர்."


"ஐந்து ஆண்டுகாலம்  மக்கள் பணத்தைக்கொள்ளை அடித்த மோதி போன்றவர்.இந்த பிகபாகெட் ஆசாமிகள் எப்போதுமே தனியாக வரமாட்டார்கள் தமிழகத்தில் அவருடைய கூட்டாளிதான் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்: "(வட சென்னையில் 9-3-19 அன்றி மாலை மார்க்சிஸ்ட் கடசியின் அகிலஇந்திய பொது செயலாளர் சீத்தாராம் எச்சூரி  பேசியதிலிருந்து.)

Saturday, March 02, 2019
"40.துணை ராணுவ வீரர்களுக்கு ,

300 தீவிரவாதிகளா ...? "
சர்தேசாய் தொலைக்காட்ச்சி "அங்கரா"க  பணியாற்றுகிறார். பலமுக்கிய தலைவர்களை சந்தித்து பெட்டிகள் மூலம் அரசியல் விஷயங்களை அலசுவது அவர் வழக்கம் .

நேற்று அவர் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கடசி தலைவருமான ப.சிதம்பரம் அவர்களை சந்தித்து பேசினார் .

"பிப்ரவரி 14ம் நாள் மத்திய துணை ராணுவப்படையினரில் 40 பேரை பாகிஸ்தான்  ஆதரவு பெற்ற பயங்கர வாதிகள் கொன்று போட்டார்கள்.பதிலடியாக பயங்கர வாதிகளின் பாலக்கோடு முகாமை அழித்து 300 தீவிர வாதிகளை கொன்றதாக சொல்லப்படுகிறதே அது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்" என்று தேசாய் சிதம்பரம் அவர்களிடம் கேட்டார்.

"அரசு இது பற்றி அறிக்கை விட்டிருக்கிறதுஅரசு அதிகாரி "கோகலே" கூறியதை நான் நம்புகிறேன் .ராணுவ இலக்குகள்  இல்லாமல், அப்பாவிமக்களை இலக்காக்காமல் , பயங்கர வாதிகளின் முகாமை இந்திய ராணுவம் தாக்கியுள்ளது என்று கூறியிருக்கிறார்" என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

மேலும் விமானத்துறை அறிக்கையில் " எங்களுக்கு அரசு கொடுத்த இலக்கை,நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம். இடத்ற்காக 12 போர் விமானங்களை பயன்படுத்தினோம். அந்த 12 விமானங்களும் பத்திரமாக நாடு திரும்பின  " என்றும் சிதம்பரம் கூறினார் .

"300 பயங்கரவாதிகளை கொன்றதாக அவர்கள் சொல்லவில்லை .அப்படி அரசியல் காரணங்களுக்காக யாராவது கூறி இருக்கலாம். நான் அரசை நம்புகிறேன். விமானத்துறையை நம்புகிறேன்"என்றும் சிதம்பரம் குறிப்பிட்டார்.