திரைப்படங்கள் -
"அறம் "மற்றும்
"அருவி " யை
முன்வைத்து ....!!!
தமிழ் திரைப்படத்துறையின் முக்கியமான ஆண்டாக 2017 ஐ குறித்துக்கொள்ளலாம். குறைந்த சிலவில் மிகவும் நல்ல படங்கள் வெளிவந்த ஆண்டு என்பதோடு நிற்காமல் இந்திய திரைப்பட துறையே திரும்பி பார்க்கும் படைப்புகளை தந்த ஆண்டுமாகும்.
பாலிவுட் திரைத்துறையில் இளம் இயக்குனர்கள் எழுத்தாளர்கள், திரைக்கதை மற்றும் வசனகர்த்தாக்கள் பலர் இது பற்றி என்னோடு விவாதித்தார்கள். அவர்கள் பலரிடம் "அறம் ","அருவி" படங்களை பார்த்துவிட்டு விவாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
பொங்கல் சமயத்தில் தொலைக்காட்ச்சியில் "அறம் " படத்தை பார்த்தேன் . "ஆமஸான் " உதவியுடன் "அருவி "படம் பார்த்தேன் .
படிப்பறிவில்லாத ராஜஸ்தானத்து கிராமத்து பெண், பிஹாரில் வனப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவி ஆகியவர்களை நம்பி நாட்டின் பலப்பகுதி மக்களை திருப்தி படுத்த வேண்டிய இந்தி திரை உலகம் இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க தயங்கு கிறது.
அதிகம்அறிவுஜீவிகளைக்கொண்டதமிழகம்கலை பண்பாட்டுத்துறையில் முன்னணியில் இருப்பதாலும், ஒரே இனமாகஇருப்பதாலும் உங்களால் பரிசோதனை முயற்சியில் ஈடுபட முடிகிறது> இதே தான் மலையாளம்,கன்னட மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் இந்தித்திரைப்படத்துறை அதன் பிரும்மாண்டமான சந்தையின் காரணமாகவே அதில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள்.
"விஸ்காம் "பட்டம் பெற்று திரைத்துறையை புரட்டிப்போட்ட விரும்பும் இளைஞ்சர்கள்பலர் இந்த இப்படத்தையும் தலையில் வைத்து கொண்டாடினார்கள்>தா.மு.எ .க.சங்கம் நிசசயமிது பற்றி தன கருத்தை சொல்லும் என்றும் விரும்பினேன் .
"அருவி"
அருவி என்று பெயரிடப்பட்ட குழந்தை, தந்தையின் பாசத்தால் குளிப்பாட்டப்பட்ட அந்த சிறுமி, பள்ளியில் ,கல்லூரியில்படித்து வளர்ந்த அவள் அன்புத்தந்தையால் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுகிறாள்.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அரவாணி ஒருத்தியால் அன்போடு அணைக்கப்பட்டு சராசரி வாழ்வை வாழ முற்படுகிறாள் .இதில் அவள் படும்பாடுகள் தான் திரைக்கதையாக விரிகிறது.
இளம்இயக்குனர் ஒருவர் " தாத்தா ! அற்புதமான திரைக்கதை அமைப்பு ! நிசசயம் விருது பெரும் "என்று அடித்து சொன்னார்.
ஆனால் பாசமிக்க தந்தை அருவியை இப்படி பாசத்தோடு வளர்த்திருக்கவும் வேண்டாம். அரக்கத்தனமான அவரை குடும்பத்தை விட்டு விரட்டி இருக்கவும் வேண்டாம் .வலிந்து புனையப்பட்ட அமைப்பாக எனக்கு பட்டது.
"சொல்வதெல்லாம்சத்தியம் " எபிசொட் கொஞ்ச்ம தேவைக்கு அதிகமாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. அதுவும் அந்த பெண் நெறியாளர் அழகான கணவனை விட்டு கிழட்டு செக்யுரிட்டியோடு "சோரம் " போவது எந்தவகையிலும் சரிஇல்லை .
சின்னங்சிறு பள்ளி மாணவியிலிருந்து கல்லூரி மாணவியாக, நோய்வாய்ப்பட்ட மனுஷியாக , இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் யுவதியாக அதிதி பாலன் என்ற புதுமுகம் மிகவும் சிறப்பாகசெய்துள்ளார் .ஆனாலும் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும், "சார் ! நான் சரியாக செய்துவிட்டேனா ? 'என்று ஆசிரியரைப்பார்த்து பயந்துமாணவன் கேட்பதைப்போல அதிதி பாலன் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?
இளம் இயக்குனர் அரூண் பிரபு , இந்த ஆண்டின் சிறப்பு வருகை . மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன்.
"அறம் "
நாட்டின் வளர்சசியின் அவலத்தை இதனை வீட சிறப்பாக சொல்லிவிட முடியாது. அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பிய ஏவுதளத்தின் பின்னணியில் குடிதண்ணீருக்காக மக்கள்படும் அவலத்தை வெகுவாக சித்தரித்தபடம் "அறம் " .
படம் முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆறுதலுக்குரியது. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கவனமாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர் .கும்பல் காட்ச்சிகளில் கூட எல்லோரும் பிரேமுக்குள் வருகிறவர்கள் முகபாவங்கள் தெளிவாக உள்ளன . நயன தாரா என்பதற்காக அவருக்கு என்று சிறப்பு காட்ச்சிகள் இல்லாதது நிறைவாக உள்ளது.
இந்த ஆண்டின் சிறந்தபடமாக த.மு.எ க ச தேர்ந்தெடுத்திருப்பது மிகசரியான ஒன்று .
கோபி நயினார் அவ்ர்களுக்கு பாராட்டுகள்.